21. பொங்கலுக்குப் போவோமா?

உரையாடல்  21

                                                                  பொங்கலுக்குப் போவோமா?

 

ராஜா  -  இப்போது உங்கள் வயிற்றுவலி எப்படி இருக்கிறது?

 

ஜிம்   -  டாக்டர் கொடுத்த மருந்தைச் சாப்பிட்டதும் சரியாகப் போய்விட்டது.

 

ராஜா  -  நாம் டாக்டரிடம் போனது நல்லதாகப்போயிற்று.  அவர் கொடுக்கிற

         மருந்து எப்போதும் நன்றாகக் கேட்கும்.

 

ஜிம்   -  சில பேர் பழக்கத்தினால் வியாதியைப் பற்றிச் சொன்னவுடனே நன்றாகப்

         புரிந்துகொண்டு மருந்து கொடுப்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கி-

         றார்கள்.

 

ராஜா  -  இப்போது உங்களுக்கு உடம்புக்கு நன்றாக இருப்பதனால் வெளி-

         யூருக்குப் போவதில் கஷ்டம் இருக்காதே?

 

ஜிம்   -  ஆமா, என்ன விஷயம்?

 

ராஜா  -  நீங்கள் மாரியம்மன் பொங்கலுக்கு போனதுண்டா?

 

ஜிம்   -  போனதில்லை. ஆனால் போவதற்கு ரொம்ப நாட்களாக ஆசை.

 

ராஜா  -  எங்கள் ஊரில் இப்போது பொங்கல் நடந்துகொண்டிருக்கிறது.  நான்

         இன்று சாயங்காலம் புறப்பட்டுப் போகிறேன்.  நீங்களும் வருகிறீர்களா?

 

ஜிம்   -  எனக்கு வருவதற்கு ரொம்ப ஆசைதான்.  ஆனால் நான் அங்கே தங்கு-

         வதற்கு என்ன செய்வது?

 

ராஜா  -  அதற்கு நீங்கள் கவலைப்படாதீகள்.  எங்கள் பழைய வீடு ஒன்று அங்கே

         இருக்கிறது.  அங்கேயே நாம் தங்கிக்கொள்ளலாம்.

 

ஜிம்   -  ரொம்ப நல்லதாகப் போய்விட்டது. நான் ரொம்ப நாளாக நினைத்துக்

         கொண்டிருந்தது இப்போதுதான் முடியப் போகிறது.

 

ராஜா  -  அந்த வீட்டில் ஒரே ஒரு கஷ்டம் இருக்கிறது.  அங்கே குளிப்பதற்குத்

         தனி இடம் கிடையாது.  தோட்டத்தில் கிணற்றடியில் நின்று குளிக்க

         வேண்டியதிருக்கும்.

 

ஜிம்   -  அதனால் என்ன?  எனக்கு அதில் ஒரு கஷ்டமும் இல்லை.

 

ராஜா  -  அப்படியானால் சரியாக நான்கு மணிக்கு வந்துவிடுங்கள்.  இங்கேயிருந்து

         ஒன்றாக பஸ் புறப்படும் இடத்துக்குப் போய், அங்கேயிருந்து ஊருக்குப்

         போவோம்.  நான் பஸ்ஸில் உங்களுக்குப் பொங்கலைப் பற்றிச் சொல்லிக்-

         கொண்டு வருகிறேன்.

 

ஜிம்   -  இதைக் கேட்கும்போதே குஷியாக இருக்கிறது.  நான் நிச்சயமாக நான்கு

         மணிக்கு வந்துவிடுகிறேன்.