12. ஆட்டோ கெடைக்குமா?

 

உரையாடல்  12                           ஆட்டோ கெடைக்குமா?

 

 

ராஜா  -  ரொம்ப சாமான் இருக்கு.  இதோடே நாம வீடு வரைக்கும் நடக்க

         முடியாது.

 

ஜிம்   -  பஸ்லே போகலாமா?

 

ராஜா  -  பஸ் இந்த தெரு வழியா வராது.  வண்டிலேதான் போகணும். 

 

ஜிம்   -  ஆட்டோவுலே போகலாமா? டாக்ஸிலே போகலாமா?

 

ராஜா  -  இங்கே டாக்ஸி கெடைக்காது. ஆட்டோவுலே போவோம்.

 

ஜிம்   -  இங்கே ஆட்டோ கெடைக்குமா?

 

ராஜா  -  அங்கே பாருங்க.  அந்த மூலைலே ஒரு ஆட்டோ நிக்குது.

 

ஜிம்   -  ஆமா.  நான் இதுவரை பாக்கவே இல்லை.  ஒண்ணுக்கு பின்னாலே

         ஒண்ணு வரிசையா கார் வருதே, நாம எப்படி குறுக்கே போக முடியும்?

 

ராஜா  -  இந்த தெரு திருப்பத்துலே இப்போ செவப்பு வெளக்கு தெரியுது. 

         அதுனாலே கார் இந்த பக்கம் வராது.  வாங்க, போவோம்.

 

ஜிம்   -  இப்போ எனக்கு பயம் இல்லை.

 

ராஜா  -  நீங்க பின்னாலே வாங்க.  ஆட்டோக்காரங்க வெள்ளைக்காரங்ககிட்டே 

         அதிகமா பணம் கேப்பாங்க.

 

ஜிம்   -  சரி.

 

ராஜா  -  ஆட்டோ, மேலமாசி வீதிக்கு போகணும்.  மீட்டர் இருக்கா?

 

ஆட்டோக்காரர்  -  இல்லை, சார். அறுபது ரூபா குடுங்க.

 

ராஜா  - என்னப்பா, நிதானமா கேள்.  நான் இந்த ஊர்க்காரன்தான்; 

        வெளியூர்க்காரன் இல்லை.

 

 

ஆட்டோ -  பெட்ரோல் வெலை அதிகமா இருக்கு, சார்.  அறுபது

         ரூபாய்க்கு கொறைவா கட்டாது, சார்.

 

ராஜா  -  அம்பது ரூபாய்க்கு வர்றியா?   நான் எப்பவும் அவ்வளவுதான்

         குடுப்பேன்.

 

வண்டி -  அம்பத்தெட்டு ரூபாயாவது குடுங்க, சார்.

 

ராஜா  -  ஒனக்காக அம்பத்து அஞ்சு ரூபா தர்றேன்.

 

வண்டி -- சரி, சார்.  ஒங்க இஷ்டம்.

 

ராஜா  -  ஜிம், வண்டிலே ஏறுங்க.  நேரமாச்சு.

Credit: indiaoutsidemywindow

 

Glossary

(Words after slash  are synonyms in colloquial Tamil)

சாமான்   ‘things, goods’

வரைக்கும்   வரை  ‘up to, until, as long as’

தெரு  ‘street’

வழியா  வழியாக  ‘though, by way of’

வண்டி ‘vehicle, cart’

ஆட்டோ      ஆட்டோரிக் ‌ஷா  ‘autoriksha, a three wheeler’

மூலை  ‘corner’

நில்லு (நிக்க) ‘stand, stop’

வரிசை ‘line’

கார்  ‘car’

குறுக்கே ‘across’

திருப்பம் ‘turn, turning

வெளக்கு ‘light, lamp’

பயம் ‘fear’

வெள்ளைக்காரன் ‘white man, foreigner’

மேலமாசி ‘name of a road’

வீதி ‘road’

மீட்டர்  ‘meter’

நிதானம் ‘balance, without excess’

வெளியூர் ‘out of town’

அதிகம்   / ஜாஸ்தி   ‘being more, excess, high’

பெட்ரோல்   ‘gasoline’

கொறைவு  ‘being less’

கட்டு (கட்ட) ‘be affordable’

தா (தர)  / குடு  ‘give’

இஷ்டம்  விருப்பம்   ‘wish’

ஏறு (ஏற) ‘get in, climb’

 

Related words

எதிர்                                                                          'opposite (adj)’

எதிரே                                                                        ‘opposite (adv)’

எதிரா                                    எதிராக                      ‘in opposition’

நேர்

நேரே

குறுக்கு

மெதுவா                  மெதுவாக                           ‘slowly, softly’

வேகம்                                                                       ‘speed, fast’

அவசரம்                                                                  ‘urgency, hurry’

கூடு (கூட)                                                              ‘increase, add’

கூட்டு (கூட்ட)                                                       ‘increase, add (something)’

கொறை (கொறைய)                                            ‘decrease, lessen

கொறை (கொறைக்க)                                       ‘decrease, lessen (something)’                                                            

உள்ளூர்                                                                   'local, domestic’

 

Spelling variation

டாக்ஸி                                டாக்சி                       ‘taxi’

 

 

Pronunciation

நிக்குது is pronounced நிக்கிது where the vowel உ in the second syllable is assimilated to the vowel இ in the first syllable just like பிடிக்குது is pronounced பிடிக்கிது. The vowel இ in the latter word is at the end of the root, whereas it is in the beginning of the root in the former word. Note the same assimilation when வீதிக்கு is pronounced வீதிக்கி.

 

Exercises

  1. The comparatives sentence of விட may keep the full sentence or truncate it. Change the truncated sentences below into full sentences. Translate the full sentences.

Ex. என்னைவிட என் தம்பி நல்லா படிக்கிறான்

    நான் படிக்கிறதை விட என் தம்பி நல்லா படிக்கிறான்

    ‘My younger brother studies better than I do’

 

1.      சிகாகோவை விட நியு யார்க்குலே கொறைவா காத்து அடிக்கும்

2.      சிகாகோவை விட நியு யார்க்குலே அதிகம் பனி பெய்யாது.

3.      என்னை விட நீங்க இந்த வேலையை நல்லா செய்வீங்க

4.      என்னை விட எங்க அம்மாவுக்கு என் தம்பியைதான் பிடிக்கும்

5.      என்னை விட எங்க அம்மாவுக்குதான் என் தம்பியை பிடிக்கும்

(Help: The comparison is between me and my brother in (4); it is between me and my mother in (5))

 

  1. The comparatives sentence of போல may keep the full sentence or truncate it. Change the truncated sentences below into full sentences. Translate the full sentences.

Ex. என்னைபோல என் தம்பி நல்லா படிக்கிறான்

    நான் படிக்கிறதை போல என் தம்பியும் நல்லா படிக்கிறான்

    ‘My younger brother too studies as well as I do’

 

  1. சிகாகோவை போல நியு யார்க்குலேயும் அதிகம் பனி பெய்யாது.
  2. என்னை போல நீங்களும் இந்த வேலையை நல்லா செய்வீங்களா?
  3. இந்த ஊர்லே ஒரு நாளை போல இன்னொரு நாள் வெயில் அடிக்காது
  4. என்னை போல எங்க அம்மாவுக்கு என் தம்பியையும் பிடிக்கும்
  5. என்னை போல எங்க அம்மாவுக்கும் என் தம்பியை பிடிக்கும்

(Help: The comparison is between me and my brother in (4); it is between me and my mother in (5))

 

 

  1. போல இருக்கு  or போல தெரியுது is added to a sentence to mean ‘it looks / seems’. Make the following sentences to mean this by adding போல இருக்கு / தெரியுது. Translate the sentences.

Ex. இங்கே யாரும் உக்காரலாம்

    இங்கே யாரும் உக்காரலாம் போல இருக்கு / தெரியுது

    ‘It seems / looks that anyone can sit here’

 

1.      நாளைக்கு மழை பெய்யும்

2.      ஒங்க அம்மா இண்ணைக்கு ஊர்லேருந்து வர்றாங்க

3.      யாரும் நேத்து வகுப்புக்கு போகலை

4.      இந்த வேலையை நான் செய்ய முடியாது

5.      நான் இந்தியாவுக்கு போகணும்

 

  1. The person whose point of view is expressed by போல இருக்கு is in the dative. When the verb has -ணும், the full sentence with போல இருக்கு to mean ‘it seems one is desirous’ translates as ‘feel like’. Translate the sentence below.

Ex. எனக்கு அவன் நாளைக்கு வருவான் போல இருக்கு

   It seems to me that he will come tomorrow’

 

1.      ஒனக்கு அவன் நாளைக்கு வருவான் போல இருக்கா?

2.      அவனுக்கு நாளைக்கு மழை பெய்யும் போல இருக்கா?

3.      எனக்கு இந்த வேலையை நானே செய்ய முடியாது போல இருக்கு

4.      எனக்கு அவனுக்கு எதுவும் தெரிய வேண்டாம் போல இருக்கு

5.      என்க்கு இந்தியாவுக்கு போகணும் போல இருக்கு

 

  1. The same meaning can be expressed by using -ன்னு that’ instead of போல ‘like’. Change the sentences in (4) using –ன்னு.

Ex. எனக்கு அவன் நாளைக்கு வருவான்னு இருக்கு

 

6. The same meaning can be expressed using  தோணுது 'it appears' instead of  இருக்கு. This can occur with போல and -ன்னு after the sentence. Change the sentences (4) and the sentences you made in (5) with the negative தோணலை. 'it does not appear'. Translate the sentences.

 Ex. எனக்கு அவன் நாளைக்கு வருவான் போல தோணலை

      எனக்கு அவன் நாளைக்கு வருவான்னு தோணலை

    'It doesn't appear to me that he will come tomorrow'

 

     7. Add -ன்னு நெனைக்கிறேன் to the sentences in (3) and translate them.

Ex. இங்கே யாரும் உக்காரலாம்னு நெனைக்கிறேன்

   ‘I think / believe that anyone can sit here’

 

   8. மாதிரி can be used in place of போல to express the same meaning of comparison. This form allows the noun (except the pronouns) without the accusative case suffix more   commonly than does போல. Change போல in the sentences in (2) with மாதிரி. Translate the sentences.

Ex. என்னை மாதிரி என் தம்பியும் நல்லா படிக்கிறான்

   ‘My younger brother too studies as well as me’

 

     9. Write the sentences below in Tamil.

Ex. I read until one in the night

   நான் ராத்திரி ஒரு மணி வரைக்கும் படிப்பேன்.

(Note: வரை is an alternate of வரைக்கும்)

 

1.      I am going to sleep from 6 o’clock to 10 o’clock

2.      This bus goes up to my house

3.      One can give up to 100 dollars for this table

4.      This matter will not go up to the minister (minister மந்திரி)

5.      Up to what time will you be here?

 

10. Fill in the blanks with the adjective of the two forms in parentheses. Translate the sentences

                        Ex. எங்க காரோட ----------- பக்கம் செவப்பு (வெளி, வெளியே)

                              எங்க காரோட வெளிப் பக்கம் செவப்பு

 The outer side of our car is red

 

1.      எங்க வீட்டுக்கு ------------- பக்கம் ஒரு ஆறு ஓடுது (மேலே, மேல் [ஆறு 'river’]

2.      ------ காலத்துலே இவ்வளவு போட்டி இல்லை (முன், முன்னாலே) [போட்டி ‘competition’]

3.      என் தம்பி ---------------- வழிலே போக மாட்டான் (நேரே, நேர்)

4.      எங்க --------- வீட்டுக்காரங்களோட நாங்க பேச மாட்டோம் (எதிர், எதிரே)

5.      எங்க வீடு ஒரு -------------- தெருவுலே இருக்கு (குறுக்கே, குறுக்கு)

  

11. Fill in the blanks with the adverb of the two forms in parentheses. Translate the sentences

Ex. பனிலே காரை ----------------- எடுக்க முடியலை (வெளி, வெளியே)

      பனிலே காரை வெளியே எடுக்க முடியலை

      (I) could not take the car out in the snow

 

1.      இந்த வேலைலே ------------- போக முடியாது (மேலே, மேல்)

2.      நான் வரிசைலே --------------- நிக்கிறேன் (முன், முன்னாலே)

3.      என் தம்பி வீட்டுக்கு -------------- போக மாட்டான் (நேரே, நேர்)

4.      எங்க வீட்டுக்கு ------------- போறதுக்கு வழி இல்லை (எதிர், எதிரே)

5.      நாம காலேஜுக்கு ---------------- போகலாம் (குறுக்கே, குறுக்கு)

 

12. அளவு 'extent' is similar to போல, but it compares the extent and translates as 'as much as, as .... as'. Change போல in the sentences below with அளவு and translate. The noun that is compared with is not the accusative case.

Ex. எங்க அப்பாவை போல எங்க மாமாவும் பணக்காரர்

    எங்க அப்பா அளவு எங்க மாமாவும் பணக்காரர்

     'My uncle is also as rich as my father'

1. சிகாகோவை போல நியு யார்க்கும் பெரிய ஊர்

2. ஒன்னை போல நல்லவன் யாரும் இல்லை

3. நம்மை போல கெட்டிக்காரங்க யார்?

4. என் தம்பி என்னை போல நல்லா படிக்கிறான்

5. யாரை போல அவன் ஏழை இல்லை?

 

13. Like  -ன்னு நெனை 'think', -ன்னு பார் can be added to sentences, commonly with the non-assertive -ஏ, to mean 'think of, consider, give weight to ( performing an act or a fact that will have an impact on another)'. Add -ன்னு பாக்கிறேன் to the sentences below and translate the sentences you made.

