11. Words of Food Items with Definition

Section: 

11. Words of Food Items with Definition

அடை பெ. 1: அரிசியோடு சில பருப்பு வகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் காரச் சுவையுடைய ஒரு வகை (தடித்த) தோசை; a kind of (thick) தோசை prepared with a paste of coarsely ground rice and pulses. 

அதிரசம் பெ. 1: வெல்லப் பாகில் (ஊறவைத்துத் திரித்த) அரிசி மாவைக் கலந்து  எண்ணெயில் சுட்டுத் தயாரிக்கப்படும்  தின்பண்டம்; a kind of thick flat round cake made by frying a sweetened rice flour.

அப்பளம் பெ. 1:  எண்ணெயில் பொரித்து அல்லது தணலில் சுட்டு உண்பதற்கு ஏற்ற முறையில் உளுத்தம் மாவைப் பிசைந்து மெல்லிய வட்டத்  தகடாக இட்டு உலரவைத்துத்  தயாரிக்கப்படும் உணவுப் பண்டம்; a thin and round wafer made of the flour of blackgram normally fried in oil.

அல்வா பெ. 1: கோதுமை மாவில் பாகு ஊற்றிக் கிளறிச் செய்யப்படும் (வழுவழுப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்) இனிப்புப் பண்டம்; (a soft, smooth jelly like) sweet-meat made of sugar treacle and wheat flour.

அவல் பெ. 1: ஊறவைத்த நெல்லைக் காயவைத்து வறுத்து இடித்துப் பெறும் உணவுப் பண்டம்; rice flakes prepared by soaking paddy, parching it and pounding it.

அவியல் பெ. 1: பல வகைக் காய்கறிகளை அவித்து ஒன்றாகச் சேர்த்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி; vegetable mix cooked with grated coconut. 

ஆப்பம் பெ. 1: நடுப்பகுதி தடிமனாகவும்  ஓரம் மெல்லியதாகவும் இருக்கும், தோசை போன்ற உணவுப் பண்டம்; rice preparation similar to தோசை but thicker in the middle.

இட்லி பெ. 1: அரைத்த அரிசியையும் உளுந்தையும் (குறிப்பிட்ட விகிதத்தில்) கலந்து, அந்த மாவைக் குழிவுடைய தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்; an eatable prepared by mixing rice dough with blackgram (in certain ratio) and by steaming it on a perforated  plate with pits; idli.

இடியாப்பம் பெ. 1: அரிசி மாவை அச்சில் இட்டு நூல் போலப் பிழிந்து

ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்; steamed rice noodles.

இனிப்பு பெ. 1: சர்க்கரை, கரும்பு முதலியவற்றைத் தின்னும்போது உணரப்படும் சுவை; தித்திப்பு; sweetness. பாயசத்துக்கு இனிப்பு போதுமா என்று பார்

2: இனிப்புச் சுவையுடைய தின்பண்டம்; sweet(s); confectionery. வந்திருந்தோர்க்கெல்லாம் இனிப்பு வழங்கப்பட்டது

உசிலி பெ. 1: வேகவைத்து அரைத்த பருப்போடு   கொத்தவரங்காய், பீன்ஸ், வாழைப்பூ போன்ற காய்கறிகளைச் சேர்த்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்; a dish prepared by adding a vegetable to the boiled and mashed pulse.

ஊத்தப்பம் பெ. 1: தோசைக் கல்லில் சற்றுப் புளித்த மாவை ஊற்றித் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தடித்த தோசை; a kind of thick தோசை.

ஊறுகாய் பெ. 1: (எலுமிச்சம்பழம், மாங்காய், தக்காளி அல்லது சில வகை மீன்கள் முதலியவற்றைத் துண்டுதுண்டாக நறுக்கி மிளகாய்ப்பொடி தூவி எண்ணெ்யில் ஊறவைத்து அல்லது மாங்காய் வடுவை உப்பு நீரில் ஊறவைத்து) உணவோடு சிறு அளவில் சேர்த்துக்கொள்ளும்  தொடுகறி; pickle; pieces of lemon, mango,  vegetables or certain kinds of fishes mixed with chilli and preserved in oil or in salt water to be used in small quantities as side dish.

ஓமப்பொடி பெ. 1: பிசைந்த கடலை மாவை  அச்சின் மூலம் நூல்நூலாகப் பிழிந்து எண்ணெயில் இட்டுப் பொரித்துச் செய்யப்படும் காரமான ஒரு வகைத் தின்பண்டம்;  a savoury (in the form of broken noodles) made by pressing the paste of chick pea through a perforated ladle or a press and frying in oil.

கஞ்சி பெ. 1: சோறு வெந்த பிறகு வடித்து எடுத்த, குழகுழப்புத்  தன்மை உடைய நீர்; sticky, starchy water drained from  cooked rice. 2: (அரிசி, கோதுமை முதலியவை போட்டுக் காய்ச்சித் தயாரிக்கப்படும்) திரவ உணவு; gruel; semi-liquid food (for the poor). மருத்துவர் கோதுமைக் கஞ்சி மட்டுமே குடிக்கச் சொல்லியிருக்கிறார்./ வயலில் வேலை செய்பவர்களுக்குக் கஞ்சி கொண்டுபோக வேண்டும்

**கடல்_உணவு பெ. 1: (உணவாகும்) மீன், நண்டு போன்ற கடல்வாழ் உயிரினங்கள்; sea food. கடல் உணவு ஏற்றுமதியில் நம் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது./ கடல் உணவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது.

கறி பெ. 1: மாமிசம்; இறைச்சி; (raw or cooked) meat. ஆட்டுக் கறி கிலோ என்ன விலை?/ தோசைக்குக் கறிக் குழம்பு. 2: (ஏதேனும் ஒரு காய்கறியை அல்லது இறைச்சியைத் துண்டுதுண்டாக நறுக்கி வேகவைத்துச் செய்யப்படும்) குழகுழப்புள்ள  அல்லது கெட்டியான உணவுப் பண்டம்

a liquid or solid side dish (prepared with pieces of one vegetable or meat); curry. முட்டைகோஸ் கறி/ மீன் கறி. 3: (..) குழம்பு; any sauce used for mixing with cooked rice. புளி இல்லாத கறி வைத்திருக்கிறேன்

காடி பெ. 1: (..) (பழைய சோற்றில் நீர் ஊற்றி ஒரு சில நாட்கள் வைத்திருந்து பெறும்) புளித்த நீர்; fermented rice-water. 2: (பழங்கள், தானியங்கள், சர்க்கரை போன்றவற்றை) புளிக்கவைத்து  எடுக்கப்படுவதும் உணவுப் பண்டங்கள் கெடாமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுவதும் அமிலத் தன்மை உள்ளதுமான ஒரு திரவம்; vinegar.

காரக்_குழம்பு பெ. 1: உறைப்பான புளிக் குழம்பு; a kind of hot sauce with a tamarind base.

காரம் பெ. 1: (-ஆக, -ஆன) உறைப்பு; pungency; hot (in taste). குழம்பில் காரம் அதிகம்./ காரமான சட்னி. 2: எண்ணெயில் செய்யப்பட்ட உறைப்புச் சுவை உடைய தின்பண்டம்; savoury. இனிப்புக்கு லட்டும் காரத்துக்குப் பக்கோடாவும் வாங்கினார்

காராச்சேவு பெ. 1: கடலை மாவுடன் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து அச்சின்மூலம்  கனத்த திரி போல் பிழிந்து  எண்ணெயில் இட்டுச் செய்யும் தின்பண்டம்; a kind of snack made from a paste of chickpea flour mixed with chilli powder and fried in oil in the shape of small sticks.

காராப்பூந்தி பெ. 1: கடலை மாவில் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து, துளைகளை உடைய பெரிய கரண்டியில் தேய்த்து  எண்ணெயில் இட்டுச் செய்யப்படும் தின்பண்டம்; a snack made from a paste of chickpea flour mixed with chilli powder and fried in oil in the shape of  big granules.

கிச்சடி பெ.  1: கொதிக்கும் நீரில்  ரவை அல்லது சேமியாவைப் போட்டு, வேகவைத்த தக்காளி, உருளைக்கிழங்கு முதலியவற்றைச் சேர்த்து மஞ்சள் தூள் தூவிச் செய்யும் சிற்றுண்டி; a dish prepared by boiling semolina or vermicelli to which tomatoes, potatoes, etc. are added.

**கிள்ளுவத்தல் பெ. 1: அரிசிக் கூழைக் கையால் வழித்தெடுத்துச் சிறு குமிழ்களாக வைத்து உலர்த்தி எடுக்கும் ஒரு வகை வத்தல்; slightly salted and spiced rice-flour paste distributed on a cloth in thick drops (or squeezed through a press), left to dry and collected (to be fried).

குஞ்சாலாடு பெ. (..) 1: லட்டு; ball-shaped sweetmeat.

குருமா பெ. 1: வேகவைத்த காய்கறிகளுடன் அல்லது இறைச்சியுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்துத் தாளித்துச் செய்யும் (சப்பாத்தி போன்றவற்றிற்குத் தொடுகறியாகும்) கெட்டியான குழம்பு; a kind of thick sauce made of boiled vegetables or meat used as a side dish to go with சப்பாத்தி, etc.

குலோப்ஜாமுன் பெ. 1: மைதா மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டிப் பொரித்து ஜீராவில் போட்டுத் தயாரிக்கும் ஓர் இனிப்பு வகை; flour-balls soaked in sugar treacle.

குழம்பு பெ. 1: காய்கறியை அல்லது இறைச்சியை வேக வைத்துக் காரச் சுவையுடன் (உணவில் ஊற்றிச் சாப்பிடத் தகுந்த வகையில்) தயாரிக்கும் உணவுப் பண்டம்;  thickened sauce or a kind of broth (to be added to boiled rice). இன்றைக்குப் புளிக் குழம்பு பிரமாதமாக இருக்கிறது

குழாய்ப்_புட்டு பெ. 1: குழாய் போன்ற நீண்ட கழுத்துடைய பாத்திரத்தில் அரிசி மாவை அடைத்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் புட்டு; dish prepared by filling a long tube-like structure with rice flour and steaming it.

கூட்டு பெ. 1: ஒரு காய்கறியை நறுக்கி வேக வைத்துப் பருப்பு, தேங்காய் முதலியவை சேர்த்து (திரவ நிலையில்) தயாரிக்கும் ஒரு தொடுகறி; pieces of a vegetable cooked and mixed with lentils, coconut, etc., for serving as a side dish (in a semi-solid state). புடலங்காய்க் கூட்டு.

கூழ் பெ. 1: (கம்பு, கேழ்வரகு போன்ற) சில தானியங்களின் மாவைக் கொதித்த நீரில் போட்டுத் தயாரித்த, சற்றுக் குழைவாக இருக்கும் திரவ உணவு; porridge-like preparation from the flour of certain grains (such as ragi) இன்று காலையில் கேழ்வரகுக் கூழ்தான் குடித்தோம்./ வடகத்துக்கு அரிசிக் கூழ் காய்ச்ச வேண்டும்

கூழ்வடகம் பெ. 1: உப்பும் உறைப்பும் சேர்த்த அரிசி மாவுக் கூழைத் துணியில் சிறிதுசிறிதாக ஊற்றிக் காயவைத்து எடுத்து (வேண்டும்போது பொரித்து) பயன்படுத்தும் துணை உணவு வகை; slightly salted and spiced rice-flour paste distributed on a cloth in thick drops (or squeezed through 

a press), left to dry and collected (to be fried).

கேசரி பெ. 1: ரவையை நீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் சர்க்கரை, முந்திரி முதலியவை சேர்த்து நிறத்திற்காகப் பொடி தூவிக் கிளறிச் செய்யும் ஒரு வகைத் தின்பண்டம்; a sweet dish made by boiling the semolina with cashew, cardamom, etc. added to it.

