Text 9
அன்றைக்கு ஏப்ரல் மாதம் பதினான்காம் தேதி. தமிழ் வருஷப் பிறப்பு. எல்லோரும் அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் புது உடை போட்டிருந்தார்கள். சில பேர் வீட்டில் விசேஷ சமையல் பண்ணிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர் சினிமாவுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அன்று புதுப் படங்கள் வெளியிடுவார்கள். தியேட்டர்களில் கூட்டம் நிறைந்து வழியும். ராஜா ஜிம்மை சாப்பிடக் கூப்பிட்டிருந்தார். ஜிம் வேட்டி கட்டிக்கொண்டு வந்தார். காலை மடக்கித் தரையில் உட்கார்ந்துகொண்டார். இரண்டு பேரும் இரவு எட்டு மணி வரைக்கும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஜிம்முக்குத் தமிழ் வருஷப் பிறப்பைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்திருந்தது. ராஜா விபரமாகப் பல விஷயங்கள் சொன்னார். தமிழ் வருஷத்திலும் பன்னிரண்டு மாதங்கள். ஆனால் ஒவ்வொரு வருஷத்திலும் மாதங்களுக்கு ஒரே மாதிரி நாட்கள் இருக்காது. மாத நாட்களின் எண்ணிக்கை வருஷத்துக்கு வருஷம் மாறும். மாதம் சூரியன் நகர்வதைப் பொறுத்து மாறும். வருஷத்தில் முதல் மாதம் சித்திரை. இது ஏப்ரல் நடுவில் துவங்கும். பத்தாவது மாதம் தை. இது ஜனவரி நடுவில் துவங்கும். தை ஒன்றாம் தேதி பொங்கல். தமிழ்நாடு அரசு இனிமேல் தமிழ் வருஷம் தையிலிருந்து துவங்கும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் மக்கள் சித்திரையில்தான் வருஷப் பிறப்பைக் கொண்டாடுவார்கள்.
தமிழ் ஆண்டுகள் அறுபது. ‘பிரபவ’வில் துவங்கி ‘அட்சய’வில் முடியும். இந்த வட்டம் திரும்பத் திரும்ப வரும். கல்யாணம் போன்ற சடங்குகளில் தமிழ் ஆண்டை உபயோகப்படுத்துவதைப் பார்க்கலாம். மற்ற நேரங்களில் ஆங்கில ஆண்டுதான். தமிழ் அன்பர்கள் இதற்குப் பதில் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்துகிறார்கள். இது கிறிஸ்துவுக்கு முப்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன் துவங்குவதாகக் கணக்குப்போட்டிருக்கிறார்கள்.
Grammatical Forms
Formal with alternates Informal
வருஷத்துக்கு வருஷம் வருஷாவருஷம் வருஷத்துக்கு வருஷம்,
வருஷாவருஷம்
(This doubling means ‘year to year, every year’. The alternant, where -அம் becomes –ஆ, is available with time nouns that end in –அம்: வாராவாரம் ‘every week’)
தூங்குவதாக துவங்குகிறது என்று தூங்குறதா, துவங்குதுன்னு
(-ஆக has the function of என்று ‘that’, but is added to the nominalized form of the verb)
Words
வருஷம் வருடம், ஆண்டு வருஷம்
எல்லோரும் எல்லாரும் எல்லாரும்
உடை ஆடை ஒடை, டிரஸ்
போடு அணி (அணிய) போடு
சில பேர் சிலர் சில பேர், கொஞ்ச பேர்
உபயோகப்படுத்து (–படுத்த) பயன்படுத்து உபயோகப்படுத்து
துவங்கு ஆரம்பி (ஆரம்பிக்க) தொவங்கு, ஆரம்பி
மற்ற பிற மத்த
Sandhi
நாள் + கள் à நாட்கள் நாள்
(When the plural marker –கள் is added to nouns, ள் changes to ட் and ல் changes to ற் in monosyllabic words with a short vowel: முள் + கள் à முட்கள் ‘thorns’ கல் + கள் à கற்கள் ‘stones’. This change does not happen in modern Tamil with words of other syllabic structure. Nevertheless, there are exceptions in monosyllabic words with a long vowel like the one above: தேள் + கள் à தேள்கள் ‘scorpions’, ஆள் + கள் à ஆட்கள் ‘persons’).
Spelling
பதினான்காம் 14-ஆம் பதினாலாம்
அங்கும் இங்கும் அங்கேயும் இங்கேயும் அங்கேயும் இங்கேயும்
பன்னிரண்டு பனிரெண்டு பனிரெண்டு
முதல் மொதல்
நடுவில் நடுலே
மாதம் மாசம் மாசம்
முப்பத்தியொரு முப்பத்தொரு முப்பத்தோரு
Glossary
ஏப்ரல் ‘April’
பதினான்கு ‘foruteen’
தேதி ‘date’
வருஷம், ஆண்டு ‘year’
பிறப்பு ‘birth’
வருஷப் பிறப்பு ‘new year day’
உடை ‘dress’
உடை போடு (போட) ‘put on dress, wear dress’
சில ‘few’
சில பேர், சிலர் ‘few people’
விசேஷம் ‘special’
சமையல் ‘cooking’
சமையல் பண்ணு (பண்ண) ‘cook’
புது ‘new’
வெளியிடு (-இட) ‘release, bring out’
தியேட்டர் ‘movie theater’
கூட்டம் ‘crowd’
நிறை (நிறைய) ‘fill up’
வழி (வழிய) ‘spill over’
நிறைந்து வழி (வழிய) ‘over flow’
கூப்பிடு (கூப்பிட) ‘invite, call’
வேட்டி ‘dhoti, white bottom wrap worn by men’
கட்டு (கட்ட) ‘tie’
வேட்டி கட்டு tie dhoti, wear dhoti’
விபரம் ‘detail’
பன்னிரெண்டு ‘twelve’
மாதம் ‘month’
ஒரே மாதிரி ‘alike, in same way’
நாள் ‘day’
எண்ணிக்கை ‘number’
சூரியன் ‘sun’
நகர் (நகர) ‘move’
பொறுத்து ‘depending on’
மாறு (மாற) ‘change’
முதல் ‘first’
சித்திரை ‘name of a Tamil month’
துவங்கு (துவங்க), ஆரம்பி (ஆரம்பிக்க) ‘begin’
தை ‘name of a Tamil month’
ஜனவரி ‘January’
அறிவி (அறிவிக்க) ‘announce’
மக்கள் ‘people’
கொண்டாடு (கொண்டாட) ‘celebrate’
பிரபவ ‘name of a Tamil year’
அட்சய ‘name of a Tamil year’
வட்டம் ‘circle, round’
திரும்ப ‘again’
சடங்கு ‘ritual’
கிறிஸ்துவம் ‘Christianity’
அன்பர் ‘lover’
திருவள்ளுவர் ‘author of Thirukkural, the cultural icon of Tamils’
முப்பத்தியொரு ‘thirty one’
உபயோகம், பயன் ‘use’
உபயோகப்படுத்து, பயன்படுத்து (-படுத்த) ‘use’
கிறிஸ்து ‘Christ’
கணக்கு ‘calculation, arithmetic’
கணக்குப்போடு (-போட) ‘calculate, do the math’