10. கடைக்கு போறேன்

 

உரையாடல்  10                           கடைக்கு போறேன்

 

 

ராஜா  -  நான் கடைக்கு போறேன்.  நீங்களும் கூட வர்றீங்களா?

 

ஜிம்   -  என்ன வாங்கப் போறீங்க?

 

ராஜா  -  துணி வாங்கப் போறேன்.

 

ஜிம்   -  புது துணியா?   என்ன விசேஷம்?

 

ராஜா  -  இந்த மாசம் பதினாலாம் தேதி பொங்கல் வருது, இல்லையா?        

         அதுக்காக பிள்ளைகளுக்கு துணி வாங்கணும்.

 

ஜிம்   -  ஒங்களுக்கு துணி வாங்கலையா?

 

ராஜா  -  எனக்கும்தான்.  என் மனைவிக்கும் ஒரு பொடவை வாங்கணும்.

 

ஜிம்   -  எனக்கு ஒரு பொடவை வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை.  வாங்க,

         போவோம்.  ஒங்க ஒதவியோடே ஒரு நல்ல பொடவை வாங்குறேன்.

 

ராஜா  -  ஒங்களுக்கு பொடவை எதுக்கு?   நீங்க கட்டப்  போறீங்களா?

 

ஜிம்   -  ஐயையோ!  நான் எப்படி பொடவை கட்ட முடியும்?  அதை பெண்கள்லே

         கட்டுவாங்க?

 

ராஜா  -  பெறகு ஏன் பொடவை வாங்கப் போறீங்க?

 

 

ஜிம்   -  அதை அமெரிக்காவுலே என் தங்கச்சிக்கு அனுப்பப் போறேன்.  அவளுக்கு

         ஒங்க ஊர் பொடவைன்னா ரொம்ப பிடிக்கும்.

 

ராஜா  -  அப்படியா?  சரி, வாங்க.  ஒரு நல்ல பொடவை வாங்குவோம்.

 

ஜிம்   -  நாம எந்த கடைக்கு போறோம்?

 

ராஜா  -  கோயிலுக்கு கெழக்கு பக்கத்துலே ரொம்ப துணிக்கடை இருக்கு.

         வாங்க.  நாம கோயிலை சுத்தி அங்கே போவோம்.

 

Credit: sarisaffri.com

Credit: nalli.com

 

Glossary

கூட  ‘along with’

வாங்கு (வாங்க)  ‘buy, get’

புது ‘new’

துணி ‘clothe, cloth’

விசேஷம் ‘special event’

மாசம்                                         மாதம்  ‘month’ 

பதினாலு                                 பதினான்கு ‘fourteen’

பிள்ளை ‘child’

மனைவி ‘wife’

பொடவை                              புடவை   ‘sari’

ஒதவி      உதவி ‘help’

கட்டு (கட்ட) ‘wear, tie’

ஐயையோ 'expression of disgust’

பெண் / பொண்ணு  ‘woman, girl. daughter’

பெறகு                                பிறகு ‘then, later’

தங்கச்சி                             தங்கை   ‘younger sister’

கோயில்                            கோவில்     ‘temple’

சுத்தி                                  சுற்றி  ‘around’

 

Related words

வில்லு (விக்க)                             'sell’

பழைய                                             ‘old’

பையன்                                            ‘boy, son’

மகன்                                                ‘son’

மக                                    மகள்    ‘daughter

கணவர்                                            ‘husband’

வீட்டுக்காரர்                                  ‘husband’

வீட்டுக்காரி                                   ‘wife’

தாத்தா                                             'grandfather’

பாட்டி                                               ‘grandmother’

வேஷ்டி                   வேட்டி          ‘men’s wrap around the waist’

சட்டை                                             ‘shirt’

போடு           (போட)                     ‘put on (a dress)’

அவுர் (அவுக்க)                             ‘untie’

கழட்டு         (கழட்ட)                   ‘remove (a dress)’                   ‘

ஆண்                                                ‘man’

முடி (முடிய)                                  ‘end’, conclude’

முடி (முடிக்க)                               ‘finish, conclude (stg)’

பதினொண்ணு             பதினொன்று         ‘eleven’

பனிரெண்டு                   பன்னிரண்டு         ‘twelve’

பதிமூணு                       பதின்மூன்று        ‘thirteen’

பதினைஞ்சு                  பதினைந்து          ‘fifteen’

பதினாறு                                                          ‘sixteen’

பதினேழு                                                        ‘seventeen’

பதினெட்டு                                                      ‘eighteen’

பத்தொம்பது               பத்தொன்பது        ‘nineteen’

 

 

 

Exercises

 

1.The case suffix ஓடே (also spelled ஓட) gives the sense of ‘in association with, in combination of’. Its sense extends to ‘at the end of a sequence’ and ‘having a disposition of’. Using this case suffix with the noun in parentheses, fill in the blanks in the sentence. Give the meaning of the sentences you made.

 

Ex. ஒன் தம்பி .................. வேலை பாக்குறான் (நான்)

    ஒன் தம்பி என்னோடே வேலை பாக்குறான் ‘Your younger brother works with me’

 

1.      நான் ஒன் ………….. தமிழ் படிக்கிறேன். (தம்பி)

 

2.      என்னோட நாய் .................. வராது. (நீ)

 

3.      தமிழ் வகுப்புலே ஒன் ........................... எத்தனை பேர் இருக்காங்க? (தங்கச்சி)

 

4.      நாங்க இண்ணைக்கு எங்க ....................... தமிழ் சினிமாவுக்கு போறோம். (பேராசிரியர்)

 

5.      எங்க ....................... நானும் சினிமாவுக்கு போறேன். (அப்பா)

 

6.      நாங்க ...................... இந்தியும் படிக்கிறோம். (தமிழ்)

 

7.      நீ .................. வேறே என்ன சாப்பிட போறே? (பூரி)

 

8.      ...................... சாம்பார் நல்லா இருக்கும். (இட்லி)

 

9.      வகுப்புக்கு ........................ வரக் கூடாது. (செல்போன் ‘cell phone’)

 

10.  நீ ஆறு மணிக்கு ....................... என்னை பார். (பணம்)

 

11.  அவன் ஒனக்கு நல்ல ........................... பணம் குடுக்கலை (எண்ணம் ‘intention’)

 

12.  தாத்தா ..................... இருக்கார். (கோபம்)

 

13.  ................... ரெண்டை கூட்டு. (பத்து) [கூட்டு ‘add’]

 

14.  அடுத்த .................... எங்களுக்கு காலேஜ் முடியுது. (வாரம்)

 

15.  .................. ஒரு வாரம் ஆகும். (நாளைக்கு)

 

2.The following sentences have simple dative as a goal or purpose. Change them to mean ‘for the sake of’. Note that the example sentence means that the mother will do everything not necessarily to me, but will do many things because of me or for my sake. Translate the sentences you made.

 

Ex. எங்க அம்மா எனக்கு எல்லாம் செய்வாங்க.

   எங்க அம்மா எனக்காக எல்லாம் செய்வாங்க.

   My mother will do everything for my sake.

 

   எங்க அம்மா நான் படிக்கிறதுக்கு எல்லாம் செய்வாங்க

   எங்க அம்மா நான் படிக்கிறதுக்காக எல்லாம் செய்வாங்க

       My mother will do everything for me to study

 

     1. நீ எனக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம்.

 

  1. அப்பா எனக்கு தமிழ் புஸ்தகம் வாங்குவார்.

 

  1. எனக்கு நீ தமிழ் புஸ்தகம் வாங்க வேண்டாம்.

 

  1. எனக்கு ஒரே ஒரு தமிழ் பாட்டு பாடு.

 

  1. நான் தமிழ் படிக்கிறதுக்கு தமிழ்நாட்டுக்கு போறேன்.

 

  1. நான் புஸ்தகம் வாங்குறதுக்கு அப்பாகிட்டே பணம் கேக்க மாட்டேன்.

 

  1. நான் தெனம் ஒரு சினிமா பாக்கிறதுக்கு அப்பா திட்டுறார். (திட்டு ‘scold’)

 

  1. நான் தூங்குறதுக்கு மாத்திரை சாப்பிடுறேன். (மாத்திரை ‘pills’)

 

  1. நான் கார் வாங்குறதுக்கு ரெண்டு வேலை பாக்கிறேன்.

 

  1. நீ என்ன வாங்குறதுக்கு பணம் கேக்கிறே?

 

 

3.Make the sentences below into ‘quoted’ ones using -ன்னு (-னு when the word ends in a nasal) at the end of the sentence and embed them in the sentence யார் சொல்றா ‘who says?’  Translate the sentences.

 

Ex. அவன் தமிழ் படிக்கட்டும்

    அவன் தமிழ் படிக்கட்டும்னு யார் சொல்றா?

    'Who says that he shall study Tamil’

 

        1. ராஜா தமிழ் சினிமா பாக்கமாட்டான்.

 

  1. ராஜா நேத்து ராத்திரி சாப்பிடலை.

 

  1. நான் தமிழ் படிக்கிறது யாருக்கும் தெரியாது.

 

  1. ஒனக்கு சிகாகோவுலே எடம் கெடைக்கும்.

 

  1. நாளைக்கு மழை பெய்யலாம்.

 

  1. நான் அடுத்த வாரத்துலேருந்து வேலைக்கு போகணும்.

 

  1. நீ தெனம் ஒரு கப் பால் குடிக்கணும்.

 

  1. ராஜா ஒன்னோட போகணும்.

 

  1. தம்பிக்கு தலை வலிக்குது.

 

  1. நான் இப்படி சொல்றது தப்பு.

 

 

 

4.Make the following sentences into neutral yes-no questions by adding –ஆ Translate the questions.

 

Ex. குமார் நாளைக்கு வர்றான்

     குமார் நாளைக்கு வர்றானா?

     ‘Is Kumar coming tomorrow?’

 

  1. நாம தமிழ் படிக்கப் போறோம்

 

  1. நாம இண்ணைக்கு ஓட்டலுக்கு போறோம்

 

  1. தம்பி நாளைக்கு ஊருக்கு வர்றான்

 

  1. நீங்க இண்ணைக்கு ராத்திரி சினிமா பாப்பீங்க. (ராத்திரி ‘night’)

 

 

  1. நீங்க சிகாகோவுலே இருக்கீங்க

 

  1. பூனை வெளியே ஓடுது

 

  1. நாய் பாலை குடிக்குது

 

  1. பேனா மேசைமேலே இருக்கு

 

  1. ஒனக்கு தோசை பிடிக்காது

 

  1. இது தப்பு

 

 

 

5.Make the sentences in (4) into rhetorical (tag) questions using இல்லையா. Translate the sentences you made.

 

Ex. குமார் நாளைக்கு வர்றான், இல்லையா?

    ‘Kumar is coming tomorrow, is he not?

 

 

6.Substitute இல்லையா in (5) with லே that has the same meaning with rising intonation.

Ex. குமார் நாளைக்கு வர்றான்லே?

 

7.Make rhetorical questions with emphasis on the word that precede the last words in the sentences in (4). Translate the sentence you made.

 

Ex. குமார் நாளைக்குலே வர்றான்?

    Kumar is coming tomorrow, is it not tomorrow?

 

 

8.–ன்னா can be added to a word or a phrase in a sentence to bring it into focus or to foreground it. The focus translates in English as ‘as for --, if it is –‘. This word with  –ன்னா is commonly, but not necessarily, moved to the beginning of the sentence. Make the underlined word in the sentences below focused using –ன்னா.  Translate the sentences you made.

 

Ex.  எனக்கு தோசை ரொம்ப பிடிக்கும்.

    தோசைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    As for dose, I like it very much.

 

       1. எனக்கு என் தங்கச்சி ரொம்ப பிடிக்கும்.

 

  1. நான் தமிழ்ப்படம் ரெண்டு தடவையாவது பாப்பேன்.

 

  1. நான் என் தங்கச்சிக்கு எதுவும் செய்வேன்.

 

  1. நான் ஒன்னோட சினிமாவுக்கு வர்றேன்.

 

  1. அப்பா இப்படித்தான் இருப்பார்.

 

 

9.There is alternative way of telling time in place of sequencing the hour and the minute. e.g. பத்து பத்து ‘ten ten’. It is to use the verb forms ஆகி ‘after’ and ஆக ‘before’. e.g. பத்தாகி பத்து நிமிஷம் ‘ten minutes after ten’, பத்தாக பத்து நிமிஷம் ‘ten minutes to ten’. When the time is 15, 30 and 45 minutes after the hour, fraction of hours can be used instead of the minutes. e.g.பத்து பதினைஞ்சு =பத்தே கால், பத்து முப்பது = பத்தரை, பத்து நாப்பத்தைஞ்சு = பத்தே முக்கா(ல்).  Tell the time given below using the alternative way. Translate the sentences.

 

Ex. இப்போ மணி ஒண்ணு இருபது

   இப்போ மணி ஒண்ணாகி இருபது நிமிஷம்

   ‘Now the time is twenty after one’

 

1.இப்போ மணி அஞ்சு பத்து

 

2. இப்போ மணி அஞ்சு அம்பது (‘fifty’)

 

3. இப்போ மணி ஆறு முப்பது (‘thirty’)

 

4. இப்போ மணி ஒண்ணு பதினைஞ்சு (fifteen’)

 

5. இப்போ மணி நாலு நாப்பத்தைஞ்சு (‘fifty five’)

 

 

 

10.Fill in the blank with the appropriate form of the verb. The meaning of the sentences will help you decide the form of the verb.

 

Ex. மணி பத்து ---------- போகுது (ஆகு)

   ‘It   is going to be ten o’clock’

       மணி பத்து ஆகப் போகுது

 

  1. இப்போ மணி என்ன ----------? (ஆகு)

     ‘What is the time now?’

 

  1. இப்போ மணி பத்து --------. (இரு)

‘Now the time probably is ten.’

 

  1. அஞ்சாகி பத்து நிமிஷம் ---------.(ஆகு)

‘It is ten minutes after five’.

 

  1. அஞ்சாக பத்து நிமிஷம் ---------. (இரு)

‘It is ten minutes to five’

 

  1. ஒன் வேலை முடிய எவ்வளவு நேரம்----------? (இரு)

‘How much more time is there for your work to be over?’

 

  1. ஒன் வேலை முடிய எவ்வளவு நேரம் -----------? (எடு)

‘How much time/long will it take for your work to be over?’

 

  1. நீ வேலையை முடிக்க எவ்வளவு நேரம் ----------? (இரு)

‘How much time is there for you to finish the work?’

 

  1. நீ வேலையை முடிக்க எவ்வளவு நேரம் ----------? (எடு)

‘How long will it take for you to finish the work?’

 

  1. நீ வேலையை முடிக்க எவ்வளவு நேரம் ---------? (எடு)

‘How long will you take to finish the work?’

 

  1. அஞ்சாகி பத்து நிமிஷத்துக்கு ஒன் வேலை ------------- ? (முடி)

‘Will your work be over at ten past five?’

 

 

11.The verb ஆகு ‘be, become’ could be used with tense markers to indicate that time is passing. ஆச்சு is the past tense of this verb; it is used to indicate the time is over. Translate the following.

 

  1. இப்ப மணி அஞ்சு ஆகுது; வீட்டுக்கு போக இன்னும் நேரம் இருக்கு.

 

  1. நான் வீட்டுக்கு போக மணி  ஆறு  ஆகும்.

 

  1. மணி ஆறரை ஆச்சு; நான் வீட்டுக்கு போகணும்.

 

  1. மணி இன்னும் ஆறரை ஆகலை; ஏன் இப்பவே வீட்டுக்கு போறே?

 

  1. எனக்கு நேரம் ஆச்சு; நான் பஸ்ஸை பிடிக்கணும். (பிடி (பிடிக்க) ‘catch’)

 

 

 

Review exercises

 

12.Fill in the blanks with the verb with correct ending from the ones in parentheses. Translate the sentences you made.

 

  1. நாங்க பத்து மணிக்கு ஊருக்கு---------------- (போறேன், போறோம்)

 

  1. நீ நாளைக்கு என்ன செய்ய-------? (போறே, போறீங்க)

 

  1. அவன் இண்ணைக்கு வீட்டுக்கு வர------------ (மாட்டான், மாட்டார்)

 

  1. பூனை இந்த பாலை ------------------ (குடிக்கமாட்டாது, குடிக்காது)

 

  1. எனக்கு இண்ணைக்கு வேறே வேலை --------------- (இருக்கலை, இல்லை)

 

  1. நீ இந்த ஓட்டல்லே ----------------- (சாப்பிடாது, சாப்பிடாதே)

 

  1. எல்லாரும் எங்கே -------------- ? (போறாங்க, போகுது)

 

  1. நீங்க எல்லாரும் எங்கே --------------------? (போறாங்க, போறீங்க)

 

  1. ரெண்டு பேர் ஒங்களை பாக்க -------------- (வர்றீங்க, வர்றாங்க)

 

  1. நாங்க ரெண்டு பேரும் ஒன்னை பாக்க  (வர்றாங்க, வர்றோம்)

 

  1. இண்ணைக்கு கடைக்கு யார்----------------? (போறான், போறா)

 

  1. இண்ணைக்கு வீட்டுலே நீங்க யார் ---------- (இருப்பீங்க, இருப்பாங்க)

 

  1. அப்பா போன்லே --------------- (பேசுறார், பேசுறான்)

 

  1. நான் அப்பாவுக்கு --------------- (சொல்றேன், சொல்றார்)

 

  1. நானும் நீயும் சினிமாவுக்கு  (போவேன், போவோம்)

 

 

 

 

13.Complete the sentences below with the noun in parentheses in their correct form. Their meanings give you the cue. Note that the present tense may translate as future when the act is definite as in an offer.

 

1.      --------- பார் (இது) ‘Look at this’

2.      இந்த--------------- குடுங்க (பேனா) ‘Give this pen’

3.      அவன் ஒங்க அம்மா-------- சாப்பிடுறானா? (தோசை) ‘Is he eating your mother’s dose?’

4.      அவ -------------------- எப்போ பாப்பா?  (ஒங்க அப்பா) ‘When will she see your father?’

5.      நான் ------------ நாளைக்கு பாக்குறேன் (நீங்க) ‘ I will see you tomorrow’

6.      நீங்க --------- கேக்குறீங்களா? (அவ)  ‘Will you ask her?’

7.      நீ ------------ கேள் (நான்) ‘You ask me’

8.      நீ ஒன்----------   எனக்கு குடுப்பியா? (புஸ்தகம்)  ‘Will you give me your book?’

