8. எங்கே இருக்கீங்க?

 

 

உரையாடல்  8                              எங்கே இருக்கீங்க?

 

 

ஜிம்   -  நான் வீட்டுக்கு போகணும்.  எப்படி போகலாம்?

 

ராஜா  -  நீங்க எங்கே இருக்கீங்க?

 

ஜிம்   -  நான் கோரிப்பாளையத்துலே இருக்கேன்.

 

ராஜா  -  அங்கே போக ரொம்ப பஸ் இருக்கு.  ஒண்ணாம் நம்பர் பஸ் அடிக்கடி

         வரும்.  நீங்க அதுலே போகலாம்.

 

ஜிம்   -  அந்த பஸ் எங்கே நிக்கும்?

 

ராஜா  -  நீங்க மங்கம்மா சத்திரத்துலே நில்லுங்க.  அங்கே அஞ்சு நிமிஷத்துக்கு

         ஒரு பஸ் வரும்.

 

ஜிம்   -  அது எவ்வளவு தூரத்துலே இருக்கு?  

 

ராஜா  -  ரொம்ப பக்கத்துலேதான் இருக்கு.  அதோ தெரியுதே, அதுதான்

         மங்கம்மா சத்திரம்.

 

ஜிம்   -  ஓ!   இவ்வளவு பக்கத்துலே இருக்கா?   ரொம்ப நல்லது.

 

ராஜா  -  ஒங்ககிட்டே பணம் இருக்கா?

 

ஜிம்   -  இருபது ரூபா இருக்கு.  போதுமா?

 

ராஜா  -  ஓ!  இதே அதிகம்.  கோரிப்பாளையத்துக்கு போக பத்து ரூபா

         போதும்.

 

ஜிம்   -  சரி.  போய்ட்டு வர்றேன்.

 

ராஜா  -  போய்ட்டு வாங்க.  நாளைக்கு பாப்போம்.

 

 

 

Glossary

கோரிப்பாளையம்                                                                ‘a neighborhood in Madurai’

ஒண்ணு                                     ஒன்று                                  ‘one’

அடிக்கடி                                                                                    ‘frequently, often’

மங்கம்மா சத்திரம்                                                               ‘name of a bus stop’

அஞ்சு                                         ஐந்து                                     ‘five’

நில்லு (நிக்க)                           நில்                                        ‘stop, stand’

ஒண்ணாம்                                ஒன்றாம்                             ‘one (ordinal), first’

நம்பர்                                          எண்                                       ‘number’

நிமிஷம்                                                                                    ‘minute’

தூரம்                                                                                           ‘distance’

தெரி (தெரிய)                                                                          ‘be visible’

பணம்                                                                                          ‘money’

ரூபா                                           ரூபாய்                                 ‘rupee (unit of Indian currency)

அதிகம்                                                                                       ‘more. excess’

 

Related words

நேரம்                                                                              ‘time (as in ‘there is time)’

மணி                                                                               ‘hour, o’clock, time (as in what is the time’)’

மணி நேரம்                                                                  ‘hour (as in ‘will be back in an hour’)’

நொடி                                                                              (in a) second, moment’

பொழுது                                                                          ‘time (as in ‘can’t pass time’)’

தடவை                                                                          ‘time (as in ‘how many times)’

ரெண்டு                                      இரண்டு                     ‘two’

மூணு                                         மூன்று                       ‘three’

நாலு                                           நான்கு                         ‘four’

ஆறு                                                                                  ‘six’

ஏழு                                                                                    ‘seven’

எட்டு                                                                                 ‘eight’

ஒம்பது                                       ஒன்பது                      ‘nine’

பத்து                                                                                  ‘ten’

மொதல்                                     முதல்                         ‘first’

கடைசி                                                                             ‘last’

 

 

Pronunciation

The first consonant in பஸ் is always pronounced voiced /b/, as in its source in English.

