14. நேரம் ஆச்சு

 

உரையாடல்  14                         நேரம் ஆச்சு

 

 

ராஜா  -  நீங்க நேத்து எத்தனை மணிக்கு வீட்டுக்கு போய் சேந்தீங்க?

 

ஜிம்   -  வீட்டுக்கு போய் சேர எட்டு மணி ஆச்சு.

 

ராஜா  -  ஏன் அவ்வளவு நேரம் ஆச்சு?

 

ஜிம்   -  ஆட்டோக்காரன் காக்கிச் சட்டை போடலை.  வழிலே போலீஸ்காரர்

                தடுத்து நிறுத்தி அபராதம் கட்ட சொன்னார்.

 

ராஜா  -  பெறகு?

 

ஜிம்   -  ஆட்டோக்காரன் ஒரு தடவை மன்னிக்க சொல்லி

              கெஞ்சுனான்.  போலீஸ்காரர் விடலை. கடைசிலே என்னை பாத்து

              பாவப்பட்டு விட்டார்.  இதுலே கொஞ்ச நேரம் போச்சு.  பெறகு

               பாலத்துமேலே ஆட்டோவாலே மெதுவாதான் ஏற முடிஞ்சுது.

 

ராஜா  -  இப்போ பஸ்லேயா வந்தீங்க?

 

ஜிம்   -  இல்லை.  சாயங்காலம் பஸ்லே ரொம்ப கூட்டமா இருக்கும். 

               பஸ்ஸுக்காக காத்து நின்னு அதிலே எடம் கெடைச்சு வர ரொம்ப

              நேரம் ஆகும்.  அதுனாலே நடந்தே வந்தேன்.

 

ராஜா  -  நான் இண்ணைக்கு காலைலே அந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்.

               ஒங்க அறைக்கு வந்து பாத்தேன்.  ஒங்களை காணோம்.

 

ஜிம்   -  அடடா!  காலைலே பத்து மணி வரைக்கும் நான் பக்கத்து அறைலே

              இருந்தேன்.  ஏதாவது முக்கியமான விஷயமா?

 

ராஜா  -  ஒண்ணும் இல்லை.  சும்மா பாக்க வந்தேன்.

 

ஜிம்   -  நான் ஒங்ககிட்டே ஒண்ணு கேக்க வந்தேன்.  நம்ம பேச்சு சுவாரஸ் யத்துலே

             அதை கேக்க மறந்தே போனேன்.

 

ராஜா  -  அதுனாலே என்ன?   இப்போ கேளுங்களேன்.

Credit: satyam.tv

 

Glossary

சேர் (சேர) ‘reach, join (a destination), join into (a place)

காக்கி  ‘brownish yellow color’

சட்டை ‘shirt’

போலீஸ்காரர் ‘police man’

தடு (தடுக்க) ‘block, prevent’                                               

நிறுத்து (நிறுத்த)‘stop, make stand’

அபராதம் ‘fine, penalty’

கட்டு (கட்ட) ‘pay, tie’

தடவை  ‘times (as in counting)’

மன்னி (மன்னிக்க) ‘excuse, forgive’

கெஞ்சு (கெஞ்ச) ‘plead, implore’

விடு (விட) ‘let go’

கடைசிலே ‘in the end’

பாவப்படு (-பட)  ‘take pity on, sympathize’

பாலம் ‘bridge’

காத்து நில் (-நிக்க) ‘wait standing’

கூட்டம் ‘crowd, meeting’

நட (நடக்க)  ‘walk’

அறை  ‘room’

காணோம் ‘not to be found, missing’

சும்மா  ‘for no good reason, just’

ஒண்ணு    ‘one thing, something’

பேச்சு  ‘conversation, talk’

சுவாரஸ்யம்  ‘being engrossed, interest

மற (மறக்க)   ‘forget’

 

Related words

கடைசி                                                         ‘end, last’

மொதல்                                                       ‘beginning, first’

மொதல்லே                                                ‘in the beginning, at first’

நடு                                                                 ‘middle’

நடுவுலே                                                     ‘in the middle’

சேர் (சேக்க)                                                 ‘join, join into (something)’

நடத்து (நடத்த)                                        'run (a place, an event)’ treat (a person)’

காத்திரு                                                      ‘wait’

எரக்கபடு (-பட)    இரக்கப்படு             'take pity on, sympathize’

மறதி                                                             ‘forgetfulness’

ஞாபகம்                                                       ‘memory, recollection’

 

 

 

Exercises

 

  1. ஆம் is added at the end of any sentence (but before the interrogative suffix -ஆ in interrogative sentences) to mean that the statement is a report of what someone said including the subject of the stated sentence or a  report of an inference by the speaker or a rumor heard by the speaker. In the interrogative sentence, ஆம் expresses distance from the source of the information. Make the sentences below into sentences that state that the information is not from the direct knowledge of the speaker. Translate the sentences you made. In (7) and (12) add ஆம் only to the first of the two sentences.

Ex. நான் தமிழ் படிக்கணும்

   நான் தமிழ் படிக்கணுமாம்

   ‘It is said / I am told that I must study Tamil’

 

        1. ராஜா தமிழ் சினிமா பாக்கமாட்டான்.

 

  1. ராஜா நேத்து ராத்திரி சாப்பிடலை.

 

  1. நான் தமிழ் படிக்கிறது யாருக்கும் தெரியாது.

 

  1. ஒனக்கு சிகாகோவுலே எடம் கெடைக்கும்.

 

  1. நாளைக்கு மழை பெய்யலாம்.

 

  1. நான் அடுத்த வாரத்துலேருந்து வேலைக்கு போகணும்.

 

  1. நீ தெனம் ஒரு கப் பால் குடிக்கணும்; டாக்டர் சொல்றார்.

 

  1. ராஜா எங்கே போகணும்.

