உரையாடல் 2 இதை படிங்க!
ஜிம் - இது தமிழ் புஸ்தகமா, இங்கிலிஷ் புஸ்தகமா?
ராஜா - இது தமிழ் புஸ்தகம்.
ஜிம் - அதை குடுங்க.
ராஜா - இந்தாங்க. இதை படிங்க.
ஜிம் - எனக்கு தெரியாது. நீங்க எனக்கு தமிழ் சொல்லிக்குடுங்க.
ராஜா - சரி. உக்காருங்க.
ஜிம் - இது என்ன எழுத்து?
ராஜா - கொஞ்சம் இருங்க... தம்பி, இவருக்கு காப்பி கொண்டா.
தம்பி - அண்ணா, இந்தாங்க காப்பி
ராஜா - ஜிம், கொஞ்சம் காப்பி சாப்பிடுங்க.
Glossary
இங்கிலிஷ் ஆங்கிலம் ‘English’
குடு (குடுக்க) கொடு ‘give’
இந்தா ‘here it is’
படி (படிக்க) ‘read, study’
தெரி (தெரிய) ‘know’
சொல்லிக்குடு (–குடுக்க) சொல்லிக்கொடு ‘teach’
சரி ‘OK’
உக்கார் (உக்கார) உட்கார் ‘sit down’
என்ன ‘what’
எழுத்து ‘letter’
கொஞ்சம் ‘a little, please’
இரு (இருக்க) ‘wait, be’
தம்பி ‘younger brother’
கொண்டா (கொண்டார) கொண்டுவா ‘bring’
அண்ணா ‘elder brother’
காப்பி ‘coffee’
சாப்பிடு (சாப்பிட) ‘eat, consume any food’
Related words
குடி(குடிக்க) ‘drink’
நட (நடக்க) ‘walk’
போ (போக) 'go’
வா (வர) ‘come’
எடு (எடுக்க) ‘take’
எழுது (எழுத) ‘write’
Alternates
உக்காருங்க உக்காருங்கள் (FT: உட்காருங்கள்)
படிங்க படிங்கள் (FT: படியுங்கள்)
Pronunciation
When calling someone at a distance, the final vowel of the noun may be elongated. தம்பி – தம்பீ
The dative suffix -க்கு is pronounced -க்கி with nouns that end in இ, ஈ, ஐ and ய். தம்பிக்கு is pronounced தம்பிக்கி.
ஐ at the end or in the middle of a word (which is not monosyllabic) is pronounced as அ that is slightly higher and fronted. The final and middle ஐ in அதை, தலை, and தலையை is pronounced as a vowel between அ and எ as between அத / அதெ, தல / தலெ and தலய / தலெயெ.
The second person ending of the verb -ஏ is pronounced as a vowel between அ and எ. படிக்காதே as படிக்காதெ / படிக்காத
Note the subtle difference in the pronunciation of the final vowel in என்ன ‘what’ and என்னை ‘me’
-க்க in the infinitive of strong verbs that end in இ or ஐ is pronounced palatalized. படிக்க as படிக்க்ய. So is ங்க: படிங்க as படிங்க்ய
Spelling Variation
காப்பி காபி
Exercises
- Fill in the blanks with the appropriate form of the nouns listed. Translate the sentences you made.
Ex. இது ----------------- புஸ்தகம்
தமிழ்
இது தமிழ் புஸ்தகம் This is an English book
இந்தி ‘Hindi’, என் தம்பி, எங்க அப்பா, நான், நாங்க, யார், என்ன
- Fill in the blank with the right form of the case with the nouns in parentheses that are objects. When the noun has specific reference such as pronouns, names, restricted by a modifier, it takes the accusative case marker ஐ . Otherwise, this case marker is absent. As a rule of thumb, ஐ is not present in sentences whose equivalent sentences in Engish have the indefinite article 'a' or no article, as opposed to the definite article 'the'. If you compare the two sentences without and with ஐ, you will get a sense of what is meant by specific reference. பால் குடி'Drink milk' vs பாலை குடி 'Drink the milk' or இந்த பாலை குடி 'Drink this milk'. In the example below, இங்கிலிஷ், though is the name of a specific language, refers to English in a generic way and not in contrast with another language, say, தமிழ் when there is an underlying choice between them.
Translate the sentences you made.
