Text 6

 

Text 6

ஜிம்மிடம் நிறைய சாமான் இருக்கிறது. அதனால் பஸ்ஸில் போக விரும்பவில்லை. ஆட்டோ ரிக்‌ஷாவில் சாமானோடு போகிறார். வழியில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டும். ஆற்றின் மேல் உயரமான பாலம் இருக்கிறது. ஆட்டோரிக்‌ஷாவால் பாலத்தின் மேல் வேகமாக ஏற முடியவில்லை. ஆட்டோக்காரன் காக்கிச் சட்டை போடவில்லை. அதனால் போலீஸ்காரர் வண்டியை நிறுத்துகிறார். அபராதம் கட்டச் சொல்கிறார். இதில் கொஞ்ச நேரம் போகிறது. இதனால் ஜிம் வீட்டுக்குத் தாமதமாகப் போகிறார்.

இனிமேல் ஆட்டோவுக்குப் பதில் பஸ்ஸில் போக வேண்டும். ஆட்டோவில் சில நன்மைகள் உண்டு. அதிக சாமான்களைக் கொண்டுபோகலாம். அது பஸ்ஸை விட வேகமாகவும் போகும். ஆட்டோ டீசலில் ஓடுகிறது. அதிலிருந்து நிறைய புகை வரும். புகையில் சுவாசிப்பது கஷ்டம். புகை நமக்கு நல்லது இல்லை. அதனால் பஸ்ஸில் போவது நல்லது. அல்லது சைக்கிளில் போகலாம். நடப்பது இன்னும் நல்லது.

Notes

Grammatical Forms

Formal with alternatives                                                                                         Informal

சாமான் இருக்கிறது                 சாமன்கள் இருக்கின்றன                      சாமான் இருக்கு

-ஓடு   -உடன்                                                                                                          ஓடே

ஆற்றின் மேல்                                                                                                       ஆத்து மேலே

பாலத்தின் மேல்                                                                                                    பாலத்து மேலே

( The link form –இன் is absent in colloquial Tamil before post-position as it is before case markers)

ஒரு உயரமான                  உயரமாக ஒரு                                                      ஒயரமா ஒரு

(The adjective phrase is equivalent of the adverbial phrase)

பதில் This goes with nouns in dative to mean ‘instead of’

சுவாசிப்பது                (சுவாசிக்கிறது)                                                               சுவாசிக்கிறது

போவது                       (போகிறது)                                                                         போகிறது

நடப்பது                       (நடக்கிறது)                                                                       நடக்கிறது

இல்லை                     அல்ல                                                                                    இல்லை

(The verbal noun in the future tense in the formal style is in the present tense in the colloquial style, but this carries no meanig difference. The alternate form of the verbal noun given in parentheses indicates that this form is also used in the formal style.  In the formal style, there are two negative forms: இல்லை for negating existence (there is no…) and அல்ல for negating identity (it is not…). But the former is used commonly in both senses. The colloquial style has only the former).

 

Spelling

ஆற்று (the form of ஆறு before case marker)                                                      ஆத்து

உயரமான                                                                                                                     ஒயரமான

ஆட்டோரிக்‌ஷாவால்                                                                                               ஆட்டோரிக்‌ஷாவாலே    

அதிலிருந்து                                                                                                                 அதுலேருந்து

 

Words

அல்லது         இல்லை என்றால்                                                                          அல்லது, இல்லைன்னா

 

Glossary

சாமான் ‘things, luggage’

விரும்பு (விரும்ப) ‘like, want’

ஆறு ‘river’

கட (கடக்க) ‘cross over’

பாலம் ‘bridge’

உயரம் ‘height’

ஆட்டோரிக்‌ஷா ‘autorikshaw, three wheeler’  ஆட்டோ

ஏறு (ஏற) ‘climb up’

காக்கி சட்டை ‘Khaki dress, (here) uniform’

போலீஸ்காரர் ‘policeman’

அபராதம் ‘penalty, fine’

கட்டு (கட்ட) ‘pay’

தாமதம் ‘delay’

பதில் ‘instead of’

நன்மைகள் ‘advantages, benefits’

அதிகம் ‘plenty’

சாமான் ‘things, goods, items’

டீசல் ‘diesel’

புகை ‘smoke’

சுவாசி (சுவாசிக்க) ‘breathe’

அல்லது ‘or’

சைக்கிள் ‘bicycle’