 

Ex. நான் இங்கே கொஞ்ச நேரம் உக்காரலாம்

      நான் இங்கே கொஞ்ச நேரம் உக்காரலாம்னு பாக்குறேன்

     'I think of sitting here for some time'

 

1. நாளைக்கு மழை பெய்யுமே

2. ஒங்க அம்மா நாளைக்கு ஊர்லேருந்து வர்றாங்களே

3. நாம இந்த வருஷம் இந்தியாவுக்கு போகணுமே

4. இந்த வேலை கஷ்டமே

5. இப்படி சொல்றது பொய்யே

 

 

Handouts

 

  1. Simple Verb Forms (Non-past)

 

Weak Verbs

 

Positive                      Negative

 

Human

 

போ                           போகாதே                           command (impolite)

போங்க                    போகாதீங்க                       command, request (polite)

 

போறான்                போகலை                                        present, definite in future, specific

போவான்                போகமாட்டான்                            future, less definite, generic, habitual

போகப்போறான்  போகலை, போகப்போகலை  definite prediction

                             The first form is common

 

Non-Human

(Imperative non-polite forms could be used with animals)

 

போகுது                   போகலை                           same as for human

போகும்                   போகாது

போகப்போகுது    போகாது, போகப்போகலை

                                    There is no form போகப்போகாது

 

Common

 

போகணும்                         போக வேண்டாம்             desire (wish), obligation (need)

போக முடியும்                 போக முடியாது               ability

போகலாம்                         போக வேண்டாம், போகக் கூடாது possibility, permission.

The first negative form is suggestion; the second prohibition.

The negative of possibility / probability is a complex form.

 

போகட்டும்                        போகவேண்டாம்

 

Strong Verb                                                    Meanings are same as for weak verbs.

 

Human

 

நட                                         நடக்காதே

நடங்க                                  நடக்காதீங்க

 

நடக்கிறான்                       நடக்கலை

நடப்பான்                            நடக்கமாட்டான்

நடக்கப்போறான்            நடக்கலை, நடக்கப்போகலை

 

Non-Human

 

நடக்குது                  நடக்கலை

நடக்கும்                  நடக்காது

நடக்கப்போகுது   நடக்கலை, நடக்கப்போகலை

 

Common

 

நடக்கணும்                        நடக்க வேண்டாம்

நடக்க முடியும்                நடக்க முடியாது

நடக்கலாம்                        நடக்க வேண்டாம், நடக்கக் கூடாது

நடக்கட்டும்                       நடக்க வேண்டாம்

 

 

2. Address forms reflecting social status difference

 

Singular                       Plural / polite

 

வா                             வாங்க

வா’ம்மா                  வாங்க’ம்மா (used with any younger female or when the status is neutralized; the plural form can be a polite form)

வா’ப்பா                     வாங்க’ப்பா (used with any younger or equal male; the plural cannot be a polite form)

வா’ய்யா                  வாங்க’ய்யா (similar to சார் but used in traditional settings; the singular is used for a person younger, but higher status wise)

வாடி                         வாங்கடி (used with very young girls; the plural form cannot be a polite form)

வாடா                        வாங்கடா (used with very young boys or socially very low male adults; the plural form cannot be a polite form)

(வா, சார்)                 வாங்க, சார் (this address term is used for an educated person or an official, the singular is an exception found in Chennai low status dialect which is known for lesser use of polite forms)

வா, தம்பி                வாங்க, தம்பி (used with any younger male like -ப்பா; the plural form is used when the social status of the young is higher or neutralized)

வா, பாப்பா             ---------------  (there is no polite or plural usage)

வா, தாத்தா             வாங்க, தாத்தா (appropriate kin term is used when a kin is addressed; the singular use with an elder person suggests intimacy)

வா, ராஜா                வாங்க, ராஜா (any personal name could be used)

 

The address forms can be used at the end of any sentence or words within it to express politeness. This is illustrated with the more common -ங்க. This form does not have a counterpart in formal Tamil.

 

இதுதான் எங்க வீடு'ங்க

இதுதான்'ங்க எங்க வீடு

இது யார் வீடு'ங்க?

இதுதான் பேராசிரியர் வீடு'ங்களா?

இதுதான் பேராசிரியர் வீடா'ங்க? (less common)

 

இவருக்கு தமிழ் தெரியும்'ங்க

இவருக்குதான்'ங்க தமிழ் தெரியும்

இவருக்கு எவ்வளவு தமிழ் தெரியும்'ங்க?

இவருக்கு தமிழ் தெரியும்'ங்களா?

இவருக்கு தமிழ் தெரியுமா'ங்க? (less common)

 

இவ நம்ம தெருவுலே இருக்கா'ங்க

இவ எந்த தெருவுலே இருக்கா'ங்க

இவ எந்த தெருவுலே'ங்க இருக்கா?

இவ இந்த தெருவுலே இருக்கா'ங்களா? ((less common)

இவ இந்த தெருவுலே இருக்காளா'ங்க?

Related Images: