Text 5
ஜிம்முக்கு கிறிஸ்துமஸ் லீவு. மதுரையில் ஒரு வாரமாக நல்ல மழை. தமிழ்நாட்டில் இது மழைகாலம். மழையினால் ஜிம் வெளியே எங்கேயும் போகவில்லை. ஒரு நாள் ராஜா வீட்டுக்கு பஸ்ஸில் வருகிறார்.
ஜிம் கிறிஸ்துமஸ்ஸுக்கு அவருடைய அம்மாவுக்குப் பரிசு வாங்க நினைக்கிறார். ராஜாவும் பொங்கலுக்குத் புதுத் துணிமணி வாங்க வேண்டும். இரண்டு பேரும் கடைக்குப் போகத் திட்டம் போடுகிறார்கள். ஜிம் அம்மாவுக்குப் புடவை வாங்க முடிவு செய்கிறார். இரண்டு பேரும் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு கடைக்குப் போகிறார்கள்.
கடையில் பல நிறங்களில் பட்டுப் புடவைகள் இருக்கின்றன. எல்லாமே அழகாக இருக்கின்றன. ஒரு சிவப்பு நிறப் புடவை அவருக்கு மிகவும் பிடிக்கிறது. அதற்கு ஜரிகைக் கரை. அந்தப் புடவையை ஜிம் நாலாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்.
Notes
Grammatical Forms
Formal with alternates Informal
மழையினால் மழையால் மழைனாலே (இனால் = னாலே)
எங்கேயும் எங்கும்
நிறங்கள் நெறம்
புடவைகள் பொடவை
(-கள் is plural marker. It is optional in colloquial Tamil and is not often used)
இருக்கின்றன இருக்கு
(-கின்று- is present tense marker in neuter plural (not –கிறு-); -அன is neuter plural ending. Colloquial Tamil uses the neuter singular form for the plural subjects also)
Spelling
நிறம் நெறம்
புடவை பொடவை
Sandhi
புது + துணிமணி = புதுத் துணிமணி
அந்த + புடவை = அந்தப் புடவை
(Though the doubling sandhi does not operate after adjectives (which are not nouns); monosyllabic (final -உ is not counted) adjectives like புது and deictic and interrogative forms அந்த, இந்த, எந்த are exceptions)
Words
லீவு விடுமுறை
பல நிறைய நெறைய
நிறம் கலர்
Glossary
பரிசு ‘gift’
துணிமணி ‘clothes’
திட்டம் ‘plan’
திட்டம் போடு (போட) ‘make plan, plan’
முடிவு ‘decision’
முடிவு செய் (செய்ய) ‘take decision, decide’
பல 'many’
நிறம் ‘color’
ஜரிகை ‘silver interlace on cloth’
கரை ‘border’
ஆயிரம் ‘thousand’