உரையாடல் 15 கோயிலை பத்தி சொல்லுங்க
ஜிம் - நீங்க கோயிலை பத்தி சொன்னீங்களே, அதை கேட்டு நான் போன
வாரம் கோயிலை பாக்க போனேன். ஆனா என்னை உள்ளே விடலை.
ஏன்?
ராஜா - இந்துக்களை தவிர மத்தவங்க கோயிலுக்குள்ளே போகக்கூடாது.
ஜிம் - கோயிலுக்குள்ளே நொழையவே கூடாதா?
ராஜா - கோயிலுக்குள்ளே கொஞ்ச தூரம் வரைக்கும் போகலாம். நீங்க போய்
பாத்தீங்களா?
ஜிம் - இல்லை. எனக்கு தயக்கமா இருந்துது. சுதந்திரத்துக்கு முன்னாலேயே
கோயிலை எல்லாருக்கும் தெறந்துவிடலையா?
ராஜா - இந்துக்கள்லேதான் எல்லாருக்கும் தெறந்துவிட்டாங்க.
ஜிம் - என்னை போல வெளிநாட்டுக்காரங்களுக்கு ஒங்க கோயிலையும்
சிற்பங்களையும் பாக்க ரொம்ப ஆசை.
ராஜா - நானும் இதை பத்தி கோவில் அதிகாரிககிட்டே பேசிப் பாத்தேன். ஆனா
அவங்க விட்டுக்குடுக்கலை.
ஜிம் - இது எங்களுக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கு. இதை பத்தித்தான்
நான் ஒங்ககிட்டே கேக்க வந்தேன்.
ராணி - இந்தாங்க, நான் கொஞ்சம் பலகாரம் செஞ்சுவச்சிருக்கேன். ஒங்க
சிநேகிதரை சாப்பிட சொல்லுங்க.
ராஜா - அதை ஒரு தட்டுலே வச்சு இங்கே கொண்டா. கூட கொஞ்சம்
தண்ணியும் கொண்டா. இவருக்கு நம்ம பலகாரம் ரொம்ப காரமா
இருக்கும்.
ராணி - இது இனிப்புத்தான். இந்தாங்க.
ராஜா - ஜிம், இதை சாப்பிட்டு பாருங்க. ஒங்களுக்கு பிடிக்குதோ, என்னமோ!
ஜிம் - இது ரொம்ப நல்லா இருக்கு. கடைலே கெடைக்குமா?
ராஜா - எல்லா கடைலேயும் கெடைக்காது. நீங்க கவலைப்படாதீங்க. நான்
ஒங்களுக்கு குடுத்துவிடுறேன்.
ஜிம் - ரொம்ப நல்லது.
Goddess Meenakshi
Credit: tourismindia.com
Meenakshi Temple, Madurai
Credit: en.wikipedia.org
Temple Car
Glossary
இந்து ‘Hindu’
மத்தவங்க(ள்) மற்றவர்கள் ‘others’
நொழை (நொழைய) நுழைய ‘enter’
பார் ‘see’
பார் ‘try doing (with verbal participle)’
தயக்கம் ‘hesitation’
சுதந்திரம் ‘independence, freedom’
தெற (தெறக்க) திற ‘open’
விடு ‘let go’
விடு ‘let someone or something be in place (with
verbal participle)
குடு ‘give’
குடு ‘do something by way of helping another (with verbal participle); do for someone’
வெளிநாடு ‘foreign country’
சிற்பம் ‘sculpture’
அதிகாரி ‘officer, official’
விட்டுக்குடு (-குடுக்க) விட்டுக்கொடுக்க ‘give in’
ஏமாற்றம் ‘disappointment’
கூட ‘in addition, along with, more’
பலகாரம் ‘snack’
சிநேகிதர் ‘friend (male)’
தட்டு ‘plate’
வை ‘place down’
வை ‘keep something for future use with verbal
participle’
தண்ணி தண்ணீர் ‘water’
காரம் ‘being spicy hot’
இனிப்பு ‘sweet, dessert’
என்னமோ /இல்லையோ ‘or not, I am not sure’
Related words
ஏமாறு (ஏமாற) ‘be cheated’
ஏமாத்து (ஏமாத்த) ஏமாற்று ‘cheat’
சிநேகிதன் நண்பன் ‘friend (male)’
சிநேகிதி ‘friend (female)’
டம்ளர் தம்ளர் ‘tumbler, glass’
கரண்டி ‘spoon (big and small)’
பானை ‘pot (with narrow mouth)
சட்டி ‘pot (with wide mouth)’
Alternates
கோயிலையும் சிற்பங்களையும் கோயில், சிற்பம் எல்லாத்தையும்
Spelling variation
கோயில் கோவில்
ஏமாற்றம் ஏமாத்தம்
வை வய்
கொண்டா கொண்டுவா
Exercises
- The following sentences express activities in present, or future tense or habitual mood. Express them as if they happened in the past. Change the time expression appropriately, if required. Translate the new sentences.