Ex. நீ ---------------- படி (இங்கிலிஷ்)
நீ இங்கிலிஷ் படி ‘You study English’
a. நீ ------------ படி (தமிழ்)
b. நீ --------------சாப்பிடு (காப்பி)
c. நீ ------------- கொண்டா (புஸ்தகம்)
d. நீ--------------- கொண்டா (ஒன் புஸ்தகம்)
e. என் ------------ நீ சாப்பிடு (காப்பி)
f. நீ ----------------- கூப்பிடு ‘call’ (அவன்)
g. நீ ----------------- கூப்பிடு (ராஜா)
- Change the sentences you made in (2) as you would request someone respectful.
Ex. நீங்க இங்கிலிஷ் படிங்க
- Change the sentences you made in (2) into negative and translate. Negative command is made from the infintive + ஆதே; the final -அ of the infinitive is dropped. There are two forms of the infinitive depending on the verb. See Handout 1 below.
Ex. நீ இங்கிலிஷ் படிக்காதே
- Change the sentences you made in (3) into negative. The plural or polite form of the negative command is -ஆதீங்க.
Ex. நீங்க இங்கிலிஷ் படிக்காதீங்க
- Fill in the blank with the noun in parentheses with or without using the accusative case form (indicating the object). Bring out the difference the differences between them in translation
Ex. நீ ---------------- குடி (பால் ‘milk’)
நீ பால் குடி ‘You drink milk’
நீ பாலை குடி ‘You drink the milk’
a. நீ ------------------- குடி (காப்பி ‘coffee’)
b. நீ ----------------- சாப்பிடு (தோசை) [சாப்பிடு ‘eat’]
c. நீங்க ------------- படிங்க (தமிழ்)
d. நீங்க --------------- வாங்குங்க (பணம் ‘money’) [வாங்கு ‘get’]
e. நீ ----------- பார் (வீடு ‘house’) [பார் ‘see, look’]
7. Answer the following questions. Your answer could be anything you think as appropriate. Translate your answer.
Note: The negative of -உம் in the verb is -ஆது: தெரியும், தெரியாது; பிடிக்கும், பிடிக்காது
Ex. முருகன் யார்?
முருகன் என் தம்பி. ‘Murugan is my younger brother’
- இவ யார்?
- இது யார்?
- இது என்ன?
- இது யார் வீடு?
- இவன் யார் தம்பி?
- யார் ஒன் தம்பி?
- எது ஒங்க பேனா?
- ஒனக்கு காபி பிடிக்குமா?
- ஒனக்கு என்ன பிடிக்கும்?
- ஒனக்கு என்ன சாப்பிட பிடிக்கும்?
8. Fill in the blank with the right case form of the noun given below the sentence and translate.
Ex. --------- தமிழ் தெரியாது (நான்)
எனக்கு தெரியாது ‘I don’t know Tamil’
அவன், நீ, நாங்க, அவ, அவர், நீங்க, நாம, அவங்க, அது
9. Give the sentences you made in (8) in positive and translate.
Ex. எனக்கு தமிழ் தெரியும் ‘I know Tamil’.
10. Give the sentences you made in (9) replacing the verb தெரி with புரி (புரிய) ‘understand’, பிடி (பிடிக்க) ‘like’
11. Fill in the blanks with the right form of the noun in parentheses and translate. The noun in the blank is Object. Only human nouns take the
accusatice case suffix ஐ.
Ex. எனக்கு -------------- பிடிக்கும் (தமிழ் / ஒன் கதை / ஒன் தம்பி)
எனக்கு தமிழ் பிடிக்கும் ‘I like Tamil’
எனக்கு ஒன் கதை பிடிக்கும் 'I like your storoies'
எனக்கு ஒன் தம்பியை பிடிக்கும் 'I like your little brother'
1. எங்க அம்மாவுக்கு ---------------- தெரியும் (தமிழ்)
2. என் தம்பிக்கு --------------------- தெரியாது (நீ)
3. எனக்கு ---------------------------- புரியும் (தமிழ்ப் படம்)
4. ஒங்க அக்காவுக்கு --------------------- பிடிக்கும் (நான்)
5. ஒங்களுக்கு -------------------- பிடிக்குமா? (என் தம்பி)
