Text 4
சினிமாவுக்குப் பிறகு ஜிம் வீட்டுக்குப் போக நினைக்கிறார். அவர் அமெரிக்கன் கல்லூரிக்குப் பக்கத்தில் கோரிப்பாளையத்தில் இருக்கிறார். அங்கே போக அடிக்கடி பஸ் இருக்கிறது. ராஜா வீட்டுக்குப் பக்கத்திலிருந்து ஒன்றாம் நம்பர் பஸ் போகும். பஸ் டிக்கெட் ஐந்து ரூபாய்தான். ஜிம்மிடம் பத்து ரூபாய் இருக்கிறது. ஆட்டோவில் போக அது போதாது; பஸ்ஸில் போகப் போதும்.
பஸ்ஸில் ஒரே கூட்டம். ஜிம்முக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. நிற்கிறார். கொஞ்ச நேரத்தில் ஒருவர் அவருடைய இடத்தை ஜிம்முக்குக் கொடுக்கிறார். ஜிம் அவருக்கு நன்றி சொல்கிறார். வசதியாக உட்காருகிறார். அரை மணி நேரத்தில் வீட்டுக்குப் போகிறார்.
Notes
Grammatical Forms
Formal with alternates Informal
வீட்டுக்கு வீட்டிற்கு
அங்கே அங்கு
இருக்கிறார் இருக்கார் (கிறு = O) {O means absent]
இருக்கிறது இருக்குது / இருக்கு (து = O)
-இடம் -கிட்டே
(The present tense suffix is present in strong verbs used with human subjects; இரு is an exception)
அவருடைய தன்னுடைய அவரோட / தன்னோட
(When the antecedent (the noun cross referred) is subject in third person, the pronoun is தான் / தன்; but it alternates in modern Tamil with அவர் etc. depending on the gender and number of the antecedent)
Spelling
நினை நெனை (இ = எ before single consonant with ஐ or அ)
ஒன்றாம் ஒண்ணாம் (ன்ற் = ண்ண் (ன்ன் in verbs) when the preceding vowel is short)
மூன்று மூணு (ன்ற் = ண் when the preceding vowel is long)
ரூபாய் ரூபா
ஐந்து அஞ்சு (ந்த் = ஞ்ச் after the vowels ஐ, இ and ய் (palatalization); ஐ = அய் word, Initially, ய் = 0 before two consonants)
நில் நில்லு
நிற்கிறார் நிக்கிறார் (consonant assimilation)
நன்றி நன்றி (It is ‘borrowed’ from formal Tamil and so no change)
சொல் /சொல்லு (in conjugation) சொல்லு
உட்கார் / உட்காரு (in conjugation) உக்கார் (ட்க் = க்க்) (consonant assimilation)
சொல்கிறார் சொல்லுகிறார்
உட்கார்கிறார் உட்காருகிறார்
Words
கல்லூரி காலேஜ்
பஸ் பேருந்து
நம்பர் எண்
டிக்கெட் சீட்டு
ஒருவர் ஒருத்தர் ஒருத்தர்
Glossary
அடிக்கடி ‘often’
ஒரே ‘plenty of, excessive’
கூட்டம் ‘crowd’
ஆட்டோ ‘autorickshaw’
வசதி ‘convenience, comfort’