18. கல்யாண ஊர்வலம்

உரையாடல் 18

                                                                             கல்யாண ஊர்வலம்

 

ஜிம்   -  நான் நேற்றுக் காலையில் என் அறையிலிருந்து படித்துக்கொண்டிருந்-

         தேன்.  அப்போது ஒரு கல்யாண ஊர்வலம் தெரு வழியாகப் போயிற்று.

         இந்த ஒரு வாரத்தில் நான் இப்படி ஐந்தாறு ஊர்வலங்கள் பார்த்தேன்.

         இதற்கு ஏதாவது காரணம் உண்டா?

 

ராஜா  -  ஆமா; உண்டு.  எங்கள் நாட்டில் எல்லா மாதங்களிலும் கல்யாணம்

         நடக்காது.  சில மாதங்கள்தான் நல்ல மாதங்கள்.  சித்திரை அதில்

         ஒன்று.  கல்யாணம் மாதிரி நல்ல காரியங்கள் இந்த மாதிரி மாதங்களில்-

         தான் நடக்கும்.

 

ஜிம்   -  வருஷம் பூராவிலும் சித்திரை ஒன்றுதான் நல்ல மாதமா?

 

ராஜா  -  இல்லை.  வேறு நல்ல மாதங்களும் இருக்கின்றன.  ஆனி, ஆவணி,

         ஐப்பசி, தை எல்லாம் நல்ல மாதங்கள்தான்.

 

ஜிம்   -  இதே மாதிரி நல்ல நாள் இருக்கிறதா?

 

ராஜா  -  ஆமா.  ஒவ்வொரு மாதத்திலும் சில நாள்தான் நல்ல நாள்.  அந்த

         நல்ல நாளில் நல்ல நேரத்தில்தான் கல்யாணம் நடக்கும்.

 

ஜிம்   -  நான் இதைப் பற்றி முன்னால் புஸ்தகத்தில் படித்திருக்கிறேன்.  இப்போது-

         தான் நேரில் பார்க்கிறேன்.

 

ராஜா  -  இந்த வெயிலில் ஊர்வலத்தில் நடந்து போக ரொம்ப கஷ்டமாக

         இருக்கும்.  உங்களால் இந்த வெயிலைத் தாங்கிக்கொள்ள முடிகிறதா?

 

ஜிம்   -  கஷ்டமாகத்தான் இருக்கிறது.  ஆனால் வீட்டுக்குள் அவ்வளவு மோசமாக

         இல்லை.

 

ராஜா  -  ஒரு வேட்டி வாங்கிக்கொள்ளுங்கள்.  வெயில் காலத்தில் அது வசதியாக

         இருக்கும்.

 

ஜிம்   -  நான் இரண்டு வேட்டிகள் வாங்கியிருகிறேன்.  வீட்டில் அதைத்தான்

         கட்டியிருப்பேன்.  அதைக் கட்டிக்கொண்டு வெளியில் நடக்கப் பயமாக

         இருக்கிறது.

 

ராஜா  -  என்ன பயம்?

 

ஜிம்   -  ஒரு நாள் வேட்டி கட்டிக்கொண்டு கொஞ்ச தூரம் நடந்து பார்த்தேன்.

         அது நழுவிக் கீழே விழுந்துவிட்டது.

 

ராஜா  -  முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும்.  பிறகு எல்லாம் சரியாகப் போய்விடும்.

 

ஜிம்   -  நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.  அதற்குள் வெயிலும் பழக்கம் ஆகி-

         விடும்.  அடுத்த வருஷம் இவ்வளவு கஷ்டம் இருக்காது.