12. Fill in the blanks with the infinitive form of the verb in parentheses and translate.
Ex. எனக்கு தமிழ் -------------- தெரியாது (படி)
எனக்கு தமிழ் படிக்க தெரியாது ‘I do not know how to read Tamil’
1. எங்க அம்மாவுக்கு தமிழ் ------------ தெரியும் (பேசு)
2. என் தம்பிக்கு இந்தி ---------------- தெரியாது (எழுது)
3. ஒங்க அக்காவுக்கு என்னை ----------- பிடிக்கும் (பார்)
4. ஒங்களுக்கு என் தம்பியை வீட்டுக்கு ------------------ பிடிக்குமா? (கூப்பிடு)
5. ஒன் தங்கச்சிக்கு -------------------- தெரியுமா? (பாடு)
Handouts
1. Common Verbs (The infinitive form of the verbs, which ends with அ, is in parentheses; this form will tell you whether the verb is a weak verb or a strong verb with -க்க்-. Note that in some verbs the infinitive suffix அ is added to a variant form of the verb, not the bare verb form)
Colloquial Conventional Gloss
வா (வர) வா (வர) ‘come’
போ (போக) போ (போக) ‘go’
இரு (இருக்க) இரு (இருக்க) ‘be’
உக்கார் (உக்கார) உட்கார் (உட்கார) ‘sit down’
எடு (எடுக்க) எடு (எடுக்க) ‘take’
குடு (குடுக்க) கொடு (குடுக்க) ‘give’
படி (படிக்க) படி (படிக்க) ‘read, study’
பாடு (பாட) பாடு (பாட) ‘sing’
பேசு (பேச) பேசு (பேச) ‘speak’
சொல்லு (சொல்ல) சொல் (சொல்ல) ‘say’
படு (படுக்க) படு (படுக்க) ‘lie down’
தூங்கு (தூங்க) தூங்கு (தூங்க) ‘sleep’
சாப்பிடு (சாப்பிட) சாப்பிடு (சாப்பிட) ‘eat’
பார் (பாக்க) பார் (பார்க்க) ‘see’
கேள் (கேக்க) கேள் (கேட்க) ‘ask, listen’
வாங்கு (வாங்க) வாங்கு (வாங்க) ‘buy’
ஓடு (ஓட) ஓடு (ஓட) ‘run’
நட (நடக்க) நட (நடக்க) ‘walk’
வில்லு (விக்க) வில் (விற்க) ‘sell’
சிரி (சிரிக்க) சிரி (சிரிக்க) ‘laugh, smile’
கொண்டா (கொண்டார) கொண்டுவா (கொண்டுவர' 'bring'
செய் (செய்ய) செய் (செய்ய) ‘do, make’
பண்ணு (பண்ண) பண்ணு (பண்ண) ‘do, make’
தெரி (தெரிய) தெரி (தெரிய) ‘know, be visible’
புரி (புரிய) புரி (புரிய) ‘understand’
பிடி (பிடிக்க) பிடி (பிடிக்க) ‘like’
போது (போத) போது (போத) 'be enough, sufficient'
கெடை (கெடைக்க) கிடை (கிடைக்க) ‘be available’
2. Common Adverbs
These adverbs modify a verb or a sentence.
Colloquial Formal
கொஞ்சம் கொஞ்சம் ‘a little, please’
ரொம்ப ரொம்ப, மிக ‘much, very’
சீக்கிரம் சீக்கிரம் ‘quickly’
பெறகு பிறகு ‘later, then’
இன்னும் இன்னும் ‘yet’
இனிமே(ல்) இனிமேல் ‘hereafter’
ஒரு வேளை ஒரு வேளை ‘perhaps’
பெரும்பாலும் பெரும்பாலும் ‘most probably’
3. Common Adjectives
Any noun can be an ‘adjective’ modifying another noun. There are some words that function only as adjectives.
Colloquial Formal
பழைய பழைய old
புது புது new
பெரிய பெரிய big
சின்ன சின்ன small
நல்ல நல்ல good
கெட்ட கெட்ட bad, spoiled
வட்டம் வட்டம் round, circle
சதுரம் சதுரம் square
நீளம் நீளம் long
வெள்ளை வெள்ளை white
கறுப்பு கறுப்பு black
செவப்பு சிவப்பு red
பச்சை பச்சை green
மொதல் மொதல் first
கடைசி கடைசி last