11. பொடவை வெலை அதிகம்

 

உரையாடல்  11                           பொடவை வெலை அதிகம்

 

 

ராஜா  -  வாங்க, இந்த கடைக்கு போவோம்.  இங்கே நல்ல பொடவை

         கெடைக்கும்.  வெலையும் மலிவா இருக்கும்.

 

ஜிம்   -  சரி.  எனக்கு பொடவையை பத்தி ஒண்ணும் தெரியாது.  இந்த ஊர்

         கடையை பத்தியும் ஒண்ணும் தெரியாது.

 

ராஜா  -  ஒங்களுக்கு பட்டு பொடவை வேணுமா, நூல் பொடவை வேணுமா?

 

ஜிம்   -  எனக்கு காஞ்சிபுரம் பட்டு பொடவைதான் வேணும்.

 

கடைக்காரன்  -  வாங்க, சார்.  என்ன வேணும்?  பட்டு பொடவை பாக்குறீங்களா?

         எங்ககிட்டே நல்ல பொடவை இருக்கு

 

ராஜா  -  ஜிம், ஒங்களுக்கு என்ன கலர் பொடவை வேணும்?

 

ஜிம்   -  எல்லா நெற பொடவையும் அழகாதான் இருக்கு.  ஒங்களுக்கு எது

         பிடிக்குது?

 

ராஜா  -  (கடைக்காரன்கிட்டே)  வேறே பொடவை இருக்கா?   காட்டுங்க,

         பாப்போம்.

 

கடை  -  ஒங்களுக்கு நல்லதா காட்டுறேன்.  இதை பாருங்க.  ரோஜாப்பூ

         நெறத்துக்கு பொருத்தமா கருப்புக்கரை இருக்கு.

 

ராஜா  -  இது என்ன வெலை?

 

கடை  -  நாலாயிரம் ரூபா

 

ராஜா  -  வெலை அதிகமா இருக்கே!

 

கடை  -  இல்லை, சார்.  பொடவையை பாருங்க.  ரொம்ப கனமா இருக்கு.

         இது நல்ல ஜரிகை, சார்.

 

ராஜா  -  இதை இவர் அமெரிக்காவுக்கு அனுப்ப போறார்.  மூவாயிரத்தி ஐநூறு

         ரூபாய்க்கு குடுக்குறீங்களா?

 

கடை  -  ரொம்ப கொறைவா கேக்கிறீங்க!  எரநூறு ரூபா கொறைவா குடுங்க.

 

ராஜா  -   மூவாயிரத்தி ஐநூறுக்கு மேலே குடுக்க முடியாது.  என்ன சொல்றீங்க?

 

கடை  -  சரி.

Credit: breathedreamgo.com

Credit: breathedreamgo.com

 

Glossary

வெலை price’

மலிவு  ‘being cheap, inexpensive’

பத்தி   பற்றி   ‘about’

பட்டு  ‘silk’

நூல் ‘cotton, thread’

காஞ்சிபுரம் ‘a town famous for silk saris’

கலர் ‘color’

நெறம்     நிறம் ‘color’

காட்டு (காட்ட) ‘show’

ரோஜா  ‘rose’

பூ  ‘flower’

பொருத்தம் ‘match’

கருப்பு ‘black’

கரை ‘border’

நாலாயிரம் ‘four thousand’

அதிகம் ‘being more’

கனம் ‘weight’

ஜரிகை ‘golden thread’

சார் ‘sir’

அனுப்பு (அனுப்ப) ‘spend’

மூவாயிரம் ‘three thousand’

ஐநூறு ‘five hundred’

எரநூறு       இருநூறு ‘two hundred’

கொறைவு ‘being less’

 

Related words

மல்லிகை                                                   ‘jasmine’

கனகாம்பரம்                                             ‘crossandra’

சாமந்தி                                                        ‘chrysanthemum’

மஞ்சள்                                                        ‘yellow, turmeric’

ஊதா                         நீலம்                         ‘blue’                                                              

காவி                                                             ‘saffron color’

பழுப்பு                                                            ‘brown, tan’

 

Pronunciation

The emphatic form may or may not enlist the sandhi of doubling the initial stop consonant. Accordingly, அழகாத்தான் has the variant spelling அழகாதான். The pronunciation will differ between voiceless stop and voiced stop depending on the presence or absence of sandhi.

எனக்கும்தான் is pronounced as எனக்குந்தான் in the previous conversation, where there is assimilation of the nasal at the end of the preceding word to the stop in the beginning of the following word with regard to their point of articulation. This assimilation takes place in fast pronunciation in which the pause between words disappears. ஒண்ணும் தெரியாது may be pronounced as ஒண்ணுந்தெரியாது

 

Exercises

 

  1. The terms of color are adjectives in the sentences below. Change the sentences where the color term is the predicate. Translate both sentences

Ex. இது செவப்பு எலை ‘This a red leaf’

   இந்த எலை செவப்பு ‘This leaf is red’

 

  1. இது கருப்புச் சட்டை
  2. இது வெள்ளைப் பூனை
  3. இது பச்சைப் பூ
  4. இது மஞ்சள் நெறப் பொடவை
  5. அவனுக்கு காவிப் பல்

 

  1. When you express a modal sense (e.g. இருக்க முடியாது ‘cannot be’) -ஆ is attached to the descriptive predicate. Make a modal sentence of the descriptive sentences you made in (1) after dropping the deictic modifier. Translate the sentences.

Ex. எலை செவப்பா இருக்க முடியாது 'A leaf cannot be red’

 

  1. In each set of the words below, one word does not belong to the same semantic or grammatical class of others. Identify that word and give its meaning.

Ex. கருப்பு, செவப்பு, நீளம், நீலம், மஞ்சள்

   நீளம் 'length’

 

a.       பூனை, நாய், மாடு, யானை, பால்

b.      அழகு, தலை, கை, கால், மூக்கு

c.       வா, குடு, போ ஓடு, நட

d.      மேலே, கீழே, வேறே, முன்னாலே, பின்னாலே

e.       காப்பி, பூரி, தோசை, இட்லி, பசி

 

  1. Write five words from memory that begin with ம and give their meaning.  ம் could be with any vowel such as  மா, மி, மீ etc.
  2. Write five words from memory that end ம் in and give their meaning.

 

  1. Fill in the blanks with the appropriate case form of the noun in parenthesis. Translate the sentences you made.

Ex. ------------------ சுத்தி கடை இருக்கு (கோயில்)

   கோயிலை சுத்தி கடை இருக்கு

  ‘There are stores around the temple’                                                          

 

a.       எங்க ------------- சுத்தி மரம் இருக்கு (வீடு)

b.      நீ ----------------- சுத்தி இங்கே வா (கார்)

c.       துணியை ------------ சுத்தி கட்ட வேண்டாம் (தலை)

d.      நீ --------------- பாத்து உக்கார். (நான்) [பாத்து 'facing’]

e.       ஒங்க -------------- பாத்து ஒரு கோயில் இருக்குலே? (வீடு)

f.         எல்லாரும் ----------- பாத்து சிரிக்கிறாங்க (நான்) [சிரி ‘laugh’]

g.      ------------- பாத்து போ (வீடு)

h.      எங்க ------------- அடுத்து ஒரு துணிக் கடை இருக்கு (வீடு)  [அடுத்து ‘next to’]

i.         தமிழ் ------------- அடுத்து இந்தி வகுப்பு வருது. (வகுப்பு)

j.         -----------ஒட்டி நெறைய லீவு வருது. (பொங்கல்) [ஒட்டி 'adjacent to]

 

  1. Fill in the blanks with the appropriate case form of the noun in parenthesis. Translate the sentences you made.

Ex. எங்க ----------------- பக்கத்துலே ஒரு துணிக் கடை இருக்கு (வீடு)

    எங்க வீட்டுக்கு பக்கத்துலே ஒரு துணிக் கடை இருக்கு

    ‘There is a textile shop near our house’

 

           a.தமிழ் ----------- பெறகு இந்தி வகுப்பு வருது (வகுப்பு)

     b. ஒன் பெட்டி ------------ அடிலே இருக்கு (மேசை) [அடிலே 'under’]

     c. ஒங்க ------------- முன்னாலே ஒரு கோயில் இருக்குலே? (வீடு)

     d. எங்க -------------- எதிரே மரம் இருக்கு (வீடு)

     e. நீ ------------- நேரே உக்கார் (நான்) [நேரே ‘straight’]

 

  1. Fill in the blanks with the accusative case form of the noun in parentheses. பத்தி ‘about’ indicates that the description is about the noun to which it is added. When the form in parentheses is a verb, make it a verbal noun to add the case suffix. Translate the sentences you made.

Ex. எங்க --------------- பத்தி ஒனக்கு தெரியாது (அப்பா)

      எங்க அப்பாவை பத்தி ஒனக்கு தெரியாது

                     ‘You don’t know about my father’

 

        1.--------------- பத்தி எனக்கு கொஞ்சம் சொல்லுங்க (இந்தியா)

        2. -------------- பத்தி எல்லாரும் என்ன சொல்றாங்க? (நான்)

        3. ஒனக்கு ---------------- பத்தி என்ன தெரியும்? (அமெரிக்கா)

        4. நான் தமிழ் ------------ பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க? (பேசு)

      5. -------------- பத்தியும் என்கிட்டே பேசாதே (யார்)

 

  1. Translate the sentences below that compare one thing in relation to another.

Ex. இட்லிக்கு தோசை நல்லா இருக்கு

    ‘Dosai is / tastes better than / compared to idli

 

          a.சென்னைக்கு மதுரை நல்ல ஊர்

          b. எங்க அக்கா எனக்கு ரெண்டு வருஷம் மூத்தவ [மூத்தவ ‘elder’]

                c.எங்க வீட்டுலே எல்லாருக்கும் எளையவ நான்தான் [எளையவ 'younger’]

          d. இந்தி படத்துக்கு தமிழ் படம் பரவாயில்லை

          e. சென்னைக்கு மதுரைலே இருக்கலாம்

 

  1. Fill in the blanks with the accusative case form of the form in parentheses. விட ‘than’ compares the noun to which it is added as of lesser degree in level than the corresponding noun in the sentence. When the form in parentheses is a verb, make it a verbal noun to add the case suffix. Translate the sentence you made.

Ex. எங்க -------- விட எங்க மாமா பணக்காரர் (அப்பா)

    ‘My uncle is richer than my father’

 

       1.----------------- விட நியு யார்க் பெரிய ஊர் (சிகாகோ)

       2. ------------- விட நல்லவன் யாரும் இல்லை (நீ)

       3. -------------- விட கெட்டிக்காரங்க யார்? (நாம்)

       4. என் தம்பி ---------- விட நல்லா படிக்கிறான் (நான்)

       5. எங்க அக்கா ---------- விட ஒரு வருஷம் முன்னாலே படிக்கிறா (நான்)

             6. -------------- விடவும் அவன் ஏழை இல்லை (யார்) [ஏழை ‘the poor’]

 7. -------------- விட மதுரைலே வசதி இருக்கு (சென்னை) [வசதி  

   ‘convenience’]

             8. தமிழ்--------------------- விட எழுதுறது கஷ்டமா? (பேச) [எழுது ‘write’]

       9. அவ ---------------- விட பாடுறது எனக்கு பிடிக்கும். (நடிக்க ‘to act’)

      10. நாம ----------------------- விட அவ பணக்காரி (நெனைக்க ‘to think’)

 

  1. Change the sentences you made in (10) substituting விட with போல.  போல ‘like’ compares things that are similar. Translate the sentence you made.

Ex. எங்க அப்பாவை விட எங்க மாமா பணக்காரர்

    எங்க அப்பாவை போல எங்க மாமா பணக்காரர்

    ‘My uncle is richer like my father’

 

  1. It is common in the sentences of similarity to add -உம் ‘also’ to the noun that is not compared with போல, but is the noun described comparatively. The meaning is the same. But, there is meaning difference in negative sentences. With -உம், the scope of negation covers both nouns with and without போல. Without -உம், the negation covers only the noun without போல. The sentences below have –உம். Write them without -உம் and differentiate the meaning of both sentences in translation.

Ex. எங்க அப்பாவை போல எங்க மாமாவும் பணக்காரர் இல்லை

    ‘My uncle is not rich either like my father’

    (= ‘my father and my uncle are not rich’)

    எங்க அப்பாவை போல எங்க மாமா பணக்காரர் இல்லை

    ‘My uncle is not as rich as my father’

 

       1.சிகாகோவை போல நியு யார்க்கும் சின்ன ஊர் இல்லை

       2. என் தம்பியை போல நானும் நல்லா படிக்கலை

       3. என்னை போல அவனும் ஏழை இல்லை

       4. தமிழை போல இந்தியும்  கஷ்டம் இல்லை

       5. சென்னையை போல மதுரைலேயும் பிரெஞ்சு படிக்க வசதி இல்லை [வசதி 'facility']

 

  1. To assert similarity in negative sentences, the emphatic -ஏ may be added to போல. Change போல in the given sentences in (12) to போலவே and translate them.

Ex. எங்க அப்பாவை போலவே எங்க மாமாவும் பணக்காரர் இல்லை

    ‘My uncle is not rich just like my father’

    (= ‘my father and my uncle are not rich’)

 

  1. Comparison of similarity may apply to a simile and is used. The simile may not carry the accusative case suffix and be in the nominative. Translate the sentences below.

            Ex.  அவ மயில் போல ஆடுறா

        ‘She dances like a peacock’

 

1.   இட்லி பூப் போல இருக்கு

2.   இவன் பூனை போல ராத்திரி உள்ளே வருவான் 

3.   இவர் எதுக்கும் கழுதை போல கத்துவார் [கழுதை ‘donkey’, கத்து ‘shout’]

4.   நான் கடல் போல ஒரு பெரிய வீடு கட்டப் போறேன் [ கடல் ‘sea’]

5.   நெலா போல அவ மொகம் அழகா இருக்கும் [நெலா ‘moon’, மொகம் ‘face’]

  

 

   

Handout

நூறு                                                              ‘100’

எரநூறு                    இருநூறு                 ‘200’

முன்னூறு              முந்நூறு                 ‘300’

நானூறு                                                       ‘400’

ஐநூறு                                                           ‘500’

அறநூறு                  அறுநூறு                 ‘600’

எழநூற்று               எழுநூறு                  ‘700’

எண்ணூறு                                                 ‘800’

தொளாயிரம்     தொள்ளாயிரம்         ‘900’

ஆயிரம்                                                       ‘1000’

ஆயிரத்தி பத்து    ஆயிரத்துப்பத்து  '1010'

ஆயிரத்தி நூறு    ஆயிரத்துநூறு      '1100'

ஆயிரத்தி தொளாயிரம்     ஆயிரத்துத்தொள்ளாயிரம்     '1900'

ரெண்டாயிரம்       இரண்டாயிரம்       ‘2000’

மூவாயிரம்                                                  ‘3000’

நாலாயிரம்                                                 ‘4000’

ஐயாயிரம்                                                   ‘5000’

ஆறாயிரம்                                                   ‘6000’

ஏழாயிரம்                                                     ‘7000’

எட்டாயிரம்                                                 ‘8000’

ஒம்பதாயிரம்      ஒன்பதாயிரம்           ‘9000’

பத்தாயிரம்                                                 ‘10000’

லச்சம்                  லட்சம், இலட்சம்      ‘100,000’

ஒரு லச்சத்து பத்தாயிரம்    ஒரு லட்சத்துப் பத்தாயிரம்     '1,10,000'

பத்து லச்சம்     பத்து லட்சம்               'one million'

கோடி                                                              10 million’

பத்துக்கோடி                                                100 million'

நூறு கோடி                                                   'one bilion'

 

Related Images: 
Sari shop.  Credit: breathedreamgo.com