1. நான் நாளைக்கு ஊருக்கு போறேன்.
2. நான் ராத்திரி பத்து மணிக்கு படுப்பேன்
- நீ தெனம் எவ்வளவு நேரம் ஓடுவே?
- அவ சாயங்காலம் தமிழ் பாட்டு பாடுவா.
- நான் ராத்திரி பத்து மணிக்கு தூங்குவேன்.
- இண்ணைக்கு ராத்திரி டி.வி.லே என்ன படம் காட்டுவாங்க? [ காட்டு ‘show’]
- பூனை காலைலே எங்கே போகுது?
- நான் வீட்டுக்கு போக ஆறு மணி ஆகும்.
- நான் ஒன் புஸ்தகத்தை பத்து மணிக்கு குடுக்கிறேன்.
10. பூனை ஒன்னையே பாக்குது.
11. நீ காலைலேருந்து என்ன படிக்கிறே?
12. இந்த நாய் யாரையும் கடிக்குமா? [கடி ‘bite’]
13. ஒனக்கு இந்த படம் பிடிக்குதா?
14. மேகம் சூரியனை மறைக்குது.
15. நான் கூட்டத்துலே ஒண்ணும் பேச மாட்டேன்.
2. The following sentences express activities in present, or future tense or habitual mood. Express them as if they happened in the past. Change the time expression appropriately, if required. Translate the new sentences.
- நீ அங்கே என்ன செய்றே?
2. அவன் என் மேலே பாய்றான். [பாய் ‘leap, jump at’]
- சூரியன் மேகத்துக்கு பின்னாலே மறையுது.
- ஒனக்கு தமிழ் புரியுதா?
- ஒனக்கு புது ஊர்லே யாரையும் தெரியுமா?
- ஒனக்கு நடக்க முடியுதா?
- நாங்க கடைக்கு நடக்கிறோம்.
- யார் ஒன்னை மறப்பாங்க?
- நீங்க சாயங்காலம் எங்கே இருப்பீங்க?
- இண்ணைக்கு ராத்திரி எனக்கு ரொம்ப வேலை இருக்கு.
- அம்மாவுக்கு என் மேலே கோபம் இருக்கும்.
- அவன் எப்பவும் வெள்ளை சட்டைதான் போடுவான்.
- அவன் நாளைக்கு எங்க வீட்டுலே சாப்பிடுவான்.
- அப்பா தோட்டத்துலே செடிக்கு தண்ணி விடுறார். [தோட்டம் ‘garden’, செடி ‘plant’, விடு ‘let go’]
- பால் தெனம் கெடுது.
- The following sentences express activities in present, or future tense or habitual mood. Express them as if they happened in the past. Change the time expression appropriately, if required. Translate the new sentences.
1. நீ அப்பாகிட்டே என்ன கேக்குறே?
2. நீ தமிழ் பாட்டு கேக்கிறியா?
3. எனக்கு பாட்டு நல்லா கேக்குது.
4. என் தம்பி பேனா விக்கிறான்.
5. இந்த பேனா நல்லா விக்குது.
6. பேனா மேசைலேருந்து உருளுது.
7. பூனை எலியை கொல்லும்.
8. ஏன் எல்லாரும் அழுறாங்க?
9. நீ கனா காண்றியா? [கனா ‘dream’]
10. பசு புல்லை தின்னும். [பசு ‘cow’, புல்லு ‘grass’]
- The description below is in the present tense narrated when things happen. Change the description as told after it happened. Translate the new description in the past tense.
சாயங்காலம் ஆறு மணி. சூரியன் மேற்கே மறையுது. வானம் செவப்பா இருக்கு. ரொம்ப அழகா இருக்கு. நான் எங்க வீட்டு ஜன்னல் வழியா பாக்கிறேன். ஒரு காக்கா வேகமா பறக்குது. அப்போ காத்து பலமா அடிக்குது. எங்கேருந்தோ ஒரு பெரிய மேகம் வருது. சூரியனை மறைக்குது. நான் வீட்டுக்கு வெளியே வர்றேன். கொஞ்ச நேரத்துலே சூரியன் மேகத்துக்குள்ளேருந்து வெளியே வருது. தெருவுலே எல்லாரும் வேலைலேருந்து வீட்டுக்கு அவசரமா போறாங்க. சில பேர் நடக்குறாங்க. சில பேர் சைக்கிள் ஓட்டுறாங்க. யாரும் சூரியனை பாக்கலை. நான் வீட்டு வாசல்லே நிக்கிறேன். பத்து நிமிஷம் சூரியனை பாக்குறேன்.
(Help: மேற்கே ‘west’, வானம் ‘sky’, ஜன்னல் ‘window’. காக்கா ‘crow’, பலமா ‘strongly’, அவசரமா ‘hurriedly, சைக்கிள் ‘bicycle’, வாசல் ‘entrance, (front) door’)
- Change the nouns of action or fact conjugated in the present tense into past. Translate the sentences you made.
Ex. தமிழ் படிக்கிறது எனக்கு நல்லா இருக்கு.
I feel good that I study Tamil
தமிழ் படிச்சது எனக்கு நல்லா இருக்கு.
I feel good that I studied Tamil.
- ராஜா பாடுறது நல்லா இல்லை.
Raja’s singing is not good.
- ராஜா வர்றது எனக்கு தெரியாது.
I don’t know that Raja is coming
- ராஜா இப்படி சொல்றது எனக்கு பிடிக்கலை.
I don’t like that Raja is speaking like this.
- நாம ஓட்டல்லே கறி சாப்பிடுறது அம்மாவுக்கு தெரியும்.
Mother knows that we eat meat in the restaurant.
- நான் சிகாகோவுலே படிக்கிறதை அப்பா எல்லார்கிட்டேயும் சொல்லுவார்.
Father tells every one that I study at Chicago.
- நான் குடிக்கிறதை அப்பா பாக்கலை.
Father didn’t see me drinking
- நான் குடிக்கிறதை அப்பாகிட்டே சொல்லாதே.
Don’t tell father that I drink
- நான் புஸ்தகம் வாங்குறதுக்கு அப்பா பணம் குடுப்பார்.
Father will give me money for me to buy books
- நான் அவனுக்கு ஒதவி செய்றதுக்கு அவன் எனக்கு என்ன செய்வான்?
What will he do (back) to me for me helping him?
- நீ பேசுறதுலே தப்பே இல்லை.
There is nothing wrong in your speaking
6. A sentence may express a series of actions that take place in a sequence. All the verbs of action except the last one will take the form of verbal participle. The participle will carry in meaning the tense, mood and other aspects of the final (main) verb. Combine the two or more sentences below into one using verbal participle. Translate the sentences you made.
Ex. குமார் நேத்து வீட்டுக்கு வந்தான்; என்னை பாத்தான்.
குமார் நேத்து வீட்டுக்கு வந்து என்னை பாத்தான்.
‘Kumar came home yesterday and saw me’
1. அவ சிகாகோவுலே ரெண்டு வருஷம் இருந்தா; தமிழ் படிச்சா.
2. அம்மா இந்த செய்தியை பத்திரிக்கைலே படிச்சாங்க; எனக்கு சொன்னாங்க. [செய்தி ‘news’, பத்திரிக்கை ‘newspaper’]
3. அம்மா அப்பாகிட்டே பணம் வாங்குனாங்க, எனக்கு குடுத்தாங்க.
4. அம்மா அப்பாகிட்டே விஷயத்தை கேப்பாங்க, என்கிட்டே சொல்லுவாங்க.
5. நான் தமிழ்நாட்டுக்கு போகப் போறேன்; அங்கே தமிழ் படிக்கப் போறேன்.
6. நீ தமிழ்நாட்டுக்கு வா; அங்கே தமிழ் படி
7. நான் வேலை பாக்கணும்; சம்பாதிக்கணும், வீடு வாங்கணும் [சம்பாதி ‘earn’]
8. நான் நடக்க முடியும்; கடைக்கு போக முடியும்; சாமான் வாங்க முடியும்.
9. நான் வீட்டுக்கு வர மாட்டேன்; ஒன்னை பாக்க மாட்டேன்.
10. நீ அவளோட சினிமாவுக்கு போகாதே; கெட்ட பேர் வாங்காதே.
11. நீ யாரை கேட்டே; இந்த வேலையை செஞ்சே?
12. அவன் எவ்வளவு பணம் குடுத்தான்; இந்த காரை வாங்குனான்?
13. நீ வகுப்புலே யாரையாவது பார்; இந்த புஸ்தகத்தை குடு.
14. நீ புஸ்தகத்தை வாங்குனே; யார்கிட்டே குடுத்தே?
15. நீ என்ன படிக்கப் போறே; என்ன வேலை பாக்கப் போறே?
- Fill in the gap in the sentences below with the right form of the verb in parentheses to make one sentence. The given meaning of the sentence is given in two sentences in English. Translate each sentence you made in one sentence in English using 'and' or a subordinate clause.
Ex.
நான் ஒரு புஸ்தகம் ------------------- அதை இன்னும் படிக்கலை (வாங்கு)
I bought a book; I haven't read it yet
நான் ஒரு புஸ்தகம் வாங்கி அதை இன்னும் படிக்கலை
Having bought a book, I haven't read it yet
- நானே கடைக்கு ----------------- இந்த புஸ்தகத்தை வாங்குனேன். (போ)
I went to the shop myself; I bought this book.
- நானே ஒங்க அப்பாவை ------------------ ஒன் கஷ்டத்தை சொல்றேன். (பார்)
I will myself see your father; I will tell him your difficulties.
- நீ நல்லா --------------- நல்ல மார்க் வாங்கணும். (படி)
You must study well; you must get good marks (grades).
- நீ என்னை வீட்டுக்கு --------------- பார். (வா)
You come home; see me.
- நான் கதை -------------- பேர் வாங்கப்போறேன். (எழுது)
I am going to write stories; I am going to earn a name.
- என் தம்பி பொய்----------- அப்பாகிட்டே அடி வாங்குனான். (சொல்லு)
My younger brother told a lie; he got blows from father.
- நான் ஒங்கிட்டே கடன் ----------- எதுவும் வாங்கமாட்டேன். (வாங்கு)
I won’t take a loan from you; I will not buy anything.
- நீ கீழே --------------- என்ன பாத்தே? (குனி ‘bend’)
You bent down; what did you see?
- யார் இண்ணைக்கு வகுப்புக்கு -------- வந்தீங்க? (நட)
Who of you came to the class today; who walked?
- நீ ஊர்லேருந்து எப்போ ----------- வந்தே? (திரும்பு ‘turn’)
When did you come from town (the trip); when did you return?
- எல்லாரும் தோசையை -------------- சாப்பிட்டாங்க. (ரசி ‘enjoy’)
Everyone enjoyed ate dose; everyone enjoyed (it)
- நீ எவ்வளவு ---------------- இந்த படத்தை வாங்குனே? (குடு)
You bought this picture; how much did you give?
- தவிர is added to a noun in the accusative to mean ‘besides, other than’.
Fill in the noun in parentheses in the blanks in the sentences below and translate them. If a verb is in parentheses, make it a verb.
Ex. எங்க வீட்டுலே ----------- தவிர வேறே யாருக்கும் தமிழ் தெரியாது (நான்)
எங்க வீட்டுலே என்னை தவிர வேறே யாருக்கும் தமிழ் தெரியாது
1.ஒங்களுக்கு ---------- தவிர வேறே என்ன மொழி தெரியும் (தமிழ்) [மொழி ‘language’]
2. --------------- தவிர வேறே எதுவும் எனக்கு செய்ய பிடிக்காது (இது)
3. ---------- தவிர எல்லாரும் இந்த வருஷம் இந்தியாவுக்கு போறாங்க (நான்)
4. ---------------- தவிர எண்ணைக்கும் நான் ஒங்களோடே பேச முடியும் (இண்ணைக்கு)
5. இதுலே ------------- தவிர நீ ஒன் தம்பிக்கு குடுக்கப் போறே? (எது)
- Fill in the sentences below with the appropriate form of the word in parentheses. If it is not a noun, make a noun out of the given form; it is a verb, make a noun of action or fact in the present tense. Translate the sentences you made
Ex. ………….. பத்தி அவன் பொய் சொல்றான். (நீ)
ஒன்னை பத்தி அவன் பொய் சொல்றான்.
‘He tells lies about you’
1. ................ பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது. (அவ)
2. ................................. பத்தி எனக்கு கொஞ்சம் சொல்லுங்க. (தமிழ்நாடு)
3. ........................ பத்தி ஊர்லே என்ன சொல்றாங்க? (நான்)
4. மழை ................... பத்தி ஒரு பாட்டு பாடு. (காலம்)
5. நாங்க .................. பத்தியும் ......................... பத்தியும் படிக்கப் போறோம். (இந்தியா, அமெரிக்கா)
6. என்கிட்டே .................. பத்தி பேசப் போறே? (எது)
7. என்கிட்டே ------------------ பத்தியும் சொல்லாதே. (யார்)
8. ..................... பத்தி யாரும் நெனைக்க மாட்டாங்க. (நல்ல)
9. நாளைக்கு ............................ பத்தி ஒண்ணும் சொல்ல முடியாது. (நட)
10. ஒபாமா சிகாகோவுக்கு ............................... பத்தி இண்ணைக்கு வரைக்கும் எனக்கு தெரியாது. (வா)
- Fill the blanks with the right form of the word given in parentheses and translate.
Ex. என் தங்கச்சி ...................... போலவே பாடுவா. (நான்)
என் தங்கச்சி என்னை போலவே பாடுவா.
‘My younger sister sings just like me’
1. நான் என் ............................... போல நல்லா பாடுவேன். (தங்கச்சி)
2. ...................... போல நாங்களும் சிகாகோவுலே இருக்கோம். (நீங்க)
3. .................... போல நானும் ஒரு பொடவை வாங்கணும். (இது)
4. என் தம்பி எங்க ............................ போலவே இருப்பான். (அம்மா)
5. ஒரு ....................... போல இன்னொரு நாள் இருக்காது. (நாள்)
6. ஒங்க ........................... போல எங்க வீடு பெருசு இல்லை. (வீடு)
7. என் தம்பி எங்க ............................ போல ரொம்ப கெட்டிக்காரன். (மாமா)
8. இவன் ....................... போல பேசுறான். (யாரோ)
9. நம்ம வீட்டுலே ............................... போல நீயும் தமிழ் படி. (எல்லாரும்)
10. எங்க ................................ போல நல்லவரை எங்கேயும் பாக்க முடியாது. (தாத்தா)
11. எங்க அப்பாவுக்கு ...................... போல இட்லி வேணும். (பூ)
12. ............................. போல நியு யார்க்லே காத்து அடிக்காது. (சிகாகோ)
13. ......................... போல பூனைக்கு பழம் குடுக்க முடியாது. (மாடு)
14. நீ ............................... போல என்னாலே வேகமா பேச முடியாது (பேசுறது)
15. ........................... போல எனக்கு வேகமா பேச வராது. (நீ)
- Fill in the blanks with the right form of the words given in parentheses and translate the sentences.
Ex. எங்க அம்மா ............... விட நல்லா தமிழ் பேசுவாங்க. (நான்)
எங்க அம்மா என்னை விட நல்லா தமிழ் பேசுவாங்க.
‘My mother speaks Tamil better than me’
1. எங்க அம்மா ......................... விட நல்ல தமிழ் பேசுவாங்க. (அப்பா)
2. நாங்க ................... விட அதிக நாள் சிகாகோவுலே இருக்கோம். (நீங்க)
3. .............. விட அதிக வெலைக்கு நான் ஒரு பொடவை வாங்கணும் (இது)
4. என் தம்பி எங்க ----------------- விட நெறமா இருப்பான். (அம்மா)
5. ..................... விட இண்ணைக்கு குளுருது. (நேத்து)
6. .......................... விட பாசம்தான் முக்கியம் (பணம்) [பாசம் 'affection, love', முக்கியம் 'important']
7. ........................ விட நீ மேடைலே நல்லா பேசுவே? (யார்) [மேடை 'stage. public platform']
8. ................. விட இவதான் ரொம்ப வருஷம் தமிழ் படிக்கிறா. (எல்லாரும்)
9. .................... விட பணக்காரன் இந்த நாட்டுலே இல்லை. (பில் Bill)
10. ................... விட பூனை பாலை ஆசையா சாப்பிடும், (நாய்)
- When a positive and a negative sentence are combined, தவிர is used with the first sentence, which takes -ஏ for assertion. The meaning is ‘other than’, but it translates as ‘though’ or ‘but’. Translate the following sentences.
Ex. எங்க தாத்தா எங்க வீட்டுக்கு வருவாரே தவிர சாப்பிட மாட்டார். ‘Our grandfather comes to our house, but doesn’t eat’
1. அவன் பெருசா பேசுறானே தவிர ஒண்ணும் செய்யமாட்டான்
2. வெயில் அடிக்குதே தவிர குளிர் கொறையலை
3. அவ பேச மாட்டாளே தவிர என்கிட்டே பிரியமா இருப்பா
4. அவன் நல்லா படிக்கலையே தவிர எல்லார்கிட்டேயும் நல்ல பேர் எடுத்தான்
5. அவன் பெரிய பணக்காரனே தவிர யாருக்கும் எதுவும் குடுக்க மாட்டான்
- Write from your memory five words that have three letters each. Vowels combined with consonants count as one letter.
- Write the meaning of the pairs of words below.
கடை கதை
வெலை வேலை
நீயே நீயா
எங்க எங்கே
என்ன என்னை
என் ஏன்
மற மறை
வர வர்றே
அந்த கால்லே அது கால்’லே?
வாங்க, போவோம் வாங்க போவோம்
Handout
A list of verb forms in colloquial and conventional spelling.
The forms in parentheses give the conventional spelling used in writing formal Tamil.
Weak Verbs
பாடு (பாடு) ‘sing’
பாடு (பாடு) Imperative ‘Sing’ (to command, request)
பாடுங்க (பாடுங்கள்) Imperative (pl) ‘Sing’
பாடாதே (பாடாதே) Imperative (neg.) ‘Don’t sing’
பாடாதீங்க (பாடாதீர்கள்) Imperative (neg. pl) ‘Don’t sing’
பாட (பாட) Infinitive ‘to sing’ (to express ‘purpose’, to be the base for negative (past and animate future), modals (must, can etc)
பாடுறான் (பாடுகிறான்) Simple Present ‘(he) is singing’ (to state present action or habitual or likely action)
பாடுவான் (பாடுவான்) Simple Future ‘(he) will be singing’ (to state future action or habitual or likely action)
பாடுனான் (பாடினான்) Simple Past ‘(he) sang’ (to state past action)
பாடுது (பாடுகிறது) Simple Present -neuter ‘(it) is singing’
பாடும் (பாடும்) Simple Future -neuter
பாடுச்சு (பாடியது / பாடிற்று) Simple Past -neuter
பாடலை (பாடவில்லை) Past and Present Negative
பாடமாட்டான் (பாடமாட்டான்)Future Negative
பாடாது (பாடாது) Future Negative -neuter
பாடணும் (பாட வேண்டும்) Modal ‘must / want to sing’ (to express obligation or desire)
பாட வேண்டாம் (பாட வேண்டாம்)Modal Negative of the above
பாடலாம் (பாடலாம்) Modal ‘possibility / permission’ (to express probability of an action or permission to do an action) ‘can lie down’
பாடக் கூடாது (பாடக் கூடாது)Modal Negative of the above in the sense of permission alone
பாடட்டும் (பாடட்டும்) Modal ‘permission by the speaker’ (to express permission or that an event will happen to the expectation of the speaker
பாட முடியும் (பாட முடியும்) Modal ‘ability’ (to express the ability of the subject to do an action
பாட முடியாது (பாட முடியாது)Modal Negative of the above
பாட முடியுது (பாட முடிகிறது)Modal. ‘ability (after trying out the act). ‘able to sing’
பாட முடியலை (பாட முடியவில்லை)Modal. Negative of the above. ‘not able to sing’
Strong verbs
படு ‘lie down’
படு (படு) Imperative ‘Lie down’ (to command, request)
படுங்க (படுங்கள்) Imperative (pl) ‘Lie down’
படுக்காதே (படுக்காதே) Imperative (neg.) ‘Don’t lie down’
படுக்காதீங்க (படுக்காதீர்கள்) Imperative (neg. pl) ‘Don’t lie down
படுக்க (படுக்க) Infinitive ‘to lie down’ (to express base for negative (past and animate future), modals (must, can etc)
படுக்குறான் (படுக்கிறான்) Simple Present ‘(he) is lying down’ (to state present action or future definite action)
படுப்பான் (படுப்பான்) Simple Future ‘(he) will be lying down’ (to state future action or habitual or likely action)
படுத்தான் (படுத்தான்) Simple Past ‘(he) lay down’ (to state past action)
படுக்குது (படுக்கிறது) Simple Present -neuter ‘(it) is lying’
படுக்கும் (படுக்கும்) Simple Future –neuter ‘it will lie down’
படுத்துது / படுத்துச்சு (படுத்தது)Simple Past –neuter ‘it lied down’
படுக்கலை (படுக்கவில்லை) Past and Present Negative ‘it did not / does not lie down
படுக்கமாட்டான் (படுக்கமாட்டான்)Future Negative ‘he will not lie down’
படுக்காது (படுக்காது) Future Negative –neuter ‘it will not lie down’
படுக்கணும் (படுக்க வேண்டும்)Modal. ‘must / want to lie down’ (to express obligation or desire)
படுக்க வேண்டாம் (படுக்க வேண்டாம்)Modal. Negative of the above. ‘shall not lie down’
படுக்கலாம் (படுக்கலாம்) Modal. ‘possibility / permission’ (to express probability of an action or permission to do an action) ‘can lie down’
படுக்கக் கூடாது (படுக்கக் கூடாது )Modal. Negative of the above in the sense of permission alone. ‘should not lie down’
படுக்கட்டும் (படுக்கட்டும்) Modal. ‘permission by the speaker’ (to express permission or that an event will happen to the expectation of the speaker) ‘let .. lie down’
படுக்க முடியும் (படுக்க முடியும்)Modal. ‘ability’ (to express the ability of the subject to do an action ‘can lie down’
படுக்க முடியாது (படுக்க முடியாது)Modal. Negative of the above. ‘cannot lie down’
படுக்க முடியுது (படுக்க முடிகிறது)Modal. ‘ability (after trying out the act). ‘able to lie down’
படுக்க முடியலை (படுக்க முடியவில்லை)Modal. Negative of the above. ‘not able to