Text 8

 

Text 8

ஒரு வெள்ளிக்கிழமை ஜிம் ராஜாவைப் பார்க்க வந்தார். அன்று கார்த்திகை. ராஜா வீட்டில் படுத்திருந்தார். அன்று காலையில்தான் ராஜா முருகன் கோயிலுக்குப் போயிருந்தார். கோயிலில் ஒரே கூட்டம். அதனால் ராஜாவுக்கு அலுப்பாக இருந்தது. வீட்டுக்கு வந்து படுத்திருந்தார். ஜிம்மும் ராஜாவும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். ராஜா ஜிம்முக்கு முருகனைப் பற்றிச் சொன்னார்.

முருகனைத் தமிழ்க் கடவுள் என்பார்கள். சங்க காலத்திலேயே முருகனை வழிபட்டிருக்கிறார்கள். முருகன் மலைக்குக் கடவுள். இன்றும் முருகனுடைய கோயில் மலைமேல் இருக்கும். பிற்காலத்தில் முருகனைச் சைவ சமயத்தோடு சேர்த்து, சிவனுடைய மகன் என்று சொன்னார்கள். முருகனுடைய இன்னொரு பெயர் சுப்பிரமணியன் என்றார்கள். முருகனுக்கு வேறு பெயர்களும் உண்டு; முருகனைப் பற்றிப் பல புராணக் கதைளும் உண்டு.

அந்தக் கதைகளில் ஒன்று இது. ஒரு நாள் முருகனும் அவனுடைய அண்ணன் கணேசனும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிவன் அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். உலகத்தை முதலில் சுற்றி வருபவனுக்கு ஒரு மாம்பழம் பரிசு என்றார். முருகன் உடனே தன் வாகனம் மயிலில் ஏறிப் பறந்தான். கணேசனுடைய வாகனம் எலி; வேகமாகப் போக முடியாது. யோசித்துப்பார்த்தான். சிவனையே சுற்றி வந்தான்; சிவன்தான் உலகத்தைப் படைத்தான்; உலகம் அவனுக்குள் அடங்கும் என்றான். சிவன் மாம்பழத்தைக் கணேசனுக்குக் கொடுத்தார். முருகன் திரும்பி வந்தான். நடந்ததை அறிந்து கோபித்துக்கொண்டு மலைக்குப் போய்விட்டான்.  

Grammatical Forms

Formal with alternates

படுத்திரு                                                                               படுத்திரு / படுத்துரு

-இரு (இருக்க, இருந்து)                                                  -(இ)ரு (-ருக்க, -ருந்து)

இரு = ரு is an auxiliary verb to indicate that an action stays on in its ended state.

 

என்பார்கள்  என்று சொல்வார்கள்                             ம்பாங்க / ன்னு சொல்லுவாங்க (ன்ப் = ம்ப், ன்ற் = ன்ன்)

என்றார்கள்  என்று சொன்னார்கள்                             ன்னாங்க / ன்னு சொன்னாங்க

 

உண்டு      இருக்கிறது etc                                                  இருக்கு etc

(உண்டு is uninflected for person-number-gender, but இரு is; உண்டு can occur with all subjects)

 

(என் in its verbal participle form (என்று) is a sentence connector. It can also be used as the verb சொல்லு ‘say’)

வருபவன்                                                                                  வர்றவன் (The future tense in formal style is the present tense in colloquial style)

(The weak verbs in their nominalized form takes /ப/ as the marker of future tense rather than /வ/)

-கொள் (-கொள்ள, -கொண்டு)                                                   -கிடு (-கிட, -கிட்டு)

(கோபித்துக்)கொண்டு                                                                  (கோபிச்சுக்)கிட்டு /

                                                                                                               (கோவிச்சுக்)கிட்டு

கொள் = கிடு is an auxiliary verb to indicate that the action affects the subject in some way. In its verbal participle form (கொண்டு = கிட்டு), it indicates the above and simultaneity of action.

 

-கொண்டிரு                                                                                          -கிட்டுரு

கொண்டிரு = கிட்டுரு is a combined auxiliary verb to indicate that the action takes place over a period of time.

 

-விடு (-விட, -விட்டு)                                                                             -டு/ரு, -டு/ர், -ட்டு (in future present and past tenses respectively)

(போய்விட்டான்)                                                                                    (போய்ட்டான்)

விடு = டு / ரு is an auxiliary verb to indicate the certainty that the action did take place. In its verbal participle form (விட்டு = ட்டு), it indicates that there is disjunction between two actions meaning ‘and then’.

 

 

Words

பெயர்         பேர்                                                                                 பேர்

அறிந்து     தெரிந்து                                                                        தெரிஞ்சு

(The noun with தெரி does not take the accusative case)

 

 

 

Spelling

படுத்திரு                                                                                                 படுத்துரு / படுத்திரு

தெரியாமல்                                                                                            தெரியாம

பேசிக்கொண்டிரு                                                                                 பேசிக்கிட்டுரு / பேசிக்கிட்டிரு

பற்றி                                                                                                          பத்தி (ற்ற் = த்த்)

இன்றும்           இன்றைக்கும்                                                            இண்ணைக்கும்

விளையாடு                                                                                             வெளையாடு

சுற்றி                                                                                                          சுத்தி

யோசித்து                                                                                                யோசிச்சு (த்த் = ச்ச் after the vowels இ or ஐ)

படைத்தான்                                                                                             படைச்சான்

-உள்                                                                                                           -உள்ளே

கோபித்து                                                                                                 கோபிச்சு / கோவிச்சு

 

Glossary

கார்த்திகை ‘name of a star, which is the birth star of Murugan’

அலுப்பு ‘exhaustion, tiredness’

கடவுள் ‘god’

சங்க காலம் ‘Sangam age, the earliest period of Tamil literature’

வழிபடு (வழிபட) ‘worship’

மலை ‘hill’

பிற்காலம் ‘later period’

சைவ சமயம் ‘Saivite religion, the religion whose godhead is Shiva’

சேர் (சேர்க்க) ‘join, integrate’

மகன் ‘son’

புராணக் கதை ‘mythological story’

விளையாடு ‘play’

போட்டி வை (வைக்க) ‘set competition’

உலகம் ‘world, earth’

பரிசு ‘award’

வாகனம் ‘vehicle, mount’

மயில் ‘peacock’

பற (பறக்க) ‘fly’

எலி ‘mouse, rat’

படை (படைக்க) ‘create’

அடங்கு (அடங்க) ‘be subsumed, contained’

திரும்பி வா (-வர) ‘come back, return’

அறி (அறிய) ‘come to know’

கோபி (கோபிக்க) ‘get angry’