4. Finite Verb Forms- Positive

Section: 

4. Finite Verb Forms- Positive (Expressing time, contours of time and speaker attitude)

 

The following is a set of forms of the finite verb to indicate the time of occurrence, nature of occurrence such as habitual and probability, contours of time such as durative and speaker attitude of an action such as affecting self. The sentences in colloquial Tamil are given first and the sentences in formal Tamil are given second.

 

  1.நான் சாப்பிடுறேன்

   நான் சாப்பிடுகிறேன்

   ‘I am eating’

 

 2.நான் நாளைக்கு தோசை சாப்பிடுறேன் / சாப்பிடுவேன்

  நான் நாளைக்கு தோசை சாப்பிடுகிறேன் / சாப்பிடுவேன்

  ‘I am eating / will eat dose tomorrow’

 

3. நான் தெனம் காலைலே தோசை சாப்பிடுறேன் / சாப்பிடுவேன்

  நான் தினம் காலையில் தோசை சாப்பிடுகிறேன் / சாப்பிடுவேன்

  ‘I eat dose in the morning everyday’

  (The present tense is used when the habitual action is stated as recurring and

  the future tense is used when the habitual action is stated as customary)

 

4. நான் தோசை சாப்பிடப் போறேன்

   நான் தோசை சாப்பிடப் போகிறேன்

  ‘I am going to eat dose

 

5. நான் தோசை சாப்பிடப் போனேன் 

  நான் தோசை சாப்பிடப் போனேன்

  ‘I was going to / about to eat dose

 

6. நான் தோசையை சாப்பிடப் பாத்தேன் / பாப்பேன் / பாக்கிறேன்

  நான் தோசையை சாப்பிடப் பார்த்தேன் /பார்ப்பேன் / பார்க்கிறேன்

  ‘I tried / will try / am trying to eat the dose

  (The past tense form also has the non-volitional sense of ‘was about to’)

 

 

7. நான் தோசை சாப்பிட்டேன்

   நான் தோசை சாப்பிட்டேன்

     ‘I ate dose

 

8. நான் நாலு தோசை சாப்பிட்டுட்டேன் / சாப்பிட்டுடுவேன் / சாப்பிட்டுடுறேன்

   நான் நான்கு தோசை சாப்பிட்டுவிட்டேன் / சாப்பிட்டுவிடுவேன் / சாப்பிட்டுவிடுகிறேன்

     ‘I ate / will eat / demonstrate eating up four doses’

 

9. நான் தோசை சாப்பிட்டுருந்தேன் / சாப்பிட்டுருப்பேன் / சாப்பிட்டுருக்கேன்

   நான் தோசை சாப்பிட்டிருந்தேன் / சாப்பிட்டிருப்பேன் / சாப்பிட்டிருக்கிறேன்

   ‘I had / will or would have / have eaten dose

 

10. நான் நாலு தோசை சாப்பிட்டுக்கிட்டேன் / சாப்பிட்டுக்கிடுவேன் / சாப்பிட்டுக்கிடுறேன்

   நான் நான்கு தோசை சாப்பிட்டுக்கொண்டேன் / சாப்பிட்டுக்கொள்வேன் / சாப்பிட்டுக்-   

   கொள்கிறேன்

    ‘I had / habitually have / recurrently have four doses (before going out for long)’

 

11. நான் தோசை சாப்பிட்டுக்கிட்டுருந்தேன் / சாப்பிட்டுக்கிட்டுருப்பேன் / சாப்பிட்டுக்

   கிட்டுருக்கேன்  

   நான் தோசை சாப்பபிட்டுக்கொண்டிருந்தேன் / சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் / சாப்பிட்டுக் 

   கொண்டிருக்கிறேன்

   ‘I was / will be / am eating dose

 

12. நான் நாலு தோசை சாப்பிட்டது / சாப்பிடுறது உண்டு

   நான் நான்கு தோசை சாப்பிட்டது / சாப்பிடுவது உண்டு

   ‘I have eaten in the past / eat occasionally four doses

 

13. நான் இப்போ தோசை சாப்பிடலாம் / /சாப்பிட்டுடலாம் / சாப்பிட்டுக்கிடலாம்

   சாப்பிட்டுக்கிட்டுருக்கலாம் 

   நான் இப்போது தோசை சாப்பிடலாம் / சாப்பிட்டுவிடலாம் / சாப்பிட்டுக் 

   கொள்ளலாம் / சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம்

   ‘I can / may eat / without fail eat / for my good eat / be eating dose now’

 

14. நான் காலையில் தோசை சாப்பிட்டிருக்கலாம் 

   நான் காலையில் தோசை 

    ‘I could / might have eaten dose in the morning’

 

15. நான் இப்போ தோசை சாப்பிடணும் /சாப்பிட்டுடணும் / சாப்பிட்டுக்கிடணும் /

    சாப்பிட்டுக்கிட்டுருக்கணும்

   நான் இப்போது தோசை சாப்பிட வேண்டும் /சாப்பிட்டுவிட வேண்டும் /சாப்பிட்டுக்கொள்ள 

    வேண்டும் / சாப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டும்

   'I want to / must eat / without fail eat / for my good eat / be eating dose now'

 

16. நான் காலைலே தோசை சாப்பிட்டுருக்கணும் 

    நான் காலையில் தோசை சாப்பிட்டிருக்க வேண்டும்

   'I must / should have eaten dose in the morning'

 

17. எனக்கு காலைலே தோசை சாப்பிடணும் /சாப்பிட்டுடணும் / சாப்பிட்டுக்கிடணும் / 

    சாப்பிட்டுக்கிட்டுருக்கணும்

    எனக்குக் காலையில் தோசை சாப்பிட வேண்டும் / சாப்பிட்டுவிட வேண்டும் / 

    சாப்பிட்டுக்கொள்ள  வேண்டும் / சாப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டும்

    'I must eat / without fail eat / for my good eat / be eating dose in the mornings'

 

18. நான் ஓட்டல்லே தோசை சாப்பிட வேண்டியிருந்தது / வேண்டியிருக்கு/ வேண்டியிருக்கும்

  நான் ஓட்டலில் தோசை சாப்பிட வேண்டியிருந்தது / வேண்டியிருக்கிறது/ வேண்டியிருக்கும்

  'I had to / have to/ will have to eat dose in the restaurant'

  (The verbal noun வேண்டியது can be used in place of the verbal participle வேண்டி)

 

19. நான் நாலு தோசை சாப்பிட / சாப்பிட்டுட / சாப்பிட்டுக்கிட/ சாப்பிட்டுக்கிட்டுருக்க 

    முடியும்

   நான் நான்கு தோசை சாப்பிட சாப்பிட்டுட / சாப்பிட்டுக்கிட/ சாப்பிட்டுக்கிட்டுருக்க 

   முடியும்

   'I can eat / without fail eat / for my good eat / be eating four doses

 

20. நான் நாலு தோசை சாப்பிட்டுருக்க முடியும்

   நான் நான்கு தோசை சாப்பிட்டிருக்க முடியும்

   'I could have eaten four doses

 

21. நான் தோசையை சாப்பிடட்டுமா / சாப்பிட்டுடட்டுமா / சாப்பிட்டுக்கிடட்டுமா / 

    சாப்பிட்டுக்கிட்டுருக்கட்டுமா?

   நான் தோசை சாப்பிடட்டுமா / சாப்பிட்டுடட்டுமா / சாப்பிட்டுக்கிடட்டுமா / 

    சாப்பிட்டுக்கிட்டுருக்கட்டுமா?

   'Shall I eat / without fail eat / for my good eat / be eating dose

 

22. நீ நாலு தோசை சாப்பிடு / சாப்பிட்டுடு / சாப்பிட்டுக்கோ / சாப்பிட்டுக்கிட்டுரு

   நீ நான்கு தோசை சாப்பிடு / சாப்பிட்டுவிடு / சாப்பிட்டுக்கொள் / சாப்பிட்டுக்கொண்டிரு

   ‘You eat / eat without fail / eat for your good / be eating four doses

   (*சாப்பிட்டுரு / சாப்பிட்டிரு is ill-formed)

 

23. நீ நாலு தோசை சாப்பிடேன் / சாப்பிட்டுடுடேன் / சாப்பிட்டுக்கோயேன் /  

   சாப்பிட்டுக்கிட்டுரு

   நீ நான்கு தோசை சாப்பிடேன் / சாப்பிட்டுவிடேன் / சாப்பிட்டுக்கொள்ளேன் / 

   சாப்பிட்டுக்கொண்டிரேன்

   ‘Why don’t you eat / eat without fail / eat for your good/ be eating four doses?’

 

24. நாலு தோசை சாப்பிடுவானேன், கஷ்டப்படுவானேன்?

   நான்கு தோசை சாப்பிடுவானேன், கஷ்டப்படுவானேன்?

   ‘Why should (one) eat four doses and then suffer?’

 

25. நான் இந்த தோசையை எப்படி சாப்பிடுறது?

    நான் இந்த தோசையை எப்படி சாப்பிடுவது?

    ‘How can I eat this dose?’

 

26. நான் எந்த தோசையை சாப்பிட?

   நான் எந்த தோசையை சாப்பிட?

   ‘Which dose shall I eat?’