20. எனக்கு வயிற்று வலி

உரையாடல் 20

                                                                           எனக்கு வயிற்று வலி

 

ஜிம்   -  உங்களுக்குத் தெரிந்த டாக்டர் யாராவது பக்கத்தில் இருக்கிறாரா?

 

ராஜா  -  ஏன்?  என்ன விஷயம்?

 

ஜிம்   -  நேற்றிலிருந்து லேசாக வயிறு வலித்துக்கொண்டிருக்கிறது.

 

ராஜா  -  கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டதனுடைய பலனா?

 

ஜிம்   -  சாப்பாடு காரமாக இருந்ததல்லவா?  அதனால் இருக்கும்.  எனக்குக்

         கரம் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை.

 

ராஜா  -  எனக்கு ரொம்ப வேண்டிய டாக்டர் ஒருவர் இருக்கிறார்.  அவர் அமெரிக்-

         காவில் படித்தவர்.  வாருங்கள்.  அவரிடம் போவோம்.

 

ஜிம்   -  அவர் பக்கத்தில்தான் இருக்கிறாரா?

 

ராஜா  -  ஆமா.  இந்தத் தெரு திரும்பியவுடன் அவருடைய ஆஸ்பத்திரி இருக்-

         கிறது.  நடந்தே போய்விடலாம்.

 

டாக்டர்  -  வாருங்கள், ராஜா.  பார்த்து ரொம்ப நாள் ஆயிற்றே. 

         சௌக்கியமாக இருக்கிறீர்களா?

 

ராஜா  -  ஏதோ இருக்கிறேன், டாக்டர்.  இவர் என் நண்பர் ஜிம்.  அமெரிக்காவி-

         லிருந்து இங்கே வந்திருக்கிறார்.  இவருக்கு உடம்பு சரியில்லை.

 

டாக்டர்  -  என்ன செய்கிறது?

 

ஜிம்   -  நேற்றிலிருந்து வயிறு வலிக்கிறது.  கடையில் விற்கும் வயிற்றுவலி  

         மருந்தை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தேன்.  கேட்கவில்லை.

 

டாக்டர்  -  டாக்டரைக் கேட்காமல் கண்ட மருந்தையும் வாங்கிச் சாப்பிடுவது

         நல்லது இல்லை.  நீங்கள் இங்கே வந்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன?

 

ஜிம்   -  ஒரு வருஷம் ஆகப் போகிறது.

 

டாக்டர்  -  நேற்று புதிதாக ஏதாவது சாப்பிட்டீர்களா?

 

ஜிம்   -  ஒரு கல்யாண வீட்டில் காரமாகச் சாப்பிட்டேன்.

 

டாக்டர்  -  ஓ.  அதுதான் விஷயம்.  நான் ஒரு மருந்து எழுதிக் கொடுக்கிறேன். 

         அதை வாங்கிச் சாப்பிடுங்கள்.  ஒரே நாளில் சரியாகப் போய்விடும்.

 

ஜிம்   -  இதற்குப் பணம் எவ்வளவு, டாக்டர்?

 

டாக்டர்  -  ஓ, பரவாயில்லை.  நான்தான் மருந்து கொடுக்கவில்லையே!  அதோடு

        ராஜா கூட்டிக்கொண்டு வந்ததால் ஒன்றும் வாங்கிக்கொள்ளமாட்டேன்.

 

ராஜா  -  சரி, டாக்டர்.  நாங்கள் போய்விட்டு வருகிறோம்.