2. Modal forms of verbs and Post-positions

2. Conversation: வர முடியாது

Goal: Practice Modal forms of verbs and post-positions

 

 

Translate the following conversation into English

 

ராஜா: நீ ஆறு மணிக்கு வீட்டுக்கு வா.

குமார்: எதுக்கு?

ராஜா: டிவிலே ஒரு நல்ல படம் இருக்கு.

குமார்: எனக்கு ஏழு மணிக்கு ஒரு வேலை இருக்கு. நான் அப்பாவுக்கு மருந்து வாங்கணும்.

ராஜா: அப்பாவுக்கு ஒடம்பு சரி இல்லையா?

குமார்: இப்ப பரவாயில்லை. ஆனா இன்னும் மருந்து சாப்பிடணும்.

ராஜா: நீ எங்கே மருந்து வாங்குவே?

குமார்: எங்க வீட்டுக்கு முன்னாலேயே ஒரு கடை இருக்கு. அங்கேதான் வாங்குவேன். ஆனா அந்த கடை ஏழு மணிக்குதான் தெறக்கும்

ராஜா: சரி. நான் முன்னாலே போறேன். நீ ஏழு மணிக்கு பின்னாலே வா.

 

(Help: டிவி ‘TV’ மருந்து ‘medicine’, ஒடம்பு ‘health, body’, சரி ‘good, ok’, பரவாயில்லை ‘not bad, alright’, ஆனா ‘but’, தெற ‘open’)

 

 

B. Write a similar conversation in Tamil inviting your friend to have coffee at your home, but he has some work to do for his mother who is going out of town.