உரையாடல் 17 என்ன விசேஷம்?
ராஜா - வாங்க, வாங்க. நல்ல சமயத்துலே வந்திருக்கீங்க. அண்ணைக்கு ஒரு
நாள் நீங்க பிரியமா சாப்பிட்டீங்களே, அந்த இனிப்பை இண்ணைக்கும்
செஞ்சிருக்கோம். இந்தாங்க, எடுத்துக்கங்க.
ஜிம் - இண்ணைக்கு ஏதாவது விசேஷமா?
ராஜா - ஆமா. இண்ணைக்கு எங்களுக்கு வருஷ பெறப்பு. எங்களுக்கு தனி
மாசம், வருஷம் எல்லாம் இருக்கு. ஒங்களுக்கு தெரியும், இல்லையா?
ஜிம் - ஓ! நல்லா தெரியும். ஆனா வெவரமா தெரியாது. ஒங்களுக்கு ஒரு
வருஷத்துக்கு பனிரெண்டு மாசம்தானே!
ராஜா - ஆமா. அதுலே என்ன சந்தேகம்? ஆனா ஒவ்வொரு மாசத்துக்கும் சரியா
முப்பது நாள் இருக்காது. சில மாசத்துக்கு இருபத்தெட்டு நாள்
இருக்கும். சில மாசத்துக்கு முப்பத்திரெண்டு நாள் இருக்கும்.
ஜிம் - எந்தெந்த மாசத்துக்கு முப்பத்திரெண்டு நாள் இருக்கும்?
ராஜா - அப்படி ஒரு கணக்கு கெடையாது. அது கிரகங்களை பொறுத்து வருஷா
வருஷம் மாறும்.
ஜிம் - நான் இண்ணைக்கு காலைலே வயல் பக்கமா போய்க்கிட்டிருந்தேன்.
அப்போ சில பேர் வேப்பம்பூ பறிச்சுக்கிட்டுருந்தாங்க. அது எதுக்கு?
ராஜா - இப்போதான் வேப்ப மரம் பூக்கும். வருஷப் பெறப்பு அண்ணைக்கு சில
வீட்டுலே வேப்பம்பூ பச்சடி பண்ணுவாங்க. அதோடே ஒரு இனிப்பு
பச்சடியும் பண்ணுவாங்க. வாழ்க்கைலே இனிப்பு, கசப்பு ரெண்டும்
இருக்கு, இல்லையா?
ஜிம் - அது ரொம்ப உண்மை. வருஷ பெறப்பு அண்ணைக்கு வேறே ஏதாவது
விசேஷம் உண்டா?
ராஜா - அண்ணைக்கு நாங்க புது துணி கட்டுவோம். சில பேர் வீட்டுக்கு
புதுசா வெள்ளை அடிப்பாங்க. சாமி கும்பிட்டு வீட்டுலே எல்லாரும்
மத்தியானம் ஒண்ணா உக்காந்து சாப்பிடுவோம். அண்ணைக்கு கறி
சாப்பிடவே மாட்டோம். சாயங்காலம் பலகாரம் செய்வோம். எங்க
பண்டிகைலே சாப்பாடுதான் முக்கியம்!
ஜிம் - நான் இண்ணைக்கு ஒங்க வருஷ பெறப்பை பத்தி ரொம்ப விஷயம்
தெரிஞ்சுக்கிட்டேன். இன்னும் கொஞ்சம் இதை பத்தி தெரிஞ்சுக்-
கிடணும். அதை இன்னொரு நாள் கேக்கிறேன்.
Glossary
பிரியம் ‘liking’
இனிப்பு ‘sweet (dish), sweetness’
வருஷம் வருடம் 'year’
பெறப்பு ‘birth’
வருஷ பெறப்பு வருடப் பிறப்பு ‘New Year’
தனி ‘separate, exclusive, special’
வெவரம் விவரம் ‘details’
சந்தேகம் ‘doubt, question’
சரியா ‘exactly’
கணக்கு ‘calculation, arithmetic, mathematics’
கிரகம் ‘planet, satellite’
பொறுத்து ‘depending on’
வயல் ‘agricultural field’
பக்கமா ‘by way of, in the neighborhood of’
வேப்பம்- ‘(adjective form of) neem’
பறி (பறிக்க) ‘pick, pluck’
பச்சடி ‘cut vegetables mixed with yoghurt’
வாழ்க்கை ‘life’
கசப்பு ‘bitterness’
உண்மை /நெஜம் ‘truth’
உண்டு /இருக்கு ‘is’
புது ‘new’
துணி ‘clothes’
வெள்ளை அடி (-அடிக்க) ‘white wash’
கறி ‘meat’
பலகாரம் ‘snack’
பண்டிகை ‘festival celebrated at home’
முக்கியம் ‘importance’
Related words
தனியா ‘alone’
தனிமை ‘loneliness, solitude’
சரியான ‘exact, right, appropriate’
பொரி (பொரிக்க) ‘shallow fry’
பொரியல் ‘shallow fried side dish, any side dish’
கறி /பொரிக்கறி ‘curry, side dish’
அவி (அவிக்க) ‘boil’
அவியல் ‘a boiled vegetable side dish’
வறு (வறுக்க) ‘deep fry (of dry things), roast’
வறுவல் ‘deep fried side dish, chips’
சுடு (சுட) ‘heat up in a thin layer or well of oil (as in making தோசை or பூரி)'
கொழம்பு ‘thick spicy sauce’
ரசம் ‘thin spicy sauce’
தயிர் ‘yoghurt, curd’
மோர் ‘butter milk’
சோறு /சாதம் ‘cooked rice’
ஆக்கு (ஆக்க) ‘make’
சோறாக்கு /சாதம் பண்ணு ‘make / cook rice’
சமை (சமைக்க) ‘cook’
சமையல் ‘cooking’
புத்தாண்டு 'New Year’
வாழ்த்துகள் ‘greetings’
Pronunciation points
நாள் could be pronounced நா without the final ள்.
The first stop consonant of கிடு is pronounced voiceless in all contexts and this is represented by க்கிடு in spelling (ஒளிஞ்சுக்கிட்டான்).
கிடு may be truncated to be pronounced without டு (எடுத்துக்கிடுவான் = எடுத்துக்குவான்) or without கி (எடுத்துக்கிட்டு = எடுத்துட்டு)
Spelling variation
எடுத்துக்க எடுத்துக்கோ
எடுத்துக்கங்க எடுத்துக்கோங்க
Exercises
- The light verb பார் is added to the verbal participle to express the view that the act was performed to find out something about it such as whether it could be done, how it is etc. . பார் can be glossed in this context as ‘try’. When பார் is added to the infinitive it expresses the view that the act is intended to be performed or is imminent to happen. That is, பார் gives the meaning ‘try to act’ or ‘about to happen’
Match the second sentences that are most appropriate to follow the first sentences.
Translate both sentences that are matched.
Ex. A. நான் ராஜாகிட்டே பணம் கேட்டுப் பாத்தேன்.
B.நான் ராஜாகிட்டே பணம் கேக்கப் பாத்தேன்.
X. அம்மா விடலை
Y. அவன் குடுக்கலை.
AY: நான் ராஜாகிட்டே பணம் கேட்டுப் பாத்தேன்; அவன் குடுக்கலை.
I tried (asking) Raja for money; but he didn’t give.
BX: நான் ராஜாகிட்டே பணம் கேக்கப் பாத்தேன்; அம்மா விடலை. [விடு ‘let’]
I tried to ask Raja for money; mother didn’t let me.
- A. நான் பூனைக்கு பால் குடுத்துப் பாத்தேன். B. நான் பூனைக்கு பால் குடுக்கப் பாத்தேன்.
X. நேரம் இல்லை.
Y. அது குடிக்கலை.
- A. நான் இந்த நாவலை படிச்சுப் பாத்தேன். [நாவல் ‘novel’]
B. நான் இந்த நாவலை படிக்கப் பாத்தேன்.
X. நல்லா இருந்துது.
Y. வேறே வேலை வந்துது.
- A. நான் மாலாவுக்கு புத்திமதி சொல்லிப் பாத்தேன். [புத்திமதி ‘advice’]
B. நான் மாலாவுக்கு புத்திமதி சொல்ல பாத்தேன்.
X. அவ கெடைக்கலை
Y. அவ கேக்கலை
- A. நாய் சொவர் மேலே ஏறிப் பாத்துது. [சொவர் ‘wall’, ஏறு ‘climb, jump’]
B. நாய் சொவர் மேலே ஏறப் பாத்துது.
X. நான் விடலை; இழுத்து பிடிச்சேன் [இழு ‘drag’, பிடி ‘hold’]
Y. முடியலை; வழுக்கி விழுந்துது. [வழுக்கு ‘slip’, விழு ‘fall’]
- A. நான் புது காரை ஓட்டிப் பாத்தேன்.
B. நான் புது காரை ஓட்டப் பாத்தேன்.
X. பழைய கார் மாதிரி இல்லை. [மாதிரி ‘like’]
Y. ஆனா சாவி இல்லை. [சாவி ‘key’]
- When போ is used instead of பார் after the infinitive form of the verb, it also suggests intention to act, but it has stronger volition in the past tense than பார். It also expresses, like பார், absence of volition suggesting that an act is about to happen.
Replace பார் with போ in the B sentences above and translate them.
Ex. நான் ராஜாகிட்டே பணம் கேக்கப் போனேன்
‘I was going to ask Raja for money’
- Translate the sentences below without the sense of intention to act.
Ex. நான் கீழே விழப் பாத்தேன் / போனேன்
I was about to fall down.
1. நான் வகுப்புலே தூங்கப் பாத்தேன் / போனேன்
2. நான் மறந்து அவன்கிட்டே ரகசியத்தை சொல்லப் பாத்தேன் / போனேன் [ மற ‘forget’, ரகசியம் ‘secret’]
3. நான் மடத்தனமா இதை நூறு டாலருக்கு வாங்கப் பாத்தேன் / போனேன் [மடத்தனமா 'foolishly’]
4. அவன் பொய் சொல்றதுக்கு அப்பாகிட்டே அடி வாங்கப் பாத்தான் / போனான்
5. அணில் கார்லே அடிபட்டு சாகப் பாத்துது / போச்சு [சாகு ‘die’]
- The light verb விடு with the infinitive gives the meaning of letting an act to take place. Fill in the gap in the following sentences with the infinitive of the verb in parentheses. Translate the sentences.
Ex. எங்க அப்பா என்னை தமிழ் ------------- விடலை (படி)
எங்க அப்பா என்னை தமிழ் படிக்க விடலை
‘My father did not allow me to study Tamil’
1. ஒன் தம்பியை ---------------- விடு (பேசு)
2. தீவிரவாதிகளை அமெரிக்காவுக்குள்ளே ------------ விட மாட்டாங்க (வா) [தீவிரவாதிக(ள்) 'extremists’]
3. நாட்டுலே யாரும் சாப்பாட்டுக்கு ----------------- விட கூடாது (கஷ்டப்படு)
4. சின்ன பிள்ளைகளை வேலை ------------ விட்டு பணம் சம்பாதிக்கிறான் (செய்) {பிள்ளைக(ள்) ‘children’, சம்பாதி ‘earn’]
5. அவளை இஷ்டம் போல ------------ விடுறது நல்லது இல்லை (சுத்து 'wander around’ [ இஷ்டம் போல ‘as (she) likes’]
- The light verb வை with the infinitive gives the meaning of causing an act to take place. Fill in the gap in the following sentences with the infinitive of the verb in parentheses. Translate the sentences.
Ex. எங்க அப்பா என்னை தமிழ் ------------- வைச்சார் (படி)
எங்க அப்பா என்னை தமிழ் படிக்க வைச்சார்
‘My father made me study Tamil’
1. ஒன் தம்பியை -------- வை (பேசு)
2. எங்க அம்மாவை அமெரிக்காவுக்கு ----------- வைக்கணும் (வா)
3. என்னை அதிகமா வேலை --------- வைச்சு கொறைவா சம்பளம் குடுக்குறாங்க (செய்) [சம்பளம் ‘pay, salary’]
4. பூனையை பாலை -------------- வைக்க முடியலை (குடி)
5. அவனை வேலைக்கு ----------- வைக்கிறது ரொம்ப கஷ்டம் (போ)
6. The auxiliary verb (இ)ரு added to the verbal participle gives the meaning that after an action ended its end or relevance stays on. This meaning is called resulting
state grammatically. Fill in the gap in the sentences below with the verbal participle form of the verb in parentheses. The verb form is written as one word; usual sandhi
rules apply. Translate the sentences.