கொழுக்கட்டை பெ. 1: பிசைந்து உருட்டிய அரிசி மாவினுள்  பூரணத்தை வைத்துகையால் உருண்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் தின்பண்டம்; a pastry-like rice-flour preparation with a filling of sweetened grated coconut or made by mixing rice-flour with sugar treacle. 2: காண்க: பிடிகொழுக்கட்டை.

**கோலா_உருண்டை பெ. 1: ஓர் அசைவத் தொடுகறி; a non-vegetarian side dish.

சப்பாத்தி பெ. 1: கோதுமை மாவை அல்லது மைதா மாவைப் பிசைந்து அப்பளம் போல இட்டுச் சுட்டுத் தயாரிக்கும் ஒரு வகை உணவுப் பண்டம்; unleavened roasted bread made from wheat or maize dough, thin in size and round in shape.

சர்க்கரைப்_பொங்கல் பெ. 1: அரிசியையும் பாசிப்பருப்பையும் நன்றாக வேக வைத்து வெல்லத்தைப் பொடித்துப் போட்டு நெய் ஊற்றிச் செய்யும் இனிப்பு உணவு; boiled rice mixed with jaggery and clarified butter.

சட்னி பெ. 1: தக்காளி, புதினா, கொத்தமல்லி அல்லது பொட்டுக்கடலையுடன் நீர் ஊற்றி அரைத்துத் தாளித்துச் செய்யப்படும் (இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிக்கான) காரச் சுவையுடைய தொடுகறி; a side dish in liquid state seasoned with spices (for food items such as இட்லி). தேங்காய்ச் சட்னி/ தக்காளிச் சட்னி/ பொங்கலுக்குச் சாம்பாரும் சட்னியும் ஊற்று.

சாதம் பெ. 1: சோறு; cooked rice.

சாம்பார் பெ. 1: வேகவைத்த துவரம்பருப்பைப் புளிக் கரைசலில் கலந்து காய்கறிகளையும் போட்டுத் தயாரிக்கும் ஒரு வகைக் குழம்பு

a kind of sauce prepared by adding condiments and pieces of vegetables to tamarind mix. `வெங்காயச் சாம்பாரா, முருங்கைக்காய்ச் சாம்பாரா?' `இல்லை முள்ளங்கிச் சாம்பார்'.

**சாம்பார்ப்_பொடி பெ. 1: காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு முதலியவற்றைச் சேர்த்து (பெரும்பாலும் சாம்பார் தயாரிக்கப் பயன்படும்) அரைத்துத் தயாரிக்கும் பொடி; a powder made of red chilli, coriander seeds, etc. 

used in preparing சாம்பார்.

சித்திரான்னம் பெ. 1: சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் முதலிய பல வகை சாதங்களைக் குறிக்கும் பொதுச் சொல்; variety of cooked rice dishes treated with  tamarind mix,  jaggery, etc.

சீடை பெ. 1: பச்சரிசி மாவுடன் தேங்காய், எள் முதலியவை சேர்த்துச் சிறுசிறு உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தின்பண்டம்; small ball shaped snacks made out of rice flour mixed with coconut and sesame seeds.

சுக்கா_ரொட்டி பெ. (பே..) 1: (எண்ணெய் தடவாமல்) தணலில் வாட்டி எடுக்கப்படும் சப்பாத்தி போன்ற ரொட்டி; a kind of சப்பாத்தி roasted without using oil.

சுக்கா_வறுவல் பெ. (பே..) 1: (சற்று மொரமொரப்பாக இருக்கும் அளவில்) மசாலா தடவி எண்ணெயில் வறுத்த இறைச்சித் துண்டு; pieces of fried meat slightly spiced.

**சுக்குக்காப்பி பெ. 1: (பால், காப்பித்தூள் போன்றவை இல்லாமல்) சுக்கு, கருப்பட்டி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சுடுபானம்; a kind of hot drink prepared with dried ginger, palm jaggery, etc. (without using coffee powder or milk).

சுண்டல் பெ. 1: பருப்பு அல்லது கடலை வகைகளை வேகவைத்துக் காரம் சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்; boiled and spiced pulses served as snacks. பட்டாணிச் சுண்டல்/ கொண்டைக்கடலைச் சுண்டல்

சுண்டக்கறி பெ. (..) 1: சமைத்ததில் மிச்சமிருக்கும் பொரியல் முதலியவற்றைக் குழம்பில் இட்டுச் சூடுபடுத்திச் சுண்டவைத்துத் தயாரிக்கும் கறி; a dish prepared by adding the leftovers to the sauce and by heating it for a while.

சுழியன் பெ. 1: கடலைப் பருப்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றால் செய்த பூரணத்தைக் கரைத்த மைதாமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்த இனிப்புப் பண்டம்; சுசியம்; a ball shaped sweetmeat with a filling of coconut and jaggery wrapped in dough of maize and fried in oil.

சூப்பு பெ. 1: இறைச்சி அல்லது காய்கறியை வேகவத்துத் தயாரிக்கும் திரவ உணவு; soup. ஆட்டுக்கால் சூப்பு/ தக்காளி சூப்பு.

சேமியா பெ. 1: (பாயசம், சிற்றுண்டி ஆகியவை செய்யப் பயன்படும்) கோதுமை, கிழங்கு முதலியவற்றின் மாவிலிருந்து மெல்லிய கம்பி போல் பிழிந்து உலர்த்திய உணவுப் பொருள்; vermicelli. சேமியா உப்புமா/ சேமியா கேசரி/ சேமியா பாயசம்.

சேவை பெ. 1: அரிசி மாவை நூல் போலப் பிழிந்து நீராவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவு; இடியாப்பம்; a noodle-like steamed rice preparation.

சேவு பெ. 1: கடலை மாவைப் பிசைந்து அச்சில் தேய்த்து இழைகளாகப் பிழிந்து எண்ணெயில் இட்டுச் செய்யப்படும் (கார அல்லது இனிப்புச் சுவையுடைய) தின்பண்டம்; a savoury or sweet in the shape of short stick-strips 

made of chickpea paste fried in oil. காரச் சேவு/ இனிப்புச் சேவு.

சொதி பெ. (..) 1: தேங்காய்ப் பாலால் செய்யப்படும் ஒரு வகைக் குழம்பு; a kind of vegetable sauce prepared from the extract of coconut.

சொஜ்ஜி பெ. 1: கேசரி; a kind of sweetmeat prepared with semolina in ghee or milk with cashew nuts, etc.

சோமாஸ் பெ. 1: பிசைந்து தட்டிய மைதா மாவினுள் பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் பொரித்துச் செய்யும்  தின்பண்டம்; a kind of puff with mildly sweetened filling, fried in oil.

தட்டை பெ. 1: அரிசி மாவில் தேங்காய்த் துண்டுகளும் கடலைப் பருப்பும் போட்டுத் தட்டையாகத் தட்டி எண்ணெயில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தின்பண்டம்; a flat round shaped savoury made with rice-flour and bits 

of coconut and pulses.

தயிர் பெ. 1: பாலில் உறை மோர் ஊற்றுவதால் புளிப்புத் தன்மை அடைந்து கிடைக்கும் சற்றுக் கெட்டியான உணவுப் பொருள்; curd(s).

**தயிர்சாதம் பெ. 1: தயிர் ஊற்றிப் பிசைந்து, பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை போன்றவற்றைப் போட்டுத் தாளித்த சாதம்; cooked rice mixed with curd and seasoned with chillies, ginger, etc.

**தயிர்ப்பச்சடி பெ. 1: சில வகைக் காய்கறிகளைப் பச்சையாக நறுக்கி, தயிரில் கலந்து தாளித்துத் தயாரிக்கும் தொடுகறி; a side dish prepared by mixing curd with vegetables, either cooked or raw and seasoned. விருந்தில் தயிர்ப்பச்சடி முதலில் பரிமாறுவார்கள்./ வெள்ளரிக்காய்த் தயிர்ப்பச்சடி/ வெங்காயத் தயிர்ப்பச்சடி.

**தயிர்வடை பெ. 1: தாளித்தத் தயிரில் ஊறவைத்த மெதுவடை; Eng.?

**தவலைவடை பெ. 1: அரிசியுடன் சில பருப்புகளும், மிளகாய் வற்றலும் சேர்த்து அரைத்து, எண்ணெயில் சுட்டு எடுக்கும் வடை; Eng.?

திரட்டுப்பால் பெ. 1: பாலைச் சுண்டக் காய்ச்சிச் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்; a kind of milk sweet.

துவையல் பெ. 1: தேங்காய், இஞ்சி, கறிவேப்பிலை முதலியவற்றில் ஏதோவொன்றுடன் மிளகாய், உப்பு முதலியவை கலந்து அரைத்து (பெரும்பாலும் தாளிக்காமல்) செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி; a kind of strong relish prepared by adding paste of chilli to coconut, ginger, curry leaf, or to similar things. தேங்காய்த் துவையல்/ புதினாத் துவையல்/ இஞ்சித் துவையல்.

தேங்குழல் பெ. (..) 1: அரிசி மாவும் பாசிப்பயற்று மாவும் கலந்து பிசைந்து அச்சில் பிழிந்து தயாரிக்கும் முறுக்கு போன்ற தின்பண்டம்; a kind of savoury made of rice dough fried in oil.

தொக்கு பெ. 1: (உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படும்) மாங்காய், தக்காளி போன்றவற்றை  எண்ணெயில் வதக்கிக் காரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தொடுகறி; strong relish made from vegetables and mixed with tamarind, chillies, etc. மாங்காய்த் தொக்கு/ தக்காளித் தொக்கு.

தொடுகறி பெ. 1: முக்கிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்; வெஞ்சனம்; dish prepared to go with courses of a meal. இரண்டு வகைத் தொடுகறி செய்திருக்கிறேன்.

தோசை பெ. 1:  ஊறவைத்த புழுங்கலரிசியையும் உளுந்தையும் அரைத்துக் கிடைக்கும்  மாவைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து புளிக்கவைத்துத் தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றிச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம்; griddle cake (by roasting the paste of rice and blackgram).

பக்கோடா பெ. 1: நீர் ஊற்றிப் பிசைந்த கடலை மாவில் வெங்காயம், பச்சைமிளகாய் முதலியவற்றைச் சேர்த்துச் சிறுசிறு உருண்டைகளாக  எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கும் ஒரு தின்பண்டம்

a kind of spicy savoury prepared from chickpea paste and fried in oil.

பகாளாபாத் பெ. 1: சேமியாவை வேகவைத்துத் தயிரில் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி வகை; boiled noodles mixed with curds.

பச்சடி பெ. 1: மாங்காய், வெண்டைக்காய் முதலிய காய்கறிகளில் ஒன்றைப் பொடியாக நறுக்கி வேகவைத்து வெல்லம் அல்லது மிளகாய் போட்டுத் தாளித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி; a variety of side dish mildly sweet made with vegetables.[Check definition]

பட்சணம் பெ. (..) 1: (சில நாட்கள் வைத்துக்கொள்ளக் கூடியதின்பண்டம்; பலகாரம்; sweet and other refreshments (that can be preserved 

for a few days). பட்சணக் கடை/ தீபாவளிப் பட்சணங்கள்.

பணியாரம் பெ. 1: (பெரும்பாலும்) வெல்லம் கலந்த அரிசி மாவைக் குழிகள் உள்ள தட்டிலோ இருப்புச்சட்டியிலோ ஊற்றித் தயாரிக்கப்படும் உருண்டையான தின்பண்டம்; a kind of ball-shaped or small disc-shaped snack 

made of sweetened rice flour.

