13. வண்டிலே போக ஆசை

 

உரையாடல்  13                           வண்டிலே போக ஆசை

 

 

ராஜா  -  நீங்க இந்த வண்டிலேயே ஒங்க வீட்டுக்கு போறீங்களா?

 

ஜிம்   -  சரி.  எனக்கும் இன்னும் கொஞ்ச தூரம் ஆட்டோவுலே போகணும்

         போல இருக்கு.

 

ராஜா  -  சரி. இந்த எடத்துலே பஸ் அரை மணி நேரத்துக்கு ஒண்ணுதான் வரும்

 

ஜிம்   -  எங்க நாட்டுலே ஆட்டோ கெடையாது. அதுனாலே இதுலே போக

         ஆசையா இருக்கு.

 

ராஜா  -  (சிரிக்கிறார்.)  ஒங்க நாட்டை போல எங்க நாட்டுலே டாக்ஸி எல்லா

         எடத்துலேயும் கெடைக்காது. பணமும் அதிகம் ஆகும்.

        

ஜிம்:     மதுரைலே குளிர் இல்லை. அதுனாலே டாக்ஸி தேவை இல்லை.

 

ராஜா  -  உண்மைதான். ஆனா, ஆட்டோவுலேருந்து பொகை அதிகம் வருது.

         காத்து சுத்தமா இல்லை. அதுனாலே வியாதி வருது

 

ஜிம்   -  எங்க நாட்டுலே கார்னாலே அப்படி நடக்குது.  எந்த நாட்டுலேயாவது

         இப்போ சுத்தமான காத்து இருக்கா? சொல்லுங்க, பாப்போம்.

 

ராஜா  -  அது உண்மைதான். இந்தியாவுலேயும் முன்னைவிட இப்போ கார்

         அதிகமா இருக்கு. எல்லா எடத்துலேயும் பெட்ரோல், டீசல் பொகை. 

         ஊருக்குள்ளே நடக்கவே முடியலை.

 

ஜிம்   -  ஒரு நாட்டோட முன்னேற்றத்துக்கு இது ஒரு அடையாளம்!

 

ராஜா  -  ஆமா. இந்தியாவும் முன்னேறுது, இல்லையா?

 

ஆட்டோ  - சார், எனக்கு நேரமாகுது.  சில்லறை குடுங்க.  நான் நாலு

           எடத்துக்கு போகணும்.

 

ராஜா  -  அதுக்குள்ளே என்ன’ப்பா அவசரம்?  இவர் கோரிப்பாளையம் வரைக்கும்

         ஒன் வண்டிலேதான் வரப்போறார்.

 

ஜிம்   -  போய்ட்டு வர்றேன்.  நாளைக்கு ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி

         ஒங்ககிட்டே பேசணும்.

 

ராஜா  -  சரி.  வாங்க, பேசுவோம்.

Credit: satyam.tv

 

Glossary

எடம்      இடம் ‘place’

கெடையாது   /இல்லை  ‘no’

சிரி (சிரிக்க) ‘laugh. smile’

கெடை (கெடைக்க) ‘be available’

பொகை ‘smoke’

காத்து  காற்று  ‘air, wind’

சுத்தம் ‘being clean’

வியாதி  ‘disease, illness’

உண்மை ‘truth’

முன் ‘earlier (times)’

பெட்ரோல் ‘petrol, gasoline’

டீசல்  ‘diesel’

முன்னேற்றம் ‘progress’

அடையாளம் ‘sign, identity’

முன்னேறு (முன்னேற) ‘progress’

சில்லறை ‘change (of cash), fare’

நாலு எடம் ‘four (i.e. other) places’

அதுக்குள்ளே  ‘in a short time’

அவசரம் ‘hurry’

கோரிப்பாளையம் ‘a neighborhood in Madurai’

முக்கியமான ‘important’

விஷயம் ‘matter, news’

 

Related words

அழு (அழ)                                                                         ‘cry’

கொணம்                                                                            ‘being healthy’

கொணமாகு                                                                      get well’

உண்மையான                                                                  ‘true, truthful’

பொய்                                                                                   ‘lie’

பின்னேற்றம்                                                                    ‘regression’

பின்னேறு                                                                           ‘regress’

முக்கியம்                                                                           ‘importance’

செய்தி                                                                                  ‘news’

 

 

Exercises

 

 

 

 

  1. The subject or object -ஆ means that the thing is plenty and to the exclusion of others. Add -ஆ to the underlined nouns in the sentences below and translate them.

Ex. மலை மேலே ஓரு வீடு இருக்கு

    மலை மேலே வீடா இருக்கு

    ‘There is an array of houses on the hill’

    (i.e. ‘The hill top is full of houses’)

 

1. எங்க வீட்டுக்கு முன்னாலே மரம் இருக்கும்

2. எங்க மாமா காபி குடிப்பார்

3. அவருக்கு அமெரிக்காவுலேருந்து டாலர் வருது

4. அப்பாவுக்கு கோபம் வரும்

5. அவன் நல்ல புஸ்தகம் வாங்குறான்

 

 

 

  1. The repeated noun with -ஆ means that things are done sequentially one after another. It may also suggest plenty. Fill in the blanks having the noun in parentheses repeated in this sense.  Translate the sentences.

Ex. நாங்க ஓட்டு கேக்க ------------- போவோம் (வீடு)

     நாங்க ஓட்டு கேக்க வீடுவீடா போவோம்

   ‘We go house after house to ask for votes’

 

1.      நாங்க பொடவை வாங்க ------------------------- ஏறுனோம் (கடை)

2.      அவன் -------------------  படிக்கிறான் (புஸ்தகம்)

3.      நாம இதை ----------------- சாப்பிடுவோம் (ரெண்டு)

4.      நீ அவனுக்கு --------------- குடு (நூறு ரூபா)

5.      அவ -------------------------- படிக்கிறா (பெரிய புஸ்தகம்)

(Note: When the form has an adjective (modifier), it is enough to repeat the adjective and to have the noun (head) occur once)

 

  1. The interrogative pronoun is duplicated to mean plural and distributive nature of action. When the interrogative pronoun modifies a noun, the modifier alone is duplicated, not the whole noun phrase. Any case marker is added once to the second of the duplicated words. The first vowel of the second of the duplicated words is dropped in normal pronunciation when duplication results in a vowel sequence. Duplicate the interrogative form in the following sentences and translate them.

Ex.  நீ இந்தியாவுலே எந்த ஊருக்கு போறே?

    நீ இந்தியாவுலே எந்தெந்த ஊருக்கு போறே?

    ‘What all are the places you going to in India?’

 

1. நீ இந்தியாவுலே எங்கே போறே?

2. அவ கடைலே என்ன வாங்கப் போறா?

3. ஒங்க அப்பா அவரோட பணத்தை யாருக்கு குடுப்பார்?

4. ஒனக்கு என்ன புஸ்தகம் வேணும்?

5. நான் எப்ப என்ன செய்யணும்னு சொல்லு

 

  1. The quantifier pronoun (‘some’) is duplicated to mean plurality of unknowns. When this pronoun modifies a noun, the modifier alone is duplicated, not the whole noun phrase. Any case marker is added once to the second of the duplicated words. The first vowel of the second of the duplicated words is dropped in normal pronunciation when duplication results in a vowel sequence. Duplicate the quantifier form in the following sentences and translate them.

Ex. அவன் இந்தியாவுலே எந்த ஊருக்கோ போறான்

    அவன் இந்தியாவுலே எந்தெந்த ஊருக்கோ போறான்

    ‘He is going to all kinds of places in India’

 

1. அவன் இந்தியாவுலே எங்கேயோ போறான்

2. அவ கடைலே என்னமோ வாங்கப் போறா

3. யாரோ சாயங்காலம் எங்க வீட்டுக்கு வர்றாங்க

4. ஒங்க அப்பா அவரோட பணத்தை யாருக்கோ குடுப்பார்

                5. அவனுக்கு என்னமோ ஒரு புஸ்தகம் வேணும்

                (Note: When the quantifier is duplicated, the numerical adjective (ஒரு) is dropped)

 

5.      The deictic pronoun is duplicated to mean plural and distributive nature of action. When this pronoun modifies a noun, the modifier alone is duplicated, not the whole noun phrase. Any case marker is added once to the second of the duplicated words. The first vowel of the second of the duplicated words is dropped in normal pronunciation when duplication results in a vowel sequence. Duplicate the deictic form in the following sentences and translate them.

Ex.  நீ இந்தியாவுலே இந்த ஊருக்கு போ

      நீ இந்தியாவுலே இந்தந்த ஊருக்கு போ

      'Go to such and such places in India'

 

’           1. நீ இந்தியாவுலே இங்கே போ

            2. நீ வழிலே அங்கே நிக்க கூடாது

           3. ஒன் தம்பி அப்ப எங்க வீட்டுக்கு வருவான்

            4. அவனுக்கு பணம் குடுக்க எனக்கு பிடிக்கலை

            5, இவனுக்கு இதை குடுன்னு அப்பா சொல்றார்

 

 

  1. An adjective is duplicated to mean plurality and intensity (as an intensifier). The specific word of intensifier can be used optionally as reinforcement. Translate the following sentences.

Ex. இந்தியாவுலே நீ பாக்குறதுக்கு நல்ல நல்ல எடம் நெறைய இருக்கு

    ‘There are many good places for you to seen in India

 

      1. ஒனக்கு அமெரிக்காவுலே நல்ல நல்ல வேலை கெடைக்கும்

      2. எங்க காலேஜ்லே பழைய பழைய புஸ்தகம் எல்லாம் இருக்கு

         [பழைய ‘old’]

      3. சின்ன சின்ன பையங்க எல்லாம் காலேஜ்லே படிக்கிறாங்க

         [பையங்க ‘boys’]

      4. என் கல்யாணத்துக்கு ரொம்ப ரொம்ப பேர் வருவாங்க

        [கல்யாணம் ‘wedding’, பேர் ‘persons, people’]

       5. எங்க சொந்தக்காரங்க எல்லாம் வேறே வேறே ஊர்லே இருக்காங்க  

        [சொந்தகாரங்க ‘relatives]

 

      (Note: எல்லாம் is added with a noun to suggest plurality; this may be   ignored in translation)

 

  1. An adverb is duplicated to mean intensity of action. The adverbial suffix -ஆ  is added once to the second of the duplicated forms. Usual sandhi rules apply. Translate the sentences below.

Ex. ஏன் வேகவேகமா காலேஜுக்கு கெளம்புறே?

      ‘Why are you setting out to college very fast?’

      (i.e. ‘Why are rushing to college?)

 

     1. வாழைப்பழம் பெருசு பெருசா இருக்கு

     2. சொவர்லே அங்கங்கே கருப்பு கருப்பா இருக்கு [சொவர் ‘wall’]

     3. எங்க அக்கா அழகழகா படம் போடுவா [படம் போடு ‘draw pictures’]

     4. நீ மெதுமெதுவா வா; நான் முன்னாலே போறேன்

     5. நீ பணத்தை கொஞ்சங்கொஞ்சமா திருப்பி குடு (திருப்பி குடு ‘give back’)

 

  1. Other forms with -ஆ as in (1) above are duplicated to mean intensity and excessiveness. Note that when a noun with an adjective is duplicated as in (1: 5) above, only the adjective is doubled. Duplicate the underlined nouns in (1) above and translate the sentences you made.

Ex. மலை மேலே வீடு வீடா இருக்கு [மலை ‘hill’]

   ‘There are many, many houses on the hill’

    (i.e. The hill top is full of houses)

 

  1. When an inflected word other than the predicate is duplicated, it means that the act is performed repeatedly. Duplicate the underlined nouns in the sentences below and give the meaning of the sentences you made.

 

Ex. எங்க மாமா காபியை குடிக்கிறார்

    எங்க மாமா காபியை காபியை குடிக்கிறார்

    ‘My uncle drinks coffee again and again

 

1. அவன் கையை காட்டுறான் [காட்டு ‘show’]

2. அவன் ஊருக்கு போறான்

3. அவன் அவளோடே பேசுறான்

                4. அவன் என் முன்னாலே உக்கார்றான்

               5. அவன் திரும்பி பாக்குறான் [திரும்பி பார் ‘look back’]

 

  1. When the infinitive is duplicated, it gives a temporal sense of simultaneity (as opposed to the purposive sense). It often translates as ‘as one does something more and more or again and again’. Translate the sentences below.

Ex. போக போக எல்லாம் சரியா போகும்

   ‘As (days) go by, everything will become alright’

 

1. படிக்க படிக்க எனக்கு தமிழ் நல்லா புரியுது

2. நான் கேக்க கேக்க அவன் பணம் குடுப்பான்

3. நீ சொல்ல சொல்ல எனக்கு ஞாபகம் வருது [ஞாபகம் ‘memory’]

4. நேரம் ஆக ஆக எனக்கு இருக்க முடியலை

5. வர வர எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை

 

  1. When the duplicated form is ‘noun+க்கு noun’ of location or time, the meaning is ‘each and every’. Translate the sentences below.

Ex. ஆளுக்கு ஆள் ஒரு கதை சொல்றாங்க

    ‘Everyone is telling a (different) story’

 

1. அமெரிக்காவுலே வீட்டுக்கு வீடு கார் இருக்கு

                2. இந்தியாவுலே ஊருக்கு ஊர் கோயில் இருக்கும்

3. இந்த ஊர்லே தெருவுக்கு தெரு பெட்டிக் கடை இருக்கு [பெட்டிக் கடை '[kiosk']

4. வருஷத்துக்கு வருஷம் நெலைமை மோசம் ஆகுது [நெலைமை, மோசம்

5. நாளுக்கு நாள் அவன் சாப்பிடுறது கொறையுது [நாள் ‘day]

 

  1. There is an alternative way of saying ‘each and every’. It is ‘ஒவ்வொரு noun+case+உம்’. Give this alternative form of the sentences in (11). The appropriate case for the nouns of location is -லே.

Ex. ஒவ்வொரு ஆளும் ஒரு கதை சொல்றாங்க

 

  1. The numeral is duplicated optionally to mean distribution. Duplicate the numeral in the sentences below and translate. The meaning is distributive even without the duplication of the numeral when there is another distributive or a collective word (such as ஆளுக்கு, எல்லாருக்கும்).

Ex. ஆளுக்கு ஒரு பழம் குடு

    ஆளுக்கு ஒவ்வொரு பழம் குடு

    ‘Give each person a fruit’

 

1. ஒவ்வொரு காலேஜுலேருந்தும் அஞ்சு பேர் வருவாங்க

2. ஒவ்வொரு வீட்டுலேயும் ரெண்டு கார் நிக்குது

3. எனக்கு எல்லாத்துலேயும் நாலு பழம் வேணும்

4. எல்லா வகுப்புலேயும் பத்து பேர் இருக்காங்க

5. என் தம்பிக்கும் தங்கச்சிக்கும் நூறு ரூபா குடுக்கப் போறேன்

 

  1. ஒரே is used to modify a mass noun to mean ‘excessive. Translate the sentences below

Ex. நேத்து எனக்கு ஒரே வேலை

    ‘I had lot of work yesterday’

    (i.e. ‘I was too busy yesterday’)

 

1. இண்ணைக்கு பஸ்லே ஒரே கூட்டம் [கூட்டம் ‘crowd’]

2. இண்ணைக்கு காலைலே எனக்கு ஒரே பசி

3. அவன் சட்டை எல்லாம் ஒரே ரத்தம் [ரத்தம் ‘blood’]

4. தெனம் அவங்களுக்குள்ளே ஒரே சண்டை [சண்டை ‘fight’]

5. இந்தியாவுக்கு போறதை பத்தி எங்களுக்கு ஒரே சந்தோஷம்

Related Images: