5. ஓட்டலுக்கு போறோம்

 

உரையாடல் 5                                           ஓட்டலுக்கு போறோம்

 

 

ஜிம்   -  நாம எந்த ஓட்டலுக்கு போறோம்?

 

ராஜா  -  நாம உடுப்பி ஓட்டலுக்கு போறோம்.

 

ஜிம்   -  அது நல்ல ஓட்டலா?

 

ராஜா  -  ஆமா.  அங்கே டிபன் ரொம்ப நல்லா இருக்கும்.

 

 (ரெண்டு பேரும் ஓட்டலுக்குள்ளே போறாங்க)

 

ராஜா  -  நீங்க தோசை சாப்பிடுறீங்களா?   இட்லி சாப்பிடுறீங்களா?

 

ஜிம்   -  நீங்க என்ன சாப்பிட போறீங்க?

 

ராஜா  -  நான் பூரி சாப்பிட போறேன்.

 

ஜிம்   -  நானும் பூரி சாப்பிடுறேன்.

 

 (ராஜா சர்வரை கூப்பிடுறார்.)

 

சர்வர்  -  சார்,  என்ன வேணும்?

 

ராஜா  -  ஆளுக்கு ஒரு பூரி கொண்டா.

 

சர்வர்  -  இந்தாங்க.  வேறே என்ன வேணும்?

 

ராஜா  -  ரெண்டு காப்பி.  மொத்தம் எவ்வளவு ஆச்சு?

 

சர்வர்  -  எழுபது ரூபா.  இந்தாங்க, பில்லு.

 

 

 

 

Glossary

நல்ல  ‘good’

டிபன் ‘tiffin, non-meal’

ரொம்ப ‘very’

நல்லா ‘good

தோசை ‘a fried crepe made of rice and lentil flour’

இட்லி ‘a steam-cooked rice cake’

பூரி ‘a fried wheat bread’

சர்வர் ‘waiter’

சார் ‘sir’

ஆள் ‘person’

வேறே ‘(something) else’

மொத்தம் ‘total’

ஆச்சு ‘came to’

எழுபது ‘seventy’

பில்லு  ‘check, bill’

 

Related words

கெட்ட ‘bad’

பெரிய ‘big’

சின்ன ‘small’

மோசமா ‘badly’

பெருசா   ‘big (adv.)’

சின்னதா  ‘small (adv.)’

சாம்பார்  ‘a lentil soup that goes with தோசை, இட்லி’

சட்னி ‘chutney (usually made from coconut)

கெழங்கு ‘potato, any root vegetable’

இருபது ‘twenty’

முப்பது ‘thirty’

நாப்பது ‘forty’

அம்பது ‘fifty’

அறுபது ‘sixty’

எம்பது ‘eighty’

 

Alternates

போறீங்க                            போறீங்கள்

போறா                                  போறாள்

போறாங்க                          போறாங்கள்

 

Pronunciation

ஓட்டல் may also be pronounced as ஹோட்டல்.

தோ in தோசை is pronounced voiced. So is பி in the loan word பில்லு.  பூ in பூரி is pronounced voiced in some dialects.

-உ at the end of weak verbs that is preceded by some consonants (டு, லு. ளு. ழு, னு, ணு, டு, ரு) disappears before the present suffix று. சாப்பிடுறான் / சாப்பிட்றான், சொல்லுறான் / சொல்றான், வர்றான். Note that in the last example the colloquial spelling reflects the loss of உ. The corresponding future forms have உ: சாப்பிடுவான், சொல்லுவான், வருவான்.

The agreement suffix of verbs –ஓம் and –ஏ undergo change before the question marker into -அம் - and இ respectivley. But this pronunciation is reflected in the spelling itself and so no rule of speaking pronunciation is required. போறோம் / போறமா, போறே / போறியா

 

Spelling Variation

எழுபது                                எழுவது

Other words that have similar variation:

இருபது                                இருவது

அறுபது                                அறுவது

 

Exercises

 

  1. Change the endings of the verb in the sentences below to make them appropriate for the subject. Translate the sentences you made.

Ex. அவ தமிழ் படிக்கிறான்

   அவ தமிழ் படிக்கிறா ‘She is studying Tamil”

 

1.      நான் தோசை சாப்பிடுறோம்.

2.      அவங்க எங்கே போறீங்க?

3.      யார் வீட்டுக்கு போறே?

4.      என் தம்பி தமிழ் படிக்கிறா..

5.      அப்பா எனக்கு புஸ்தகம் குடுக்குறான்.

6.      ஒங்க பின்னாலே என்ன இருக்காங்க?

7.      டாக்சி ஒங்க வீட்டுக்குதான் வர்றான்.

8.      அது எங்கே போறே?

9.      பேராசிரியர் ஓட்டலுக்கு போகுது. (பேராசிரியர் ‘Professor’)

10.   ஒன் தங்கச்சி எங்கே இருக்கே?  (தங்கச்சி ‘younger sister’)

 

  1. Change the subject in the above sentences to be appropriate to the given verb form.

Ex. அவ தமிழ் படிக்கிறான்

   அவன் தமிழ் படிக்கிறான் ‘He is studying Tamil’

 

  1. Make questions out of the statements below. Translate the questions.

Ex. அவ தமிழ் படிக்கிறா

    அவ தமிழ் படிக்கிறாளா? ‘Is she studying Tamil?’

 

1.      அப்பா தூங்குறார்

2.      அம்மா டி.வி. பாக்குறாங்க

3.      நாம இந்தியாவுக்கு போறோம்

4.      நான் ஒங்க வீட்டுக்கு வர்றேன்

5.      நீ காப்பி குடிக்கிறே

6.      ஒன் தங்கச்சி நாளைக்கு பாடுறா

7.      நீங்க தெனம் ஓடுறீங்க (தெனம் ‘daily’)

8.      அங்கே கதைப் புஸ்தகம் இருக்கு (கதை ‘story’)

9.      ஒங்களுக்கு தமிழ்ப் படம் பிடிக்கும்

10.  இங்கே தமிழ்ப் புஸ்தகம் கெடைக்கும்

 

  1.    Make the sentences below into negative ones. Translate the negative sentences.

                  Ex, நான் ராஜா

                        நான் ராஜா இல்லை ‘I am not Raja’

 

1.      இது என் பேனா.

2.      இவன் என் தம்பி.

3.      எங்க பூனை இது. (பூனை ‘cat’)

4.      நீ நாளைக்கு வீட்டுக்கு வா

5.      நீங்க ராத்திரி கடைக்கு போங்க.

6.      அவ நாளைக்கு எங்க வீட்டுக்கு வர்றா.

7.      நாங்க இண்ணைக்கு சினிமாவுக்கு போறோம்.

8.      பூனை பால் குடிக்குது.

9.      அப்பா தூங்குறார்.

10.  நீ என்ன செய்றே?

 

  1. The sentences below are about something that did not happen in the past. How will you say that using the verb in parentheses. Translate the sentences.

            Ex. நாங்க தமிழ் ---------------------- (படி)

                  நாங்க தமிழ் படிக்கலை

               ‘We didn’t study Tamil’

 

 

  1. நான் நேத்து பாடம் ----------------------- (படி)

 

  1. நாங்க காலைலே -------------------------- (சாப்பிடு)

 

  1. பூனை ராத்திரி வீட்டுக்கு ----------------------------- (வா)

 

  1. நேத்து இங்கே மரம் -------------------------- (இரு)

 

  1. அவங்க இன்னும் வீட்டுக்கு --------------------- (போ) (இன்னும் ‘yet’)

 

 

  1. Make the two sentences below into one using the conjoining suffix –உம். Translate the sentences you made.

Ex. அப்பா நாளைக்கு வர்றார்; அம்மா நாளைக்கு வர்றாங்க

    அப்பாவும் அம்மாவும் நாளைக்கு வர்றாங்க ‘Father and mother (parents) are coming tomorrow’.

 

1.      என் தம்பி தமிழ் படிக்கிறான்; ஒங்க தம்பி தமிழ் படிக்கிறான்

2.      எங்க அப்பா ஊருக்கு போறார்; என் தம்பி ஊருக்கு போறான்

3.      எனக்கு தோசை பிடிக்கும்; ஒனக்கு தோசை பிடிக்கும்

4.      எனக்கு தோசை பிடிக்கும்; எனக்கு இட்லி பிடிக்கும்

5.      யாருக்கு தமிழ் புஸ்தகம் வேணும்; யாருக்கு இங்கிலிஷ் புஸ்தகம் வேணும்?

 

  1. Keep the sentences in (6) as they are and make the second sentence to mean that it adds a person or a thing doing or being the same by using the suffix of addition –உம் ‘also’. Translate the sentences you made.

Ex. அப்பா நாளைக்கு வர்றார்; அம்மாவும் நாளைக்கு வர்றாங்க ‘Father is coming tomorrow; Mother is also coming tomorrow

 

  1. The sentences below are similar to the ones in (6), but the verbs have suffixes that agree with the subject of the sentence. Combine them into one. Note that the agreement will be determined based on whether one of the subjects is first person or second person. When there is first person, the plural ending is first person plural; when there is second person but no first person, the plural ending is second person plural.

Ex. அப்பா நாளைக்கு வர்றார்; நான் நாளைக்கு வர்றேன்

   அப்பாவும் நானும் நாளைக்கு வர்றோம் ‘Father and me are coming tomorrow’

 

1.      என் தம்பி தமிழ் படிக்கிறான்; நான் தமிழ் படிக்கிறேன்

2.      நான் ஊருக்கு போறேன்; எங்க அப்பா ஊருக்கு போறார்

3.      அம்மா தோசை சாப்பிடுறாங்க; நீ தோசை சாப்பிடுறே

4.      நாங்க பால் குடிக்கிறோம்; அவங்க பால் குடிக்கிறாங்க

5.      நீ எங்கே போறே; நான் எங்கே போறேன்?

 

  1. The numerals in the following sentences indicate a number out of a set. Change them into sentences that mean everything in the set is included. Note that in the inclusive meaning, the object will have the accusative case marker present. Translate the sentences you made.

Ex. ரெண்டு தோசை சாப்பிடு

   ரெண்டு தோசையையும் சாப்பிடு ‘Eat both dosais’

 

1.      எனக்கு ரெண்டு வேணும்

2.      நாளைக்கு ரெண்டு பேர் வர்றாங்க

3.      எனக்கு பத்து புஸ்தகம் குடு

4.      நாம நாலு வீட்டுக்கு போகணும்

5.      யாருக்கு மூணு தோசை குடுக்கலாம்?

 

Handout

Numerals above Ten

The decades of the numerals are made with a shorter form of single digit numerals followed by a varant form of பத்து '10',  which is பது. In the word for 90 the second form is நூறு (or its phonlogical variant) '100'. This is similar to the formation  ஒம்பது '9' , whose second from is a variant of பத்து '10'.

The numerals in the left column are in colloquial spelling and those in the right column are in formal spelling and this spelling is given when it is different..

இருபது / இருவது                20          இருபது

முப்பது                                    30

நாப்பது                                     40           நாற்பது

அம்பது                                     50          ஐம்பது

அறுபது / அறுவது               60         அறுபது

எழுபது / எழுவது                 70         எழுபது

எம்பது                                      80         எண்பது

தொண்ணூறு                        90

நூறு                                        100

 

The numerals between decades are made by adding the single digit numerals to the variants of பத்து '10, which are பதி, பதின் (before the numerals that beging with a vowel), பத்தி (also வத்தி colloquially), பன் (before the numeral two). The variant of நூறு '100' is நூத்தி.

பதினொண்ணு                            11            பதினொன்று

பனிரெண்டு                                  12           பன்னிரண்டு

பதிமூணு                                      13            பதின்மூன்று

பதினாலு                                      14            பதினான்கு

பதினைஞ்சு                                 15           பதினைந்து

பதினாறு                                       16

பதினேழு                                      17

பதினெட்டு                                  18

பத்தொம்பது                              19           பத்தொன்பது

 

இருபத்தி ஒண்ணு                           21          இருபத்தொன்று / இருபத்தி ஒன்று

இருபத்தி ரெண்டு                             22           இருபத்திரண்டு / இருபத்தி இரண்டு

இருபத்தி மூணு                                23           இருபத்து மூன்று / இருபத்தி மூன்று

இருபத்தி நாலு                                  24            இருபத்து நான்கு / இருபத்தி நான்கு

இருபத்தி அஞ்சு                               25            இருபத்தைந்து / இருபத்தி ஐந்து

இருபத்தி ஆறு                                  26            இருபத்தாறு / இருபத்தி ஆறு

இருபத்தி ஏழு                                   27            இருபத்தேழு / இருபத்தி ஏழு

இருபத்தி எட்டு                                28             இருபத்தெட்டு / இருபத்தி எட்டு

இருபத்தி ஒம்பது                            29             இருபத்தொன்பது / இருபத்தி ஒன்பது

 

தொண்ணூத்தி ஒண்ணு              91           தொண்ணூற்றொன்று / தொண்ணூற்றி ஒன்று

and so on.

Related Images: