7. Adverbs and Adjectives

1. Translate the conversation below into English.

 

ஜான்: இந்த காபி ருசியா இருக்கு.

 

பீட்டர்: இந்த கடைலே ருசியான காபி கெடைக்கும். ஆனா, வெலை அதிகம். பக்கத்து சின்ன கடைலே வெலை கொஞ்சம்; அளவும் கொஞ்சமா இருக்கும். அங்கே இட்லி நல்லா இருக்கும்; மெதுவா, வெள்ளையா இருக்கும். கல்லா இருக்காது. காரமா சாம்பார் குடுப்பாங்க.

 

ஜான்: எனக்கு காரமான சாப்பாடு பிடிக்காது. எந்த சாப்பாடும் சூடா சாப்பிட பிடிக்கும்.

 

பீட்டர்: எனக்கும் சூடான இட்லி, காபி பிடிக்கும். ஆனா, இந்த காபி அதிகமா சுடுது. குடிக்க முடியலை. ஒனக்கு கறுப்பு காபி பிடிக்குமா?

 

ஜான்: பிடிக்காது. ஜூஸ் பிடிக்கும். ஆனா, ஜூஸ் குளிரா இருக்கணும்.

 

பீட்டர்: இந்த அறை  ரொம்ப குளிருது. சீக்கிரம் வெளியே போவோம்.

 

ஜான்: சரி, காபியை வேகமா குடிக்கிறேன். ஒரு நல்ல படத்துக்கு போவமா?

 

பீட்டர்: எங்கிட்டே பணம் கொஞ்சம் கொறைவா இருக்கு. இன்னொரு நாளைக்கு நிச்சயமா போவோம்.

 

(Help: காபி ‘coffee’, ருசி ‘taste’, வெலை ‘price, cost’, அதிகம் ‘being more, in excess’, அளவு ‘amount, quantity’, கல் ‘stone’, காரம் ‘(spicy) hotness’, சாப்பாடு ‘food, meal’, சூடு ‘(thermal) hotness’, சுடு (சுட) ‘be hot’, குளிர் ‘coldness’, குளிர் (குளிர) ‘be cold’, ஜூஸ் ‘juice’, அறை ‘room’, சீக்கிரம் ‘being soon’, கொறைவு ‘being less’, நிச்சயம் ‘being certain’

 

2. List the adjectives and adverbs in Tamil separately.