9.      இந்த -----------  பாருங்க (மரம்) ‘Look at this tree’

10.  நான் எங்க ------------ ஒனக்கு காட்டுறேன் (வீடு) ‘I will show (you) our house’

11.  இதை ----------- குடு (அவன்) Give this to him

12.  இந்த பேனாவை ---------- குடுப்பே? (யார்) ‘Who will you give this pen to’

13.  நாங்க நாளைக்கு -------------- போறோம் (ஊர்) ‘We are going to town (out of town) tomorrow

14. நான் என் பேனாவை ------------- குடுக்கிறேன் (நீ) ‘I will give you my pen to you’

15. நான் ---------------- எங்க வீட்டை காட்டுறேன் (நீங்க) ‘I will show you our house’

16. அப்பா ---------- என்ன குடுக்கப் போறார்? (நாம்) ‘What is the father going to give us?’

17. நாங்க ---------- போறோம் (வீடு) ‘we are going home’

18. நீங்க ----------------------  போவீங்களா? (தமிழ்நாடு) ‘Will you go to Tamil Nadu’

19. யார் ----------------------- போறாங்க? (சென்னை) ‘Who is going to Chennai?’

20. இந்த ----------- எவ்வளவு குடுப்பீங்க? (படம்) “How much will you give for this picture?)

21. இந்த ---------------- வெலை என்ன? (புஸ்தகம்) ‘What is the price of this book?’

22  ஒங்க----------- விலாசம் என்ன? (வீடு) ‘What is the address of your house?’

23. -------- தம்பி எங்கே வேலை செய்றான்? (நீங்க) ‘Where does your younger brother work’

24. நான் --------  இந்த ---------- வாங்குறேன் ( நீ, புஸ்தகம்) ‘I will buy you this book’

25. நான்-------- எங்க --------- காட்டுறேன் (நீங்க, வீடு) ‘I will show you our house’

 

     

14.How will you say these sentences in Tamil?

 

1.      We can come to the class at 10.30 in the morning.

 

2.      I cannot sleep for ten hours every day.

 

3.      Can you tell this to the father?

 

4.      My mother can read Tamil

 

5.      Raja can go to New York to buy Tamil books

 

6.      There cannot be 100 dollar with her / She cannot have 100 dollars with her

 

7.      How can be your book with her? / How can she have your book?

 

8.      Is it possible to go to New York in one hour?

 

9.      The cat is now able to walk.

 

10.  I still have pain; I am not able to walk.

 

 

15.Fill in the gap with the right case using the word in parentheses

 

  1. ----------- போ. (வீடு) ‘Go home’
  2. நான் ------------  போறேன். (அப்பா) ‘I am going to the father’
  3. நீ--------- இரு. (ஓட்டல்)  ‘Be in the hotel’
  4. நாங்க----------- இருக்கோம்.  (அம்மா) ‘We are with (our) mother’
  5. --------- பணம் வேணும்).   (நாங்க) ‘We need money’
  6. ------ எங்கே போகணும்?  (நீ) ‘Where do you want to go / Where should you go?’
  7. ------ பணம் இருக்கு.  (நான்) ‘I  have money (with me)’
  8. எனக்கு ------- வேலை இருக்கு.   (ராஜா) ‘I have work with Raja’
  9. ---------- வேலை இருக்கா? (நீங்க) ‘Do you have work / Are you busy?’
  10. --------- பத்து டாலர் போதுமா? (ஒன் தம்பி) ‘Are ten dollars enough for your younger brother?’

 

16.Fill in the gaps with the right form based on the meaning of the sentence.

a.       ------- எங்கே போறீங்க?  ‘Where are you all going?’

b.      -------- தமிழ் படிக்கிறோம். ‘We are all studying Tamil.’

c.       -------- தமிழ் படிக்கிறோம். ‘We both are studying Tamil.’

d.      நான் --------  -------- புஸ்தகம் குடுக்குறேன். ‘I will give a book to all three of you’

e.       ------------ தமிழ் படிக்கிறாங்க? ‘How many people are studying Tamil?’

f.         -------- -------- தமிழ் படிக்கிறீங்க? ‘How many of you are studying Tamil?’

g.      -------- -------- புஸ்தகம் வேணும். ‘We all want books.’

h.      ------- -------- வீட்டுக்கு போகணும் ‘We all want to go home.’

i.         ------- -------- வீட்டுக்கு போறாங்க, ‘All boys are going home.’(பையங்க ‘boys’)

j.        நீங்க  ----------  -------- படிக்கணும். ‘You must read all the books’

17.Translate the following in Tamil using வேறே, இன்னொரு or இன்னும் as  appropriate.

 

a.       One dose is not enough for me. I want two more doses.

b.      I do not want this dose. Give me another dose.

c.       I do not want eggplant sambar. Give me some other sambar. (கத்தரிக்கா(ய்)‘eggplant’)

d.      Let us not go to this hotel. Let us go to another hotel.

e.       Let us not go home. Let us go to another hotel.

f.       Shall we go to a Tamil movie in the evening today?  No, let us go to some other movie.

g.      Shall we see a Hindi movie today?  No, let us see one more Tamil movie.

h.      I still have work. I am not coming to the movie.

i.        I have some other work. I am not coming home.

j.        Where is Raja? He hasn’t come home yet.

 

 

18.The following statements are false. Make them true using the negative. Translate the sentences that you made.

 

  1. நான் நாளைக்கு வேலைக்கு போறேன்.

 

 

  1. நான் இந்த வருஷம் தமிழ் படிக்கிறேன்.

 

 

  1. நாங்க படம் பாக்க ராஜா வீட்டுக்கு போறோம்.

 

 

  1. நான் எட்டு மணிக்கு தூங்குவேன்.

 

 

  1. நான் காலைலே காபி குடிப்பேன்.

 

 

  1. இந்த ஊர்லே தமிழ் புஸ்தகம் கெடைக்கும்.

 

 

  1. எனக்கு ஒரு தோசை போதும்.

 

 

  1. சாயங்காலம் எனக்கு தலைவலி வரும்.

 

 

  1. எனக்கு தலை வலிக்குது.

 

 

  1. எங்கிட்டே ரொம்ப பணம் இருக்கு.

 

 

  1. எனக்கு வீடு வேணும்.

 

 

  1. எனக்கு எல்லாம் வேணும்.

 

 

  1. நீ காலைலே காபி குடிக்கணும்.

 

 

  1. நான் வீட்டுலே படிப்பேன்.

 

 

15. நான் பேராசிரியர் ஆவேன்.

 

  1. ராஜா தமிழ் படிக்கிறான்.

 

 

  1. ராஜா நாளைக்கு வீட்டுக்கு வருவான்.

 

 

  1. ஒன் தம்பி பொய் சொல்றான். (பொய் ‘lie’)

 

 

  1. என் தம்பி குடிப்பான்.

 

 

  1. நாங்க நாளைக்கு சினிமாவுக்கு போறோம்.

 

 

  1. அவ இண்ணைக்கு சாயங்காலம் தமிழ் படம் பாப்பா.

 

 

  1. அப்பா எனக்கு பணம் குடுப்பார்.

 

 

  1. இது அப்பாவோட படம்.

 

 

  1. இங்கே பத்து பேர் இருக்காங்க.

 

 

  1. அங்கே பத்து பேர் இருப்பாங்க.

 

 

  1. பூனை காபி குடிக்கும்.

 

 

  1. பூனை வெளியே போகுது.

 

 

  1. நாய் பாட்டு கேக்குது.

 

 

  1. நாய் ராத்திரி தூங்கும்.

 

 

  1. பேனா அங்கே இருக்கு.

 

 

  1. புஸ்தகம் அங்கே இருக்கும்.

 

 

  1. இப்போ மணி பத்து.

 

 

33. அவன் வீட்டுக்கு வர பத்து மணி ஆகும்.

 

 

34. எல்லாருக்கும் தமிழ் புஸ்தகம் வேணும்.

 

 

35.. எல்லாரும் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு போகணும். 

Related Images: