7. படம் பிடிக்குதா?

 

உரையாடல்  7                              படம் பிடிக்குதா?

 

 

ராஜா  -  ஒங்களுக்கு இந்த படம் பிடிக்குதா?

 

ஜிம்   -  ரொம்ப பிடிக்குது.  ஒங்களுக்கு?

 

ராஜா  -  எனக்கும் பிடிக்குது.  கதை எப்படி இருக்கு?

 

ஜிம்   -  எனக்கு தமிழ் நல்லா தெரியாது.  அதுனால கதை நல்லா புரியலை.

 

ராஜா  -  இன்னும் கொஞ்ச நாள்லே தமிழ் நல்லா புரியும்.  அப்போ தமிழ் படமும்

         நல்லா புரியும்.

 

ஜிம்   -  நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்.

 

ராஜா  -  வாங்க.  காப்பி சாப்பிடலாம்.

 

(ரெண்டு பேரும் ஓட்டலுக்குள்ளே போறாங்க.  அங்கே ஒரு நாற்காலிலே

 உக்கார்றாங்க.)

 

ஜிம்   -  எனக்கு காப்பி வேண்டாம்.  பால் கொண்டார சொல்லுங்க.

 

ராஜா  -  சரி.  தோசை சாப்பிடுறீங்களா?

 

ஜிம்   -  எனக்கு பால் போதும்.

 

 

Glossary

அதுனாலே                        ‘so, therefore, because of that’                                   ‘

கதை                                     ‘story’

இன்னும்                             ‘yet’

கொஞ்ச நாள்                    ‘a few days’

நெனை (நெனைக்க)      ‘think’

உள்ளே                                ‘inside’

ஒரு                                       ‘a, one (adjective of ஒண்ணு)'

நாற்காலி                            ‘chair’

உக்கார் (உக்கார)             ‘sit down’

போதும்                               ‘enough’

 

Related words

நில்லு (நிக்க)                                 ‘stand, stop (intransitive)’

படு (படுக்க)                                    ‘lie down, go to bed’

எந்திரி (எந்திரிக்க)                       ‘get up, stand up’

நட (நடக்க)                                     ‘walk, run (intransitive as of institutions)’

ஓடு (ஓட)                                         ‘run (as of people, animals, mechanical devices)’

 

Pronunciation

The neuter singular suffix -உது is pronounced as –இது in the verbs that end in இ, ஐ or ய். பிடிக்குது ‘one likes’ as பிடிக்கிது, ஒறைக்குது ‘it is hot’ as  ஒறைக்குது, புரியுது ‘one understands’ as புரியிது, ஒறையுது ‘it freezes, as ஒறையிது,  செய்யுது ‘it does’ as செய்யிது.

 

 

Spelling Variation

அப்படித்தான்                                அப்படிதான்

தமிழ் படம்                                   தமிழ்ப்படம்

 

Exercises

 

  1. Fill in the blanks with the noun in parentheses. They translate as adjectives in the predicate slot. Translate your sentences.

 

Ex. ஒங்க சட்டை ரொம்ப ----------- (வெள்ளை)

    ஒங்க சட்டை ரொம்ப வெள்ளை

    ‘Your shirt is very white’

 

1.      எங்க வீட்டு பூனை ----------------- (கருப்பு)

2.      ஒங்க அம்மா ரொம்ப ------------ (நெறம் ‘color’; here refers to fair skin

color)

3.      என் தங்கச்சி ரொம்ப --------- (ஒயரம்)

4.      நீ ரொம்ப ------------ (அழகு)

5.      ஒரு பாடம் கொஞ்சம் ------------- (கஷ்டம்)

 

  1. The sentences in (1) could be stated with the verb இரு that is variously inflected. In these sentences, -ஆ will be added to the nouns. Add the following inflected forms respectively to the sentences in (1) and translate.

 

Ex. இருக்கணும்

    ஒங்க சட்டை ரொம்ப வெள்ளையா இருக்கணும்

    ‘Your shirt should be very white’

 

(1)   இருக்கும், (2) இருப்பாங்களா, (3) இருக்கா, (4) இருக்கலாம், (5) இருக்கட்டும்

 

  1. Make the sentences in (1) negative by adding இல்லை. Translate these sentences.

Ex. ஒங்க சட்டை ரொம்ப வெள்ளையா இல்லை

    ‘Your shirt is not very white’

 

  1. Fill in the blanks with nouns derived from the adjectives in parentheses. The nouns must agree in gender and number (but not in person) with the subject. Translate the sentences you made.

 

Ex. எங்க பேராசிரியர் ரொம்ப --------------- (நல்ல)

    எங்க பேராசிரியர் ரொம்ப நல்லவர் ‘Our professor is a very good person’

 

  1. எங்க அம்மா ரொம்ப ----------------------- (நல்ல)
  2. இவன் இந்த ஊர்லேயே ---------------- (கெட்ட)
  3. நான்தான் எங்க வீட்டுலே ------------- (பெரிய)
  4. ஒங்க வகுப்புலே நீதான் ----------------- (சின்ன)
  5. நாங்கதான் ஊருக்கு ------------------- (பெரிய)
  6. இந்த வீடு எங்களுக்கு -------------------- (சின்ன)
  7. இந்த கார் ஒனக்கு ------------------ (பெரிய) (பெருசு is the alternate form 

Common in spoken Tamil)

  1. நாங்க ஊருக்கு ------------------- (புது) (புதுசு is common to all subjects)
  2. இந்த ஊர்லே ------------------- கொஞ்சப் பேர்தான் (நல்ல) (Use the human plural form

of the noun)

  1. இந்த பேனாவுலே ----------------- எனக்கு குடு (சின்ன)

 

  1. Fill in the blanks with the abstract nouns of mental state and translate the sentences. Note this sentence has a dative noun in the putative subject position.

 

Ex. இதுலே எனக்கு ரொம்ப --------------------------- (சந்தோஷம்)

      இதுலே எனக்கு ரொம்ப சந்தோஷம் 'I am very happy about this’

 

1.      ஒனக்கு இதுலே ஏன் ----------------------? (வருத்தம் ‘regret, grief’)

2.      எனக்கு இதுலே -------------------------- இல்லை (வருத்தமே)

3.      எல்லாருக்கும் ஒங்க மேலே --------------- (கோபம் ‘anger’)

4.      எங்க எல்லாருக்கும் தமிழ் படிக்க --------------------- (ஆசை ‘desire’)

5.      ஒனக்கு எல்லார் மேலேயும் -------------- (பிரியம் ‘liking, affection’)

 

 

6.      The noun itself and the non-nominative form of pronouns could be the genitive (or possessive case, equivalent to /of/ or /‘s/ in English). There is a suffix for the case, which is ஓட. This is optional. Use this case suffix in the sentences below with one or more of the genitive forms. Translate the sentences.

 

                        Ex. இது என் புஸ்தகம்                                                                                                              இது என்னோட புஸ்தகம் ‘This is my book’

 

1.      நீ என் தம்பி காரை பார்

2.      எங்க அப்பா தம்பி வீடு பெரிய வீடு

3.      எங்க தமிழ் பேராசிரியர் பேர் ஒனக்கு தெரியுமா?

4.      ஒனக்கு யார் பணம் வேணும்?

5.      யாருக்கும் பணத்து அருமை தெரியலை (அருமை ‘value’)          

                                                                                                     

7.      Given below are some adverb forms related to time, space and direction. Make adverb phrases using these adverbs with the verbs given in parentheses.  The adverb forms of spatial dimension have temporal dimension also, as their glosses will indicate. Translate the phrases.

 

Ex. முன்னாலே ‘in front of, ahead of’ (வா)  

      முன்னாலே வா ‘come in the front, come early’

 

               நாளைக்கு ‘tomorrow’ (பேசு)

              ராத்திரி  ‘at night’ (சாப்பிடு)

             வெளியே ‘out’ (போ)

   பின்னாலே ‘at the back’ (உக்கார்)

   கீழே ‘down’ (போடு ‘drop’)

   கெழக்கே ‘east’ (நட)

 

8.      Given below are some noun / adjective forms related to time, space and direction. Make adjectival compounds or phrases using them with the nouns given in parentheses. The forms of spatial dimension may have temporal dimension also.  Translate the compound and phrases you made

 

Ex. நேத்து ‘yesterday’ (பாடம்)

   நேத்துப் பாடம் ‘yesterday’s lesson’

 

இண்ணைக்கு (ராத்திரி)

மத்தியானம் (சாப்பாடு ‘meal’)

வெளி (நாடு)

முன் (வீடு)

பக்கம் (வீட்டுக்காரர்)

வடக்கு (பக்கம்)

 

9.      Make  sentences using the compound or phrase you made in (8).  Translate the sentences you made.

 

Ex. நான் நேத்துப் பாடத்தை இன்னும் படிக்கலை

                  I haven’t read yet yesterday’s lesson

 

 

 

10.  Make one sentence each using the phrases you made in (7). You don’t have to stick to the imperative form of the verb. You can use any inflected form of the verb. Translate the sentences you made.

 

                   Ex.  என்னை நல்லா பாக்க நீ முன்னாலே வரணும் ‘You must come to the

                                                                                                   front to see me well’

 

   Review Exercises

 

11.  The sentences below in the present tense express particularized or personally observed facts. Change them to express generalized or habitual or probable facts. Translate the sentences you made.

 

       Ex.   நாங்க வீட்டுலே தமிழ் பேசுறோம்                                                                                            நாங்க வீட்டுலே தமிழ் பேசுவோம்   ‘We speak Tamil at home’

 

1.      நாங்க தெனம் காப்பி சாப்பிடுறோம்

2.      என் தம்பி காலைலே தூங்குறான்

3.      அப்பா எப்போவும் சந்தோஷமா இருக்கார்

4.      சிகாகோவுலே தெனம் பனி பெய்யுது (பனி ‘snow’, பெய்   ‘shower’)

5.      சிகாகோ அமெரிக்காவுலே இருக்கு                

 

12.  Make the generalized, habitual and probable sentences you made in (11) into negative. Translate those sentences

 

                         Ex. நாங்க வீட்டுலே தமிழ் பேசமாட்டோம் ‘We don’t speak Tamil at home’

 

13.  The sentences below describe actions as true in the present. Tell that they are true in future. Translate both sentences

 

Ex.  நாங்க இந்த வருஷம் தமிழ் படிக்கிறோம் ‘We are studying Tamil this year’                   நாங்க இந்த வருஷம் தமிழ் படிப்போம் 'We will study Tamil this year’

 

1.      நீ சிகாகோவுலே வேலை செய்றியா?

2.      நாங்க இண்ணைக்கு ராத்திரி சினிமாவுக்கு போறோம்

3.      எங்க அம்மா போன்லே பேசுறாங்க (போன் ‘phone’)

4.      பூனை வெளியே ஓடுது

5.      நாளைக்கு எனக்கு பணம் வருது

 

14.  Tell that the actions described in the sentences you made in (13) are not true by using the negative. Translate those sentences.

 

                      Ex. நாங்க இந்த வருஷம் தமிழ் படிக்கமாட்டோம் ‘We will not study this year’

 

15. Make the future negative sentences you made in (14) into non-future negative sentences, Translate those sentences.

 

                   Ex. நாங்க இந்த வருஷம் தமிழ் படிக்கலை ‘We are not studying Tamil this year’

                    

                                                                       

Handouts

 

Adverbs of time, space and direction

 

Given below are the adverb forms related to time and direction. As adverbs, they modify verbs.

The forms in the second column are in formal spelling. They are given for information at

this point and not for use.

 

 

                                

இண்ணைக்கு                   இன்றைக்கு                       ‘today’

நாளைக்கு                          நாளைக்கு                         ‘tomorrow’

நேத்து                                  நேற்று                                 ‘yesterday’

 

காலைலே                         காலையில்                        ‘morning’

மத்தியானம்                    மத்தியானம்                      ‘afternoon’

சாயங்காலம்                   சாயங்காலம்                     ‘evening’

ராத்திரி                               ராத்திரி, இரவில்               ‘night’

 

வெளியே                            வெளியே                            ‘out’

உள்ளே                                உள்ளே                                 ‘in’

முன்னாலே                        முன்னாலே, முன்னால்  ‘to the front’

பின்னாலே                          பின்னாலே, பின்னால்  ‘to the back’

கீழே                                      கீழே                                      ‘down’

மேலே                                   மேலே                                 ‘up’

பக்கத்துலே                        பக்கத்தில்                           ‘nearby’

 

கெழக்கே                            கிழக்கே                   ‘east’

மேற்கே                               மேற்கே                   ‘west’

தெற்கே                               தெற்கே                   ‘south’

வடக்கே                              வடக்கே                  ‘north’

 

 

Adjectives of time, space and direction

 

 

Given below are the noun forms.  As nouns, they can combine with other nouns to make compounds or phrases. By modifying nouns, they function as adjectives. Note the difference in their forms with their corresponding adverb forms.

 

இண்ணைக்கு                    இன்றைக்கு                       ‘today’

நாளைக்கு                           நாளைக்கு                         ‘tomorrow’

நேத்து                                   நேற்று                                 ‘yesterday’

 

காலை                                   காலை                                 ‘morning’

மத்தியானம்                        மத்தியானம்                      ‘afternoon’

சாயங்காலம்                       சாயங்காலம்                    ‘evening’

ராத்திரி                                   ராத்திரி, இரவு                   ‘night’

 

வெளி                                   வெளி                        ‘outer’

உள்                                        உள்                            ‘inner’

முன்                                      முன்                          ‘front’

பின்                                       பின்                             ‘back’

கீழ்                                         கீழ்                             ‘low, down’

மேல்                                     மேல்                         ‘up, top’

பக்கம்                                   பக்கம்                      ‘side, nearby’

 

கெழக்கு                              கிழக்கு                                 ‘east’

மேற்கு                                 மேற்கு                                 ‘west’

தெற்கு                                  தெற்கு                                  ‘south’

வடக்கு                                 வடக்கு                                ‘north’