5. Finite Verb Forms- Negative

Section: 

5. Finite Verb Forms- Negative (Expressing time, contours of time and speaker attitude)

 

The following is a set of forms of the finite verb that are in the negative. It may be noted that all fine forms in do not have corresponding negative.

 

  1.நான் சாப்பிடலை

   நான் சாப்பிடவில்லை

   ‘I am not eating’

 

 2.நான் நாளைக்கு தோசை சாப்பிடலை / சாப்பிட மாட்டேன்

  நான் நாளைக்கு தோசை சாப்பிடவில்லை / சாப்பிட மாட்டேன்

  ‘I am not eating / will not eat dose tomorrow’

 

3. நான் தெனம் காலைலே தோசை சாப்பிடறதில்லை / சாப்பிட மாட்டேன்

  நான் தினம் காலையில் தோசை சாப்பிடுவதில்லை / சாப்பிட மாட்டேன்

  ‘I do eat dose in the morning everyday’

  (The present tense is used when the habitual action is stated as recurring and

  the future tense is used when the habitual action is stated as customary)

 

4. நான் தோசை சாப்பிடப் போறதில்லை

   நான் தோசை சாப்பிடப் போவதில்லை

  ‘I am not going to eat dose

 

5.No negative

  நான் தோசை சாப்பிடப் போனேன் 

  நான் தோசை சாப்பிடப் போனேன்

  ‘I was going to / about to eat dose

 

6. நான் தோசையை சாப்பிடப் பாக்கலே / பாக்க மாட்டேன் / பாக்கலை

  நான் தோசையை சாப்பிடப் பார்க்கவில்லை /பார்க்க மாட்டேன் / பார்க்கவில்லை

  ‘I did not try / will not try / am not trying to eat the dose

  (The past tense form also has the non-volitional sense of ‘was about to’)

 

 

7. நான் தோசை சாப்பிடலை

   நான் தோசை சாப்பிடவில்லை

     ‘I did not eat dose

 

8. நான் நாலு தோசை சாப்பிட்டுடலை / சாப்பிட்டுட மாட்டேன் 

   நான் நான்கு தோசை சாப்பிட்டுவிடவில்லை / சாப்பிட்டுவிட மாட்டேன் 

     ‘I did not eat up / will not eat up / four doses’

 

9. நான் தோசை சாப்பிட்டுருக்கலை / சாப்பிட்டுருக்க மாட்டேன் / சாப்பிட்டதில்லை

   நான் தோசை சாப்பிட்டிருக்கவில்லை / சாப்பிட்டிருக்க மாட்டேன் / சாப்பிட்ட 

   தில்லை

   ‘I had not/ will not or would have not / have not eaten dose

 

10.நான் நாலு தோசை சாப்பிட்டுக்கிடலை / சாப்பிட்டுக்கிட மாட்டேன் / 

  சாப்பிட்டுக்கிடுறதில்லை

   நான் நான்கு தோசை சாப்பிட்டுக்கொள்ளவில்லை / சாப்பிட்டுக்கொள்ள  

   மாட்டேன் /  சாப்பிட்டுக்கொள்வதில்லை

   ‘(Before going out for long) I had not / habitually have not / recurrently have 

   not eaten four doses

 

 11.நான் தோசை சாப்பிட்டுக்கிட்டுருக்கலை or சாப்பிட்டுக்கிட்டுல்லை /

    சாப்பிட்டுக்கிட்டுருக்க மாட்டேன் / சாப்பிட்டுக்கிட்டுருக்கலை  or

    சாப்பிட்டுக்கிட்டுல்லை  

   நான் தோசை சாப்பபிட்டுக்கொண்டிருக்கவில்லை or சாப்பிட்டுக்கொண்டில்லை / 

   சாப்பிட்டுக்கொண்டிருக்க மாட்டேன் / சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை or  

   சாப்பிட்டுக்கொண்டில்லை

   ‘I was not / will not be / am not eating dose

 

12. நான் நாலு தோசை சாப்பிட்டது / சாப்பிடுறது இல்லை

   நான் நான்கு தோசை சாப்பிட்டது / சாப்பிடுவது இல்லை

   ‘I have not eaten in the past / do not eat now four doses

 

 13.நான் இப்போ தோசை சாப்பிட முடியாது or கூடாது / சாப்பிட்டுட முடியாது or  

   கூடாது / சாப்பிட்டுக்கிட முடியாது or கூடாது / சாப்பிட்டுக்கிட்டுருக்க முடியாது 

   or கூடாது

   நான் இப்போது தோசை சாப்பிட முடியாது or கூடாது / சாப்பிட்டுவிட முடியாது 

   or கூடாது / சாப்பிட்டுக்கொள்ள முடியாது or கூடாது /சாப்பிட்டுக்கொண்டிருக்க

   முடியாது or கூடாது

   ‘I cannot eat / may not eat / without fail not eat / for my good not eat / not 

   be eating dose now’

 

14. நான் காலையில் தோசை சாப்பிட்டிருக்க முடியாது 

   நான் காலையில் தோசை சாப்பிட்டிருக்க முடியாது

   ‘I could not / might not have eaten dose in the morning’

 

15. நான் இப்போ தோசை சாப்பிடக் கூடாது /சாப்பிட்டுடக் கூடாது /  

   சாப்பிட்டுக்கிடக் கூடாது / சாப்பிட்டுக்கிட்டுருக்கக் கூடாது

   நான் இப்போது தோசை சாப்பிடக் கூடாது /சாப்பிட்டுவிடக் கூடாது 

   /சாப்பிட்டுக்கொள்ளக் கூடாது / சாப்பிட்டுக்கொண்டிருக்கக் கூடாது

   'I want to / must not eat / without fail not eat / for my good not eat / not be 

   eating dose now'

 

16. நான் காலைலே தோசை சாப்பிட்டுருக்கக் கூடாது 

    நான் காலையில் தோசை சாப்பிட்டிருக்கக் கூடாது

   'I must / should not have eaten dose in the morning'

 

17. The negative கூடாது is unusual

    எனக்கு காலைலே தோசை சாப்பிடணும் /சாப்பிட்டுடணும் / சாப்பிட்டுக்கிடணும்  

    சாப்பிட்டுக்கிட்டுருக்கணும்

    எனக்குக் காலையில் தோசை சாப்பிட வேண்டும் / சாப்பிட்டுவிட வேண்டும் / 

    சாப்பிட்டுக்கொள்ள  வேண்டும் / சாப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டும்

    'I must eat / without fail eat / for my good eat / be eating dose in the 

     mornings'

 

18.நான் ஓட்டல்லே தோசை சாப்பிட வேண்டியதில்லை / வேண்டியதிருக்காது

  நான் ஓட்டலில் தோசை சாப்பிட வேண்டியதில்லை வேண்டியதிருக்காது

  'I do not have to/ will not have to eat dose in the restaurant'

  

 

19. நான் நாலு தோசை சாப்பிட / சாப்பிட்டுட / சாப்பிட்டுக்கிட/  

    சாப்பிட்டுக்கிட்டுருக்க முடியாது

   நான் நான்கு தோசை சாப்பிட சாப்பிட்டுவிட / சாப்பிட்டுக்கொள்ள/ 

   சாப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது

   'I cannot eat / without fail not eat / for my good not eat / not be eating four 

   doses

 

20. நான் நாலு தோசை சாப்பிட்டுருக்க முடியாது

   நான் நான்கு தோசை சாப்பிட்டிருக்க முடியாது

   'I could not have eaten four doses

 

21. There is no negative

    நான் தோசையை சாப்பிடட்டுமா / சாப்பிட்டுடட்டுமா / சாப்பிட்டுக்கிடட்டுமா / 

    சாப்பிட்டுக்கிட்டுருக்கட்டுமா?

   நான் தோசை சாப்பிடட்டுமா / சாப்பிட்டுடட்டுமா / சாப்பிட்டுக்கிடட்டுமா / 

    சாப்பிட்டுக்கிட்டுருக்கட்டுமா?

   'Shall I eat / without fail eat / for my good eat / be eating dose

 

22. நீ நாலு தோசை சாப்பிடாதே / சாப்பிட்டுடாதே / சாப்பிட்டுக்கிடாதே /  

   சாப்பிட்டுக்கிட்டுருக்காதே

   நீ நான்கு தோசை சாப்பிடாதே / சாப்பிட்டுவிடாதே / சாப்பிட்டுக்கொள்ளாதே /  

   சாப்பிட்டுக்கொண்டிருக்காதே

   ‘You don’t eat / don’t eat without fail / don’t eat for your good /don’t be eating 

   four doses

   

 

23. நீ நாலு தோசை சாப்பிடாதேயேன் / சாப்பிட்டுடாதேயேன் / 

   சாப்பிட்டுக்கிடாதேயேன் /  சாப்பிட்டுக்கிட்டுருக்காதேயேன்

   நீ நான்கு தோசை சாப்பிடாதேயேன் /  சாப்பிட்டுக்கொண்டிருகாதேயேன்

   ‘Why don’t you eat / not be eating four 

    doses?’

 

24. There is no negative

   நாலு தோசை சாப்பிடுவானேன், கஷ்டப்படுவானேன்

   நான்கு தோசை சாப்பிடுவானேன், கஷ்டப்படுவானேன்

   ‘Why should (one) eat four doses and then suffer!’

 

25. நான் இந்த தோசையை எப்படி சாப்பிடாம இருக்கிறது?

    நான் இந்த தோசையை எப்படி சாப்பிடாமல் இருப்பது?

    ‘How can I not eat this dose?’

 

26. There is no negative

   நான் எந்த தோசையை சாப்பிடாம இருக்க ?

   நான் எந்த தோசையை சாப்பிடாமல் இருக்க ?

   ‘Which dose shall I not eat?’

 

 

 

 

4. Staking of suffixes on a verb – a sample

   

1.அவன் சிகாகோவுலே படிச்சான்

 அவன் சிகாகோவில் படித்தான்

 ‘He studied in Chicago’

 

2.அவன் சிகாகோவுலே படிச்சுக்கிட்டுருந்தான்

 அவன் சிகாகோவில் படித்துக்கொண்டிருந்தான்

 ‘He was studying in Chicago’

 

3.அவன் சிகாகோவுலே படிச்சுக்கிட்டேருந்தான்

 அவன் சிகாகோவில் படித்துக்கொண்டேயிருந்தான்

 ‘He kept on studying in Chicago’

 

4.அவன் சிகாகோவுலே படிச்சுக்கிட்டேருந்துருக்கான்

 அவன் சிகாகோவில் படித்துக்கொண்டேயிருந்திருக்கிறான்

 ‘I presume that he kept on studying in Chicago’

 

5.அவன் சிகாகோவுலே படிச்சுக்கிட்டேருந்துருக்கானாம்

  அவன் சிகாகோவில் படித்துக்கொண்டேயிருந்திருக்கிறானாம்

 ‘It seems that it is presumed that he kept on studying in Chicago’

 

 

6. அவன் சிகாகோவுலே படிச்சுக்கிட்டேருந்துருக்கானாமா?

  அவன் சிகாகோவில் படித்துக்கொண்டேயிருந்திருக்கிறானாமா?

  ‘Does it seem that it is presumed that he kept on studying in Chicago?’