 

  1. தம்பிக்கு தலை வலிக்குது.

 

  1. நான் இப்படி சொல்றது தப்பு.

 

  1. இந்த வீட்டுக்கு வாடகை ஆயிரம் ரூபா.

 

  1. நீ அமெரிக்காவுக்கு போறே; எங்கிட்டே சொல்லவே இல்லை.

 

  1. இந்த ஊர் பேர் என்ன?

 

  1. தம்பிக்கு இந்த விஷயத்தை யார் சொல்லப் போறாங்க?

 

  1. நான் இப்படி பேசுறது தப்பா?

 

  1. Make the sentences in (1) into quoted sentences by embedding them in ன்னு சொல்றாங்க, or in ன்னு கேக்குறாங்க when the sentence is a question. For the sentences (7) and (12), drop the second sentence. The question is made by adding -ஆ to the sentence. If the sentence is already a question, add just ன்னு கேக்குறாங்க.  When the verbs (சொல், கேள் etc.) do not have a specified subject, the quote is taken to be from a generic subject such as ‘they’. Translate the sentences you made.

Ex. நான் தமிழ் படிக்கணும்னு சொல்றாங்க

      ‘They / people say that I must study Tamil’

     நான் தமிழ் படிக்கணுமான்னு கேக்குறாங்க

      'They / people ask me if I should study Tamil'

 

 

  1. The sentences below are in non-past tenses. Make them into sentences in the past tense. Change the time adverbs appropriately, when necessary. Translate the sentences you made.

     Ex. நான் நாளைக்கு ஊருக்கு போறேன்

            நான் நேத்து ஊருக்கு போனேன்

            ‘I went to my home town yesterday’

 

 

  1. நீ தெனம் எவ்வளவு நேரம் ஓடுறே?

 

  1. அவன் என்னோடே ரெண்டு மணி நேரம் போன்லே பேசுவான்.

 

  1. நீ ஏன் என் காரை ஓட்டுறே?

 

  1. அவ எப்பவும் சோகமான பாட்டுதான் பாடுவா.

 

  1. நாங்க தமிழ் பாட்டு பாடப்போறோம்.

 

  1. அவன் ஒன்கிட்டே என்ன சொல்றான்?

 

  1. அவங்க அந்த விஷயத்தை என்கிட்டே சொல்லமாட்டாங்க.

 

  1. நான் இப்போ தூங்கலை.

 

  1. எங்க நாய் பந்தயத்துலே வேகமா ஓடும். [பந்தயம் ‘competition’]

 

  1. பூனை காலைலேருந்து என் மடிலே தூங்குது. [மடி ‘lap’]

   (Help: The past tense suffix of the verbs here is -ன்-)

 

 

4.      The sentences below are in non-past tenses. Make them into sentences in the past tense. Change the time adverbs appropriately, when necessary. Translate the sentences you made.

 

Ex. நீ எல்லாருக்கும் பணம் குடுப்பியா?

     நீ எல்லாருக்கும் பணம் குடுத்தியா?

   ‘Did you give money to everyone?’

 

  1. நீ ராத்திரி ஏன் தரைலே படுக்குறே? [தரை ‘floor’]

 

  1. பேராசிரியர் நாளைக்கு எனக்கு ஒரு புஸ்தகம் குடுப்பார்.

 

       3.   அவன் என் வேலையை கெடுப்பான் [கெடு ‘spoil]

 

       4.   அடுத்த ஞாயித்துக்கெழமை ஒரு தமிழ் படம் பாப்பமா? [அடுத்த ‘next’]

 

  1. வெள்ளிக்கெழமை நான் சினிமா பாக்கமாட்டேன். [சினிமா ‘cinema’]

 

  1. ராஜா வீட்டுக்கு வர ரொம்ப நேரம் எடுப்பான்.

 

  1. ராஜா வீட்டுக்கு வர ரொம்ப நேரம் எடுக்கும்.

 

  1. பூனை எப்பவும் தரைலேதான் படுக்கும்.

 

  1. ஏன் இந்த படத்தை அழிக்கிறே? [அழி ‘destroy, erase’]

 

  1. நான் மூணு வருஷம் தமிழ் படிப்பேன்.

 

  1. நீ என்கிட்டே அந்த விஷயத்தை ஏன் மறைக்கிறே? [மறை ‘hide’]

 

  1. நான் ஒன்கிட்டே எதையும் மறைக்கமாட்டேன்.

 

  1. இங்கே மசாலா தோசை கெடைக்கும்.

 

  1. இந்த நாய் யாரையும் கடிக்காது. [கடி ‘bite’]

 

  1. நாய் காலை புஸ்தகத்து மேலே வைக்குது. (வை ‘place (down)’

            (Help: The past tense suffix for the verbs here is -த்த்- or -ச்ச்- )

 

 

5.      The sentences below are in non-past tenses. Make them into sentences in the past tense. Change the time adverbs appropriately, when necessary. Translate the sentences you made.

Ex. காத்துலே மரம் கீழே விழுது [விழு ‘fall’]

       காத்துலே மரம் கீழே விழுந்துது

       ‘The tree fell down in the wind’

 

 

   1.நீ அம்மா பக்கத்துலே உக்கார்றியா? [உக்கார் ‘sit’]

 

   2. பூனை அம்மா மடிலே சந்தோஷமா உக்காரும்.

 

   3.  அவன் ஒரு எடத்துலே ஒரு நிமிஷம்கூட உக்காரமாட்டான். [எடம் ‘place’, நிமிஷம் ‘minute’)

 

   4.  ஒன் புஸ்தகம் மேஜைலேருந்து கீழே விழுது. [விழு ‘fall’]

 

  5.  இந்த சட்டை கிழியாது. (கிழி ‘get torn, tear’)

 

  6.  இந்த சட்டை எப்படி கிழியும்?