பதார்த்தம் பெ. 1:(சாப்பாட்டில்) உப உணவு; தின்பண்டம்; eats; eatables 

(other than cooked rice). எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன.

பப்படம் பெ. 1: (உப்பக் கூடிய) ஒரு வகை அப்பளம்; a kind of அப்பளம்.

பர்பி பெ. 1: சர்க்கரைப் பாகில் தேங்காய்த் துருவலையும் வறுத்த ரவையையும் முந்திரிப்பருப்பையும் போட்டுக் கிளறித் தயாரிக்கும் ஓர் இனிப்புப் பண்டம்

a kind of sweetmeat prepared by adding coconut scrapings, broken cashew and fried wheat flour in sugar treacle.

பருப்பு பெ. 2: வெந்த துவரம் பருப்பு; cooked dhal. தட்டில் சோறு வைத்துப் பருப்புப் போட்டு நெய் ஊற்றினாள்

பருப்புத் தேங்காய் பெ. (..) 1: தேங்காய்த் துருவலையும் கடலைப் பருப்பையும் வறுத்து வெல்லப்பாகில் போட்டுக் கிளறிக் கூம்பு வடிவத்தில் செய்து சில சடங்குகளில் பயன்படுத்தும் ஓர் இனிப்புப் பண்டம்; a cone shaped confection of fried coconut scrapings and bengal gram mixed with jaggery displayed on certain occasions such as wedding.

பருப்புப்பொடி பெ. 1: (சாதத்தில் கலந்து சாப்பிட) வறுத்த துவரம் பருப்பு, மிளகு முதலியவற்றை இடித்துத் தயாரிக்கும் பொடி; powdered lentil mixed with pepper (added to cooked rice to give a mild flavour).

பரோட்டா பெ. 1: மைதா மாவைப் பிசைந்து மெல்லியதாக இழுத்துப் பின் சுருட்டித் தட்டித் தோசைக் கல்லில் சுட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகை ரொட்டி; unleavened bread of maize flour, thick in size and round in shape.

பலகாரம் பெ. 1: இனிப்பு அல்லது கார வகைத் தின்பண்டம்; (sweet or hot) snacks. பண்டிகைக்குப் பலகாரம் செய்ய வேண்டும்./ அவருடைய நாக்கு ருசியான 

பலகாரத்துக்கு ஏங்கியது. 2: (சோற்றைத் தவிர்த்து) இட்லி, தோசை போன்ற உணவு வகைகள்; dishes such as இட்லி, தோசை, etc., (but not a meal of rice). உங்கள் வீட்டில் காலையில் எப்போதும் பலகாரம்தானா?/ இரவு என்ன 

சாப்பிடுவீர்கள், பலகாரமா சாப்பாடா?

பழம் பெ. 1: காய் பழுத்து, (பெரும்பாலும்) உண்ணக்கூடியதாகவும் இனிப்புச்சுவை கொண்டதாகவும் இருக்கும் நிலை; (sweet) fruit/ripened fruit. ஊருக்குப் போய்விட்டு வரும்போது பழங்கள் வாங்கிக்கொண்டு வருவார்./ தக்காளிப்பழம். 2: வாழைப்பழம்; banana. வெற்றிலையும் பழமும் வைத்துத் தட்சிணை கொடுத்தார்./ அர்ச்சனைத் தட்டில் பழத்தை வை

பழரசம் பெ. 1: பழத்தைப் பிழிந்து தயாரிக்கும் பானம்; பழச் சாறு; fruit juice.

பழையது பெ. 1: (முதல் நாளே வடித்து) நீர் ஊற்றி வைக்கப்பட்ட சோறு; cooked rice kept in water (overnight). காலையில் பழையது சாப்பிட்டால் சீக்கிரம் பசிக்காது./ பழைய சோறுக்கு மோர்மிளகாய் தொட்டுக்கொண்டால் நன்றாக இருக்கும்.

பஜ்ஜி பெ. 1: வாழைக்காய், உருளைக்கிழங்கு முதலியவற்றை மெல்லியதாகச்  சீவி மிளகாய்த் தூளுடன் கலந்த கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு தின்்பண்டம்; snack prepared by dipping thin slices of plantain, potato, etc. in flour-paste and frying them in oil.

பாகு பெ. 1: காய்ச்சிய கரும்புச் சாறு, பதநீர் அல்லது வெல்லக் கரைசல்; treacle; molasses; sugar syrup. சீனிப் பாகில் தோய்த்துச் செய்த பண்டம்.

பாசந்தி பெ. 1: சுண்டக் காய்ச்சிய பாலில் படியும் பாலாடையுடன் சீனி சேர்த்து (குளிரவைத்து) உண்ணும் இனிப்பு வகை; thick cream of milk with sugar (served cold); (in India) basandi.

பாதாம்_அல்வா பெ. 1: பாதாம் பருப்பால் செய்யும் அல்வா; the sweetmeat அல்வா prepared with almonds.

பாதாம்கீர் பெ. 1: காய்ச்சிய பாலில் பாதாம் பருப்பு, சர்க்கரை முதலியவற்றைப் போட்டுக் குளிரவைத்துத் தரும் பானம்; almond milkshake.

பாதுஷா பெ. 1: பால் ஊற்றிப் பிசைந்த மைதா மாவு உருண்டையை எண்ணெயில் பொரித்துச் சர்க்கரைப் பாகில் முக்கி எடுத்துத் தயாரிக்கும் ஓர் இனிப்புப் பண்டம்; a kind of sweet prepared by soaking the fried flour balls in sugar syrup.

பாயசம் பெ. 1: அரிசி, ஜவ்வரிசி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பாலில் போட்டு வெல்லம், முந்திரிப் பருப்பு முதலியவை கலந்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் திரவ வடிவ இனிப்பு உணவு; liquid pudding prepared by boiling rice or vermicelli in milk and adding sugar, cashew nut, etc.

**பால்_கொழுக்கட்டை  பெ. 1: அரிசி மாவு உருண்டைகளை ஆவியில் வேகவைத்து எடுத்து, பாலில் ஊறவைத்துச் செய்யப்படும் ஒரு இனிப்பு; a sweet made with small rice balls cooking them in milk mixed with jaggery.

பால்கோவா பெ. 1: பாலை நன்றாகச் சுண்டுமாறு காய்ச்சிச் 

செய்யப்படும் இனிப்புத் தின்பண்டம்; a confection made of cream of milk.

பானகம் பெ. (..) 1: நீரில் வெல்லத்தைக் கரைத்துச் சுக்கு முதலியவை கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்புப் பானம்; jaggery water with a dash of dried ginger, cardamom, etc. 2: நீரில் புளியைக் கரைத்து வெல்லம் சேர்த்த ஒரு வகை இனிப்புப் பானம்; jaggery water with a touch of tamarind.

பானம் பெ. 1: (சுவையூட்டும் பொருள்களைக் கலந்து தயாரிக்கப்படும்) குடிப்பதற்கான திரவம்; (any) drink. குளிர் பானம்.

பிட்டு பெ. 1: இனிப்போ காரமோ சேர்த்து வேகவைத்த, அரிசி மாவாலான சிற்றுண்டி; steamed rice flour sweetened or spiced, served as a dish.

**பிரிஞ்சி  பெ. 1: காய்கறிகளைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, அரிசியோடு  கலந்து, மசாலா சேர்த்து அப்படியே வேகவைத்துத் தயாரிக்கும் உணவு; a kind of spicy dish prepared of rice mixed with pieces of vegetables.

பிரியாணி பெ. 1: இறைச்சித் துண்டுகளையோ காய்கறித் துண்டுகளையோ சாதத்தில் கலந்து மசாலாப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவு

a kind of spicy rice dish mixed with pieces of meat or vegetables.

**பில்டர்_காப்பி பெ. 1: பில்டரில் வடிகட்டிய டிக்காஷனைப் பாலோடு கலந்து தயாரிக்கும் காப்பி; coffee prepared by adding coffee brew to boiled milk; 

(in India) filter coffee. நான் பில்டர் காப்பியைத் தவிர வேறெந்த காப்பியையும் குடிப்பதில்லை.

புளியோதரை பெ. 1: புளிக்காய்ச்சல் ஊற்றித்  தயாரிக்கப்படும் ஒரு வகை சாதம்; rice mixed with thick spicy concentrate of tamarind.

பூந்தி பெ. 1: துளைகள் உள்ள கரண்டியில் கடலை மாவைத் தேய்த்து உதிரும் உருண்டைகளைக் கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்து ஜீராவில் போட்டு எடுக்கும் இனிப்புப் பண்டம்; a kind of confection made of lentil paste which is pressed 

through a perforated ladle, fried and dipped in sugar treacle.

பூரணம் பெ. 1: (கொழுக்கட்டை போன்றவற்றின் உள்ளே வைக்கப்படும்) தேங்காய்த் துருவலோடு வெல்லம் அல்லது அரைத்த பருப்பு கலந்த கலவை; a filling made of coconut shreds or pulses.

பேணி பெ. 1: மைதா மாவை அப்பளம் போலப் போட்டு, பொரித்துப் பாகில் ஊறவைத்துத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்; a sweetmeat prepared by dipping the rolled-up dough in sugar syrup.

பொங்கல் பெ. 3: பச்சரிசியை வேகவைத்து மிளகு, சீரகம் முதலியவை சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைச் சிற்றுண்டி; a rice dish seasoned  with pepper, cumin seeds, etc. பொங்கலும் வடையும் கொடுங்கள்.

பொடிமாஸ் பெ. 1: உருளைக்கிழங்கையோ வாழைக்காயையோ துருவலாக ஆக்கி மிளகாய் முதலியன சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தொடுகறி; a kind of side dish made from the scrapings of potato or plantain seasoned with spices.

பொரியல் பெ. 1: காய்கறியை அல்லது முட்டையைப் பச்சையாகவோ வேகவைத்தோ எடுத்துப் பொரித்துச் செய்யும் தொடுகறி; fried vegetables or scrambled egg. வாழைக்காய்ப் பொரியல்/ முட்டைப் பொரியல்.

பொரிவிளங்காய்_உருண்டை பெ. 1: பாசிப்பருப்பு மாவுடன் நிலக்கடலையைச் சேர்த்து வெல்லப்பாகில் இட்டு உருண்டையாகப் பிடிக்கப்படும் (கடிப்பதற்குக் கடினமாக இருக்கும்) தின்பண்டம்; a hard ball-shaped sweetmeat made of different 

kinds of flour.

போண்டா பெ. 1: உளுந்து மாவை உருட்டி எண்ணெயில் பொரித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தின்பண்டம்; a kind of snack made of lentil dough rolled into a ball and fried in oil.

போளி பெ. 1: பிசைந்த மைதா அல்லது கோதுமை மாவில் வெல்லப் பூரணம் வைத்து அப்பளம் போலச் செய்யும் இனிப்புப் பண்டம்; a round flat sweet (of maize flour) with a jaggery and coconut filling. 

மசால்தோசை பெ. 1: (உருளைக்கிழங்கு) மசாலாவை உள்ளே வைத்து மடித்துத் தரப்படும் தோசை; a தோசை with a filling of fried potato and onion.

மசால்வடை பெ. 1: கடலைப்பருப்பை அரைத்துப் பிசைந்து வட்டமாகத் தட்டி எண்ணெயில் ் இட்டுத் தயாரிக்கும் ஒரு வகை உணவுப் பண்டம்; ஆமவடை; a kind of வடை prepared with wet ground dhal.

மசியல் பெ. 1: உருளைக்கிழங்கு, வாழைக்காய், கீரை முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை வேகவைத்து மசித்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தொடுகறி; a kind of side dish prepared by mashing some vegetables or greens.

மரக்கறி பெ. 1: (சைவ உணவான) காய்கறி, கீரை முதலியவை; (vegetarian food such as) vegetables, greens, etc.

மிக்சர் பெ. 1: ஓமப்பொடி, காராபூந்தி முதலியவற்றோடு வறுத்த முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, அவல் போன்றவற்றைக் கலந்து தயாரிக்கும் காரச் சுவை உள்ள தின்பண்டம்; a kind of savoury; (in India) mixture.

முறுக்கு பெ. 1: மாவைப் பிசைந்து நெளிவு வரும்படி கையால் சுற்றிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம்; a kind of snack prepared from rice dough twisted by hand to form a ring and fried in oil.

மெதுபக்கோடா பெ. 1: கடலை மாவை உருண்டைகளாக உருட்டிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம்; a kind of savoury made of chick-pea paste by cooking it soft in oil.

மெதுவடை பெ. 1: உளுந்து மாவால் செய்யப்பட்ட வடை; a kind of வடை made of lentil paste.

மோதகம் பெ. 1: (..) அரிசி மாவை வட்டமாகத் தட்டிக்கொண்டு நடுவில் வெல்லம் கலந்த பூரணத்தை வைத்து மூடிய பின் அவித்துச்செய்யும் இனிப்புப் பலகாரம்; a kind of sweetmeat prepared by steaming the rice dough roll with sweet filling. 2: (..) அரிசி மாவின் நடுவில் காரம் கலந்த பூரணத்தை வைத்து அவித்துச்செய்யும் பலகாரம்; a savoury prepared in the same way.

மோர் பெ. 1: நீர் ஊற்றிக் கடைந்த தயிர்; buttermilk; skimmed curd diluted with water.

மோர்க்குழம்பு பெ. 1: மோரைத் தாளித்துச் செய்யும் ஒரு வகைக் குழம்பு; seasoned buttermilk used as குழம்பு.

ரசகுல்லா பெ. 1: மைதா மாவில் பாலை ஊற்றிப்  பிசைந்து உருண்டையாக உருட்டிப் பொரித்து ஜீராவில் போட்டுச் செய்யும்இனிப்புப் பண்டம்; a kind of sweetmeat prepared by soaking fried flour balls in sugar treacle.

ரசம் பெ. 1: (சாதத்தில் குழம்புபோல் ஊற்றி பிசைந்து சாப்பிடுவதற்கான) மிளகு, சீரகம் போன்றவற்றை அரைத்துப் புளியைக் கரைத்த  நீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் செய்யும் திரவம்; a kind of soup prepared by adding certain condiments in tamarind or lime water. 2: (பழத்தைப் பிழிந்து எடுக்கும்) சாறு; (fruit) juice. திராட்சைப் பழ ரசம்.

லட்டு பெ. 1: சர்க்கரைப் பாகில் பூந்தியைப் போட்டு உருண்டையாக உருட்டிய தின்பண்டம்; a ball-shaped sweetmeat prepared by mixing பூந்தி in sugar treacle.

வடகம் பெ. (..) 1: காண்க: கூழ்வடகம். 2: வத்தல்; paste of flour dried in the sun.

வடை பெ. 1: கெட்டியாக அரைத்த உளுத்தம்பருப்பை அல்லது கடலைப் பருப்பை வட்டமாகத் தட்டி எண்ணெயில் வேகவைத்து எடுக்கப்படும் தின்பண்டம்; cutlet-like snack made of lentil or chick-pea paste and fried in oil. இன்று வடை பாயசத்தோடு சாப்பாடு.

வடைகறி பெ. (..) 1: வடைக்கு உரிய கடலை மாவை மசாலா சேர்த்துத் தாளித்து ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் ஒரு வகைத் தொடுகறி; a kind of side dish for இட்லி, etc. using chickpea paste as in the preparation of வடை.

வடைப்பருப்பு பெ. (..) 1: பாசிப்பருப்பை வேக வைத்துத் தாளித்துச் செய்யும் கார வகைத் தின்பண்டம்; spiced greengram served as a snack.

வத்தல் பெ. 1: பதப்படுத்திக் காய வைத்த சில வகைக் காய்கறி/அரிசிக் கூழ், ஜவ்வரிசிக் கூழ் முதலியவற்றைப் பிழிந்து உலர்த்தி எடுத்த துண்டுகள்; dried vegetable pieces/rice or sago paste processed by drying. கொத்தவரங்காய் வத்தல்/ மணத்தக்காளி வற்றல்/ ஜவ்வரிசி வத்தல்

வத்தல்குழம்பு பெ. 1: புளிக் கரைசலில் வத்தல் போட்டுச் செய்த குழம்பு; a sauce of thick tamarind solution with dried vegetable pieces.

வறுவல் பெ. 1: (சில காய்கறி, மீன் முதலியவற்றை) துண்டுகளாக்கி எண்ணெயிலிட்டுப் பொரித்தெடுப்பது; (generally) anything fried, (esp.) fried fish, potato crisps, etc.

வெங்காயவடகம் பெ. 1: நறுக்கிய வெங்காயத்துடன் உளுத்தம்பருப்பு, கடுகு முதலியவை சேர்த்துச் சிறு உருண்டையாக உருட்டிக் காயவைத்து எடுத்துப் பொரித்துப் பயன்படுத்தும் துணை உணவுப் பொருள்; a kind of onion preparation dried in the sun and fried before use.

வெண்பொங்கல் பெ. 1: பருப்பு, மிளகு முதலியவை சேர்த்துப் பச்சரிசியில் தயாரிக்கப்படும் ஒரு வகை சாதம்; a preparation of rice boiled with pulses and pepper.

ஜாங்கிரி பெ. 1: உளுத்தம் மாவை முறுக்குப் போல எண்ணெயில் பொரித்து எடுத்துச் சீனிப் பாகில் போட்டுத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்; a sweetmeat made by twisting lentil paste into oil and dipped in sugar treacle.

ஜிலேபி பெ. 1: மைதா மாவை முறுக்குப் போல எண்ணெயில் பொரித்து எடுத்துச் சீனிப் பாகில் போட்டுத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்; a sweetmeat made by twisting maize flour paste into oil and dipped in sugar treacle.

ஜீரா பெ. 1: சீனிப் பாகு; syrup made by boiling sugar with 

water.

****************************************************************************

அடை6 பெ. 1: அரிசியோடு சில பருப்பு வகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் காரச் சுவையுடைய ஒரு வகை (தடித்த) தோசை; a kind of (thick) தோசை prepared with a paste of coarsely ground rice and pulses. 

அதிரசம் பெ. 1: வெல்லப் பாகில் (ஊறவைத்துத் திரித்த) அரிசி மாவைக் கலந்து  எண்ணெயில் சுட்டுத் தயாரிக்கப்படும்  தின்பண்டம்; a kind of thick flat round cake made by frying a sweetened rice flour.

அப்பளம் பெ. 1:  எண்ணெயில் பொரித்து அல்லது தணலில் சுட்டு உண்பதற்கு ஏற்ற முறையில் உளுத்தம் மாவைப் பிசைந்து மெல்லிய வட்டத்  தகடாக இட்டு உலரவைத்துத்  தயாரிக்கப்படும் உணவுப் பண்டம்; a thin and round wafer made of the flour of blackgram normally fried in oil.

அல்வா பெ. 1: கோதுமை மாவில் பாகு ஊற்றிக் கிளறிச் செய்யப்படும் (வழுவழுப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்) இனிப்புப் பண்டம்; (a soft, smooth jelly like) sweet-meat made of sugar treacle and wheat flour.

அவல் பெ. 1: ஊறவைத்த நெல்லைக் காயவைத்து வறுத்து இடித்துப் பெறும் உணவுப் பண்டம்; rice flakes prepared by soaking paddy, parching it and pounding it.

அவியல் பெ. 1: பல வகைக் காய்கறிகளை அவித்து ஒன்றாகச் சேர்த்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி; vegetable mix cooked with grated coconut. 2: (ஒரே தரமாக இல்லாத) பலவற்றின் கலவை; a mixture of many (ideas, etc. which have not been properly assimilated). இது புதிய திரைப்படமே அல்ல, பல பழைய படங்களின் அவியல்.

ஆப்பம் பெ. 1: நடுப்பகுதி தடிமனாகவும்  ஓரம் மெல்லியதாகவும் இருக்கும், தோசை போன்ற உணவுப் பண்டம்; rice preparation similar to தோசை but thicker in the middle.

இட்லி பெ. 1: அரைத்த அரிசியையும் உளுந்தையும்(குறிப்பிட்ட விகிதத்தில்) கலந்து, அந்த மாவைக் குழிவுடைய தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்; an eatable prepared by mixing rice dough with blackgram (in certain ratio) and by steaming it on a perforated  plate with pits; idli.

இடியாப்பம் பெ. 1: அரிசி மாவை அச்சில் இட்டு நூல் போலப் பிழிந்து

ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்; steamed rice noodles.

இனிப்பு பெ. 1: சர்க்கரை, கரும்பு முதலியவற்றைத் தின்னும்போது உணரப்படும் சுவை; தித்திப்பு; sweetness. பாயசத்துக்கு இனிப்பு போதுமா என்று பார்

2: இனிப்புச் சுவையுடைய தின்பண்டம்; sweet(s); confectionery. வந்திருந்தோர்க்கெல்லாம் இனிப்பு வழங்கப்பட்டது. 3: (-ஆக, -ஆன) (`பேசுதல்' தொடர்பான வினைகளோடு) கேட்பதற்கு மட்டும் இனிமை; outward pleasantness; sth. sugar-coated. அவர் இனிப்பாகப் பேசுவார், அவரை நம்ப முடியாது./ இனிப்பான பேச்சு.

உசிலி பெ. 1: வேகவைத்து அரைத்த பருப்போடு   கொத்தவரங்காய், பீன்ஸ், வாழைப்பூ போன்ற காய்கறிகளைச் சேர்த்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம்; a dish prepared by adding a vegetable to the boiled and mashed pulse.

ஊத்தப்பம் பெ. 1: தோசைக் கல்லில் சற்றுப் புளித்த மாவை ஊற்றித் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தடித்த தோசை; a kind of thick தோசை.

ஊறுகாய் பெ. 1: (எலுமிச்சம்பழம், மாங்காய், தக்காளி அல்லது சில வகை மீன்கள் முதலியவற்றைத் துண்டுதுண்டாக நறுக்கி மிளகாய்ப்பொடி தூவி எண்ணெ்யில் ஊறவைத்து அல்லது மாங்காய் வடுவை உப்பு நீரில் ஊறவைத்து) உணவோடு சிறு அளவில் சேர்த்துக்கொள்ளும்  தொடுகறி; pickle; pieces of lemon, mango,  vegetables or certain kinds of fishes mixed with chilli and preserved in oil or in salt water to be used in small quantities as side dish.

ஒடியல் பெ. (இலங்.) 1: உலரவைத்த பனங்கிழங்கு; dried palmyra root. ஒடியல் மாவு சலரோகக்காரர்களுக்கு நல்லது./ அம்மா ஒடியல் பிட்டு அவித்தாள்.

ஓமப்பொடி பெ. 1: பிசைந்த கடலை மாவை  அச்சின் மூலம் நூல்நூலாகப் பிழிந்து எண்ணெயில் இட்டுப் பொரித்துச் செய்யப்படும் காரமான ஒரு வகைத் தின்பண்டம்;  a savoury (in the form of broken noodles) made by pressing the paste of chick pea through a perforated ladle or a press and frying in oil.

