6. சினிமா பாக்கணும்

 

உரையாடல்  6                              சினிமா பாக்கணும்

 

 

ராஜா  -  சினிமாவுக்கு போகலாமா?

 

ஜிம்   -  நானும் ஒரு தமிழ் சினிமா பாக்கணும்.  வாங்க, போவோம்.

 

ராஜா  -  வைரம் தியேட்டர்லே ஒரு நல்ல படம் நடக்குது.  அங்கே போவோம்.

 

ஜிம்   -  அது எவ்வளவு தூரம்?

 

ராஜா  -  ஒரு மைல் இருக்கும்.

 

ஜிம்   -  அது மதுரைலேயே நல்ல தியேட்டரா?

 

ராஜா  -  ஆமா.  அதுதான் மதுரைலேயே பெரிய தியேட்டர்.

 

ஜிம்   -  நீங்க அடிக்கடி சினிமா பாப்பீங்களா?

 

ராஜா  -  வாரத்துக்கு ஒண்ணு பாப்பேன்.

 

ஜிம்   -  தமிழ் சினிமா நல்லா இருக்குமா?

 

ராஜா  -  நீங்க இண்ணைக்கு பாருங்க.  பெறகு சொல்லுங்க.

 

ஜிம்   -  டிக்கட் எவ்வளவு?

 

ராஜா  -  இங்கே ரெண்டு மூணு வகுப்பு இருக்கு.  நாம அறுபது ரூபா

         டிக்கட்டுக்கு போகலாம்.

 

 

Glossary

சினிமா  ‘cinema, movie’

வைரம் ‘diamond (name of a movie house here)’

தியேட்டர் ‘theater, movie house’

படம் ‘picture, movie’

நட (நடக்க) ‘run (like a movie, school), walk’

தூரம் ‘distance’

மைல் ‘mile’

மதுரை ‘Madurai, a temple city in southern Tamil Nadu’

அடிக்கடி ‘often’

வாரம் ‘week’

பெறகு      அப்புறம்  ‘later, then’

டிக்கட்  ‘(entry) ticket’

வகுப்பு ‘class (as in a theater, train, class)’

ரூபா             ரூபாய் ‘rupee’

 

Related words

பக்கம்  ‘near’

மாசம்        மாதம்  ‘month’

வருஷம்     வருடம் ‘year’

நாள் ‘day (of 24 hours)’

பகல் ‘day, day time’

ராத்திரி        இரவு ‘night’

சாயங்காலம் ‘evening (after four and before night fall)’

மத்தியானம் ‘mid-day (from eleven to four)’

காலைலே காலையில்  ‘morning (from sun rise to eleven)’

 

Pronunciation

The locative suffix -லே is pronounced as –ல. மதுரைலே as மதுரெல (or மதுரேல). The shortening of final -ஏ is true of forms that are about location such as மேலே ‘up’, அங்கே ‘there’ which are pronounced respectively as மேல / மேலெ, அங்க / அங்கெ. -ஏ in some other forms like வேறே ‘else’ as வேற / வேறெ (which occurs in the previous Conversation), போறே ‘you are going’ as போற / போறெ also have similar pronunciation. . Note that this shortened pronunciation is not true of the emphatic suffix -ஏ (மதுரைலேயே).

 

The locative suffix varies between -லே and -உலே. In fast pronunciation, it is commonly pronounced -லே. சிகாகோவுலே / சிகாகோலே, வீட்டுலே / வீட்லே, கண்ணுலே / கண்லே.

 

த் in தூரம் is pronounced voiced.

 

 

Spelling Variation

அப்படித்தான்                     அப்படிதான்

தமிழ் படம்                         தமிழ்ப்படம்

 

 

 

Exercises

 

 

 

  1. Make ten sentences with the words in three columns below. Use one word from each column in a sentence. (Help: Keep the nouns in the first column constant and choose a verb from the third column that will agree with the noun, and then choose a right word from the second column. The question mark with some words in the third column would suggest a question word from the first or second column). Translate the sentences you made.

 

 

நான்                          இங்கே                     பேர்தான்

நீ                                 வீட்டுக்கு                போங்க

அவங்க                    தோசை                   சாப்பிடுறார்

அப்பா                       தமிழ்                         கெடைக்கும்?

யார்                           என்ன                         வருது

டாக்சி                      எங்கே                         உக்கார்றே?

நீங்க                          ஓட்டலுக்கு             பாக்குறாங்க

இங்கே                     என் தாத்தா              போறேன்          (தாத்தா ‘grand father’)

புஸ்தகம்                 வகுப்புக்கு              படிக்கிறா?

என் தம்பி பேர்      படம்                          இருக்கு

 

 

 

  1. The following statements and questions are about actions taking place in the present or indicate definiteness of their occurrence in the future. Change these into sentences expressing the imminence of the occurrence of the actions based on the prediction that they will happen by using போ ‘go’ in the present tense. Translate both sentences.

 

Ex. குமார் நாளைக்கு வர்றான் ‘Kumar is coming tomorrow’

     குமார் நாளைக்கு வரப் போறான் ‘Kumar is going to come tomorrow’

 

 

  1. நாங்க தமிழ் படிக்கிறோம்

 

  1. நாங்க இண்ணைக்கு ஓட்டலுக்கு போறோம்

 

  1. தம்பி நாளைக்கு ஊருக்கு வர்றான்

 

  1. நீ ராத்திரி என்ன செய்றே? (ராத்திரி ‘night’)

 

  1. நீங்க இண்ணைக்கு ராத்திரி எங்கே போறீங்க?

 

  1. நாம இண்ணைக்கு ராத்திரி வேலை செய்றமா?

 

  1. நீங்க எங்கே இருக்கீங்க?

 

  1. பூனை வெளியே ஓடுது

 

  1. நாய் பாலை குடிக்குது

 

  1. பேனா கீழே விழுது (கீழே ‘down’, விழு ‘fall’)

 

  1. Make the sentences in (2) into statements or questions, as they are, to mean that the action will happen in the future, but less certain than the sentences in (2). Translate the sentences you made.

            Ex.  குமார் நாளைக்கு வருவான் ‘Kumar will come tomorrow’

 

  1. Choose the right verb form for the given meaning from the forms in parentheses.

Ex. அவன் நாளைக்கு ----------------------------- (வரட்டும், வரலாம்)

 ‘Let him come tomorrow’

 (Not he may come tomorrow)

 அவன் நாளைக்கு வரட்டும்

 

  1. இண்னைக்கு நாம எங்கே ------------------------- ? (போகலாம், போறோம்)

‘Where shall we go today?’

(Not ‘Where are we going today?’)

 

  1. நாம சினிமாவுக்கு -----------------------? (போறமா, போவமா)

‘Shall we go to a movie today?’

(Not ‘Are we going to a movie today?)

 

  1. ராத்திரி நாம சினிமா பாக்க-----------------------. (போவோம், போறோம்)

‘Let us go to watch a movie in the evening’

(Not ‘We are going to watch a movie in the evening’)

 

  1. நான் நாளைக்கு ஒங்களை----------------------------. (பாக்கப் போறேன், பாக்கிறேன்)

 I will see you tomorrow’

(Not ‘I am going to see you tomorrow’)

 

  1. நான் நாளைக்கு ஒங்களை எத்தனை மணிக்கு---------------------? (பாக்கலாம், பாக்கிறேன்)

‘At what time may / shall I see you tomorrow?’

(Not ‘At what time am I seeing you tomorrow?’)

 

                  6.   நான் நாளைக்கு ஒங்களை எப்போ  -----------------------? (பாக்கட்டும், பாப்பேன்)

        ‘When can I see you tomorrow?’

        (Not ‘When will I see you tomorrow?’)

 

 7.  அவன் ஒங்களை பாக்க அஞ்சு மணிக்கு-------------------? (வரட்டுமா, வருவானா)

      ‘Can he come at five to see you?’

     (Not ‘Will he come at five to see you?’)

 

8.  நான் ஒங்களை பத்து மணிக்கு பாக்க----------------------? (வரட்டுமா, வரப் போறனா)

       ‘Can I come to see you at ten?’

        (Not ‘Am I going to come to see you at ten?’)

 

9.      நான் ஒங்களை பத்து மணிக்கு பாக்க----------------------. (வரட்டும், வர்றேன்)

          'I will come to see you at ten' / 'Let me come to see you at ten'

         (Not ' I am coming to see you at ten')

 

 

10.  நீ ஆறு மணிக்கு வீட்டுக்கு----------------------------. (போகட்டும், போகலாம்)

        ‘You can go home at six’

         (Not 'Let you go home at six', which is ungrammatical)

 

 

  1. Make the interrogative sentences below into sentences with ‘any’. When the interrogative is a phrase, -உம் is added to the head of the phrase. Translate the sentences you made.

Ex.  ராஜா வீட்டுக்கு யார் வரலாம்?

    ராஜா வீட்டுக்கு யாரும் வரலாம் ‘Anyone can come to Raja’s house’

 

1.      அவளுக்கு யாரை பிடிக்காது?

2.      அவன் எதை சாப்பிட கூடாது?

3.      தம்பி எப்போ கடைக்கு போகட்டும்?

4.      யாருக்கு அவளை பிடிக்காது?

5.      அவங்களுக்கு எந்த ஊர் பிடிக்கலை?

 

  1. Fill in the gaps with the right form based on the meaning of the sentence. எல்லாரும் is ‘all (human)’ and எல்லாம் is ‘all (non-human). These forms occur after the noun they quantify. If the noun takes a case suffix, it occurs before –உம் / -ம். The non-nominative form of எல்லாம் is எல்லாத்த்- (as it is மரத்த்- for மரம்). When the noun is a first or second person pronoun, they are in their non-nominative form when case is added to எல்லாரும் or எல்லாம். The same is true of numerals and the interrogative noun ‘how many’

 

                    Ex. ---------------------- வீட்டுக்கு கூப்பிட போறேன் ‘I am going to invite  you all home’

                    ஒங்க எல்லாரையும் வீட்டுக்கு கூப்பிட போறேன்

                                  a.       ------- எங்கே போறீங்க?  ‘Where are you all going?’

                                  b.      -------- தமிழ் படிக்கிறோம். ‘We are all studying Tamil.

                                  c.-------- தமிழ் படிக்கிறோம். ‘We both are studying Tamil.’

                                  d.      நான் --------  -------- புஸ்தகம் குடுக்குறேன். ‘I will give a book to all three of you’

          e.       -------- -------- புஸ்தகம் வேணும். ‘We all want books.’

          f.         ------- -------- வீட்டுக்கு போகணும் ‘We all want to go home.’

          g.      ------- -------- வீட்டுக்கு போறாங்க, ‘All boys are going home.  ’(பையங்க (ள்)  ‘boys’)

          h.      நீங்க  ----------  -------- படிக்கணும். ‘You must read all the books’

          i.         ----------------- தமிழ் படிக்கிறாங்க? ‘How many people are studying Tamil?’     (எத்தனை பேர் ‘how many’)

           j.         -------- -------- தமிழ் படிக்கிறீங்க? ‘How many of you are studying Tamil?’

 

  1. Fill in the forms that modify a noun that are given parentheses in the blanks below. Translate the sentences you made.

Ex. இது ------------------- புஸ்தகம் (நல்ல)                 இது நல்ல புஸ்தகம் 'This is a good book’

 

1.   எங்க வீடு ------------------ வீடு (பெரிய)

2.   எனக்கு --------------------- ஊர் பிடிக்கும் (சின்ன)

3.   ஒங்களுக்கு --------------- சட்டை பிடிக்காதா? (வெள்ளை)

4.   ஒனக்கு ---------------- புஸ்தகம் வேணுமா? (தமிழ்)

5.   அம்மா அவங்க ----------------- வீட்டுக்கு போறாங்க (அம்மா)

 

  1. Fill in the forms that modify a verb that are given parentheses in the blanks below. Translate the sentences you made.

Ex. இந்த புஸ்தகம் ---------------------------- இருக்கு (நல்லா ‘good’)                 இந்த புஸ்தகம் நல்லா இருக்கு ‘This book is good’

 

1.   எங்க வீடு ------------------------ இருக்கும் (பெருசா ‘big’)

2.   இந்த ஊர் ---------------------- இருக்கு (சின்னதா ‘small’)

3.   ஒங்க சட்டை ரொம்ப -------------------- இருக்கு (வெள்ளையா ‘white’)

4.   இந்த புஸ்தகம் படிக்க ------------------ இருக்கும் (கஷ்டமா 'difficult’)

5.   நம்ம மேஜை --------------------------- இருக்கு (வட்டமா 'round’)

 

  1. Fill in the forms that modify a verb that are given parentheses in the blanks below. Translate the sentences you made.

        Ex. என் தம்பி --------------------------- நடப்பான் (மெதுவா 'slowly’)                 என் தம்பி மெதுவா நடப்பான் 'My little brother walks slowly’

 

1.   ஒன் நாய் ------------------- ஓடுமா? (வேகமா ‘fast’)

2.   என் தங்கச்சி சினிமா பாட்டு -------------------------- பாடுவா (நல்லா ‘well’)

3.   எங்க மாமா ------------------- தமிழ் பேசுவார் (அழகா ‘beautifully, nicely)

4.   எங்க அப்பா எப்போவும்--------------------------- பேசுறார் (கோபமா ‘angrily)’

5.   ஒனக்கு எல்லாரையும் ----------------- நடத்த தெரியுமா? (அன்பா ‘kindly’,

நடத்து ‘treat’)

 

 

  1. The following sentences use the locative expression, but their specific meanings go beyond strict location and they refer to source, medium etc. Fill in the blank in Tamil using in the locative the nouns given in parentheses. Translate the sentences you made.

 

  1. மதுரை ------------------------- இருக்கு. (தமிழ்நாடு)

 

  1. நான் புஸ்தகத்தை ------------------- வைக்கப் போறேன். (பை ‘bag’) [வை ‘place’]

 

  1. தொப்பி ---------------- இருக்கு. (தலை) [தொப்பி ‘hat’]

 

  1. நான் இந்த புஸ்தகத்தை -------------------- வாங்கப் போறேன். (கடை)

 

  1. இந்த ---------------- ரொம்ப பழம் தொங்குது. (மரம்) [பழம் ‘fruit’, தொங்கு ‘hang'

    

  1.  இந்த ---------- ரொம்ப பூ பூக்கும். (செடி ‘plant’) [பூ ‘flower’, பூ ‘bloom’]

 

  1. --------------------- பஜ்ஜி பண்ணப் போறேன். (வாழைக்காய் ‘plantain’) [பஜ்ஜி  'a fried snack'

      

  1. எனக்கு ------------ ரொம்ப வலிக்குது. (கால் ‘leg’) [ வலி ‘pain’]

 

  1. நீ ---------- கையை கழுவணும். (தண்ணி ‘water’) [கை ‘hand’, கழுவு ‘wash’]

 

  1. நீ ------------------ நனையாதே. (மழை) [நனை ‘get wet’]

 

  1. நீ ------------ வரப் போறியா? [பஸ்]

 

  1. பென்சில் ----------------- குத்தப் போகுது. (கண் ‘eye’) [குத்து ‘pierce]

 

  1. பத்து ---------------- அவன் ரெண்டு வேளை சாப்பிடுறான். (ரூபா(ய்) ‘rupee’)

     [வேளை ‘times of the day’]

  1. பத்து --------------- எனக்கு என்ன வாங்கப் போறே? (ரூபா(ய்))

 

  1. என் ------------------- இது நல்ல புஸ்தகம். (புஸ்தகம்)

 

 

 

 

 

Handout

 

Nouns of description

 

சந்தோஷம்  ‘happiness’

வருத்தம் ‘sadness, grief’

ஆசை ‘desire, longing’

அன்பு ‘kindness, love’

கோபம் ‘anger’

மோசம் ‘inferior, bad’

பயங்கரம் ‘being terrific’

கஷ்டம் ‘difficulty, hard’

லேசு ‘light, easy’

கனம் ‘heavy’

தடி ‘plump, fat’

ஒல்லி ‘thin, lean’

மூப்பு  ‘elder’

எளமை ‘younger’

நீளம் ‘length’

அகலம் ‘width, breadth’

ஆழம் ‘depth’

ஒயரம்       உயரம் ‘height’

வட்டம் ‘round, circle’

சதுரம் ‘square’

வெள்ளை ‘white’

கருப்பு ‘black’

பச்சை ‘green’

செவப்பு     சிவப்பு  ‘red’

Related Images: