16. ஒடம்பு சரியில்லை

 

உரையாடல்  16                           ஒடம்பு சரியில்லை

 

 

ஜிம்   -  என்ன படுத்திருக்கீங்க?  ஒடம்பு சொகம் இல்லையா?

 

ராஜா  -  ஒடம்புக்கு ஒண்ணும் இல்லை.  காலைலே திருப்பரங்குன்றம்

         போயிருந்தேன்.  இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேதான்

         திரும்பி வந்தேன்.  அதுனாலே கொஞ்சம் களைப்பா இருக்கு.

 

ஜிம்   -  அங்கே என்ன விசேஷம்?

 

ராஜா  -  இண்ணைக்கு கார்த்திகை இல்லையா?  அது முருகனுக்கு ரொம்ப

         விசேஷமான நாள்.  நான் சாமி கும்பிட அங்கே போனேன்.  நீங்க

         அங்கே போயிருக்கீங்களா?

 

ஜிம்   -  நான் ஒரு தடவை போயிருக்கேன்.  மலைமேலே கூட  

         ஏறிப்பாத்திருக்கேன். நீங்க இண்ணைக்கு மலைமேலே ஏறுனீங்களா?

 

ராஜா  -  எனக்கு வயசு ஆச்சு.  என்னாலே முடியாது.  பஸ்ஸுக்காக வரிசைலே

         நிக்கக் கூட முடியலை.

 

ஜிம்   -  இந்த சமயத்துலே ரொம்ப பஸ் விடமாட்டாங்களா?

 

ராஜா  -  ரொம்ப ஸ்பெஷல் பஸ் விட்டிருந்தாங்க.  அப்படியும் கூட்டம்

         கொறையலை.

 

ஜிம்   -  நீங்க பஸ்ஸுக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தீங்க?

 

ராஜா  -  சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்திருப்பேன்.  அவ்வளவு நேரம்

         காத்திருந்தும் பஸ்லே உக்கார எடம் கெடைக்கலை.

 

ஜிம்   -  அடப் பாவமே! ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருக்கீங்க.

 

ராஜா  -  இது மட்டும் இல்லை.  கோயிலுக்கு உள்ளேயும் ஒரே கூட்டம்.  உள்ளே

         நொழையவே எடம் இல்லை.  எப்படியோ இடிச்சு கிடிச்சு உள்ளே

         போனேன்.

 

ஜிம்   -  நல்ல வேளை, நான் ஒங்களோடே வரலை.

 

 

ராஜா  -  ஆமா.  அந்த கூட்டத்துலே நீங்க மயங்கி விழுந்திருப்பீங்க.  அதோடே

         ஒங்களை உள்ளே விட்டிருக்கவும் மாட்டாங்க.

 

ஜிம்   -  நீங்க படுத்திருங்க.  நாமதான் அடிக்கடி சந்திக்கிறோமே.   நாளைக்கு

         சாவகாசமா பேசுவோம்.

Murugan Temple, Thiruparankundram

Glossary

ஒடம்பு                             உடம்பு                'body, health’

சொகம்                           சுகம்                     ‘being healthy’

திருப்பரங்குன்றம்                                   ‘a town next to Madurai’

திரும்பி                                                        ‘back’

திரும்பி வா (-வர)                                     ‘come back, return’

களைப்பு                                                      ‘tiredness’

விசேஷம்                                                   ‘special, special occasion’

கார்த்திகை                                                 ‘a star (Eta Tauri), birth star of Murugan’

முருகன்                                                      ‘a god (of cultural importance to Tamils)’

சாமி                                                              ‘god, idol’

கும்பிடு (கும்பிட)                                     ‘worship (with folded hands)’

தடவை                                                         ‘time (as in how many times)’

மலை                                                             ‘hill’

ஏறு (ஏற)                                                      ‘climb up’

வயசு                         வயது                       ‘age’

கூட                                                               'even’

வரிசை                                                        ‘line, queue’

சமயம்                                                          ‘time (as in at this time), period’

விடு                                                              ‘let go, operate (bus etc)

கூட்டம்                                                        ‘crowd, meeting’

கொறை (கொறைய)        குறை          ‘be less, reduce’

காத்திரு (-இருக்க)                                   ‘wait’

உக்கார் (உக்கார)             உட்கார்        ‘sit down’

எடம்                                     இடம்              ‘room, seat’

கஷ்டப்படு (-பட)                                       ‘suffer’

மட்டும்                                                         ‘only (out of many)’

கூட்டம்                                                        ‘crowd’

அட                                        அடே             ‘expression of empathy, surprise’

பாவம்                                                           ‘pity, sin’

அட பாவமே                                                ‘poor you’

நொழை (நொழைய)      நுழை             ‘enter’

இடி (இடிக்க)                                                 ‘nudge, bump against’

வேளை                                                           ‘time (as part of a day)

நல்ல வேளை                                               ‘good times, thank god’

 

Related words

சௌக்கியம்                                               ‘being healthy’

நலம்                                                             ‘being healthy’

திரும்பு (திரும்ப)                                      ‘turn’

திருப்பு (திருப்ப)                                       ‘turn (something)’

திருப்பிக் குடு (-குடுக்க)                        ‘give back, return (something)’

திருப்பம்                                                      (street) turning, turning point (in a story)’

கூடு (கூட)                                                  ‘add, add up, increase’

கூட்டு (கூட்ட)                                           ‘add, add up, increase (something)’

கூட்டல்                                                       ‘addition (in mathematics)’

கூட                                                               ‘in excess, along with’

அதிகம்                                                         ‘being more’

கொறை (கொறைக்க)  குறை            ‘reduce, lessen (something)’

கொறைவு                         குறைவு                    ‘being less’

 

Pronunciation points

 

Some light verbs and auxiliary verbs go through a phonetic process of reducing their phonological length.

வி of the light verb விடு is reduced to உ. When the verbal participle ends in உ the vowel is lengthened in fast speech (குடுத்துவிடு --> குடுத்தூடு); when ends in இ the vowel is rounded and centralized (சொல்லிவிடு --> சொல்லியுடு)

 

The lost இ of the auxiliary verb (இ)ரு is present when the verbal participle ends in இ and this vowel is lengthened (சொல்லிரு --> சொல்லீரு)

 

 

Exercises

 

1.      The verbal participle may describe the main verb as to how it is performed etc. Its action may be co-occurring with the action of the main verb. Fill in the blanks with the verbal participle form of the verb given in parentheses. Translate the resulting sentences, which have non-sequential meaning. English may have one verb for this meaning.

 

            Ex. நாங்க வகுப்புக்கு வேகமா ..................... வந்தோம் (ஓடு (ஓட))

                 நாங்க வகுப்புக்கு வேகமா ஓடி வந்தோம்.

                ‘We came to the class running fast’

 

1.      நாங்க வகுப்புக்கு மெதுவா ........................ வந்தோம் (நட (நடக்க))

 

2.      பேச்சை கேக்க எல்லாரும் ...................... உக்காந்தோம். (நிமிர் (நிமிர) ‘be straightened up’) [பேச்சு ‘speech’]

 

3.      கொரங்கு வாழைப்பழத்தை ................. சாப்பிடும். (உரி (உரிக்க) ‘peel’) [கொரங்கு ‘monkey’, வாழைப்பழம் ‘banana’]

 

4.      எல்லாரும் மேசைக்கடிலே ..................... என் பேனாவை தேடுறாங்க. (குனி (குனிய) ‘bend down’) [அடிலே ‘under’, தேடு ‘look for, search’]

 

5.      பேராசிரியர் வர்றதுக்கு முன்னாலே வகுப்புக்குள்ளே ........... பாத்தோம். (எட்டு (எட்ட) ‘reach (with a body part)’)

 

6.      தட்டை நல்லா................. சாப்பிடணும். (வழி (வழிக்க) ‘scrap’) [தட்டு ‘plate’]

 

7.      இந்த கடைலே தேங்காயை .................. விக்க மாட்டாங்க. (ஒடை (ஒடைக்க) ‘break’) [தேங்கா (ய்) ‘coconut’]

 

8.      எங்க அப்பா எப்பவும் பத்திரிக்கையை .................. வைப்பார். (மடி (மடிக்க) ‘fold’) [பத்திரிக்கை ‘newspaper’]

 

9.      என் தம்பி எல்லார் தப்பையும் ………..க்காட்டுவான். (சுட்டு (சுட்ட) ‘point to’)

 

10.  என் பேனா தரைலே ..................... கெடந்துது) (விழு (விழ) ‘fall’) [தரை ‘floor’. கெட ‘be lying down’]

,

 

2.      Fill in the gap in the sentences below with the right form of the verb in parentheses to express the given meaning. The meanings given stay close to the structure of the original sentences. Can you give idiomatic translations if and where possible? Note that the subject of the finite verb and the verbal participles are different.