கஞ்சி பெ. 1: சோறு வெந்த பிறகு வடித்து எடுத்த, குழகுழப்புத்  தன்மை உடைய நீர்; sticky, starchy water drained from  cooked rice. 2: (அரிசி, கோதுமை முதலியவை போட்டுக் காய்ச்சித் தயாரிக்கப்படும்) திரவ உணவு; gruel; semi-liquid food (for the poor). மருத்துவர் கோதுமைக் கஞ்சி மட்டுமே குடிக்கச் சொல்லியிருக்கிறார்./ வயலில் வேலை செய்பவர்களுக்குக் கஞ்சி கொண்டுபோக வேண்டும். 3: ( பருத்தித் துணிகள் மொடமொடப்பாக இருக்க அவற்றைத் தோய்க்கும்போது போடுவதற்கான) பசைத் தன்மையுடைய கரைசல்; starch (used for making clothes and sheets stiff ). கஞ்சிபோட்டுத் தேய்த்த சட்டை.

**கடல்_உணவு பெ. 1: (உணவாகும்) மீன், நண்டு போன்ற கடல்வாழ் உயிரினங்கள்; sea food. கடல் உணவு ஏற்றுமதியில் நம் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது./ கடல் உணவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது.

கறி பெ. 1: மாமிசம்; இறைச்சி; (raw or cooked) meat. ஆட்டுக் கறி கிலோ என்ன விலை?/ தோசைக்குக் கறிக் குழம்பு. 2: (ஏதேனும் ஒரு காய்கறியை அல்லது இறைச்சியைத் துண்டுதுண்டாக நறுக்கி வேகவைத்துச் செய்யப்படும்) குழகுழப்புள்ள  அல்லது கெட்டியான உணவுப் பண்டம்

a liquid or solid side dish (prepared with pieces of one vegetable or meat); curry. முட்டைகோஸ் கறி/ மீன் கறி. 3: (..) குழம்பு; any sauce used for mixing with cooked rice. புளி இல்லாத கறி வைத்திருக்கிறேன். 4: (..) (இரத்தச் சிவப்புடன் காணப்படும்) சதை; (bloody, raw) flesh. மாட்டை அடித்த அடியில் கறி பிய்ந்து தொங்குகிறது. 5: (இலங்.) Meaning? நீ காய்ச்சிய கறி உரிசையாக இல்லை./ கறியெல்லாம் ஒரே கயர்ப்பாகக் கிடக்கிறது./ கறி காய்ச்சிவிட்டுதான் சொதி வைக்க வேண்டும்.

[Sense: 5. Check with KS]

காடி1 பெ. 1: (..) (பழைய சோற்றில் நீர் ஊற்றி ஒரு சில நாட்கள் வைத்திருந்து பெறும்) புளித்த நீர்; fermented rice-water. 2: (பழங்கள், தானியங்கள், சர்க்கரை போன்றவற்றை) புளிக்கவைத்து  எடுக்கப்படுவதும் உணவுப் பண்டங்கள் கெடாமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுவதும் அமிலத் தன்மை உள்ளதுமான ஒரு திரவம்; vinegar.

காரக்_குழம்பு பெ. 1: உறைப்பான புளிக் குழம்பு; a kind of hot sauce with a tamarind base.

காரச்சேவு பெ. 1: காண்க: காராச்சேவு.

காரம்1 பெ. 1: (-ஆக, -ஆன) உறைப்பு; pungency; hot (in taste). குழம்பில் காரம் அதிகம்./ காரமான சட்னி. 2: எண்ணெயில் செய்யப்பட்ட உறைப்புச் சுவை உடைய தின்பண்டம்; savoury. இனிப்புக்கு லட்டும் காரத்துக்குப் பக்கோடாவும் வாங்கினார். 3: (-ஆக, -ஆன) (பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படும்) கடுமை; severe; severity. எதிர்க்கட்சியினரைக் காரமாகத் தாக்கிப் பேசினார். 4: (வேதி.) அமிலத்துடன் சேரும்போது உப்பை உண்டாக்கும் வழுவழுப்புத் தன்மை கொண்ட பொருள்; alkali.

காராச்சேவு பெ. 1: கடலை மாவுடன் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து அச்சின்மூலம்  கனத்த திரி போல் பிழிந்து  எண்ணெயில் இட்டுச் செய்யும் தின்பண்டம்; a kind of snack made from a paste of chickpea flour mixed with chilli powder and fried in oil in the shape of small sticks.

காராப்பூந்தி பெ. 1: கடலை மாவில் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து, துளைகளை உடைய பெரிய கரண்டியில் தேய்த்து  எண்ணெயில் இட்டுச் செய்யப்படும் தின்பண்டம்; a snack made from a paste of chickpea flour mixed with chilli powder and fried in oil in the shape of  big granules.

கிச்சடி பெ.  1: கொதிக்கும் நீரில்  ரவை அல்லது சேமியாவைப் போட்டு, வேகவைத்த தக்காளி, உருளைக்கிழங்கு முதலியவற்றைச் சேர்த்து மஞ்சள் தூள் தூவிச் செய்யும் சிற்றுண்டி; a dish prepared by boiling semolina or vermicelli to which tomatoes, potatoes, etc. are added.

**கிள்ளுவத்தல் பெ. 1: அரிசிக் கூழைக் கையால் வழித்தெடுத்துச் சிறு குமிழ்களாக வைத்து உலர்த்தி எடுக்கும் ஒரு வகை வத்தல்; Eng.?.

குஞ்சாலாடு பெ. (..) 1: லட்டு; ball-shaped sweetmeat.

குருமா பெ. 1: வேகவைத்த காய்கறிகளுடன் அல்லது இறைச்சியுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்துத் தாளித்துச் செய்யும் (சப்பாத்தி போன்றவற்றிற்குத் தொடுகறியாகும்) கெட்டியான குழம்பு; a kind of thick sauce made of boiled vegetables or meat used as a side dish to go with சப்பாத்தி, etc.

குலோப்ஜாமுன் பெ. 1: மைதா மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டிப் பொரித்து ஜீராவில் போட்டுத் தயாரிக்கும் ஓர் இனிப்பு வகை; flour-balls soaked in sugar treacle.

குழம்பு2 பெ. 1: காய்கறியை அல்லது இறைச்சியை வேக வைத்துக் காரச் சுவையுடன் (உணவில் ஊற்றிச் சாப்பிடத் தகுந்த வகையில்) தயாரிக்கும் உணவுப் பண்டம்;  thickened sauce or a kind of broth (to be added to boiled rice). இன்றைக்குப் புளிக் குழம்பு பிரமாதமாக இருக்கிறது. 2: (தங்கம் போன்ற உலோகங்களின்) திரவநிலை; (of metals) molten state. 

3: (சந்தனம், வண்ணம் போன்றவற்றின்) கரைசல்; (of sandal) paste; (of colours) mix. 

குழல்புட்டு பெ. 1: காண்க: குழாய்ப்புட்டு.

குழாய்ப்_புட்டு பெ. 1: குழாய் போன்ற நீண்ட கழுத்துடைய பாத்திரத்தில் அரிசி மாவை அடைத்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் புட்டு; dish prepared by filling a long tube-like structure with rice flour and steaming it.

கூட்டு3 பெ. 1: ஒரு காய்கறியை நறுக்கி வேக வைத்துப் பருப்பு, தேங்காய் முதலியவை சேர்த்து (திரவ நிலையில்) தயாரிக்கும் ஒரு தொடுகறி; pieces of a vegetable cooked and mixed with lentils, coconut, etc., for serving as a side dish (in a semi-solid state). புடலங்காய்க் கூட்டு.

கூட்டுக்கறி பெ. 1: காண்க: கூட்டு3.

கூழ் பெ. 1: (கம்பு, கேழ்வரகு போன்ற) சில தானியங்களின் மாவைக் கொதித்த நீரில் போட்டுத் தயாரித்த, சற்றுக் குழைவாக இருக்கும் திரவ உணவு; porridge-like preparation from the flour of certain grains (such as ragi) இன்று காலையில் கேழ்வரகுக் கூழ்தான் குடித்தோம்./ வடகத்துக்கு அரிசிக் கூழ் காய்ச்ச வேண்டும். 2: (காகிதம் தயாரிப்பதற்கான) மரத் தூள் குழம்பு; pulp. 

கூழ்வடகம் பெ. 1: உப்பும் உறைப்பும் சேர்த்த அரிசி மாவுக் கூழைத் துணியில் சிறிதுசிறிதாக ஊற்றிக் காயவைத்து எடுத்து (வேண்டும்போது பொரித்து) பயன்படுத்தும் துணை உணவு வகை; slightly salted and spiced rice-flour paste distributed on a cloth in thick drops (or squeezed through 

a press), left to dry and collected (to be fried).

கூழ்வற்றல் பெ. (..) 1: காண்க: கூழ்வடகம்

கேசரி பெ. 1: ரவையை நீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் சர்க்கரை, முந்திரி முதலியவை சேர்த்து நிறத்திற்காகப் பொடி தூவிக் கிளறிச் செய்யும் ஒரு வகைத் தின்பண்டம்; a sweet dish made by boiling the semolina with cashew, cardamom, etc. added to it.

கொழுக்கட்டை பெ. 1: பிசைந்து உருட்டிய அரிசி மாவினுள்  பூரணத்தை வைத்துகையால் உருண்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் தின்பண்டம்; a pastry-like rice-flour preparation with a filling of sweetened grated coconut or made by mixing rice-flour with sugar treacle. 2: காண்க: பிடிகொழுக்கட்டை.

**கோலா_உருண்டை பெ. 1: ஓர் அசைவத் தொடுகறி; a non-vegetarian side dish.

[To be checked with experts]

**சத்து_மாவு பெ. 1: புழுங்கலரிசியை வறுத்து, அரைத்துப் பெறும் மாவு/ இந்த மாவுடன் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துப் பிசைந்து சாப்பிடும் உணவுப் பண்டம்; Eng.? 2: (உடலுக்கு வளர்ச்சியும் வலிமையும் அளிக்கக் கூடிய) கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களைக் கலந்து அரைத்துப் பெறும் மாவு; Eng.?

சப்பாத்தி பெ. 1: கோதுமை மாவை அல்லது மைதா மாவைப் பிசைந்து அப்பளம் போல இட்டுச் சுட்டுத் தயாரிக்கும் ஒரு வகை உணவுப் பண்டம்; unleavened roasted bread made from wheat or maize dough, thin in size and round in shape.

சர்க்கரைப்_பொங்கல் பெ. 1: அரிசியையும் பாசிப்பருப்பையும் நன்றாக வேக வைத்து வெல்லத்தைப் பொடித்துப் போட்டு நெய் ஊற்றிச் செய்யும் இனிப்பு உணவு; boiled rice mixed with jaggery and clarified butter.

சட்னி பெ. 1: தக்காளி, புதினா, கொத்தமல்லி அல்லது பொட்டுக்கடலையுடன் நீர் ஊற்றி அரைத்துத் தாளித்துச் செய்யப்படும் (இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிக்கான) காரச் சுவையுடைய தொடுகறி; a side dish in liquid state seasoned with spices (for food items such as இட்லி). தேங்காய்ச் சட்னி/ தக்காளிச் சட்னி/ பொங்கலுக்குச் சாம்பாரும் சட்னியும் ஊற்று.

சாத்தமுது பெ. (..) 1: ரசம்; a kind of watery soup added to the rice.

சாதம் பெ. 1: சோறு; cooked rice.

சாம்பார் பெ. 1: வேகவைத்த துவரம்பருப்பைப் புளிக் கரைசலில் கலந்து காய்கறிகளையும் போட்டுத் தயாரிக்கும் ஒரு வகைக் குழம்பு

a kind of sauce prepared by adding condiments and pieces of vegetables to tamarind mix. `வெங்காயச் சாம்பாரா, முருங்கைக்காய்ச் சாம்பாரா?' `இல்லை முள்ளங்கிச் சாம்பார்'.

**சாம்பார்_பொடி பெ. 1: காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு முதலியவற்றைச் சேர்த்து (பெரும்பாலும் சாம்பார் தயாரிக்கப் பயன்படும்) அரைத்துத் தயாரிக்கும் பொடி; a powder made of red chilli, coriander seeds, etc. used in preparing சாம்பார்.

சித்திரான்னம் பெ. 1: சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் முதலிய பல வகை சாதங்களைக் குறிக்கும் பொதுச் சொல்; variety of cooked rice dishes treated with  tamarind mix,  jaggery, etc.

சீடை பெ. 1: பச்சரிசி மாவுடன் தேங்காய், எள் முதலியவை சேர்த்துச் சிறுசிறு உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தின்பண்டம்; small ball shaped snacks made out of rice flour mixed with coconut and sesame seeds.

சீம்பால் பெ. 1: (பசு, எருமை, ஆடு ஆகியவை கன்று ஈன்றவுடன் சுரக்கும்) மஞ்சள் நிறமான பால்; yellowish milk (secreted by a cow, goat, etc. after calving); beestings. சீம்பாலில் பால்கோவா கிளறிச் சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். 2: குழந்தை பிறந்த முதல் இரண்டு நாட்களுக்குத் தாயிடம் சுரக்கும் பால்; Eng.? தொற்றுகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் சீம்பாலில் நிறைய உள்ளன.

சுக்கா_ரொட்டி பெ. (பே..) 1: (எண்ணெய் தடவாமல்) தணலில் வாட்டி எடுக்கப்படும் சப்பாத்தி போன்ற ரொட்டி; a kind of சப்பாத்தி roasted without using oil.

சுக்கா_வறுவல் பெ. (பே..) 1: (சற்று மொரமொரப்பாக இருக்கும் அளவில்) மசாலா தடவி எண்ணெயில் வறுத்த இறைச்சித் துண்டு; pieces of fried meat slightly spiced.

**சுக்குக்காப்பி பெ. 1: (பால், காப்பித்தூள் போன்றவை இல்லாமல்) சுக்கு, கருப்பட்டி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சுடுபானம்; a kind of hot drink prepared with dried ginger, palm jaggery, etc. (without using coffee powder or milk).

சுண்டல் பெ. 1: பருப்பு அல்லது கடலை வகைகளை வேகவைத்துக் காரம் சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்; boiled and spiced pulses served as snacks. பட்டாணிச் சுண்டல்/ கொண்டைக்கடலைச் சுண்டல்

2: (இலங்.) நீர்த்தன்மை உடைய கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்்றை நறுக்கிப் போட்டுத் தாளித்து எடுக்கும் தொடுகறி; side dish prepared by frying and seasoning greens, cabbage, etc. முருங்கை இலைச் சுண்டல்/ கீரைச் சுண்டல்.

சுண்டக்கறி பெ. (..) 1: சமைத்ததில் மிச்சமிருக்கும் பொரியல் முதலியவற்றைக் குழம்பில் இட்டுச் சூடுபடுத்திச் சுண்டவைத்துத் தயாரிக்கும் கறி; a dish prepared by adding the leftovers to the sauce and by heating it for a while.

சுழியன்1 பெ. 1: கடலைப் பருப்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றால் செய்த பூரணத்தைக் கரைத்த மைதாமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்த இனிப்புப் பண்டம்; சுசியம்; a ball shaped sweetmeat with a filling of coconut and jaggery wrapped in dough of maize and fried in oil.

**சுறாப்புட்டு பெ. 1: சுறா மீனை வேகவைத்துத் தோல் நீக்கியபின் மசாலா சேர்த்துத் தயாரிக்கும் ஒரு தொடுகறி; Eng.? 

சூப்பு2 பெ. 1: இறைச்சி அல்லது காய்கறியை வேகவத்துத் தயாரிக்கும் திரவ உணவு; soup. ஆட்டுக்கால் சூப்பு/ தக்காளி சூப்பு.

சேமியா பெ. 1: (பாயசம், சிற்றுண்டி ஆகியவை செய்யப் பயன்படும்) கோதுமை, கிழங்கு முதலியவற்றின் மாவிலிருந்து மெல்லிய கம்பி போல் பிழிந்து உலர்த்திய உணவுப் பொருள்; vermicelli. சேமியா உப்புமா/ சேமியா கேசரி/ சேமியா பாயசம்.

சேவை2 பெ. 1: அரிசி மாவை நூல் போலப் பிழிந்து நீராவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவு; இடியாப்பம்; a noodle-like steamed rice preparation.

சேவு பெ. 1: கடலை மாவைப் பிசைந்து அச்சில் தேய்த்து இழைகளாகப் பிழிந்து எண்ணெயில் இட்டுச் செய்யப்படும் (கார அல்லது இனிப்புச் சுவையுடைய) தின்பண்டம்; a savoury or sweet in the shape of short stick-strips 

made of chickpea paste fried in oil. காரச் சேவு/ இனிப்புச் சேவு.

சொதி பெ. (..) 1: தேங்காய்ப் பாலால் செய்யப்படும் ஒரு வகைக் குழம்பு; a kind of vegetable sauce prepared from the extract of coconut.

சொஜ்ஜி பெ. 1: கேசரி; a kind of sweetmeat prepared with semolina in ghee or milk with cashew nuts, etc.

சோமாஸ் பெ. 1: பிசைந்து தட்டிய மைதா மாவினுள் பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் பொரித்துச் செய்யும்  தின்பண்டம்; a kind of puff with mildly sweetened filling, fried in oil.

சோளப்பொரி பெ. 1: உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த சோளம்; popcorn.

தட்டை3 பெ. 1: அரிசி மாவில் தேங்காய்த் துண்டுகளும் கடலைப் பருப்பும் போட்டுத் தட்டையாகத் தட்டி எண்ணெயில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தின்பண்டம்; a flat round shaped savoury made with rice-flour and bits 

of coconut and pulses.

தயிர் பெ. 1: பாலில் உறை மோர் ஊற்றுவதால் புளிப்புத் தன்மை அடைந்து கிடைக்கும் சற்றுக் கெட்டியான உணவுப் பொருள்; curd(s).

**தயிர்சாதம் பெ. 1: தயிர் ஊற்றிப் பிசைந்து, பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை போன்றவற்றைப் போட்டுத் தாளித்த சாதம்; cooked rice mixed with curd and seasoned with chillies, ginger, etc.

**தயிர்ப்பச்சடி பெ. 1: சில வகைக் காய்கறிகளைப் பச்சையாக நறுக்கி, தயிரில் கலந்து தாளித்துத் தயாரிக்கும் தொடுகறி; a side dish prepared by mixing curd with vegetables, either cooked or raw and seasoned. விருந்தில் தயிர்ப்பச்சடி முதலில் பரிமாறுவார்கள்./ வெள்ளரிக்காய்த் தயிர்ப்பச்சடி/ வெங்காயத் தயிர்ப்பச்சடி.

**தயிர்வடை பெ. 1: தாளித்தத் தயிரில் ஊறவைத்த மெதுவடை; Eng.?

**தவலைவடை பெ. 1: அரிசியுடன் சில பருப்புகளும், மிளகாய் வற்றலும் சேர்த்து அரைத்து, எண்ணெயில் சுட்டு எடுக்கும் வடை; Eng.?

[Check with experts]

திரட்டுப்பால் பெ. 1: பாலைச் சுண்டக் காய்ச்சிச் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்; a kind of milk sweet.

துவையல் பெ. 1: தேங்காய், இஞ்சி, கறிவேப்பிலை முதலியவற்றில் ஏதோவொன்றுடன் மிளகாய், உப்பு முதலியவை கலந்து அரைத்து (பெரும்பாலும் தாளிக்காமல்) செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி; a kind of strong relish prepared by adding paste of chilli to coconut, ginger, curry leaf, or to similar things. தேங்காய்த் துவையல்/ புதினாத் துவையல்/ இஞ்சித் துவையல்.

தேங்குழல் பெ. (..) 1: அரிசி மாவும் பாசிப்பயற்று மாவும் கலந்து பிசைந்து அச்சில் பிழிந்து தயாரிக்கும் முறுக்கு போன்ற தின்பண்டம்; a kind of savoury made of rice dough fried in oil.

**தேன்குழல் பெ. 1: காண்க: தேங்குழல். 2: (இலங்.) ஜிலேபி; a sweetmeat made by twisting maize flour paste into oil and dipped in sugar treacle.

தொக்கு1 பெ. 1: (உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படும்) மாங்காய், தக்காளி போன்றவற்றை  எண்ணெயில் வதக்கிக் காரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தொடுகறி; strong relish made from vegetables and mixed with tamarind, chillies, etc. மாங்காய்த் தொக்கு/ தக்காளித் தொக்கு.

தொடுகறி பெ. 1: முக்கிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்; வெஞ்சனம்; dish prepared to go with courses of a meal. இரண்டு வகைத் தொடுகறி செய்திருக்கிறேன்.

[Can we give a dailect word as a synonym?]

தோசை பெ. 1:  ஊறவைத்த புழுங்கலரிசியையும் உளுந்தையும் அரைத்துக் கிடைக்கும்  மாவைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து புளிக்கவைத்துத் தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றிச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம்; griddle cake (by roasting the paste of rice and blackgram).

******************************

பக்கோடா பெ. 1: நீர் ஊற்றிப் பிசைந்த கடலை மாவில் வெங்காயம், பச்சைமிளகாய் முதலியவற்றைச் சேர்த்துச் சிறுசிறு உருண்டைகளாக  எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கும் ஒரு தின்பண்டம்

a kind of spicy savoury prepared from chickpea paste and fried in oil.

பகாளாபாத் பெ. 1: சேமியாவை வேகவைத்துத் தயிரில் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி வகை;  boiled noodles mixed with curds.

[Check English]

பச்சடி பெ. 1: மாங்காய், வெண்டைக்காய் முதலிய காய்கறிகளில் ஒன்றைப் பொடியாக நறுக்கி வேகவைத்து வெல்லம் அல்லது மிளகாய் போட்டுத் தாளித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தொடுகறி; a variety of side dish mildly sweet made with vegetables.[Check definition]

பட்சணம் பெ. (..) 1: (சில நாட்கள் வைத்துக்கொள்ளக் கூடியதின்பண்டம்; பலகாரம்; sweet and other refreshments 

(that can be preserved for a few days). பட்சணக் கடை/ தீபாவளிப் பட்சணங்கள்.

பணியாரம் பெ. 1: (பெரும்பாலும்) வெல்லம் கலந்த அரிசி மாவைக் குழிகள் உள்ள தட்டிலோ இருப்புச்சட்டியிலோ ஊற்றித் தயாரிக்கப்படும் உருண்டையான தின்பண்டம்; a kind of ball-shaped or small disc-shaped snack made of sweetened rice flour.

பதார்த்தம் பெ. 1:(சாப்பாட்டில்) உப உணவு; தின்பண்டம்; eats; eatables (other than cooked rice). எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன.

பப்படம் பெ. 1: (உப்பக் கூடிய) ஒரு வகை அப்பளம்;  a kind of அப்பளம்.

பர்பி பெ. 1: சர்க்கரைப் பாகில் தேங்காய்த் துருவலையும் வறுத்த ரவையையும் முந்திரிப்பருப்பையும் போட்டுக் கிளறித் தயாரிக்கும் ஓர் இனிப்புப் பண்டம்

a kind of sweetmeat prepared by adding coconut scrapings, broken cashew and fried wheat flour in sugar treacle.

பருப்பு பெ. 1: (உடைத்துக் காயவைத்து) சமையலுக்குப் பயன்படுத்தும் துவரை, உளுந்து போன்றவற்றின் விதை; lentil; (in India) dhal. அரிசி விலை, பருப்பு விலை எல்லாம் ஏறிவிட்டது. 2: வெந்த துவரம் பருப்பு; cooked dhal. தட்டில் சோறு வைத்துப் பருப்புப் போட்டு நெய் ஊற்றினாள். 3: சில வகைத் தாவரங்களில் ஓட்டுக்குள் இருப்பது அல்லது தோல் மூடி வெளியில் தெரியும்படியாக இருப்பது; nut (of some plants). வேர்க்கடலைப் பருப்பு

முந்திரிப் பருப்பு 4: தேங்காயின் வெண்ணிறச் சதைப் பகுதி; kernel (of coconut).

பருப்புத் தேங்காய் பெ. (..) 1: தேங்காய்த் துருவலையும் கடலைப் பருப்பையும் வறுத்து வெல்லப்பாகில் போட்டுக் கிளறிக் கூம்பு வடிவத்தில் செய்து சில சடங்குகளில் பயன்படுத்தும் ஓர் இனிப்புப் பண்டம்; a cone shaped confection of fried coconut scrapings and bengal gram mixed with jaggery displayed on 

certain occasions such as wedding.

பருப்புப்பொடி பெ. 1: (சாதத்தில் கலந்து சாப்பிட) வறுத்த துவரம் பருப்பு, மிளகு முதலியவற்றை இடித்துத் தயாரிக்கும் பொடி; powdered lentil mixed with pepper (added to cooked rice to give a mild flavour).

பரோட்டா பெ. 1: மைதா மாவைப் பிசைந்து மெல்லியதாக இழுத்துப் பின் சுருட்டித் தட்டித் தோசைக் கல்லில் சுட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகை ரொட்டி; unleavened bread of maize flour, thick in size and round in shape.

பலகாரம் பெ. 1: இனிப்பு அல்லது கார வகைத் தின்பண்டம்; (sweet or hot) snacks. பண்டிகைக்குப் பலகாரம் செய்ய வேண்டும்./ அவருடைய நாக்கு ருசியான 

பலகாரத்துக்கு ஏங்கியது. 2: (சோற்றைத் தவிர்த்து) இட்லி, தோசை போன்ற உணவு வகைகள்; dishes such as இட்லி, தோசை, etc., (but not a meal of rice). உங்கள் வீட்டில் காலையில் எப்போதும் பலகாரம்தானா?/ இரவு என்ன 

சாப்பிடுவீர்கள், பலகாரமா சாப்பாடா?

பழம்1 பெ. : (தாவரங்களில்) 1: காய் பழுத்து, (பெரும்பாலும்) உண்ணக்கூடியதாகவும் இனிப்புச்சுவை கொண்டதாகவும் இருக்கும் நிலை; (sweet) fruit/ripened fruit. ஊருக்குப் போய்விட்டு வரும்போது பழங்கள் வாங்கிக்கொண்டு வருவார்./ தக்காளிப்பழம். 2: வாழைப்பழம்; banana. வெற்றிலையும் பழமும் வைத்துத் தட்சிணை கொடுத்தார்./ அர்ச்சனைத் தட்டில் பழத்தை வை. 3: காரியம் பலித்தது என்பதைக் குறிக்கும் சொல்; an expression indicating the successful completion of sth. `போன காரியம் காயா, பழமா?' `சென்ற காரியம் பழம்தான்'. 

4: (தாயம் போன்ற விளையாட்டில்) வெற்றி நிலை அடைந்ததைக் குறிக்கும் சொல்; (in certain games) an expression indicating the final winning position.  ஒரு தாயமும் ஒரு ஆறும் விழுந்தால் நான் பழம்.

பழரசம் பெ. 1: பழத்தைப் பிழிந்து தயாரிக்கும் பானம்; பழச் சாறு; fruit juice.

**பழைய சோறு பெ. 1: காண்க: பழையது.

பழையது பெ. 1: (முதல் நாளே வடித்து) நீர் ஊற்றி 

வைக்கப்பட்ட சோறு; cooked rice kept in water (overnight). காலையில் பழையது சாப்பிட்டால் சீக்கிரம் பசிக்காது./ பழைய சோறுக்கு மோர்மிளகாய் தொட்டுக்கொண்டால் நன்றாக இருக்கும்.

பஜ்ஜி பெ. 1: வாழைக்காய், உருளைக்கிழங்கு முதலியவற்றை மெல்லியதாகச்  சீவி மிளகாய்த் தூளுடன் கலந்த கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு தின்்பண்டம்; snack prepared by dipping thin slices of plantain, potato, etc. in flour-paste and frying them in oil.

பாகு பெ. 1: காய்ச்சிய கரும்புச் சாறு, பதநீர் அல்லது வெல்லக் கரைசல்; treacle; molasses; sugar syrup. சீனிப் பாகில் தோய்த்துச் செய்த பண்டம்.

பாசந்தி பெ. 1: சுண்டக் காய்ச்சிய பாலில் படியும் பாலாடையுடன் சீனி சேர்த்து (குளிரவைத்து) உண்ணும் இனிப்பு வகை; thick cream of milk with sugar (served cold); (in India) basandi.

பாண் பெ. (இலங்.) 1: ரொட்டி; bread.

பாணி2 பெ. (இலங்.) 1: காய்ச்சிய பதநீர்; boiled sweet toddy. பனம் பாணி  

2: பாகு; treacle; molasses. சீனிப் பாணி.

பாதாம்_அல்வா பெ. 1: பாதாம் பருப்பால் செய்யும் அல்வா; the sweetmeat அல்வா prepared with almonds.

பாதாம்கீர் பெ. 1: காய்ச்சிய பாலில் பாதாம் பருப்பு, சர்க்கரை முதலியவற்றைப் போட்டுக் குளிரவைத்துத் தரும் பானம்; almond milkshake.

பாதுஷா2 பெ. 1: பால் ஊற்றிப் பிசைந்த மைதா மாவு உருண்டையை எண்ணெய்யில் பொரித்துச் சர்க்கரைப் பாகில் முக்கி எடுத்துத் தயாரிக்கும் ஓர் இனிப்புப் பண்டம்; a kind of sweet prepared by soaking the fried flour balls in sugar syrup.

பாயசம் பெ. 1: அரிசி, ஜவ்வரிசி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பாலில் போட்டு வெல்லம், முந்திரிப் பருப்பு முதலியவை கலந்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் திரவ வடிவ இனிப்பு உணவு; liquid pudding prepared by boiling rice or vermicelli in milk and adding sugar, cashew nut, etc.

பாயா பெ. 1: Meaning?

பால்1 பெ. 1: (பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும்) உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம்; milk. தாய்ப் பால்/ பசும் பால்/ ஆட்டுப் பால்/ பால் இல்லாத காபி 

2: (கள்ளி, ரப்பர் முதலியவற்றினுள் உள்ள) பிசுபிசுப்பான வெள்ளை நிறத் திரவம்/(தேங்காய்த் துருவல் போன்றவற்றை) பிழிந்தெடுப்பதன்மூலம் பெறும் வெள்ளை நிறத் திரவம்; milky juice (of certain plants, such as rubber)/the milk extracted from coconut kernel. ரப்பர் மரத்தை அடியில் சிறிது வெட்டிவிட்டு அதிலிருந்து வடியும் பாலைச் சேகரிப்பார்கள்./ கள்ளிச் செடியை முள்ளால் குத்தியதும் பால் வடிந்தது./ தேங்காய்ப் பால் 3: (நெல், கம்பு முதலியவற்றின் முற்றாத) மணிகளில் ஆரம்ப நிலையில் இருக்கும் குழைவான வெள்ளை நிறப் பொருள்; white fluid (in grains). நெற் பயிருக்குப் பால் பிடிக்கும் பருவத்தில் தண்ணீர் அவசியம் தேவை. 4: சிமெண்ட், சுண்ணாம்பு போன்றவை தண்ணீரில் கரைந்திருக்கும் நிலை; Eng.? சிமெண்ட் பாலை நிறைய ஊற்றினால்தான் தரை வழவழப்பாக இருக்கும்.

[பால் பிடி should be given like பால்கட்டு.]

**பால்_கொழுக்கட்டை  பெ. 1: அரிசி மாவு உருண்டைகளை ஆவியில் வேகவைத்து எடுத்து, பாலில் ஊறவைத்துச் செய்யப்படும் ஒரு இனிப்பு; a sweet made with small rice balls cooking them in milk mixed with jaggery.

பால்கோவா பெ. 1: பாலை நன்றாகச் சுண்டுமாறு காய்ச்சிச் 

செய்யப்படும் இனிப்புத் தின்பண்டம்; a confection made of cream of milk.

**பால்_சுறா  பெ. 1: வெண்மை நிறத்தில் இருக்கும், உணவாகப் பயன்படும் ஒரு வகைச் சுறா மீன்; a kind of (edible) shark white in colour. 

[To be checked with experts]

பாலாடைக்கட்டி பெ. 1: (ரொட்டியோடு உண்ணும்) கொழுப்புச் 

சத்து நிறைந்த பாலைக் காய்ச்சிக் குளிரவைத்துப் புளிக்கச்செய்துத் தயாரிக்கப்படும் மிருதுவான வெளிர் மஞ்சள் 

நிறக் கட்டி; cheese.

பானகம் பெ. (..) 1: நீரில் வெல்லத்தைக் கரைத்துச் சுக்கு முதலியவை கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்புப் பானம்; jaggery water with a dash of dried ginger, cardamom etc. 2: நீரில் புளியைக் கரைத்து வெல்லம் சேர்த்த ஒரு வகை இனிப்புப் பானம்; jaggery water with a touch of tamarind.

பானம் பெ. 1: (சுவையூட்டும் பொருள்களைக் கலந்து தயாரிக்கப்படும்) குடிப்பதற்கான திரவம்; (any) drink. குளிர் பானம்.

பிட்டு பெ. 1: இனிப்போ காரமோ சேர்த்து வேகவைத்த, அரிசி மாவாலான சிற்றுண்டி; steamed rice flour sweetened or spiced, served as a dish.

**பிரிஞ்சி  பெ. 1: காய்கறிகளைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, அரிசியோடு  கலந்து, மசாலா சேர்த்து அப்படியே வேகவைத்துத் தயாரிக்கும் உணவு; a kind of spicy dish prepared of rice mixed with pieces of vegetables.

பிரியாணி பெ. 1: இறைச்சித் துண்டுகளையோ காய்கறித் துண்டுகளையோ சாதத்தில் கலந்து மசாலாப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவு

a kind of spicy rice dish mixed with pieces of meat or vegetables.

**பில்டர்_காப்பி பெ. 1: பில்டரில் வடிகட்டிய டிக்காஷனைப் பாலோடு கலந்து தயாரிக்கும் காப்பி; coffee prepared by adding coffee brew to boiled milk; 

(in India) filter coffee. நான் பில்டர் காப்பியைத் தவிர வேறெந்த காப்பியையும் குடிப்பதில்லை.

புளியோதரை பெ. 1: புளிக்காய்ச்சல் ஊற்றித்  தயாரிக்கப்படும் ஒரு வகை சாதம்; rice mixed with thick spicy concentrate of tamarind.

பூந்தி பெ. 1: துளைகள் உள்ள கரண்டியில் கடலை மாவைத் தேய்த்து உதிரும் உருண்டைகளைக் கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்து ஜீராவில் போட்டு எடுக்கும் இனிப்புப் பண்டம்; a kind of confection made of lentil paste which is pressed 

through a perforated ladle, fried and dipped in sugar treacle.

பூரணம்2 பெ. 1: (கொழுக்கட்டை போன்றவற்றின்உள்ளே வைக்கப்படும்) தேங்காய்த் துருவலோடு வெல்லம் அல்லது அரைத்த பருப்பு கலந்த கலவை; a filling made of coconut shreds or pulses.

பேணி பெ. 1: மைதா மாவை அப்பளம் போலப் போட்டு, பொரித்துப் பாகில் ஊறவைத்துத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்; a sweetmeat prepared by dipping the rolled-up dough in sugar syrup.

பொங்கல் பெ. 1: (கோவிலுக்குப் போய்) பச்சரிசியை உலையிலிட்டுப் பொங்கவைத்து நீரை வடிக்காமல் செய்யும் சாதம்; cooking the raw rice without draining the water (in front of a temple).  2: (தமிழ்நாட்டில்) தை மாத முதல் நாளில் 

மேற்குறிப்பிட்ட சாதத்தைத் தயாரித்துப் படைத்துச் சூரியனை வழிபட்டுக் கொண்டாடும் பண்டிகை;   the festival celebrated on the first day of the month தை, when cooked rice from the newly harvested paddy is offered to the sun god. 3: பச்சரிசியை வேகவைத்து மிளகு, சீரகம் முதலியவை சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு 

வகைச் சிற்றுண்டி; a rice dish seasoned  with pepper, cumin seeds, etc. பொங்கலும் வடையும் கொடுங்கள்.

பொடிமாஸ் பெ. 1: உருளைக்கிழங்கையோ வாழைக்காயையோ துருவலாக ஆக்கி மிளகாய் முதலியன சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தொடுகறி; a kind of side dish made from the scrapings of potato or plantain seasoned with spices.

பொரிகடலை பெ. (..) 1: பொட்டுக்கடலை; fried chick-pea. 

2:  பொரியையும் பொட்டுக்கடலையும் கலந்து செய்யும் தின்பண்டம்; a mixture of fried chick-pea and puffed grain.

**பொரித்த குழம்பு பெ. 1: Definition?

பொரியல் பெ. 1: காய்கறியை அல்லது முட்டையைப் பச்சையாகவோ வேகவைத்தோ எடுத்துப் பொரித்துச் செய்யும் தொடுகறி; fried vegetables or scrambled egg. வாழைக்காய்ப் பொரியல்/ முட்டைப் பொரியல்.

**பொரியுருண்டை பெ. 1: பொரியைப் சர்க்கரைப் பாகுடன் சேர்த்து உருண்டையாகச் செய்யும் தின்பண்டம்; Eng.? 

பொரிவிளங்காய்_உருண்டை பெ. 1: பாசிப்பருப்பு மாவுடன் நிலக்கடலையைச் சேர்த்து வெல்லப்பாகில் இட்டு உருண்டையாகப் பிடிக்கப்படும் (கடிப்பதற்குக் கடினமாக இருக்கும்) தின்பண்டம்; a hard ball-shaped sweetmeat made of different 

kinds of flour.

போண்டா பெ. 1: உளுந்து மாவை உருட்டி எண்ணெய்யில் பொரித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தின்பண்டம்; a kind of snack made of lentil dough rolled into a ball and fried in oil.

[கடலை மாவிலும் செய்வார்களே?]

போளி பெ. 1: பிசைந்த மைதா அல்லது கோதுமை மாவில் வெல்லப் பூரணம் வைத்து அப்பளம் போலச் செய்யும் இனிப்புப் பண்டம்; a round flat sweet (of maize flour) with a jaggery and coconut filling. 

மசால்தோசை பெ. 1: (உருளைக்கிழங்கு) மசாலாவை உள்ளே வைத்து மடித்துத் தரப்படும் தோசை; a தோசை with a filling of fried potato and onion.

மசால்வடை பெ. 1: கடலைப்பருப்பை அரைத்துப் பிசைந்து வட்டமாகத் தட்டி எண்ணெயில் ் இட்டுத் தயாரிக்கும் ஒரு வகை உணவுப் பண்டம்; ஆமவடை; a kind of வடை prepared with wet ground dhal.

மசியல் பெ. 1: உருளைக்கிழங்கு, வாழைக்காய், கீரை முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை வேகவைத்து மசித்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தொடுகறி; a kind of side dish prepared by mashing some vegetables or greens.

மரக்கறி பெ. 1: (சைவ உணவான) காய்கறி, கீரை முதலியவை; (vegetarian food such as) vegetables, greens, etc.

மிக்சர் பெ. 1: ஓமப்பொடி, காராபூந்தி முதலியவற்றோடு வறுத்த முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, அவல் போன்றவற்றைக் கலந்து தயாரிக்கும் காரச் சுவை உள்ள தின்பண்டம்; a kind of savoury; (in India) mixture.

[Check English]

முட்டை1 பெ. 1: (பறவைகளில், ஊர்வனவற்றில் பெண்ணினம் இடும்) குஞ்சு வளர்வதற்கான கருவைக் கொண்ட நீள் கோள அல்லது உருண்டை வடிவப் பொருள்/(குறிப்பாக உண்பதற்குப் பயன்படுத்தும்) கோழி முட்டை; egg/(esp.) egg of a hen. பறவைகள் மரங்களில் கூடு கட்டி முட்டை இடுகின்றன./ முதலை மணலில் முட்டை இடுகிறது./ முட்டைப் பொரியல்/ முட்டைக் குழம்பு. 2: (பாலூட்டிகளில், பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் உருவாகும்விந்தை ஏற்றுக் கருவாக மாறும் சிறு உருண்டை; ovum. 3: (பே..) முட்டை வடிவ எண்; பூஜ்யம்; zero. பையன் எல்லாப் பாடங்களிலும் முட்டை! 4: (..) (முட்டை வடிவ) சிறு கரண்டி அளவு; measure of a teaspoon (which is egg-shaped). ஒரு முட்டை எண்ணெய் ஊற்றித் தாளிக்கவும்!

முறுக்கு3 பெ. 1: மாவைப் பிசைந்து நெளிவு வரும்படி கையால் சுற்றிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம்; a kind of snack prepared from rice dough twisted by hand to form a ring and fried in oil.

மெதுபக்கோடா பெ. 1: கடலை மாவை உருண்டைகளாக உருட்டிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம்; a kind of savoury made of chick-pea paste by cooking it soft in oil.

மெதுவடை பெ. 1: உளுந்து மாவால் செய்யப்பட்ட வடை; a kind of வடை made of lentil paste.

மோதகம் பெ. 1: (..) அரிசி மாவை வட்டமாகத் தட்டிக்கொண்டு நடுவில் வெல்லம் கலந்த பூரணத்தை வைத்து மூடிய பின் அவித்துச்செய்யும் இனிப்புப் பலகாரம்; a kind of sweetmeat prepared by steaming the rice dough roll with sweet filling. 2: (..) அரிசி மாவின் நடுவில் காரம் கலந்த பூரணத்தை வைத்து அவித்துச்செய்யும் பலகாரம்; a savoury prepared in the same way.

மோர் பெ. 1: நீர் ஊற்றிக் கடைந்த தயிர்; buttermilk; skimmed curd diluted with water.

மோர்க்குழம்பு பெ. 1: மோரைத் தாளித்துச் செய்யும் ஒரு வகைக் குழம்பு; seasoned buttermilk used as குழம்பு.

ரசகுல்லா பெ. 1: மைதா மாவில் பாலை ஊற்றிப்  பிசைந்து உருண்டையாக உருட்டிப் பொரித்து ஜீராவில் போட்டுச் செய்யும்இனிப்புப் பண்டம்; a kind of sweetmeat prepared by soaking fried flour balls in sugar treacle.

ரசம்1 பெ. 1: (சாதத்தில் குழம்புபோல் ஊற்றி பிசைந்து சாப்பிடுவதற்கான) மிளகு, சீரகம் போன்றவற்றை அரைத்துப் 

புளியைக் கரைத்த  நீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் செய்யும் திரவம்; a kind of soup prepared by adding certain condiments in tamarind or lime water. 2: (பழத்தைப் பிழிந்து எடுக்கும்) சாறு; (fruit) juice. திராட்சைப் பழ ரசம்.

லட்டு பெ. 1: சர்க்கரைப் பாகில் பூந்தியைப் போட்டு 

உருண்டையாக உருட்டிய தின்பண்டம்; a ball-shaped sweetmeat 

prepared by mixing பூந்தி in sugar treacle.

வடகம் பெ. (..) 1: காண்க: கூழ்வடகம். 2: காண்க: வெங்காயவடகம்

3: வத்தல்; paste of flour dried in the sun.

வடை பெ. 1: கெட்டியாக அரைத்த உளுத்தம்பருப்பை அல்லது கடலைப் பருப்பை வட்டமாகத் தட்டி எண்ணெய்யில் வேகவைத்து எடுக்கப்படும் தின்பண்டம்; cutlet-like snack made of lentil or chick-pea paste and fried in oil. இன்று வடை பாயசத்தோடு சாப்பாடு.

வடைகறி பெ. (..) 1: வடைக்கு உரிய கடலை மாவை மசாலா சேர்த்துத் தாளித்து ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் ஒரு வகைத் தொடுகறி; a kind of side dish for இட்லி, etc. using chickpea paste as in the preparation of வடை.

வடைப்பருப்பு பெ. (..) 1: பாசிப்பருப்பை வேக வைத்துத் தாளித்துச் செய்யும் கார வகைத் தின்பண்டம்; spiced greengram served as a snack.

வத்தல் பெ. 1: பதப்படுத்திக் காய வைத்த சில வகைக் காய்கறி/அரிசிக் கூழ், ஜவ்வரிசிக் கூழ் முதலியவற்றைப் பிழிந்து உலர்த்தி எடுத்த துண்டுகள்; dried vegetable pieces/rice or sago paste processed by drying. கொத்தவரங்காய் வத்தல்/ மணத்தக்காளி வற்றல்/ ஜவ்வரிசி வத்தல். 2: (உடல்) மெலிவு; (of body) thin; being skinny.  ஆள் வத்தலாக இருக்கிறார்./ வத்தல் மாடுகளை எப்படி உழவுக்குப் பயன்படுத்துவது?

வத்தல்குழம்பு பெ. 1: புளிக் கரைசலில் வத்தல் போட்டுச் செய்த குழம்பு; a sauce of thick tamarind solution with dried vegetable pieces.

[Headword வத்தக்குழம்பு?]

வற்றல் பெ. 1: காண்க: வத்தல்.

வறுவல் பெ. 1: (சில காய்கறி, மீன் முதலியவற்றை) துண்டுகளாக்கி எண்ணெய்யிலிட்டுப் பொரித்தெடுப்பது; (generally) anything fried, (esp.) fried fish, potato crisps, etc.

வெங்காயவடகம் பெ. 1: நறுக்கிய வெங்காயத்துடன் உளுத்தம் பருப்பு, கடுகு முதலியவை சேர்த்துச் சிறு உருண்டையாக உருட்டிக் காயவைத்து எடுத்துப் பொரித்துப் பயன்படுத்தும் துணை உணவுப் பொருள்; a kind of onion preparation 

dried in the sun and fried before use.

வெண்பொங்கல் பெ. 1: பருப்பு, மிளகு முதலியவை சேர்த்துப் பச்சரிசியில் தயாரிக்கப்படும் ஒரு வகை சாதம்; a preparation of rice boiled with pulses and pepper.

ஜாங்கிரி பெ. 1: உளுத்தம் மாவை முறுக்குப் போல எண்ணெய்யில் பொரித்து எடுத்துச் சீனிப் பாகில் போட்டுத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்; a sweetmeat made by twisting lentil paste into oil and dipped in sugar treacle.

ஜிலேபி பெ. 1: மைதா மாவை முறுக்குப் போல எண்ணெய்யில் பொரித்து எடுத்துச் சீனிப் பாகில் போட்டுத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்; a sweetmeat made by twisting maize flour paste into oil and dipped in sugar treacle.

ஜீரா பெ. 1: சீனிப் பாகு; syrup made by boiling sugar with 

water.

The list is abstracted from CreA’s Dictionary of Contemporary Tamil (1992) with permission