 

  7.  சூரியன் மேகத்துக்கு பின்னாலே மறையுது. [சூரியன் ‘sun’, மேகம் ‘cloud’, மறை ‘be hidden, disappear’]

 

   8.  மழைலே படம் அழியுது [அழி ‘ be erased, be washed out]

 

   9.  பிளாஸ்டிக் பைனாலே ஒலகம் அழியும். [பிளாஸ்டிக் பை ‘plastic bag’,  ஒலகம் ‘world, earth’, அழி ‘be destroyed’]

 

 10.  நீ இண்ணைக்கு சாயங்காலம் என்ன செய்றே?

     (Help: The past tense suffix of these verbs is -ந்த்- or -ஞ்ச்-)

 

 

6.      The sentences below are in non-past tenses. Make them into sentences in the past tense. Change the time adverbs appropriately, when necessary. Translate the sentences you made.

Ex. ஒன் புஸ்தகம் வீட்டுலே இருக்கா?

     ஒன் புஸ்தகம் வீட்டுலே இருந்துதா?

    ‘Was your book at your home?’

.

 

 

1.      நான் தெனம் அஞ்சு மைல் நடப்பேன்.

 

2.     இண்ணைக்கு ஒரு வேலையும் நடக்கலை.

 

 

3.      ஒன் ஒதவியை நான் மறப்பனா? [ஒதவி ‘help’]

 

4.      இந்த படம் எவ்வளவு நாள் நடக்கும்?

 

5.      நீங்க எந்த ஊர்லே இருக்கீங்க?

 

6.      எங்ககிட்டே ஒரு நல்ல கார் இருக்கு.

 

7.      வெயில்காலத்துலே பால் சீக்கிரம் கெடுது. [வெயில்காலம் ‘summer’, கெடு ‘get spoiled’]

 

8.      அவன் வேலைக்கு வெள்ளை சட்டை போடுவான். [போடு ‘put on’]

 

9.      நீ ராத்திரி என்ன சாப்பிடுவே? [சாப்பிடு ‘eat’]

 

10.  ஒன்னோடே சாப்பிடுறதுக்கு நீ யாரை கூப்பிடுவே? [கூப்பிடு ‘call, invite’]

       (Help: The past tense suffix of these verbs is -ந்த்- or –ட்ட்-)

 

 

7.      The sentences below are in non-past tenses. Make them into sentences in the past tense. Change the time adverbs appropriately, when necessary. Translate the sentences  you made

    Ex. நான் ஒங்க அப்பாவை கேப்பேன்  

          நான் ஒங்க அப்பாவை கேட்டேன்

         ‘I asked your father’

 

  1. நான் ராத்திரி படுக்கிறதுக்கு முன்னாலே பாட்டு கேப்பேன்.

 

       2.  பக்கத்து வீட்டுலே என்னமோ சத்தம் கேக்குது. [சத்தம் 'noise’]

 

      3.  அவன் எல்லார்கிட்டேயும் பணம் கடன் கேக்குறான். [கடன் ‘loan’]

 

     4.   அந்த கடைலே என்ன விக்கிறாங்க? [ வில்லு ‘sell’]

 

     5.   அந்த கடைலே என்ன விக்குது?

 

     6.   இந்த பந்து ஏன் மெதுவா உருளுது? [பந்து ‘ball’, உருள் ‘roll’]

 

     7.   தம்பி இப்பதான் மொதல்லே கோயிலை சுத்தி உருள்றான்.

 

     8.   சாப்பிடுறதுக்காக மாட்டை கொல்லுவாங்களா? [மாடு ‘cow, bull’, கொல்லு ‘kill’]

 

     9.  நீ பணத்துக்காக யாரையும் கொல்லுவியா?

 

   10.  நீ பஸ்ஸுக்காக எவ்வளவு நேரம் நிக்கிறே? [நில்லு ‘stand’]

 

   11.  பாப்பா ஏன் அழுவுது? [பாப்பா ‘baby’, அழு ‘cry’]

 

    12.  ஒன்னை அம்மா ஏன் வைறாங்க? [வை ‘scold’]

 

 

    13.  நீ வீட்டுப் பாடம் செய்றியா?

 

    14.  நான் தெனம் ஒரு நல்ல கனவு காண்றேன் / காங்கிறேன். [கனவு ‘dream’, காண் ‘see’]

 

    15.  இந்த மாடு என்ன தின்னுது / திங்குது? [தின்னு 'eat (snacks)’, (animals) eat’]

      (Help: The past tense suffix of these verbs is -ட்ட்-, -த்த்-, -த்-, -ண்ட்-, or -ன்ன்-)

 

 

 

8.  The verbs in the sentences below belong to different classes with regard to past tense conjugation. Make the right past tense form of the verbs in non-past. Translate the sentences you made.

       Ex. இந்த வாக்கியங்களை நீங்க எழுதுறீங்களா

            இந்த வாக்கியங்களை நீங்க எழுதுனீங்களா?

            ‘Did you write these sentences?’

 

 

  1. நாங்க வெயில்காலத்துலே இந்தியாவுக்கு போவோம்.

 

       2.  அவ பொங்கலுக்கு என்ன பாட்டு பாடுவா?

 

      3.  அவன் பொங்கலுக்கு என்ன சட்டை போடுவான்?

 

      4.   நீ எத்தனை மணிக்கு படுப்பே?

 

      5.  நீ எவ்வளவு நேரம் படிப்பே?

 

      6.  நீ என் தூக்கத்தை கெடுக்கிறே. [தூக்கம் ‘sleep’]

 

      7.  நீ பேசுறதுனாலே என் தூக்கம் கெடுது.

 

     8.   நீ என்கிட்டே எதையோ மறைக்கிறே.

 

     9.   எனக்கு ஒன் மேலே கோபம் கொறையுது. (கொறை ‘get lessened’)

 

    10. ராத்திரி பத்து மணிக்கு நான் இந்த வேலையை முடிப்பேன். [முடி ‘finish’]

 

   11.   ராத்திரி பத்து மணிக்கு இந்த வேலை முடியும். [முடி ‘be finished’]

 

 

   12.  ஒன்னாலே இந்த வேலையை செய்ய முடியுமா?

 

   13.  அவனுக்கு தமிழ் படிக்க தெரியுது.

 

   14.  நீ எப்படி எல்லாத்தையும் இப்படி மறக்கிறே?  

 

   15.  எனக்கு ஒன் மேலே கோபம் இருக்கு.

 

   16.  அவ ஏன் கையை என் மேலே வைக்கிறா? [வை ‘place’]

 

   17.  அவ ஏன் என்னை வைறா?

 

  18.  அப்பா அம்மாகிட்டே என்ன சொல்றார்?

 

  19.  நீ ஏன் எங்க வீட்டுக்கு முன்னாலே நிக்கிறே?

 

   20.  பூனை எலியை கொல்லுமா?

 

  21.  கிறிஸ்துமஸ் சமயம் கடைலே புது புது சாமான் விப்பாங்க. [சமயம் ‘time’]

 

  22.  கிறிஸ்துமஸ்ஸுக்கு சாமான் வாங்க நான் அப்பாகிட்டே பணம் கேப்பேன்.

 

  23.  பொங்கலுக்கு எனக்கு புது சட்டை கெடைக்கும்.

 

  24.  தீபாவளிக்கு நாங்க நெறைய பலகாரம் சாப்பிடுவோம். [தீபாவளி ‘a festival of lights. பலகாரம் ‘snacks’]

 

   25.  நாய் எங்கே இவ்வளவு வேகமா ஓடுது?

 

 

9.      Write from your memory five words that begin with க- or any other vowel combination of this consonant and another five words that end in -ன்.

 

10.   One word in each of the groups of words does not belong to the same grammatical category of other words in the group. Identify that word.

 

1. பாட்டு, பட்டு, பாடு, பெட்டி, அடி

2. பேசு, போடு, போ, பொகை, பார்

3. நல்ல, அழகான, கெட்ட, சீக்கிரம், புது

4. அதிக, கொறைவா, முன்னாலே, மெதுவா, முக்கியமா

5. வர, நட, பாட, வா'ங்க, படிக்க

 

 11. Match the nouns in the first row with the verbs in the second row by their meaning and derivation.

a.       படிப்பு 'education’, பேச்சு ‘talk’, பாட்டு ‘song’, படுக்கை ‘bed’, தூக்கம் ‘sleep’

 

b.      படு, பாடு, படி, தூங்கு, பேசு

    

 

Handouts

 

1.    Verb Conjugation: Past tense markers

 

Tamil verbs divide into two classes called weak verbs and strong verbs. This classification is not based on any formal or semantic properties of the verb. The membership of verbs in each class has to be learnt lexically. The tense marker is placed immediately after the stem of the verb with some change of the final vowel and the final consonant with the vowel like deletion or assimilation, in the case of some verbs. The stem of most verbs is the imperative form of the verb; i.e. the form used in command. The tense marker is followed by person-number-gender marker, called agreement marker as it agrees with the person-number-gender of the subject of the sentence. The verbs inflected with the agreement marker are called finite verbs, as they close the sentence. The verbs with markers or auxiliary verbs to express mood (like expressing desire, obligation, suggestion, possibility, probability, permission etc and the negation of these) do not have agreement marker and many of them do not have tense marker and some may not have a subject in the bare form of the noun. When the subject is neuter, i.e. non-human, the tense marker may not be present explicitly in some verbs and in some conjugation.

 

The marking of tense in the verb is called conjugation. The present tense has the marker /-ற்-/ with weak verbs and /-கிற்-/ with strong verbs. The future tense has the marker /-வ்-/ for weak verbs and /-ப்ப்-/ for strong verbs. The weak or strong class of the verb is indicated by the infinitive form (the form of the type 'to do') of the verb: /-அ/ with weak verbs and /-க்க/ with strong verbs.

 

The past tense has more than two markers cutting across weak/strong classes. Its number varies according to how much one is willing to have an abstract form for the tense marker and derive the physical form by a set of rules of deletion and assimilation. Given below is one classification of past tense markers and the verbs with which they occur. Choice of a particular past tense marker for a given verb is not dictated by the meaning or form of the verb, though some formal clues may be there, which are not, however, without exceptions.

 

The past tense markers in spoken Tamil exhibit differences from them in written Tamil and it is possible to relate them by rules of deletion and assimilation. In a few cases, a verb in the two varieties of Tamil may take different past tense markers. The past tense markers in written Tamil are also given below.

 

1. /-ன்-/

Only with weak verbs. Verbs end in -Cu, where C is (historically or phonemically) a stop consonant and the verb is monosyllabic and has a long vowel or double stop consonants or is polysyllabic.

 

Ex. ஓடு 'run', ஓட 'to run' ஓடுனான் 'he ran'

    ஒட்டு 'stick', ஒட்ட 'to stick' ஒட்டுனான் 'he stuck'

    ஓட்டு 'drive', ஒட்ட 'to drive' ஓட்டுனான் 'he drove'

    முழுகு 'dip self', முழுக 'to dip', முழுகுனான் 'he dipped'

    ஒதுக்கு 'put aside', ஒதுக்க 'to put aside' ஒதுக்குனான் 'he put aside'

    விழுங்கு 'swallow', விழுங்க 'to swallow', விழுங்குனான் 'he swallowed'

    பேசு 'talk', பேச 'to talk', பேசுனான் 'he talked'

    தேறு 'pass (an exam)', தேற 'to pass' தேறுனான் 'he passed'

Other verbs that take this past tense marker, which have a different ending include

    போ 'go', போக 'to go' போனான் 'he went'

    எண்ணு 'count', எண்ண 'to count' எண்ணுனான் 'he counted'

    இருமு 'cough', இரும 'to cough' இருமுனான் 'he coughed'

    கழுவு 'wash', கழுவ 'to wash' கழுவுனான் 'he washed'

 

In the non-human finite form the verb, this past tense marker is absent. Instead, a different agreement marker (உ)ச்சு (instead of the usual

(உ)து) is used.

    ஓடுச்சு 'it ran' etc

 

The corresponding past tense marker in written Tamil is /-இன்-/. The corresponding conjugated forms are

ஓடு, ஓட, ஓடினான்

ஒட்டு, ஒட்ட, ஒட்டினான்

ஓட்டு, ஓட்ட, ஓட்டினான்

முழுகு, முழுக, முழுகினான்

ஒதுக்கு, ஒதுக்க, ஒதுக்கினான்

விழுங்கு, விழுங்க, விழுங்கினான்

பேசு, பேச, பேசினான்

தேறு, தேற, தேறினான்

போ, போக, போனான்

எண்ணு, எண்ண, எண்ணினான்

இருமு, இரும, இருமினான்

கழுவு, கழுவ, கழுவினான்

ஓடிற்று or ஓடியது

(ஓடிற்று in writing (via ஓடித்து) becomes ஓடுச்சு in speech)

 

2a. /-த்த்-/

Only with strong verbs. The verbs end in -Cu, where C is (historically or phonemically) a stop consonant and are monosyllabic with a short vowel, or they are of any syllabic length when the ending is -ழு (ழ்), று or -ர்(ரு)

 

Ex. படு 'lie down', படுக்க 'to lie down' படுத்தான் 'he lied down'

    கெடு 'spoil something', கெடுக்க 'to spoil' கெடுத்தான் 'he spoiled'

    வகு 'divide', வகுக்க 'to divide' வகுத்தான் 'he divided'

    அறு 'cut', அறுக்க 'to cut' அறுத்தான் 'he cut'

    இழு 'pull', இழுக்க 'to pull' இழுத்தான் 'he pulled'

    பார் 'see', பாக்க 'to see' பாத்தான் 'he saw'

    கவிழ் 'turn upside down', கவுக்க 'to turn upside down' கவுத்தான் 'he turned upside down'

 

The non-human finite form is

படுத்துது or படுத்துச்சு 'it lay down' etc

 

The corresponding written forms are

 

படு, படுக்க, படுத்தான்

கெடு, கெடுக்க, கெடுத்தான்

வகு, வகுக்க, வகுத்தான்

அறு, அறுக்க, அறுத்தான்

இழு, இழுக்க, இழுத்தான்

பார், பார்க்க, பார்த்தான்

கவிழ், கவிழ்க்க, கவிழ்த்தான்

படுத்தது

 

2b. /-ச்ச்-/

Only with strong verbs. The verbs are of the kind in (2a), but end in -, -, or ய் (யி). In other words, -ச்ச்- is a variant of -த்த்- conditioned by the preceding vowel.

 

Ex. படி 'read', படிக்க 'to read', படிச்சான் 'he read'

    கடி 'bite', கடிக்க 'to bite', கடிச்சான் 'he bit'

     சபி 'curse', சபிக்க 'to curse', சபிச்சான் 'he cursed'

    வசி 'reside', வசிக்க 'to reside', வசிச்சான் 'he resided'

    அரி 'pester', அரிக்க 'to pester', அரிச்சான் 'he pestered'

    கிழி 'tear', கிழிக்க 'to tear', கிழிச்சான் 'he tore'

    மறை 'hide something', மறைக்க 'to hide', மறைச்சான் 'he hid'

    வை 'put down', வைக்க 'to put down', வைச்சான் 'he put down'

     தேய் 'rub'. தே(ய்)க்க 'to rub', தேச்சான் 'he rubbed'

 

The non-human finite form is

    படிச்சுது or படிச்சுச்சு 'it read' etc

 

The corresponding written forms (which do not change /-த்த்-/ to /-ச்ச்-/) are

 

    படி, படிக்க, படித்தான்

    கடி, கடிக்க, கடித்தான்

    வசி, வசிக்க, வசித்தான்

    அரி, அரிக்க, அரித்தான்

    கிழி, கிழிக்க, கிழிச்சான்

    மறை, மறைக்க, மறைத்தான் 

    வை, வைக்க, வைத்தான்

    படித்தது

 

3a. /-ந்த்-/

With weak verbs of the kind in (2a) other than the ones that end -Cu (see (5) for these exempted verbs), where C is not a stop consonant (Note that historically the stop consonant -று in this class behaves like the flap consonant -ர் (ரு)). Note that many of the transitive verbs in (2) (i.e. verbs that take an object), have a pair identical in form that is intransitive (i.e. verbs that do not take an object). The intransitive verbs are all weak verbs and the difference in transitivity (i.e. the ability to take an object) is in the past tense marker, and not in the form of the verb.

 

Ex. வா 'come',  வர 'to come',  வந்தான் 'he came' ( வா changes to வ)

    உக்கார் sit down',  உக்கார 'to sit down',  உக்காந்தான் 'he sat down'  ( ர் is dropped)

    விழு 'fall down'. விழ 'to fall down'. விழுந்தான் 'he fell down'

    அசரு 'get tired', அசர 'to get tired', அசந்தான் 'he got tired' ( ர் is dropped)

    கவுழ் 'tumble', கவுழ 'to tumble', கவுந்தான் 'he stumbled' (ழ் is dropped)

 

The non-human finite form is

   வந்துது or வந்துச்சு 'it came'

    உக்காந்துது or உக்காந்துச்சு 'it sat down'

    விழுந்துது or விழுந்துச்சு 'it fell down' etc

   அறு 'get snapped',  அற 'to get snapped', அறுந்துது or அறுந்துச்சு 'it got snapped'  (-று may be dropped giving அந்துது or அந்துச்சு)

 

The corresponding written forms are

    வா, வர, வந்தான்

    உட்கார், உட்கார, உட்கார்ந்தான்

    விழு, விழ, விழுந்தான்

    அசர், அசர, அச(ர்)ந்தான்

    கவிழ், கவிழ, கவிழ்ந்தான்

    அறு, அற, அறுந்தது

    விழுந்தது

 

3b. /-ஞ்ச்-/

Only with weak verbs. The verbs are of the kind in (3a), but end in , or ய்(யி), of which (ய்(யி) is dropped.

 

Ex. கிழி 'get torn', கிழிய 'to get torn', கிழிஞ்சுது 'it got torn'

    அழி 'get destroyed', அழிய 'to get destroyed', அழிஞ்சான் 'he got destroyed'

    மறை 'disappear', மறைய 'to disappear', மறைஞ்சான் 'he disappeared'

    பாய் 'leap', பாய to leap', பாஞ்சான் 'he leaped'

    நை 'to get crushed', நைய 'to get crushed, நைஞ்சுது 'it got crushed'

    செய் 'do', செய்ய 'to do', செஞ்சான் 'he did'

 

The non-human finite form is

    அழிஞ்சுது or அழிஞ்சுச்சு 'it got destroyed' etc

 

The corresponding written forms are

 

    கிழி, கிழிய, கிழிந்தது

    அழி, அழிய, அழிந்தான்

    மறை, மறைய, மறைந்தான்

    பாய், பாய, பாய்ந்தான்

    நை, நைய, நைந்தது

    செய், செய்ய, செய்தான்

    அழிந்தது

(Note that செய் belongs to the class of verbs in (8a) in written Tamil, but to (3b) in spoken Tamil.

 

4. /-ந்த்-/

With strong verbs that end in -.

 

Ex. நட 'walk', நடக்க 'to walk', நடந்தான் 'he walked'

    மற 'forget', மறக்க 'to forget,. மறந்தான் 'he forgot'

 

The non-human finite form is

    நடந்துது or நடந்துச்சு 'it walked'

 

The corresponding written forms are நட, நடக்க, நடந்தான், நடந்தது

 

5a. /-ட்ட்-/

With weak verbs. The verbs are monosyllabic with a short vowel and they end in -டு, which is a retroflex stop. The short vowel differentiates these verbs from those in (1); being weak differentiates it from the verbs of similar form in (2a). But there are a few weak verbs in this class that end in -டு, but have a long vowel or are polysyllabic. These are exceptions to (1). Being weak verbs, some of them may the intransitive counterpart of the verbs of similar form in (2a).

 

Ex. கெடு 'get spoiled', கெட 'to get spoiled', கெட்டான் 'he got spoiled'

    போடு 'put down', போட 'to put down' போட்டான் 'he put down'

    சாப்பிடு 'eat', சாப்பிட 'to eat', சாப்பிட்டான் 'he ate'

 

The non-human finite form is

    கெட்டுது or கெட்டுச்சு 'it got spoiled' etc

 

The corresponding written forms are

    கெடு, கெட, கெட்டான்

    போடு, போட, போட்டான்

    சாப்பிடு, சாப்பிட, சாப்பிட்டான்

    கெட்டது

 

The following have a small set of verbs in each of their class.

 

6a. /-ட்ட்-/

 

With strong verbs that end in the retroflex liquid consonant -ள்(ளு), which is dropped. There is no verb with a short vowel in this class. This marker is similar to /-த்த்-/ of (2a) and is conditioned by the preceding retroflex.

 

Ex. கேள் 'ask', கேக்க 'to ask', கேட்டான் 'he asked'

 

The non-human finite form is

    கேட்டுது or கேட்டுச்சு 'it asked'

 

The corresponding written forms are

     கேள், கேட்க, கேட்டான்

     கேட்டது

 

6b. /-த்த்-/

With strong verbs that end in the alveolar liquid consonant -ல்(லு), which is dropped. There is no verb with a long vowel in this class.

 

Ex. வில்லு 'sell', விக்க 'to sell', வித்தான் 'he sold'

 

The non-human finite form is

    வித்துது of வித்துச்சு 'it sold' etc

 

The corresponding written forms are

    வில், விற்க, விற்றான்

    விற்றது

(Written -ற்ற்- is spoken -த்த்-)

 

7a. /-ண்ட்-/

 

With weak verbs that end in the retroflex liquid consonant -ள்(ளு), which is dropped. The marker is similar to /-ந்த்-/ of (3a) and is conditioned by the preceding retroflex. But unlike it, there is no pairing with a transitive counterpart.

 

Ex. ஆளு 'rule', ஆள 'to rule', ஆண்டான் 'he ruled'

    உருள் 'role self', உருள 'to roll', உருண்டான் 'he rolled'

 

The non-human finite form is

    உருண்டுது or உருண்டுச்சு 'it rolled' etc

 

The corresponding written forms are

    ஆள், ஆள, ஆண்டான்

    ஆண்டது

    உருள், உருள, உருண்டான்

    உருண்டது

 

7b. /-ன்ன்-/

With weak verbs that end in alveolar liquid consonant -ல்(லு), which is dropped. There is no verb with a long vowel in this class.

 

Ex. கொல்லு 'kill', கொல்ல 'to kill', கொன்னான் 'he killed'

 

The non-human finite form is

   கொன்னுது or கொன்னுச்சு 'it killed' etc

 

The corresponding written forms are

    கொல், கொல்ல, கொன்றான்,

    கொன்றது

(Written -ன்ற்- is spoken -ன்ன்-)

 

8a. /-த்-/

Only with weak verbs. It is a small set of verbs that are monosyllabic with short vowel and end in -ழு. The verbs have the same form as those in 3(a).

 

Ex. அழு 'cry', அழ 'to cry' அழுதான் 'he cried'

 

The non-human finite form is

    அழுதுது or அழுதுச்சு 'it cried'

 

The corresponding written forms are அழு, அழ, அழுதான், அழுதது. The verbs of this class that end in –ய்(யி) or -ஐ take this past tense marker in written Tamil (not -nj- as in spoken Tamil given in 3(b).

 

     செய்,  செய்ய, செய்தான்

     செய்தது

     வை,  வைய, வைதான்

      வைதது

 

 

 

8b. /-ட்-/

Only with weak verbs that end in the retroflex nasal -ண்(ணு)

 

Ex. காண் 'see', காண 'to see', கண்டான் 'he saw'

(The infinitive alternates with the pseudo strong verb form காங்க)

 

The non-human finite form is

    கண்டது or கண்டுச்சு 'it saw' etc

 

The corresponding written forms are

    காண், காண, கண்டான்

    கண்டது

 

8c. /-ன்-/ (This class is different from the class (1) because the past tense marker in the participial forms is different).

Only with weak verbs than end in the alveolar -ன்(னு). This is rare, though the reportive verb ()ன்(னு) 'say' is very common.

 

Ex. தின்னு 'eat', தின்ன 'to eat' தின்னான் 'he ate'

(The infinitive alternates with the pseudo strong verb form திங்க)

 

The non-human finite form is

     தின்னுது or தின்னுச்சு 'it ate' etc

 

The corresponding written forms are

      தின், தின்ன, தின்றான்

      தின்றது

(The written -ன்ற்- is spoken -ன்ன்-)

Two  exceptions

சாகு 'die',  சாக 'todie'  is a weak verb, but its past tense is த்த்

    செத்தான் 'he died', (சா changes to செ)

   செத்துது or செத்துச்சு 'it died'

நில்லு 'stand', நிக்க 'to stand' is a strong verb, but its past tense is not த்த் (like the strong verb வில்லு 'sell' ) but is ன் (like the weak verb கொல்லு  'kill')

   நின்னான் 'he stood'

   நின்னுது or நின்னுச்சு 'it stood'

 

 

2. Past Tense Markers in Different Grammatical Forms

 

            In finite verb                                  Participle                 Inflected Noun

  Human - Non-human                   Verbal   Relative       Human- Non-human

  Ending

  (-ஆன் etc  -(உ)து /ச்சு)  ((-உ)      -அ)          (-அவன் etc  -அது)

 

Tense 

1.       -ன்-           /-(உ)ச்சு/                     -இ/ய்             -ன்-          -ன்-

 

Verbs of this class are weak. They are mostly words of heavy syllable (more than one syllable or one syllable with a long vowel) and they end in -. Some examples are பாடு, உருட்டு, தூங்கு, தூக்கு, ஊது, கஷ்டப்படுத்து, ஏமாத்து, ஒளறு, இருமு, பண்ணு, கல்யாணம்பண்ணு. Some verbs of this class that have a different syllabic structure undergo a change in past tense are சொல்லு, போ, ஆகு, கல்யாணமாகு. Verbs that have this shape, but take a different past tense marker போடு, சாப்பிடு.

 

  பாடுனான்          பாடுச்சு            பாடி            பாடுன      பாடுனவன்        பாடுனது

  சொன்னான்    சொல்லுச்சு    சொல்லி   சொன்ன   சொன்னவன்    சொன்னது

  போனான்         போச்சு              போய்         போன        போனவன்         போனது

  ஆனான்           ஆச்சு                  ஆகி           ஆன            ஆனவன்            ஆனது

 

Verbs in all other classes below have the same past tense marker in all grammatical forms.

 

2a.   -த்த்-     -த்த்-                  -த்த்-                   -த்த்-     -த்த்-

Verbs in the classes below have the same past tense marker in all grammatical forms.

Verbs of this class are strong. There is no particularly preferred shape of the verb except that they do not end in , .  (No verb ends in, or). Many of them are of light syllable (one syllable with a short vowel and end in -) or end in ர். Some examples are படு, கெடு, பார், வளர்.

 

  கெடுத்தான்   கெடுத்துது/கெடுத்துச்சு   கெடுத்து  கெடுத்த   கெடுத்தவன்  கெடுத்தது

  வளத்தான்     வளத்துது/வளத்துச்சு       வளத்து   வளத்த      வளத்தவன்   வளத்தது

 

2b. -ச்ச்-

Verbs of this class are strong like those in (2a), but they end in , . Some examples are படி, பிடி, எரி, மறை, வை. (2b is like 2a in formal Tamil)

 

   படிச்சான்         படிச்சுது/படிச்சுச்சு             படிச்சு        படிச்ச        படிச்சவன்         படிச்சது

   மறைச்சான்  மறைச்சுது/மறைச்சுச்சு  மறைச்சு   மறைச்ச   மறைச்சவன்   மறைச்சது

   வைச்சான்     வைச்சுது/வைச்சுச்சு        வைச்சு       வைச்ச      வைச்சவன்       வைச்சது

 

3a. -ந்த்-

 

Verbs of this class are weak and are counter parts of those in (2). There is no particularly preferred shape of the verb except that they do not end in , . Many of them may have the same form as those in (2), but grammatically are intransitive, that is, they do not take an object (Their subject may be the object of their counterpart in (2). Some examples are வளர், உக்கார், தெரி, புரி, ஏமாறு (-று in this verb is dropped, which is rare).

 

   வளந்தான்   வளந்துது/வளந்துச்சு    வளந்து   வளந்த   வளந்தவன்   வளந்தது

   ஏமாந்தான்  ஏமாந்துது/ஏமாந்துச்சு  ஏமாந்து  ஏமாந்த  ஏமாந்தவன்  ஏமாந்தது

 

3b. Verbs of this class are weak as those in (3a) but they end in , . Their transitive counter parts are the verbs in (2b).  Some examples are முடி, மறை, வை, செய். (3b is like 3a in formal Tamil)

 

  மறைஞ்சான்   மறைஞ்சுது/மறைஞ்சுச்சு   மறைஞ்சு  மறைஞ்ச   மறைஞ்சவன்    மறைஞ்சது

  வைஞ்சான்     வைஞ்சுது/வைஞ்சுச்சு          வைஞ்சு      வைஞ்ச      வைஞ்சவன்        வைஞ்சது

  செஞ்சான்       செஞ்சுது/செஞ்சுச்சு                செஞ்சு       செஞ்ச          செஞ்சவன்           செஞ்சது

(Final -ய் drops; -is pronounced like -here and elsewhere)

 

 

 

4a. –ட்ட்-

 

Verbs in this class are weak. They are of light syllable and end in –டு. Some of the verbs have the same form as those in (2a) but are intransitive. Some examples are கெடு, விடு, கஷ்டப்படு (படு is the verb of such complex verbs with a noun base like கஷ்டம்). Verbs that do not have this shape in this class are போடு, சாப்பிடு.

 

  கெட்டான்    கெட்டுது/கெட்டுச்சு      கெட்டு     கெட்ட   கெட்டவன்     கெட்டது

  போட்டான்  போட்டுது/போட்டுச்சு   போட்டு   போட்ட  போட்டவன்   போட்டது

 

4b. –த்த்-

Verbs of this class are same as those in (4a), but end in று.   There is only one verb of this class in modern Tamil. Unlike (2a), this verb is weak; the past tense marker in formal Tamil is –ற்ற்-. The verb is பெறு.

 

  பெத்தான்     பெத்துது/பெத்துச்சு    பெத்து    பெத்த    பெத்தவன்    பெத்தது

 

5. –ந்த்-

 

Verbs of this class are strong and they end in -. Some verbs of this class are நட, மற, பய (This verb does not have present and future conjugation). Verbs that end in other vowels are இரு, அண்ணா (This verb is not used in imperative).

 

  நடந்தான்       நடந்துது/நடந்துச்சு       நடந்து      நடந்த      நடந்தவன்    நடந்தது

  இருந்தான்   இருந்துது/இருந்துச்சு   இருந்து    இருந்த    இருந்தவன்   இருந்தது

 

There is one verb வில்லு that is strong (unlike (7b)) and ends in -ல் , which belongs to this class. But -ந்த்- is -ன்ன்- before –ல்(லு), which drops.

 

  நின்னான்   நின்னுது/நின்னுச்சு   நின்னு   நின்ன  நின்னவன்   நின்னது

 

Conjugations given below apply to a limited number of verbs.

 

6a. -ட்ட்-

 

Verbs of this class are strong (unlike (4)) and they end in ள், which drops. The common word in this class is கேள்.

 

 கேட்டான்  கேட்டுது/கேட்டுச்சு   கேட்டு   கேட்ட   கேட்டவன்   கேட்டது

 

6b. -த்த்-

 

Verbs of this class are strong (unlike (4b)) and they end in –ல்(லு) , which drops. Unlike the verbs in (2a), which are also strong, the tense marker in formal Tamil is -ற்ற்-. The common verb in this class is வில்லு.

 

வித்தான்  வித்துது/வித்துச்சு   வித்து  வித்த   வித்தவன்   வித்தது

 

 

7a. –ண்ட்-

 

Verbs of this class are weak (Note that past tense markers with a nasal go with week verbs, except (4) and they end in -ள், which drops. There are only a few verbs in this class.

 

உருண்டான்    உருண்டுது/உருண்டுச்சு    உருண்டு   உருண்ட   உருண்டவன்   உருண்டது

 

7b. -ன்ன்-

 

Verbs of this class are weak and they end in -ல்லு , which drops. The common verb in this class is கொல்லு, மெல்லு. (The marker is formal Tamil is -ன்ற்-)

 

கொன்னான்    கொன்னுது/கொன்னுச்சு   கொன்னு   கொன்ன   கொன்னவன்   கொன்னது

 

8a.-த்-

 

Verbs in this class are weak and they are few. One common verb is அழு; some verbs like செய், வை, which take the past tense marker –ஞ்ச்- (as the verbs in (3b))  take this past tense marker in formal Tamil.

 

 அழுதான்      அழுதுது/அழுதுச்சு    அழுது   அழுத    அழுதவன்    அழுதது

 செய்தான்     செய்துது/செய்துச்சு   செய்து   செய்த   செய்தவன்   செய்தது

 

8b. -ட்-

 

Verbs of this class are weak and they end in –ண்.  The only common verb in this class that occurs in combination with nouns is காண். This is similar to (7a) except that the nasal is in the verb itself.

 

 கண்டான்   கண்டுது/கண்டுச்சு   கண்டு  கண்ட  கண்டவன்  கண்டது

 

 (காணுது in present tense has an alternant காங்குது in informal Tamil)

 

8c. -ன்-

 

Verbs in this class are weak and they end in –ன்(னு).  The only common verb in this class is தின்னு. This is similar to (7b) except that the nasal is in the verb itself.  (The tense marker in formal Tamil is –ற்-, not –இன்-, as in (1)).

 

 தின்னான்  தின்னுது/தின்னுச்சு  தின்னு  தின்ன  தின்னவன்  தின்னது

 

(To avoid ambiguity of தின்னுது ‘it ate’ with தின்னுது ‘it is eating’, தின்னுச்சு is preferred in the past tense and the alternant form திங்குது is common in the present tense in informal Tamil)

 

Related Images: