9. காலேஜ் இல்லை

 

உரையாடல்  9                              காலேஜ் இல்லை

 

 

ராஜா  -  வாங்க.  ரொம்ப நாளா இந்த பக்கம் வரலையே,  ஏன்?

 

ஜிம்   -  பத்து நாளா ஊர்லே இல்லை.  அதுனாலேதான் வரமுடியலை.

 

ராஜா  -  இப்போ ஒங்களுக்கு காலேஜ் இல்லையா?

 

ஜிம்   -  ஆமா.  இருபதாம் தேதிலேருந்து ரெண்டாம் தேதி வரைக்கும் கிறிஸ்மஸ்

         லீவு.

 

ராஜா  -  ஒங்களுக்கு ஒங்க அப்பாகிட்டேருந்து கிறிஸ்மஸ் பரிசு வருமா?

 

ஜிம்   -  ஆமா.  ஒவ்வொரு வருஷமும் ஒரு பரிசு அனுப்புவார்.

 

ராஜா  -  என்ன பரிசு அனுப்புவார்?

 

ஜிம்   -  அநேகமா புஸ்தகம்தான் அனுப்புவார்.

 

ராஜா  -  அது அமெரிக்காவுலேருந்து இங்கே வர எவ்வளவு நாள் ஆகும்?

 

ஜிம்   -  விமானத் தபால் ரெண்டு வாரம் எடுக்கும்.  கூரியர்லே அஞ்சு நாள் ஆகும்.

 

ராஜா  -  அவராலே இங்கே வர முடியாது  ஒங்களாலே அங்கே போக முடியாது.

         அதுனாலே தபால்லேதான் அனுப்பணும்.

 

ஜிம்   -  நீங்க கிறிஸ்மஸ் லீவுலே வெளியே எங்கேயும் போகலையா?

 

ராஜா  -  இல்லை.  இங்கே ஒரு வாரமா நல்ல மழை.  வெளியே போக முடியலை.

 

ஜிம்   -  எங்க நாட்டுலே கிறிஸ்மஸ் சமயம் பனி பெய்யும்.  இங்கே மழை

         பெய்யுது.

 

ராஜா  -  தம்பி வீட்டுக்குள்ளேருந்து என்னை கூப்பிடுறான்.  கொஞ்சம் இருங்க.

 

ஜிம்   -  எனக்கும் வேலை இருக்கு.  நாளைக்கு பாக்கிறேன்.

 

Glossary

அதுனாலே                      அதனாலே, அதனால்  ‘so, because of it’

முடி (முடிய)  ‘be able to’

காலேஜ்                         கல்லூரி   ‘college’

கிறிஸ்மஸ்               கிறிஸ்துமஸ் ‘Christmas’

பரிசு ‘gift. Prize’

ஒவ்வொரு ‘every’

வருஷம் ‘year’

அனுப்பு (அனுப்ப) ‘send’

அநேகமா ‘mostly’

அமெரிக்கா ‘America, USA’

ஆகு (ஆக) ‘take, come to be’

விமானம் ‘air plane’

தபால் ‘mail, post’

கூரியர் ‘courier’

லீவு ‘leave, holiday’

மழை ‘rain’

நாடு  ‘country’

வாரம் ‘week’

பனி ‘snow’

பெய் (பெய்ய) ‘fall, pour’

கூப்பிடு (கூப்பிட) ‘call, invite’

 

Related words

பள்ளிக்கூடம் ‘school’

யுனிவர்சிட்டி                   பல்கலைக்கழகம் ‘university’

அநேகம் ‘most of’

பெரும்பாலும் ‘mostly’

ஒருவேளை ‘perhaps’

வெயில் ‘sun shine’

காத்து     காற்று ‘wind’

 

 

Pronunciation

-ம் in -ஆம் is pronounced -ந் before தேதி. Alternatively, it could nasalize the preceding vowel. -ன் in the oblique form of pronouns is pronounced ங் before கிட்டே: அவன்கிட்டே > அவங்கிட்டே. The vowel preceding the final –ன் in this case is slightly fronted and raised as it does when nasalized before pause: அவெங்கிட்டே

 

 As with the locative suffix -லே, -லேருந்து varies with -உலேருந்து as the ablative suffix. In fast pronunciation, it is commonly pronounced -லே. அமெரிக்காவுலேருந்து / அமெரிக்காலேருந்து, வீட்டுலேருந்து / வீட்லேருந்து, கண்ணுலேருந்து / கண்லேருந்து.

Recall the note on the pronunciation of ஐ and லே. Similarly, -லை of the negative and –ஆலே of the instrumental case are pronounced as short vowels. வரலை is pronounced as வரல / வரலெ; அவனாலே as அவனால / அவனாலெ.

 

In fast speech, கிட்டே may be pronounced as -ட்டே: அப்பாகிட்டே / அப்பாட்டே; அப்பாகிட்டேருந்து / அப்பாட்டேருந்து

 

இ in the middle syllables of a word tend to be pronounced as a centralized உ, கூப்பிடு ‘call’ is pronounced as கூப்புடு; குதிரை ‘horse’ as குதுரை

 

 

Exercises

 

 

  1. Answer in the positive the following questions in full sentences.  Note that in natural conversation, you can answer only with the final verb. Give your answers in English in full sentences.

 

Ex. ஒனக்கு வீடு வாங்க முடியுமா?

   எனக்கு வீடு வாங்க முடியும்

   ‘I can buy a house’

   (முடியும் ‘(I) can’)

 

      1.   நீ நாளைக்கு எங்க வீட்டுக்கு வர முடியுமா?

 

 

  1. நீ இந்த வேலையை செய்ய மதுரைக்கு போக முடியுமா?

 

 

  1. ஒங்க அப்பா எனக்கு ஒதவி செய்ய முடியுமா? (ஒதவி செய் ‘help’)

 

 

  1. ஒன் தம்பிக்கு தமிழ்லே பேச முடியுமா?

 

 

  1. எல்லாருக்கும் அமெரிக்காவுக்கு போக முடியுமா?

 

 

  1. ஒன்னாலே இப்ப வர முடியுமா?

 

 

  1. ஒன்னாலே இப்ப நடக்க முடியுதா?

 

 

  1. ஒன்னாலே பத்து மணி நேரம் தூங்க முடியுதா?

 

 

  1. அவனுக்கு பேச முடியுதா?

 

 

  1. நீங்க இந்த சத்தத்துலே தூங்க முடியுதா? (சத்தம் ‘noise’)

 

 

 

2. Answer the above questions in the negative and translate them.

 

Ex. எனக்கு வீடு வாங்க முடியாது

   ‘I cannot buy a house’

 

 

3. How will you say these sentences in Tamil?

 

1.      We can come to the class at 10.30 in the morning.

 

2.      I cannot sleep for ten hours every day.

 

3.      Can you tell this to the father?

 

4.      My mother can read Tamil

 

5.      Raja can go to New York to buy Tamil books

 

6.      There cannot be 100 dollar with her / She cannot have 100 dollars with her

 

7.      How can be your book with her? / How can she have your book?

 

8.      Is it possible to go to New York in one hour?

 

9.      The cat is now able to walk.

 

10.  I still have pain; I am not able to walk.

 

 

 

4. Translate the pairs of sentences below in which one has an adverb form and the other an adjective form.

 

1.  அவன் நல்லா வேலை செய்றான்.

    அவன் நல்ல வேலை செய்றான்.

 

 

2. அவ கதையை தப்பா சொல்றா.

அவ தப்பான கதையை சொல்றா.

 

 

3. டி.வி.லே தமிழை மோசமா பேசுறாங்க.

   டி.வி.லே மோசமான தமிழ் பேசுறாங்க.

 

 

4. அவ ஒரு தமிழ் பாட்டை சோகமா பாடுறா.

   அவ ஒரு  சோகமான தமிழ் பாட்டை பாடுறா.

 

 

5. நான் காலைலே சூடா காபி குடிப்பேன்.

  நான் காலைலே சூடான காபி குடிப்பேன்.

 

 

6. எங்க அப்பா பெருசா ஒரு கார் வாங்கப்போறார்.

   எங்க அப்பா  ஒரு பெரிய கார் வாங்கப்போறார்.

 

 

7. நான் ஒன்கிட்டே அதிகமா பணம் கேக்கமாட்டேன்.

   நான் ஒன்கிட்டே அதிக பணம் கேக்கமாட்டேன்.

 

 

8. எனக்கு கொஞ்சமா தண்ணி குடு.

   எனக்கு கொஞ்ச தண்ணி குடு.

 

 

9. எனக்கு பணம் ரொம்ப குடு.

   எனக்கு ரொம்ப பணம் குடு.

 

 

10. யார் பேனா கறுப்பா இருக்கு?

    யார் பேனா கறுப்பு பேனா?

 

(Help: தப்பு ‘being wrong’, மோசம் ‘being bad’, சோகம் ‘being sad melancholy’, சூடு ‘being hot’, பெருசு ‘being big’)

 

5. –ஆ is more than an adverbial suffix in its strict sense of qualifying a verb. It connects a noun with a verb to mean ‘as, into, like etc.’ Translate the following sentences with the appropriate meaning of –ஆ.

 

 

  1. கணேசன் இந்த படத்துலே ராஜாவா நடிக்கிறான்.

 

 

  1. கணேசன் மந்திரியா ஊருக்கு வர்றான்.

 

 

   3.  என் வார்த்தை  தப்பா போகாது.

 

 

  1. ஒன்னோட அம்மாவா நான் ஒனக்கு இதை சொல்றேன்.

 

 

  1. நீ எனக்கு நூறு டாலர் பணமா குடு.

 

 

  1. நீ எனக்கு நூறு டாலர் கடனா குடு.

 

 

     7.   இந்த வகுப்பை ரெண்டா பிரிக்கணும்.

 

 

  1. நான் வேலையா இருக்கேன்.

 

 

   9. பால் தண்ணியா இருக்கு.

 

 

   10. இட்லி பூவா இருக்கு.

 

(Help:  ராஜா ‘king’, மந்திரி ‘minister’, வார்த்தை 'word', கடன் ‘loan’, பிரி divide, separate’, பூ ‘flower (metaphor for soft)’

 

 

  1. The instrumental case suffix is –ஆலே, which marks the instrument with which things are done. The instrumental sense extends to indicate the cause for doing things. Fill in the blanks in the sentences below using the nouns in parentheses using this case suffix. The sentences may give the sense of instrument or cause. Translate them. Note: The alternate case marker –னாலே is common in the causal sense, particularly with inanimate nouns (sentences 9 and 10 below).

 

Ex. யாரையும் ................. அடிக்கக் கூடாது. (கை)

   யாரையும் கையாலே அடிக்கக் கூடாது.

   (You) should not hit anyone with (your) hand

 

1.      ஆப்பிளை இந்த ............. வெட்டு. (கத்தி ‘knife’) [வெட்டு ‘cut’]

 

2.      ஜன்னலை ................. மூட வேண்டாம். (துணி ‘cloth’)

 

3.      இங்கே ..................... வீடு கட்டுறாங்க. (கல் ‘stone’) [கட்டு ‘build’]

 

4.      நீ அதை ஒன் .................. பாக்கணும். (கண் ‘eye’)

 

5.      …………… பத்து மணிக்கு வர முடியுமா? (நீ)

 

6.      ....................... இப்படி செய்ய முடியும்? (யார்)

 

7.      .................... எதுவும் முடியும். (நாம)

 

8.      ....................... எல்லாருக்கும் கஷ்டம். (நீங்க)

 

9.      .................... யாரும் வகுப்புக்கு வரலை. (மழை)

 

10.  .................  யாரும் வகுப்புக்கு வரலை? (எது)

 

  1.  Fill in the blanks using the nouns in parentheses as the source of action (i.e. the beginning of action in space or time) with their appropriate case form (-லேருந்து or –கிட்டேருந்து or -ருந்து). Translate the sentences.

 

Ex. நான் -------------------- ஒண்ணும் சாப்பிடலை (ரெண்டு மணி)

   நான் ரெண்டு மணிலேருந்து ஒண்ணும் சாப்பிடலை

   ‘I haven’t eaten anything since two o’clock’

 

  1. நாங்க ---------------------வகுப்புக்கு நேரே போறோம். (வீடு) (Help: நேரே‘straight’)

 

  1. நாங்க --------------------வீட்டுக்கு நேரே போறோம். (வகுப்பு)

 

  1. ஒனக்கு படிக்க பணம் ---------------- வருது? (எங்கே)

 

      4.      நான்  ----------------------- ஒண்ணும் சாப்பிடலை. (காலைலே)

 

 

  1. நேத்து ---------------------  எனக்கு தலை வலிக்குது (ராத்திரி) (Help:வலி ‘ache’)

 

 

  1. அடுத்த ------------------------  எங்களுக்கு வகுப்பு இல்லை. (வாரம்)

 

 

  1. -------------------------- கடிதம் வர ரெண்டு வாரம் ஆகுது. (இந்தியா) (Help: கடிதம் ‘letter’)

 

 

  1. -------------------------- எனக்கு இன்னும் பணம் வரலை. (அப்பா)

 

 

  1. ----------------------- எல்லாருக்கும் என்மேலே கோபம். (அப்பா)

 

  1.  என் தங்கச்சி -------------------------------- பாடுறா. (நியு யார்க்)

 

 

  1. Fill in the blanks with the infinitive form of the verb given in parentheses, which gives the meaning of purpose. Then replace the infinitive with nominal form of the verbs giving the same meaning. Translate both sentences.

 

Ex.  நேத்து எனக்கு சினிமாவுக்கு ---------------- பிடிக்கலை (போ)

    நேத்து எனக்கு சினிமாவுக்கு போக பிடிக்கலை                                           

    ‘I didn’t like to go to the movie yesterday’

    நேத்து எனக்கு சினிமாவுக்கு போறதுக்கு பிடிக்கலை

    ‘I didn’t like going to the movie yesterday’

 

 

  1. எனக்கு எட்டு மணிக்கு வீட்டுலே ------------------- ஆசை. (இரு ‘be’)

 

  1. ஒனக்கு ராத்திரி தனியா வெளியே ------------------- பயமா? (நட ‘walk’)

 

  1. பேனா ------------------ எனக்கு ஒரு டாலர் போதும். (வாங்கு ‘buy’)

 

  1. சினிமா -------------------- என்கிட்டே பத்து டாலர் இருக்கு. (பார் ‘see’)

 

  1. ஊருக்கு டாக்சிலே ----------------------- என்கிட்டே பணம் இல்லை. (போ ‘go’)

 

  1. இண்ணைக்கு வகுப்புக்கு ---------------- எனக்கு இஷ்டம் இல்லை. (வா ‘come’)

 

  1. இண்ணைக்கு நான் -------------------- பனிரெண்டு மணி ஆகும். (தூங்கு ‘sleep’)

 

  1. அம்மாவுக்கு தோசை -------------------- நான் வீட்டுக்கு போறேன். (குடு ‘give’)

 

  1. அம்மாகிட்டே தோசை ------------------ நான் வீட்டுக்கு போறேன். (சாப்பிடு eat’)

 

  1. என்ன புஸ்தகம் ------------------- நீ பேராசிரியர் அறைக்கு போறே? (படி ‘read’)

 

   (Help: ஆசை ‘desire’, தனியா ‘alone’, பயம் ‘fear’, இஷ்டம் ‘liking’, அறை ‘room’)

 

 

  1. Make nouns conjugated in the present tense from the verbs given in parentheses and fill in the blanks using the appropriate case with the noun. The translation of the sentences will help you choose the case for the verbal noun. Note this noun may refer to an action or the fact of its happening.

 

       Ex.  தமிழ் .......... எனக்கு நல்லா இருக்கு. (படி)

             Studying Tamil feels good to me / I feel good about studying Tamil.

             தமிழ் படிக்கிறது எனக்கு நல்லா இருக்கு.

 

  1. ராஜா …………….. நல்லா இல்லை. (பாடு)

Raja’s singing is not good.

 

  1. ராஜா ................... எனக்கு தெரியாது. (வா)

I don’t know Raja’s coming / that Raja is coming

 

  1. ராஜா இப்படி ............................. எனக்கு பிடிக்கலை. (சொல்)

I don’t like that Raja is speaking like this.

 

  1. நாம ஓட்டல்லே கறி ............................... அம்மாவுக்கு தெரியும். (சாப்பிடு)

Mother knows that we eat meat in the restaurant.

 

  1. நான் சிகாகோவுலே .....................அப்பா எல்லார்கிட்டேயும் சொல்லுவார். (படி)

Father tells everyone that I study at Chicago.

 

  1. நான் ............................. அப்பா பாக்கலை. (குடி)

Father didn’t see me drinking

 

  1. நான் ............................ அப்பாகிட்டே சொல்லாதே. (குடி)

Don’t tell father that I drink

 

  1. நான் புஸ்தகம் ............................... அப்பா பணம் குடுப்பார். (வாங்கு)

Father will give me money for me to buy books

 

  1. நான் அவனுக்கு ஒதவி ................... அவன் எனக்கு என்ன செய்வான்? (செய்)

What will he do (back) to me for me helping him?

 

  1. நீ .................... தப்பே இல்லை. (பேசு)

There is nothing wrong in your speaking

 

 

  1. As with locative nouns such as அங்கே etc, the ablative case of source -(இ)ருந்து is added directly to post-positions of location without the locative -லே. Make the ablative case of the post-position in parenthesis and fill in the blanks in the sentences below. Translate the sentences.

             Ex. ---------------------- தண்ணி ஒழுகுது (மேலே) [ஒழுகு 'leak']

                 மேலேருந்து தண்ணி ஒழுகுது

                 Water leaks from above

 

1.      --------------------------- தண்ணி கசியுது (கீழே) [கசி 'seep']

 

2.      பூனையாலே ------------------------- கீழே எறங்க முடியலை (மேலே) [எறங்கு 'get down']

 

3.      வாழ்க்கைலே --------------------- மேலே வர்றது எல்லாருக்கும் முடியுமா? (கீழே) [வாழ்க்கை 'life']

 

4.      எங்க வீட்டுக்கு ---------------------------- ஒரு தெரு வடக்கு பக்கமா போகுது (முன்னாலே)

 

5.      ---------------------------- அவன் ஒன்னை அடிக்கப் போறான் (பின்னாலே)

 

   

         11. How will you say the following sentences in English?

 

 

1.      என் கைலே பத்து டாலர் இருக்கு.

 

     

2.      என்கிட்டே பத்து டாலர் இருக்கு.

 

 

3.      ஒங்க வகுப்புலே எத்தனை பேர் தமிழ் படிக்கிறாங்க?

 

 

4.      ஒங்க பேராசிரியர்கிட்டே எத்தனை பேர் தமிழ் படிக்கிறாங்க?

 

 

5.      இந்தியாவுலே முக்கால்வாசி பேர் கிராமத்துலே இருக்காங்க. (முக்கால்வாசி ‘three fourth’, கிராமம் ‘village’)

 

 

6.      இந்தியாகிட்டே எல்லா கிராமத்துக்கும் ரோடுபோட பணம் இல்லை.

        (ரோடுபோடு ‘build roads’)

 

 

 

 

 

  1. Use the appropriate temporal form in the blanks using forms given in parentheses. The difference in appropriateness is whether the time refers to a point or duration; it is expressed differently with regard to மணி: ஒரு மணி ‘one o’clock’   and ஒரு மணி நேரம் ‘one hour’ (not with other nouns of time). Translate the sentences you made.

 

  1. நான் இன்னும் ------------------- வேலை செய்யணும். (one hour)

 

  1. நான் ------------------------ வீட்டுலே இருக்கணும். (at five o’clock)

 

  1. இந்த தமிழ் படம் ------------------- ஓடும். (three hours)

 

  1. நான் ---------------------------- வர்றேன். (in an hour)

 

  1. நான் ------------------------ வர்றேன். (at one o’clock)

 

  1. நான் --------------------- வர்றேன். (in a short while; கொஞ்ச நேரம் ‘short time’)

 

  1. நான் --------------------- வர்றேன். (in ten minutes; நிமிஷம் ‘minute’)

 

  1. நான் இன்னும் -------------------- ஊருக்கு வர்றேன். (in a month; மாசம் ‘month’)

 

  1. நான் -------------------------------- வேலைக்கு வர்றேன். (in four days; நாள் ‘day))

 

  1. என் வேலை --------------------------------------- முடியும். (at two in the afternoon; முடி ‘be over, finish’)

 

  1. என் வேலை முடிய ---------------------- ஆகும். (two hours)

 

  1. என் வேலை முடிய ----------------------------------- ஆகும். (two in the afternoon)

 

  1. இந்த வேலை இன்னும் ------------------------------ முடியும். (in five minutes)

 

  1. இந்த வேலை ------------------------ எடுக்கும். (two hours; எடு ‘take’)

 

  1. ஒனக்கு வீட்டுக்கு நடக்க -------------------------- எடுக்குது? (how much time, how long; நட ‘walk’)

 

Review Exercise

 

13, Translate the following sentences. More than one sentence may be similar in some respects, but they are different in some ways. The differences may or may not show up in English translation.

 

1. நான் காலைலே காப்பி குடிக்கணும்

2. எனக்கு காலைலே காப்பி குடிக்கணும்

3. இந்த விஷயத்தை அம்மாகிட்டே சொல்லாதே

4. இந்த விஷயத்தை அம்மாகிட்டே சொல்ல வேண்டாம்

5. இந்த விஷயத்தை அம்மாகிட்டே சொல்லக் கூடாது

6. பேராசிரியருக்கு என் மேலே கோபம்

7. பேராசிரியருக்கு என் மேலே கோபம் இருக்கு

8. பேராசிரியருக்கு என் மேலே கோபம் வருது

9. பேராசிரியர் என் மேலே கோபமா இருக்கார்

10. பேராசிரியர் என் மேலே கோபப்படுறார்

11. நான் தமிழ் படிக்கணும்

12. எனக்கு தமிழ் படிக்க ஆசை

13. எனக்கு தமிழ் படிக்க ஆசையா இருக்கு

14. நான் தமிழ் படிக்க ஆசைப்படுறேன்

 15. எனக்கும் தமிழ் படிக்க ஆசை வருது

 16. எனக்கு வேலை இருக்கு

17.  நான் வேலையா இருக்கேன்

18. என்கிட்டே வேலை இருக்கு

19. எனக்கு பேராசிரியர்கிட்டே ஒரு வேலை இருக்கு

20. நான் பேராசிரியருக்கு வேலை பாக்குறேன்

21 நான் பேராசிரியர்கிட்டே வேலை பாக்குறேன்

22 நான் சிகாகோவுலே வேலை பாக்குறேன்

23 எனக்கு கால் வலி

24 எனக்கு கால்லே வலி

25 எனக்கு கால்லே வலி இருக்கு

26 எனக்கு கால் வலிக்குது

27 என் கால் வலிக்குது

28 எனக்கு கால்லே வலிக்குது

29 எனக்கு அடிக்கடி கால் வலி வருது

 30 எனக்கு அடிக்கடி கால்லே வலி வருது.

31 எனக்கு குளுருது

32 எனக்கு சிகாகோ குளுருது

33 சிகாகோ குளுருது

34 நீ எங்கே போகணும்?

35 நீ எங்கேயும் போகணுமா?

36 நீ எங்கேயாவது போகணுமா?

37 எனக்குதான் இந்த பாடம் புரியுது

38 எனக்கே இந்த பாடம் புரியுது

39 எனக்கு காப்பிதான் பிடிக்காது

40 எனக்கு காப்பியே பிடிக்காது

 41 நான் ரெண்டு நாள் சாப்பிடலை

42  நான் ரெண்டு நாளா சாப்பிடலை

43 நான் நேத்துலேருந்து சாப்பிடலை

44 நான் நாளைக்கு நியு யார்க்லே பேசுறேன்

45 நான் நாளைக்கு நியு யார்க்லேருந்து பேசுறேன்

46 பேராசிரியர்கிட்டேருந்து எனக்கு பதில் வரலை [பதில் 'answer, response'}

47 பேராசிரியர்லேருந்து யாருக்கும் பதில் தெரியலை

48 இங்கேருந்து நான் மரத்தை பாக்குறேன்

49 இங்கேருந்து எனக்கு மரம் தெரியுது

50 இங்கே பாட்டு நல்லா கேக்கலாம்

51 இங்கே பாட்டு நல்லா கேக்குது

52 நான் ஒனக்கு ஒரு கதை சொல்றேன்

53 நான் ஒன்கிட்டே ஒரு ரகசியம் சொல்றேன் [ரகசியம் secret']

54 இந்த வேலைக்கு நான் ஒன்னை சொல்றேன்

55 நான் சிகாகோவுக்கு தமிழ் படிக்க போறேன்

56 நான் சிகாகோவுலே தமிழ் படிக்கப் போறேன்

57 எனக்கு ஒன்னோட பேச நேரம் இல்லை

58 எனக்கு ஒன்னோட ஒரே கூட்டத்துலே பேச விருப்பம் இல்லை [ ஒரே same', கூட்டம் 'meeting', விருப்பம் 'liking']

59 எங்க வீட்டை சுத்தி மரம் இருக்கு

60 ஒங்க வீட்டை சுத்தி மரம் வைக்கலாம் [வை 'keep, plant']

61 எனக்கு முன்னாலே நீ அங்கே போ

62 என் முன்னாலே நீ வா

63 ஒன்னை பாக்க யார் வர்றாங்க?

64 ஒன்னை பாக்க யார் யார் வர்றாங்க?

65 தோசையும் சாம்பாரும் நல்லா இருக்கும்

66 தோசையோட சாம்பார் நல்லா இருக்கும்

67 தோசைக்கு சாம்பார் நல்லா இருக்கும்

68 என் வேலைக்கு ஒன் வேலை நல்ல வேலை

69 என் வேலையை விட ஒன் வேலை நல்ல வேலை

70 சிகாகோவை போல சியாட்டல்லே காத்து அடிக்காது

71 சிகாகோவுலே போல சியாட்டல்லே காத்து அடிக்காது

72 ஒன் தம்பிக்கு எங்க அப்பாவை தெரியுமா?

73 ஒன் தம்பிக்கு எங்க அப்பாவை தெரியுமே!

74 ஒன் தம்பிக்கு எங்க அப்பாவை தெரியும்லே?

75 ஒன் தம்பிக்கு எங்க அப்பாவை தெரியும், இல்லையா?

 

Handouts

1. Different noun modifiers

Sinple Nouns

இது வெள்ளை யானை 'This is a white elephant'

இது குட்டை யானை 'This is a short elephant'

இது குட்டி யானை 'This is a baby elephant'

இது பெண் யானை 'This is a female elephant'

இது கோயில் யானை 'This is a temple elephant'

இது வீட்டு யானை 'This is a house elephant'

இது காட்டு யானை 'This is a wild elephant'

இது தாத்தா யானை This is grandpa elephant'

இது அதிக வெலை 'This is high price', This one has a high price'

இது புத்திசாலி யானை 'This is an intelleigent elephant'

இது இலங்கை யானை 'This is Sri Lankan elephant'

இங்கே சுமார் பத்து யானை இருக்கும் ''There will be roughly ten elephants here'

Simple Adjectives

இது நல்ல யானை 'This is a good elephant'

இது பெரிய யானை 'This is a big elephant'

இது பழைய யானை 'This is the old elephant'

இது புது யானை 'This is the new elephant'

இது ரொம்ப வெலை 'This is high price', 'This one has a high price'

Derived Adjectives from nouns

இது அழகான யானை 'This is a beautiful elephant'

இது ஒயரமான யானை 'This is a tall elephant'

இது மோசமான யானை 'This is a bad elephant'

இது புத்திசாலியான யானை 'This is an intelligent elephant'

இது வயசான யானை 'This is an old /aged elephant'

இது சரியான வெலை 'This is the right price'

இது அதிகமான வெலை 'This is high price'

இது சுமாரான வெலை 'This price is in the middle (neither high nor low)'

Derived Ahectives from verbs

இது கெட்ட யானை 'This is mischivevous elephant'

இது செத்த யானை 'This is a dead elephant'

இது மூத்த யானை  'This the old /senior elephant'

Modified Nouns

இது இந்திய யானை 'This is Indian elephant'

இது கேரள யானை 'This is an elephant from Kerala'

இது கெட்டிக்கார யானை 'This is a smart elephant'

Gentive Nouns

இது எங்க யானை 'This is our elephant'

இது எங்களோட யானை 'This is our elephant'

இது எங்க தாத்தா யானை This is our grand ather's elephant'

இது எங்க தாத்தாவோட யானை 'This is out grandfather's elephant'

இது ராஜா யானை 'This is Raja's elephant'

இது ராஜாவோட யானை 'This is Raja's elephant'

இது யார் யானை? 'Whose elephant is this?'

இது யாரோட யானை? 'Whose elephant is this?'

Numerals

ஒரு யானை வருது

ரெண்டு யானை வருது 'Two elephants are coming'

இது ரெண்டாவது யானை 'This is the second elephant'

இது ஒண்ணாவது யானை 'This is the first elephant'

இது மொதல் யானை 'This is the first elephant'

இது மொதலாவது யானை 'This is the first elephant'

இது கடைசி யானை 'This is the last elephant'

 

2. Different Verb Modifiers

Adverb forms

நீ பெரும்பாலும் வருவே 'You will come most probably'

நீ அடிக்கடி வருவே 'You will come often'

நீ நிச்சயம் வருவே 'You will come definitely'

நீ தெனம் வருவே 'You will come daily'

நீ சீக்க்கிரம் வருவே 'You will come soon 'quickly'

நீ நாளைக்கு வருவே 'You will come tomorrow'

நீ அதிகம் சாப்பிடுவே 'You eat much  / excessively'

நீ ரொம்ப சாப்பிடுவே 'You eat much /excessively'

Derived Adverbs from nouns

நீ சீக்கிரமா வருவே 'You will come quickly / soon''

நீ நிச்சயமா வருவே 'You will come definitely'

நீ அதிகமா சாப்பிடுவே 'You eat much / excessively'

நீ வேகமா வருவே 'You will come fast'

நீ மெதுவா வருவே 'You will come slowly / leisurely'

நீ கோபமா வருவே 'You will come angirily'

நீ ஆசையா வருவே 'You will come with passion'

நீ சரியா பேசுவே 'You speak correctly'

நீ சுமாரா பாடுவே 'You sing okay (not good or bad)'

In the meaning 'as'

இது பெருசா வரும் 'This will become big'

நீ பெரியவனா வருவே 'You will become big / a big person'

நீ டாக்டரா வருவே 'You will come up (in life) as a doctor / You will become a doctor'. Or 'You will come to (the town) as a doctor'

Verb Forms

நீ திரும்ப வருவே 'You will come again'

நீ திரும்பி வருவே 'You will come back'

 

3. Different Prodicates (the words that normally ends a sentence)

இது மரம் 'This is a tree'
இது என்ன? "what is this?'
இது தமிழ் 'This is Tamil"
இது மதுரை 'This is Madurai
இது தம்பி 'This is the little brother'
இது யார்? 'Who is this?'
இது பத்து 'This is ten'
மணி பத்து 'The time is ten / It is ten'
இது பச்சை 'This is green'; 'this is green color
இது வட்டம் 'This is round'; 'this is a circle'
இதுதான் கோபம் 'This is anger'
இது இனிப்பு 'This is a sweet / dessert'
இது இனிக்கும் 'This is sweet'
இது சின்னது 'This is small'; This is the small thing'
இது புதுசு 'Tis is new'; This is the new thing'
இவன் சின்னவன் 'He is the small one'
இது அசிங்கம் 'This is ugly'
இது அசிங்கமா இருக்கு 'This is ugly (to see)'
இது பரவாயில்லை "This is not bad'
இது சுமார் 'This is okay (not good nor bad)'
இது சுமாரா இருக்கு 'This is okay (to experience)'
இது அதிகம் 'This is more / in excess'
இது அதிகமாக இருக்கு 'This is more (when measured)'
இது ரொம்ப 'Thisis more'
இது பளபளன்னு இருக்கு 'This is shining'
இது பளபளப்பா இருக்கு  'This is shiny'
இது பளபளக்குது 'This shines'
இது போகுது 'This is going'

இது எனக்கு 'This is for me'
இது என்னது 'This is mine'

எனக்கு சந்தோஷம் 'I am happ (as in describing an emotional response)'
எனக்கு சந்தோஷமா இருக்கு 'I am happy' (as in describing a state of mind)'
நான் சந்தோஷமா இருக்கேன் 'I am happy (as in describing a state of mind)'
நான் மதுரை "I am from Madurai'
எனக்கு மதுரை 'I belong to Madurai'
தம்பி எங்கே? 'Where is the little brother (when missing)?'
தம்பி எங்கே இருக்கான்? 'Where is the little brother (as in hiding)?'

 

 

Related Images: