உரையாடல் 24
போவது கஷ்டமாக இருக்கிறது
ராஜா - பிரயாண ஏற்பாடெல்லாம் பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்போல் இருக்-
கிறது. ஆளைப் பார்த்தாலே தெரிகிறது. ரொம்ப அலைச்சலோ?
ஜிம் - அலைச்சல் ஒன்றும் இல்லை. மனக் கஷ்டம்தான். தமிழ் நாட்டைவிட்டுப்-
போவதை நினைத்தாலே மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது.
ராஜா - முதலில் அப்படித்தான் இருக்கும். அங்கே போய்விட்ட பிறகு கொஞ்ச
நாளில் எல்லாம் சரியாகப் போய்விடும்.
ஜிம் - அவ்வளவு லேசாகப் போய்விடுமா, என்ன? கொஞ்ச நாளைக்கு
தமிழ்நாட்டு நினைவாகவே இருக்கும்.
ராஜா - போவதற்கு டிக்கெட்டெல்லாம் வாங்கிவிட்டீர்களா?
ஜிம் - இன்னும் இல்லை.
ராஜா - எப்படிப் போவதாகத் திட்டம் போட்டிருக்கிறீர்கள்? கப்பலில்
போவதாகவா, விமானத்தில் போவதாகவா?
ஜிம் - கப்பலில் போனால் செலவு குறைவாக ஆகும். ஆனால் போய்ச் சேர்வதற்கு
நாட்கள் ரொம்ப ஆகும். விமானத்தில் போனால் செலவானாலும் சீக்கிரம்
போய்ச் சேர்ந்துவிடலாம். அதனால் விமானத்திலேயே போகலாம் என்று
நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
ராஜா - எனக்கும் அதுதான் சரி என்று படுகிறது. வழியில் எங்கேயும் இறங்குவ-
தாகத் திட்டம் இருக்கிறதா?
ஜிம் - இல்லை. ஒவ்வொரு இடத்திலும் ஏறி இறங்கிப் போவது என்றால் ரொம்ப
நாள் ஆகுமே. அதோடு அலைச்சலும் எனக்கு ஒத்துக்கொள்ளாது.
ராஜா - அதற்கு என்ன செய்வது? ஊர் பார்க்க வேண்டும் என்றால் கொஞ்சம்
கஷ்டப்படத்தான் வேண்டும்.
ஜிம் - அது உண்மைதான். ஆனாலும் இப்போது கஷ்டப்படுவானேன் என்று பார்க்-
கிறேன். இப்போது பார்க்கவில்லை என்றால் வேறு எப்போதாவது பார்த்-
துக்கொள்வது.
ராஜா - நீங்கள் ஊருக்குப் போவதற்குள் ஒரு நாள் எங்கள் வீட்டில் சாப்பிட வேண்-
டும், சரியா?
ஜிம் - ஓ, ரொம்ப சரி! உங்கள் சாப்பாடு என்றால் எனக்கு உயிர் ஆயிற்றே!
ராஜா - இந்த ஞாயிறு போய் அடுத்த ஞாயிறு சௌகரியப்படுமா?
ஜிம் - என்றைக்கு என்றாலும் சரி. ஞாயிற்றுக்கிழமை நான் இங்கே டாண் என்று
வந்து நிற்பேன்.