Ex. நான் சொன்னேன்; என் தங்கச்சி கார் வாங்குனா (சொல்லு (சொல்ல))

   I told (her); my younger sister bought a car

   நான் சொல்லி என் தங்கச்சி கார் வாங்குனா

   ‘My little sister bought a car after my telling her (to buy)’

 

  1. நான் தமிழ் சினிமா ------------- ஒரு மாசம் ஆகுது. (பார் (பாக்க))

 I saw a Tamil movie; it is one month since then.

 

  1. ஒனக்கு காரம் -------------- பழக்கம் உண்டா? (சாப்பிடு (சாப்பிட)) [காரம் ‘spicy (food)’ பழக்கம் ‘habit’]

Do you eat spicy food; do you have that habit?

 

  1. நான் பணம் ---------- அப்பா கார் வாங்குனார். (குடு (குடுக்க))

I gave money and father bought a car.

 

  1. நான் -------தான் இவனுக்கு வேலை கெடைச்சுது. (சொல்லு (சொல்ல))

I spoke (for him) and he got this job.

 

  1. நான் ------------தான் இவன் பணம் குடுத்தான். (கேள் (கேக்க))

I asked him; then only he gave money.

 

  1. கார் ------- ஒரு சின்ன பையனுக்கு காயம் பட்டுது. (மோது (மோத) ‘hit, bump’) [காயம் படு ‘get injured’]

A car hit; a small boy was injured.

 

  1. பாம்பு ---------- ஒரு பையனை ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனாங்க. (கடி (கடிக்க) ‘bite’) [பாம்பு ‘snake, ஆஸ்பத்திரி ‘hospital’]

A snake bit a boy; they took him to the hospital’

 

  1. யார் -------------- நீ இந்த எடத்துக்கு வந்தே? (கூப்பிடு (கூப்பிட) ‘invite, call’)

‘Who invited you and you came to this place?

 

  1. ‘யார் ------------ நீ இப்படி அழுறே? (அடி (அடிக்க) ‘hit’) [அழு ‘cry’]

Who hit you and you are crying like this?

 

  1. நீ என்ன ------------- நான் குடுக்கலை? (கேள் (கேக்க))

What did you ask and I didn’t give you?

 

  1. அவகிட்டே இதை ------------ என்ன ஆகப்போகுது?  (பேசு (பேச))

You are going to talk to her about this and what is going to happen

 

 

  1. நீ எப்போ --------- நான் எப்போ போவேன்? (வா (வர))

When will you come and when will I go?

 

 

 

3. The light verbs are added to the verbal participle form of the main verb of a clause to express a point of view of the subject of the clause as regard to doing the act for another person, for some consideration in future, for testing the result etc. குடு ‘give’ expresses the point of view that the act is done in or for the favor of  another, who is optionally mentioned in the sentence in dative. This is used with transitive verbs.

      The sentences below are said without indicating the point of view of their subject.    Add the point of view that the acts are done as a favor, help, encouragement etc.         Translate both sentences. English may have a single verb for the combination of verb + light verb or add an adverb.

 

        Ex.  என் தம்பி அம்மாவுக்கு கார் வாங்குனான்.

              ‘ My younger brother bought mother a car’

 

              என் தம்பி அம்மாவுக்கு கார் வாங்கிக்குடுத்தான்.

               ‘My younger brother bought a car for mother’

 

 

  1.  ராஜா எனக்கு ஒரு வீடு பாத்தான்.

 

  1. இந்த பெட்டியை தூக்கு.  [பெட்டி ‘box’, தூக்கு ‘lift’]

 

  1. நான் தாத்தாவுக்கு கடிதம் எழுதுவேன். [கடிதம் ‘letter’, எழுது ‘write’]

 

  1. நீ யாருக்கு காரை விக்கப் போறே? [வில்லு ‘sell’]

 

  1. நான் ராஜாவை முதுகுலே தட்டுனேன்.  [முதுகு ‘back’, தட்டு ‘tap, knock’]

 

4.      தா ‘give’ is a synonym of குடு and it could be used as a light verb with the sense as of குடு except when its combination with the verbal participle is lexicalized with an idiomatic meaning (as in (5) above)

Change குடு in the first four sentences you made in (3) above with தா.

Ex. என் தம்பி அம்மாவுக்கு கார் வாங்கித்தந்தான்

 

 

5. விடு ‘let go’ expresses a point of view that the act is to ‘let something to be in position or in operation or to get to a destination or to be a result’.  This may have the sense of குடு ‘to help someone’ as an inferential one when ‘to be in a position’ is understood to be of help to another. This is the case in the examples (1) – (3) below.

     Add the point of view adduced by the light verb விடு to the sentences below.  Translate both sentences. English may have a single verb for the combination of verb +  light verb or add an adverb.

 

  

               Ex. அம்மா பிள்ளைக்கு சட்டை போட்டாங்க.

            ‘Mother put on the dress to the child’

 

           அம்மா பிள்ளைக்கு சட்டை போட்டுவிட்டாங்க.

           ‘Mother helped the child by putting on the dress (to her)’

 

  1. அம்மா மகளுக்கு தலை பின்னுனாங்க. [மக(ள்) ‘daughter’, தலை பின்னு ‘comb hair’]

 

  1. கதவுலேருந்து என் சட்டையை எடு.  [கதவு ‘door’]

 

  1. அம்மாவை ஆஸ்பத்திரிலே நல்லா பாத்தேன். [ ஆஸ்பத்திரி ‘hospital’]

 

  1. ஒன் சட்டை காலரை தூக்கு.  [காலர் ‘collar’ தூக்கு ‘lift’]

 

  1. அவர் எங்க ஊர்லே பத்து வீடு கட்டிருக்கார். [கட்டு ‘build’]

 

  1. அவன் ஒரு சிக்கல்லே ஒன்னை மாட்டப் போறான். [சிக்கல் ‘problem’,  மாட்டு ‘get caught’]

 

  1. அம்மா எனக்கு முறுக்கு குடுத்தாங்க. [முறுக்கு  ‘a pretzel like snack’]

 

  1. ராஜா என்கிட்டே பணம் கேட்டான்.

 

  1. அக்காவுக்கு செய்தி சொல்லணும். [செய்தி ‘news’]

 

  1. அவன் என்னை பத்தி தப்பா சொல்றதுக்கு நல்லா திட்டுனேன். [திட்டு ‘scold’]

 

 

 

6.  வை adds the point of view that the act is performed with future consequence or relevance in mind. போடு expresses a similar point of view but suggests that the act    is performed without being serious about the future consequence or performed to discard or constrain something to ward off any consequence.

     Add the light verbs வை and போடு to the sentences below. Translate both   sentences. English may have a single verb for the combination of verb + light verb  

     or add an adverb. When you translate the sentence you made, add the sentence given below the first sentence in parentheses and include that in the translation.

 

       Ex. வை

          அவன் காத்துக்காக கதவை தெறந்தான்

          'He opened the door for breeze'

         அவன் காத்துக்காக கதவை தெறந்துவைச்சான்

         'He kept the door open for breeze'

 

போடு

 

       அவன் ஞாபகமறதியா கதவை தெறந்தான்

      He opened the door forgetfully

     அவன் ஞாபகமறதியா கதவை தெறந்துபோட்டான்

      He left the door open forgetfully

 

வை

1.      நீ காரை வெளியே எடு

       (நான் கொஞ்ச நேரத்துலே வர்றேன்)

 

2.    அப்பாகிட்டே புது சினிமாவை பத்தி சொல்லுவோம்

       (நாளைக்கு நேரம் ஒதுக்கிவைப்பார்) [ஒதுக்கு ‘set aside’]

 

3.      இந்த பாடத்தையும் படிக்கிறேன்

       (பரிச்சைலே இதுலே கேள்வி வரலாம்) [கேள்வி ‘question’]

 

4.      காலைலே நாலு கொடத்துலே தண்ணி பிடிச்சேன் [கொடம் ‘pot’, பிடி  'store']

         (நாளைக்கு வரைக்கும் கவலை இல்லை)

 

5.      அவன் பனிலே வழுக்கி விழுவான் [வழுக்கு ‘slip’, விழு ‘fall’]

        (பெறகு நமக்குதான் கஷ்டம்)

 

 

போடு

6.      நான் பத்து வருஷத்துக்கு முன்னாலே நெலம் வாங்குனேன் [நெலம் ‘piece of land’]

        (அதுனாலேதான் இப்ப வீடு கட்ட முடியுது) [கட்டு ‘build’]

 

7.      தோட்டத்துலே குழி தோண்டு [தோட்டம் garden’, குழி ‘pit’, தோண்டு ‘dig’]

        (செடி வைக்கலாம்) [செடி ‘plant’]

 

8.      நான் பத்து நாளைக்கு கடையை மூடுனேன்

        (ஒடம்பு சரியில்லை)

 

9.      அவன் நேத்து ஒன் படத்தை கிழிச்சான் [கிழி ‘tear’]

        (அவனுக்கு அவ்வளவு கோபம்)

 

10.  வீட்டுக்குள்ளே நான் நாயை கட்ட மாட்டேன் [கட்டு ‘tie’]

         இது கடிக்காது [கடி ‘bite’]

 

 

7. The light verb படு is added to nouns of mental state to make a verb to mean experiencing that state of mind.

     Add படு to the nouns below to make verbs out of them and give the meaning of those verbs.

                      Ex. கஷ்டம் ‘difficulty, suffering’

                     கஷ்டப்படு ‘go through difficulty, suffer’

 

சந்தோஷம் ‘happiness’

கவலை ‘worry’

வருத்தம் ‘regret, grief’’

எரிச்சல் ‘irritation’

ஆசை ‘desire’

கோபம் ‘anger’

வெக்கம் ‘bashfulness’

பெருமை ‘pride’

இரக்கம் ‘pity’

அவசரம் ‘hurry’

 

8.  The light verb படு has a transitive counterpart படுத்து, which is added to some verbs of mental state to give the meaning of ‘making someone to experience that state of mind. Add படுத்து to the nouns below to make verbs out of them and give the meaning of those verbs

                 Ex. கஷ்டம் ‘difficulty, suffering’

                கஷ்டப்படுத்து 'make someone go through difficulty, suffering’

 

  சந்தோஷம்  ‘happiness’

   கவலை ‘worry’

  எரிச்சல்  ‘irritation’

   கோபம் ‘anger’

   பெருமை ‘pride’

   கொடுமை ‘ill treatment’

   அவசரம் ‘hurry’

   தொல்லை ‘trouble’

   ஞாபகம் ‘memory’

 

9. The light verb படுத்து is also used with nouns to mean making or creating a physical state.

    Add படுத்து to the nouns below to make verbs out of them and give the meaning of those verbs

                      Ex. வெளி 'outer place’

                    வெளிப்படுத்து ‘bring out, expose’

  

   அழகு ‘beauty’

   அசிங்கம் ‘ugliness’

   அகலம் ‘width’

  வேகம்  'speed’

  பெருசு  ‘big thing’

  

 

10.  The light verb படு is used with nouns that are syntactic object of them to give the meaning of receiving a physical experience. This translates into English as ‘get going through something’, which is called ‘get passive’

                  Fill in the gap in the sentences below with the noun given in parentheses and translate the sentences.

                Ex. அவன் கீழே விழுந்து காயப்பட்டான்

               ‘He fell down and got injured’

 

1.      எங்க தெருவுலே ஒரு அணில் கார்லே ------ பட்டுது (அடி ‘hit’)  [‘squirrel’]

2.      கூட்டத்துலே ரொம்ப பேர் ---------- பட்டாங்க (மிதி ‘trample’)

3.      இதை சொல்லி எல்லார்கிட்டேயும் -------- படாதே (ஒதை ‘kick’)

4.      நேத்து கத்திலே என் கை ---------------- பட்டுது (வெட்டு 'cut’) [கத்தி ‘knife’]

5.      அவன் ----------பட்டு ரொம்ப கஷ்டப்பட்டான் (நாய்க் கடி 'dog bite’)

 

 

11.  Words meaning ‘one’ plus –உம் give the meaning ‘any’. This however is used only with negative verbs. So it often translates as ‘none’.

      Translate the following sentences.

      Ex. எனக்கு அவனை பத்தி ஒண்ணும் தெரியாது

        'I do not know anything / a thing about him’

 

      1. நான் பரிச்சைக்கு இன்னும் ஒண்ணும் படிக்கலை [பரிச்சை ‘exam’]

      2. நான் இந்தியாவுலே இந்த தடவை ஒரு கோயிலுக்கும் போகலை

      3. ஒரு நாளும் நான் ஒன்னை மறக்க மாட்டேன்

      4. அங்கே ஒனக்கு ஒருத்தரும் ஒதவி செய்ய மாட்டாங்க [ஒதவி செய் ‘help’]

      5. இந்த காலத்துலே ஒருத்தரையும் நம்ப முடியலை [நம்பு ‘trust]

 

12.  Change ஒண்ணு  ‘one’ plus –உம் in the sentences in (11) above to interrogative pronoun plus –உம் in the same meaning.

       Ex. எனக்கு அவனை பத்தி எதுவும் தெரியாது

 

13.  தான் gives the sense of exclusion of presumed others and மட்டும் gives the sense of elimination of possible others. Change the sentences below with தான் to   sentences with மட்டும்.

Translate or paraphrase both sentences and bring out their differences.

 

Ex. நான்தான் கல்யாணத்துக்கு போவேன்

   'It is me who will go to the wedding’

   நான் மட்டும் கல்யாணத்துக்கு போவேன்

   ‘I alone will go to the wedding’

 

1. அவன் நாளைக்குதான் வகுப்புக்கு வருவான்

2. நீதான் அப்பாகூட ஊருக்கு போகணும்

3. அவன் ஒனக்குதான் வேலை செய்வான்

4. எனக்குதான் அந்த விஷயம் தெரியும்

5. அவ படிக்கதான் எங்க வீட்டுக்கு வருவா

 

14.  மட்டும் and தான் could occur together in that order and combines both meanings.

       Change மட்டும் with மட்டும்தான் in the sentences in (13). Give the equivalent sentences which give this 'emphatic' meaning, which may not the translation of

       Tamil sentences

 

15.  Any word (other than noun modifiers) in a sentence can be made into an echo work by changing its initial consonant to க் or adding க் if the word begins with a vowel and by changing the vowel in the first syllable இ or ஈ depending on the length of the vowel. The meaning is ‘that and something similar’.

Make the underlined words in the following sentences into echo words. Give the equivalent senteces in English.

    Ex. அவனுக்கு பணம் குடுத்தியா?

    அவனுக்கு பணம்கிணம் குடுத்தியா?

    'Did you give him money or something?’

 

           1. பழம் வாங்கலாமா?

          2. பழத்தை எலி கடிக்கப் போகுது [எலி ‘mouse’]

         3. கத்தி கால்லே விழப் போகுது  [கத்தி ‘knife’]

         4. அவன் படிச்சு முன்னுக்கு வந்தான்

         5. கத்தி கீழே விழப் போகுது [விழு ‘fall’]

 

Handouts

 

Light verbs are those that are words formally, but get their meanings specified by the nouns to which they attached. They may be specific collocations or may make compound verbs from nouns.

 

விடு ‘let go, let in’

 

அவனுக்கு இன்னும் காய்ச்சல் விடலை

‘His fever hasn’t come down yet’

 

பஸ்லே ஒரே கூட்டம்; மூச்சு விட முடியலை

‘The bus was very crowded; I could not breathe’

 

எங்கள் ஊரில் ஒருநாள் விட்டு ஒருநாள் குழாய்லே தண்ணி விடுறாங்க

‘They let water run through the tap every other day in our town’

 

Illustrative list

Noun as subject

 

1. மழை விடு ‘’rain stop’

  (some other nouns: காய்ச்சல் 'fever', தலைவலி ‘headache’, பழக்கம் ‘habit’)

 

2. வேர் விடு ‘take root’

  (some other nouns: மொட்டு ‘bud’, எலை ‘leaf’

 

Noun as object

 

1. மூச்சு விடு ‘breathe’

 (some other nouns: பெருமூச்சு ‘sigh’, கொட்டாவி ‘yawn’)

 

2. கதை விடு ‘spin, bluff’

  (some other nouns: அறிக்கை ‘statement’, தூது ‘messenger’

 

3. கை விடு ‘give up, drop’

 

4. பஸ் விடு ‘run/operate buses’

  (some other nouns: ரயில் ‘train’, சைக்கிள் ‘bicycle’)

 

Noun as object with accusative case

 

1. கையை விடு ‘leave the hand’

   (some other nouns: கால் ‘leg’, ஆள் ‘person’, கவலை ‘worry’)

 

2. என்னை விடு (often in the completive aspect என்னை விட்டுடு) ‘let go, leave alone’

(some other nouns: அவன் ‘he’, வாய்ப்பு ‘opportunity’, பஸ் ‘bus’)

 

3. வேலையை விடு ‘give up, leave job’

   (some other nouns: படிப்பு ‘schooling’, any noun indicative of action like கறி   ‘meat’ and the action verb itself in the noun form (gerund) like கறி சாப்பிடுவதை)

 

4. கையை விடு ‘put in the hand (into something)’

   (some other nouns: கால் ‘foot’, குச்சி ‘stick’, நூல் ‘thread’

 

Practice making sentences using these noun + verb combinations

Related Images: