Text 3

 

Text 3

ராஜாவும் ஜிம்மும் சினிமா பார்க்கப் போகிறார்கள். அது தமிழ்ப் படம். நல்ல படம். அது வைரம் தியேட்டரில் நடக்கிறது. இது  மதுரையிலேயே பெரிய தியேட்டர். இரண்டு பேரும் மேல் வகுப்புக்கு டிக்கட் வாங்குகிறார்கள். படத்தைப் பார்க்கிறார்கள்.

ஜிம்முக்குத் தமிழ் அவ்வளவு நன்றாகத் தெரியாது. அதனால் கதை சரியாகப் புரியவில்லை. அவருக்குத் தமிழ்ப் பாட்டு மிகவும் பிடிக்கும். போகப் போக ஜிம்முக்குத் தமிழ் அதிகம் புரியும். அப்போது கதையும் நன்றாகப் புரியும். தமிழ்ப் படத்தை இன்னும் ரசிப்பார்.

Notes

Grammatical Forms

Formal with Alternates                             Informal

தியேட்டரில் / தியேட்டரிலே           தியேட்டர்லே (-இல்/-இலே    = -லே)

மதுரையிலேயே                                    மதுரைலேயே

நடக்கிறது                                                 நடக்குது (-கிறு- = 0, -அது = -உது)

வாங்குகிறார்கள்                                    வாங்குறாங்க

பார்க்கிறார்கள்                                        பாக்குறாங்க (-க்கிறு- = -க்குறு- with verbs that do not  end in இ or ஐ (கு is pronounced between இ and உ)

நன்றாக                                                        நல்லா (-ஆக = -ஆ)

அதனால் / அதனாலே                            அதுனாலே (-ஆல்/-ஆலே = ஆலே)

சரியாக                                                        சரியா

 

Spelling

இரண்டு                                                      ரெண்டு

பார்க்க                                                        பாக்க (ர் is lost before two stops)

 

Words

மிகவும்                                                        ரொம்ப

 

Sandhi

The stop consonant doubles after accusative case and adverb with the suffix –ஆக

படத்தை + பார் à படத்தைப் பார்

சரியாக புரியவில்லை à சரியாகப் புரியவில்லை

The stop consonant doubles when two nouns make a lexical compound.

தமிழ் + படம் = தமிழ்ப் படம்

தமிழ் சினிமா =  தமிழ் சினிமா (There is no doubling if சி is pronounced soft  as /s/ and not as the affricate (a kind of stop) /ch/

Glossary

ரசி (ரசிக்க)                           ‘enjoy’