 

Spelling Variation

கடைசி                                       கடேசி

 

 

 Exercises

 

  1. The following statements and questions are not forceful enough in negating the act. Make them emphatic. Translate the emphasized sentences. Help: If the grammatical units of the inflected verb are not added to the infinitive form of the verb and do not stand alone, the infinitive form is created and the  emphatic form  is /ஏ/ is added to that infinitive  and the full inflected verb is repeated. (வராது – வரவே வராது)

 

Ex. குமார் நாளைக்கு வரமாட்டான்.

   குமார் நாளைக்கு வரவே மாட்டான்.

   Kumar will not come at all tomorrow

 

  1. குமார் காபி சாப்பிடமாட்டான்.

 

  1. குமார் சாயங்காலம் தூங்கமாட்டான்.

 

  1. நீங்க சினிமாவுக்கு போகமாட்டீங்களா?

 

  1. நீ அவளை பாக்கவேண்டாம்.

 

  1. நீ என்னை பாக்கக் கூடாது..

 

  1. இந்த பாலை நான் குடிக்கலை.

 

  1. குமார் இதை அப்பாகிட்டே சொல்லலையா?

 

  1. நீ யாருக்கும் பணம் குடுக்கலை.

 

  1. தம்பிகிட்டே பணம் இல்லை.

 

  1. தம்பிகிட்டே பணம் இருக்காது.

 

  1. இந்த பூனை பால் குடிக்காது.

 

  1. எங்க நாய் கடிக்காது. (கடி ‘bite’)

 

  1. அப்பாவுக்கு கோபம் வராது.

 

  1. நீ அவளை பாக்காதே.

 

  1. நீங்க ஓட்டலுக்கு போகாதீங்க

 

 

 

 

 

  1. The following statements are not forceful enough in negating. Make them forceful by emphasizing the noun before the verb in the sentences and translate them

 

            Ex. நான் காபி குடிக்கமாட்டேன்                                          

                  நான் காபியே குடிக்கமாட்டேன் 

                  ‘I don’t drink coffee at all’ 

                                       

1 .நான் காபி குடிக்கலை

2. குமார் புஸ்தகம் வாங்கலை

                       3.  மாலா வீட்டுக்கு போகலை

                       4. அப்பா எனக்கு பணம் குடுக்கமாட்டார்

                       5. எங்க அம்மா ஓட்டலுக்கு போகமாட்டாங்க

                       6. நாங்க நாளைக்கு சிகாகோவுலே இருக்கமாட்டோம்

                      7. இந்த பூனை பால் குடிக்காது

                      8. அவகிட்டே பணம் இருக்காது

                      9. என்கிட்டே பேனா இல்லை

                    10. இது என் பேனா இல்லை

 

 

 

  1. The following sentences have -உம் with a noun to mean ‘also’. Change

-உம் to -ஏ and give the difference in the meaning by translating both sentences’

 

Ex. நானும் இதை சாப்பிடுறேன் ‘I will also eat this’

   நானே இதை சாப்பிடுறேன் ‘I will myself will eat this’

   

 

1.      நானும் இண்ணைக்கு வகுப்புக்கு போகலை

 

2.      எனக்கு வேலையும் இல்லை

 

3.      நான் ஒனக்கும் பணம் குடுக்குறேன்

 

4.      இதுவும் நல்லா இருக்கு

 

5.      நீ பாலும் குடி

 

6.      ஒனக்கு பாலும் வேண்டாமா?

 

7.      ஒனக்கும் எல்லாம் வேணுமா?

 

8.      அம்மா ஒன்கிட்டேயும் கொஞ்ச நாள் இருக்கட்டும்

 

9.      என் தம்பி நல்லாவும் படிக்கலை

 

10.  அவன் வகுப்புக்கு அடிக்கடி வரவும் மாட்டான்

 

  1. Change the quantifying numerals in the sentences below into ordinal numerals. You can use –ஆம் or –ஆவது to make ordinal numerals. Note that the accusative noun with an ordinal numeral takes the accusative case suffix. Translate both sentences

     

Ex. எனக்கு ரெண்டு பழம் குடு 'Give me two fruits'

எனக்கு ரெண்டாவது பழத்தை குடு  ‘Give me the second fruit

                     1.   நான் மூணு தடவை இந்த படத்தை பாக்கப் போறேன் [தடவை 'times']

                     2.      இங்கே ரெண்டு வகுப்புலே தமிழ் சொல்லிக்குடுக்குறாங்க (சொல்லிக்குடு ‘teach’)

3.      இந்த பள்ளிக்கூடத்துலே பத்து வகுப்பு இருக்கு (பள்ளிக்கூடம் ‘school’)

4.      எனக்கு இந்த தெருவுலே ஒரு வீடு பிடிக்குது

5.      நாலு பையன்க இந்த வேலையை செய்யலாம்

 

 

  1. There are different dimensions of location. They are given in parentheses after the sentences below. Fill up the blanks with them and translate the sentences.

                            நமக்கு ---------------- சண்டை போடக் கூடாது (உள்ளே 'in between')

                            நமக்குள்ளே சண்டை போடக் கூடாது   ' (We) should not fight between / among ourselves'

 

1.      நான் புஸ்தகத்தை பைக்கு-------- வைக்கப் போறேன். (உள்ளே ‘inside/into’)

[வை ‘keep’]

2.      நாம வீட்டுக்கு-------- போக வேண்டாம். (உள்ளே ‘inside / into’)

 

3.      மேசைக்கு--------- என்ன இருக்கு?  (மேலே ‘above / over’)

 

4.      மேசைக்குக்----------- தரை இருக்கு. (கீழே ‘under’) [தரை ‘floor’]

 

5.      எனக்குக்------ பத்து பேர் வேலை செய்றாங்க. (கீழே ‘under’)

 

6.      பேனா பெட்டிக்கு-------- கெடக்கு. (அடிலே ‘under’ / at the bottom of’)

      [பெட்டி ‘box’, கெட ‘be lying, be]

7.      எங்க வீட்டுக்கு---------- ஒரு தெரு போகுது. (முன்னாலே ‘in front of’)

[தெரு ‘street’]

8.      ஒங்க தெரு எங்க வீட்டுக்கு---------- வரும். (முன்னாலே ‘ahead of  / earlier

        than’)

9.      நீ அப்பாவுக்கு---------- போ. (முன்னாலே ‘in front of / ahead of’)

 

10.  நீ யாருக்கு---------- இண்ணைக்கு பேசப் போறே? (முன்னாலே ‘in front of / ahead of’)

 

11.  ஒனக்கு--------- எத்தனை பேர் பேசப் போறாங்க? (முன்னாலே ‘in front of / ahead of’)

 

12.  நான் பத்து மணிக்கு------------- தூங்கமாட்டேன். (முன்னாலே ‘before’)

 

13.  நான் அஞ்சு மணிக்கு--------- பேராசிரியரை பாக்கணும். (உள்ளே ‘within’)

 

14.  இந்த பஸ் எங்க காலேஜுக்கு--------------- போகும். (பின்னாலே ‘behind’)

 

15.  எங்க வீட்டுலே எனக்குப் ------------- பிள்ளை இல்லை. (பெறகு ‘after’)

[பிள்ளை ‘child’]

16.  நீ ராத்திரி பத்து மணிக்கு-------- வெளியே போகாதே. (பெறகு ‘after’)

 

17.  எங்க அம்மா காலைலே அஞ்சு மணிக்கு------ தூங்கமாட்டாங்க. (மேலே

  ‘beyond’)

18.  நான் ஒனக்கு பத்து ரூபாய்க்கு----------- ஒரு பைசா குடுக்கமாட்டேன்.

        (மேலே ‘above and beyond’) [பைசா ‘cent’]

 

19.  எங்களுக்கு------------ சண்டை இல்லை. (உள்ளே ‘amongst, between’)  

[சண்டை ‘quarrel’]

20.  எனக்கும் ஒனக்கும் -------- மேசையை போடு. (எடைலே ‘in between’)

 

 

  1. Choose the appropriate case marker for the Goal with the noun given in parentheses and fill in the blanks in the following sentences. The translations will help you choose.

Ex.

நான்  --------------- ஒரு வேலை குடுக்குறேன் (நீ)

நான் ஒனக்கு ஒரு வேலை குடுக்குறேன்

'I will give you a job'

 

1. நான் -------------------------- பணம் குடுக்கிறேன். (ராஜா)

             I will give Raja money

 

2. நான் --------------------------- பணம் குடுக்கிறேன். (நீ)

     I will give you money

 

3. நான் ஒன் ------------------- பணம் குடுக்கிறேன். (தம்பி)

    I will give your younger brother money

 

4. அப்பா -------------------- புஸ்தகம் வாங்குவார். (நான்)

     Father will buy me a book

 

5. நீங்க எப்ப அம்மா ------------------- போறீங்க? (வீடு)

           When are you going to mother’s house (place)?

 

6. நான் ------------------------ போறேன். (அம்மா)

    I am going to (my) mother

 

7. நான் எனக்கு புஸ்தகம் வாங்க --------------- பணம் குடுக்கிறேன். (நீ)

     I will give you money (leave money with you) to buy me a book.

 

8. நீ எங்க ---------------------- பேசு. (அப்பா)

     You speak to (with) our father

 

9. நீ என் ------------------ ஒரு கதை சொல்லு. (தங்கச்சி)

     You tell my younger sister a story

 

10. ஒன் கஷ்டத்தை ------------------- சொல்லாதே. (யார்)

       Don’t tell your problems to (share your problems with) anyone

 

           7. Wherever you filled in the blanks in (6) with a noun with (உ)க்கு , change (உ)க்கு  with கிட்டே. Give to these sentences appropriate English sentences which express the same meaning.

               Ex

                 நான் ஒன்கிட்டே ஒரு வேலை குடுக்குறேன்  'I will give you some work'

 

8. What would be the subject in English sentences corresponding to the following sentences in Tamil is left blank? Fill in the blank with the appropriate form of the noun given in parentheses. Translate the sentences filled in.

            Ex.

           -------------------- ஒண்ணும் வேண்டாம் (நான்)

          எனக்கு ஒண்ணும் வேண்டாம் 'I don't want anything'

 

  1.  ------------- ஒரு புஸ்தகமும் பேனாவும் வேணும்.  (நான்)

 

     2.  ------------------- புஸ்தகம் வேண்டாம்?  (யார்)

 

     3. ----------------------------- நாளைக்கு வர முடியாது. (எங்க அம்மா)

 

     4. இங்கே -------------------------- தமிழ் பேச வரும். (எல்லாரும்)

 

          5. எங்க வீட்டுக்கு வர ------------------ நேரம் இருக்கா? (நீ)

 

6.      எங்க வகுப்புலே ---------------------------- வேலை கெடைக்கலை. (மூணு பேர்)

 

7.      -------------------- தலை வலிக்குது. (அவ)

 

8.      ------------------------ இன்னும் தலைவலி இருக்கு. (அவன்)

 

9.      ---------------------- நேத்து ராத்திரி தலைவலி. (எங்க ரெண்டுபேரும்)

 

10.  ----------------------- அஞ்சு மணிக்கு ஒரு வேலை இருக்கு.  (நான்)

 

11.  --------------------- ரொம்ப குளுருது. (இந்த ஊர்)

 

12.  --------------- வீடு இருக்கு, கார் இருக்கு, எல்லாம் இருக்கு. (அவர்)

 

13.  ---------------- என்ன இல்லை? (அவர்)

 

14.  எங்க -------------- என் தம்பிமேலே கோபம். (அப்பா)

 

15.  எங்க ----------------- எப்பவும் கோபம் வராது. (அம்மா)

 

16.  ---------------- ஒரு தம்பி இருக்கான். (குமார்)

 

17.  இந்த ------------------ ஒரு கால் இல்லை. (நாய்)

 

18.  இந்த வகுப்புலே --------------- பாட தெரியுமா? (யாராவது)

 

19.  எங்க --------------------- கொஞ்சம் தமிழ் புரியும். (மாமா)

 

20.  --------------- தெனம் தோசை சாப்பிட பிடிக்கும். (நாங்க)

 

 

9.  Fill in the right form of the noun in the slot which is a subject in English. The meaning of the sentences given will help you choose the right form. The choice would depend whether the ‘subject’ is an actor, a possessor or an experiencer

Ex.

--------------------------- ஏன் என்மேலே கோபம்? 'Why are you angry at me'?

ஒனக்கு ஏன் என்மேலே கோபம்?

  1. ---------------------------- வேலைக்கு போறேன். ‘I am going to work’

 

  1. ------------------------- வேலை இருக்கு. ‘I have work’

 

  1. -------------------- ஒரு தம்பி இருக்கான். ‘I have a younger brother’

 

  1. ------------ என் தம்பியை வெறுக்கிறா. ‘She hates my younger brother’ (வெறு (வெறுக்க) ‘hate’)

 

  1. --------------- என் தம்பிமேலே வெறுப்பு இருக்கு. (வெறுப்பு ‘hatred’) ‘She has hatred for my brother’

 

  1. ---------------- ரொம்ப பணம் வருது. ‘You get lot of money’

 

  1. --------------- எனக்கு பணம் அனுப்புறார். ‘Father sends me money’ (அனுப்பு (அனுப்ப) ‘send’)

 

  1. -------------------- கோபம் வருது. ‘Father gets angry’ (கோபம் ‘anger’)

 

  1. ------------------ கோபப்படுறார். ‘Father gets angry’ (கோபப்படு (–பட) ‘get angry’

 

  1. --------------------- என்மேலே கோபம் இருக்கு. ‘Father has anger against me’

 

  1. ----------------------- குளுருது. ‘All (everything) are (is) cold’

 

  1. ------------------- குளுருது. ‘The floor is cold’ (தரை ‘floor’)

 

 

10. Fill in the blank in the frame sentence below with nouns denoting location using the nouns in parentheses. The model sentence is an example. Translate the sentences.

Ex. ஒன் தமிழ் புஸ்தகம் ------------------------- இருக்கு (ஊர்)

            ஒன் தமிழ் புஸ்தகம் ஊர்லே இருக்கு

    ' Your Tamil book is in your home town'

 

(கடை, வகுப்பு, கார், பை, ஒன் கை, வீடு, தோட்டம், சிகாகோ, மதுரை, ராஜா, பேராசிரியர், என் தம்பி, எந்த எடம், யார், எங்கே)

(Help: When the word itself is inherently locative meaning like அங்கே, the locative case  –லே is not added.  Location with animate nouns is indicated by -கிட்டே)

 

11. Make the sentences you made in (10) into questions using -ஆ.

     (Help: You cannot make a question sentence with –ஆ, if the sentence has a question  

      word beginning with எ– or யா-. Leave them out)

 

 Ex. ஒன் தமிழ் புஸ்தகம் ஊர்லே இருக்கா?

 

 

12. Make the sentences you made in (10) into questions which question the location (i.e. contrast one location with other locations).

 

Ex.  ஒன் தமிழ் புஸ்தகம் ஊர்லேயா இருக்கு?

             Is your Tamil book in your home town?

 

13.The locative free forms (post-positions) can be added directly to nouns in their nominative or non-nominative forms. Fill in the blanks with the locative forms in parentheses. Translate the sentences. (These structures do not have temporal meaning like the same structures with nouns in the dative case –க்கு)

 

 Ex. எங்க வீட்டு ---------- ஒரு மரம் இருக்கு (முன்னாலே)

    எங்க வீட்டு முன்னாலேஒரு மரம் இருக்கு

    ‘There is a tree in front of our house’

 

  1. அம்மா படத்தை மேசை-------------- வை (மேலே) [வை ‘place, keep’]

 

  1. ராஜா ஏன் மேசை -----------நிக்கிறான்? (மேலே) [நில்லு 'stand’]

 

  1. அப்பாவுக்கு என் ------------- கோபம் வராது (மேலே)

 

      4.  ஒன்----------------- எத்தனைபேர் வேலை பாக்குறாங்க? (கீழே)

 

 5.   என் நாய் என் கால்------------------ இருக்கும் (அடிலேயே)

 

  1. அப்பா ------------------------ நாங்க பேசமாட்டோம் (முன்னாலே)

 

  1. நீ அவ  ---------------------போகாதே (பின்னாலே)

 

  1. நீ அந்த மரத்து------------- நில்லு. நான் கொஞ்ச நேரத்துலே வர்றேன் (பக்கத்துலே)

 

  1. நீ வீட்டு ----------------- போ; நான் பின்னாலேயே வர்றேன் (பக்கம்)

 

  1. இந்த மேசையை என் --------------------  ராஜா --------------------போடு (முன்னாலே)

 

 

 

 

Handouts

 

1.Dimensions of Location (Space and Time)

 

The following words refer to commonly used location in space and time. Of the pairs of words, the first is a noun or an adjective modifying a noun and the second is an adverb or post-position modifying a verb. Note that the noun form itself could be an adverb with some words.

 

Ex.

முன்வீடு ‘front house, house in the front’

வீட்டுமுன்னாலே ‘in front of the house’

 

Space

 

முன் ‘front, front part of’                            பின் ‘back, back part of’

முன்னாலே ‘in front of , ahead of’        பின்னாலே ‘at the back of, behind’

 

மேல் ‘upper, upper part of’’                      கீழ் ‘lower, lower part of’

மேலே         ‘above, up’                              கீழே ‘below, down’

 

உள் ‘inner’                                                    வெளி ‘outer’

உள்ளே ‘inside’                                           வெளியே ‘outside’

 

பக்கம் ‘side, near’

பக்கத்துலே, பக்கம் ‘by  the side of, close by’

(எடது பக்கம் ‘left side’, வலது பக்கம் ‘right side’, முன்பக்கம் ‘front side’, பின்பக்கம் ‘back side’)

 

Other spatial nouns, which can be used as adverbs by adding the locative case marker -லே include:

 

அடி ‘bottom’

உச்சி ‘top’

ஒரம் ‘edge’

and others

 

 

2.Time

 

மணி ‘time, hour’

மணிக்கு ‘at the hour’

 

நேரம் ‘time’

நேரத்துலே, நேரத்துக்கு ‘in time’

 

மணி நேரம் ‘time (duration), hour’

மணி நேரத்துலே ‘in time, in hour’, மணி நேரத்துக்கு, மணி நேரம் ‘for time, for hour’

 

தேதி ‘date’

தேதிக்கு, தேதிலே, தேதி ‘on date’

 

நாள் ‘day’

நாள்லே, நாள் ‘in day’

 

வாரம் ‘week’

வாரத்துலே, வாரம் ‘in week’

 

மாசம் ‘month’

மாசத்துலே, மாசம் ‘in month’

 

வருஷம் ‘year’

வருஷத்துலே, வருஷம்  ‘in year’

 

அடுத்த ‘next’

போன ‘last’

 

இண்ணைக்கு ‘today, on today’

நாளைக்கு ‘tomorrow, on tomorrow’

நேத்து ‘yesterday, on yesterday’

முந்தாநாள் ‘day before yesterday, on day before yesterday’

நாளைமறுநாள் ‘day after tomorrow, on day after tomorrow’

 

 

3.Days of the week

 

திங்கக்கெழமை              திங்கள்கிழமை                Monday

செவ்வாக்கெழமை        செவ்வாய்க்கிழமை       Tuesday

புதங்கெழமை                   புதன்கிழமை                     Wednesday

வியாழக்கெழமை          வியாழக்கிழமை             Thursday

வெள்ளிக்கெழமை         வெள்ளிக்கிழமை           Friday

சனிக்கெழமை                 சனிக்கிழமை                     Saturday

ஞாயித்துக்கெழமை      ஞாயிற்றுக்கிழமை        Sunday

 

கெழமை                              கிழமை                                day (of the week)

தேதி                                                                                        date

 

The first part of the days of the week can occur alone and stand for the day of the week (வெள்ளி நல்ல நாள்). But for some of them, the stand alone forms have slightly different spellings, as given below. They are also names of a planet or the satellite of a planet. In the last word for Sunday, the first part of the word is in its combination form, i.e.று is doubled to ற்று.

.

4.Names of Planets and Satellites

 

திங்கள்                   Moon ( நெலா is the commonly used word for this)

செவ்வாய்              Mars

புதன்                         Mercury

வியாழன்                Jupiter

வெள்ளி                   Venus

சனி                           Saturn

ஞாயிறு                   Sun (சூரியன் is the commonly used word for this)

 

5.Division of Time

நாள்                                      day                               

வாரம்                                   week

மாசம்                                   month

வருஷம்                              year

 

6.Verbs and Nouns of taste and state relating to food

 

 

இனி (இனிக்க) ‘be sweet’                    இனிப்பு ‘sweetness’

கச (கசக்க) ‘be bitter’                             கசப்பு ‘bitterness’

புளி (புளிக்க) ‘to be sour’                      புளிப்பு ‘sourness’

கரி (கரிக்க) ‘be salty’                             கரிப்பு ‘saltiness’

தொவர் (தொவக்க) ‘be astringent’    தொவப்பு ‘astringent taste’

(FT துவர்                                                    துவர்ப்பு)

 

பசி (பசிக்க) ‘be hungry’                         பசி ‘hunger, appetite’

தவி (தவிக்க) ‘be thirsty’                       தாகம் ‘thirst’

 

7.Verbs and Nouns of Weather and Seasons

 

குளிர் (குளிர) ‘be cold’                         குளிர் ‘coldness, being cold’

வெயில் அடி (அடிக்க) ‘sun shine,  வெயில் ‘sun shine, being hot’

  be hot’                      

சுடு (சுட) ‘be hot’                             சூடு ‘heat, being hot’ (with reference to objects like coffee’)

தகி (தகிக்க)   ‘be very hot’             தகிப்பு ‘excessive heat’

வேகு (வேக) ‘be hot’                      வெக்கை ‘heat, being hot’

வேர்(வேர்க்க) ‘sweat’                    வேர்வை ‘sweat’

புழுங்கு (புழுங்க) ‘be sultry’         புழுக்கம் ‘being sultry’

 

மழை பெய் (பெய்ய) ‘rain’              மழை ‘rain’

பனி பெய் ‘snow’                                 பனி ‘snow, dew’

ஒறை (ஒறைய) ‘freeze, ferment (like yoghurt)’

FT: உறை (உறைய)

காத்து அடி (அடிக்க) ‘wind blow’     காத்து ‘wind’

 

 

8. Seasons

வெயில் காலம் / கோடை காலம்  ‘hot season, summer’ (Mid-March – Mid-August)

மழை காலம்                                          ‘rainy season, monsoon’ (Mid-October – Mid-December)

குளிர்காலம்                                              ‘cold season, winter’ (Mid-November – Mid-March)

பனிக் காலம்                                             ‘snow season, winter’ (Mid-December – Mid-February)

காத்துக் காலம்                                        ‘windy season’ (Mid-August – Mid-September)

(FT காற்றுக் காலம்)