8. The past tense forms of verbs

8. Conversation: என்ன படம் பாத்தே?

Goal: Practicing the past tense forms of verbs

 

Write the conversation below in English

 

மாணிக்கம்: நான் நேத்து ஒரு தமிழ் படம் பாத்தேன்.

முத்து: என்ன படம்?

மாணிக்கம்: மொழி

முத்து: டிவிலேயா பாத்தே?

மாணிக்கம்: இல்லை, தியேட்டர்லே.

முத்து: மொழின்னா என்ன?

மாணிக்கம்: மொழின்னா பாஷை; அதாவது ‘language’

முத்து: படம் நல்லா இருந்துதா?

மாணிக்கம்: ஆமா. எனக்கு ரொம்ப பிடிச்சுது

முத்து: என்ன பிடிச்சுது?

மாணிக்கம்: அதுலே கதாநாயகி ஊமை, செவிடு. தமிழ் சினிமாவுலே இது புதுசு.

முத்து: படத்துலே பாட்டு இல்லையா?

மாணிக்கம்: இருந்துது. கதாநாயகனுக்கு பாட்டு பிடிக்கும். அவன் சினிமாவுக்கு பாட்டு எழுதுறவன்.

முத்து: எப்படி ரெண்டு பேரும் காதலிச்சாங்க?

மாணிக்கம்: அதுதான் கதையே. மௌனமும் மொழிதானே. 

(Help: கதாநாயகி ‘heroine’, ஊமை ‘dumb’, செவிடு ‘deaf’, கதாநாயகன் ‘hero’, எழுது ‘write’, காதலி ‘make love’, மௌனம் ‘silence’)