11. Finite Verb Forms of Non-attested statements

Section: 

11. Finite Verb Forms of Non-attested statements

 

A statement may be about something that the speaker witnessed or witnesses and it is expressed in simple finite verbs in past or present tense. A statement could be made on the basis of other sources such as prediction with different degrees of probability, inference from evidence, other people's observation etc. The forms of the finite verbs of such unattested statements are given below.

 

1. அவன் அடுத்த வாரம் ஊருக்குப் போவான்.

  அவன் அடுத்த வாரம் ஊருக்கு போவான்.

  'He will go to his home town next week'

 

2. அவன் அடுத்த வாரம் ஊருக்குப் போனாலும் போவான்.

  அவன் அடுத்த வாரம் ஊருக்கு போனாலும் போவான்.

  'He will probably go to his home town next week'

 

3. அவன் அடுத்த வாரம் ஊருக்குப் போகலாம்.

  அவன் அடுத்த வாரம் ஊருக்கு போகலாம்.

  'He may go to his home town next week'

 

4. அவன் அடுத்த வாரம் ஊருக்குப் போனாலும் போகலாம்.

   அவன் அடுத்த வாரம் ஊருக்கு போனாலும் போகலாம்.

  'He may probably go to his home town next week'

 

5. அவன் போன வாரம் ஊருக்குப் போயிருக்கிறான்.

   அவன் போன வாரம் ஊருக்கு போயிருக்கான்.

  'He seems to have gone to his home town last week'

 

6. அவன் போன வாரம் ஊருக்குப் போயிருப்பான்.

  அவன் போன வாரம் ஊருக்கு போயிருப்பான்.

  'He would have gone to his home town last week'

 

7. அவன் போன வாரம் ஊருக்குப் போனாலும் போயிருப்பான்.

  அவன் போன வாரம் ஊருக்கு போனாலும் போயிருப்பான்.

  'He would probably have gone to his home town last week'

 

8. அவன் போன வாரம் ஊருக்குப் போயிருக்கலாம்.

   அவன் போன வாரம் ஊருக்கு போயிருக்கலாம்.

   'He might have gone to his home town last week'

 

9. அவன் போன வாரம் ஊருக்குப் போனாலும் போயிருக்காலாம்.

   அவன் போன வாரம் ஊருக்கு போனாலும் போயிருக்கலாம்.

   'He might probably have gone to his home town last week'

 

10. அவன் அடுத்த வாரம் ஊருக்குப் போறானாம்.

   அவன் அடுத்த வாரம் ஊருக்கு போறானாம்.

   'He seems / said to be going to his home town next week'

  

    (Note: -ஆம் could be added to any sentence)

 

11. அவன் அடுத்த வாரம் ஊருக்குப் போகிறான் /

    போனான் போல் இருக்கிறது / இருந்தது.

    

   அவன் அடுத்த வாரம் ஊருக்கு போறான் / போனான் போல இருக்கு / 

   இருந்துது.

   'It seems / seemed that he is going /went to his home town next

    week'

   

   (Note: போல இருக்கிறது இருந்தது can be added to any sentence)

 

12. அவன் அடுத்த வாரம் ஊருக்குப் போகிற / போன மாதிரி இருக்கிறது /

    இருந்தது.

 

 அவன் அடுத்த வாரம் ஊருக்கு போற / போன மாதிரி இருக்கு /  

 இருந்துது.

    It seems / seemed as if he is going went to his native town next

    week’ 

   

(Note: மாதிரி இருக்கிறது / இருந்தது can be added to sentences in  

    present and past tenses)

 

Make all the above sentences for the statements below. Translate them

 

A. அவள் சொந்த ஊரில் வீடு வாங்குவாள்.

   அவ சொந்த ஊர்லே வீடு வாங்குவா.

   'She will buy a house in her home town'

 

B. நாளைக்கு மழை பெய்யும்.

   நாளைக்கு மழை பெய்யும்.

   'It will rain tomorrow'

 

C. அவருக்கு நாளைக்கு வேலை இருக்கும்.

   அவருக்கு நாளைக்கு வேலை இருக்கும்.

   'He will have work (will be busy) tomorrow'