Ex. ஒன் சட்டை --------- இருக்கு (கிழி ‘be torn)
ஒன் சட்டை கிழிஞ்சுருக்கு
'Your shirt is torn'
1. இந்த ஜன்னல் ---------- இருக்கு (ஒடை ‘be broken’)
2. பால் -------------- இருந்துது (கெடு ‘be spoiled’)
3. அவன் ------------இருந்தான் (குடி ‘drink (alcohol)’
4. நாங்க ------------ இருக்கோம் (படி ‘be educated’)
5. நீ ரொம்ப -------------- இருக்கே (மெலி ‘get lean’)
7, The following sentences express performance of an action at a point in time. Change them to sentences that express that, after the performance of the action, some ‘result’
of it is present at the time of, or is relevant to the context, of the speech or another event, using (இ)ரு ‘be’. Translate the new sentences.
Ex. அவன் வெளியே போனான் ‘He went out’
அவன் வெளியே போயிருக்கான் ‘He has gone out’
- அம்மா வீட்டுக்கு வந்தாங்க.
- நான் பரிச்சைக்கு நல்லா படிச்சேன்.
- ராஜா நாலு தோசை சாப்பிட்டான்.
- குமார் என்கிட்டே பணம் கேட்டான்.
- நேத்து ராத்திரி மழை பெஞ்சுது.
8. The sentences you made in (7) are instances of present relevance to the sentences in (8). Sequence them with the sentences below and translate both.
Ex. கொஞ்ச நேரத்துலே வருவான்
அவன் வெளியே போயிருக்கான்; கொஞ்ச நேரத்துலே வருவான்
‘He has gone out; he will come back in a short while’
1. எனக்காக காத்துருப்பாங்க
2. நல்ல மார்க் வாங்குவேன்
3. இதுக்கு மேலே சாப்பிட மாட்டான்
4. நான் நாளைக்கு குடுக்க போறேன்
5. தரை ஈரமா இருக்கு [தரை ‘ground’, ஈரம் ‘wetness’]
9. Use (இ)ரு in past tense in the sentences you made in (7) to mean that the presence or relevance is of past. Follow those sentences with the sentences below. Translate the sequence of sentences.
Ex. அப்போ அவனோட அப்பா வந்தார்
அவன் வெளியே போயிருந்தான்; அப்போ அவனோட அப்பா வந்தார்
‘He had gone out; at that time his father came’
1. அப்ப எனக்கு தோசை சுட்டாங்க. [சுடு ‘fry’]
2. ஆனா எல்லாத்தையும் மறக்கலாம். [ஆனா ‘but’, மற ‘forget’]
3. அதுனாலே வேறே ஒண்ணும் சாப்பிடலை. [அதுனாலே ‘so’]
4. அதுனாலே வேறே யார்கிட்டேயும் கேக்கலை.
5. தண்ணிலே நடந்து வீட்டுக்குள்ளே போனேன்.
10. (இ)ரு with the verbal participle and in the present tense could mean that the speaker extrapolates the knowledge of the act from another source. That is,
the act is not personally observed by the speaker, but is inferred. This is different from the sense (being in state) of the same sentencces you made in (8).
Combine those sentences with the sentences given below and translate the sequence of sentences below which give this meaning
.
Ex. அப்போ திருட்டு நடந்துருக்கு [திருட்டு 'theft']
அவன் வெளியே போயிருக்கான்; அப்போ திருட்டு நடந்துருக்கு
‘He has gone out; theft has taken place at that time’
- சாவி இல்லையாம் [சாவி ‘key’]
- ஆனா கஷ்டமான கேள்வி கேட்டுருக்காங்க [கேள்வி 'question’]
- வயிறு வலிச்சுருக்கு [வயிறு ‘stomach’, வலி ‘pain’]
- ராஜா குடுக்கலையாம்
- காலைலேதான் நான் பாத்தேன
(Help: Change என்கிட்டே in (4) of (8) to ராஜாகிட்டே when you use it here. When the speaker is a paricipant in the act, there is no room for extrapolation)
11. (இ)ரு with the verbal participles and in future tense in the sentences in (7) would commonly mean that the performance of the act in the past is extrapolated by the speaker as probable (i.e. would have taken place). Sequence these sentences with the sentences below. Translate the sentences.
Ex. அவன் வெளியே போயிருப்பான்
மணி அஞ்சுக்கு மேலே ஆச்சு
அவன் வெளியே போயிருப்பான்; மணி அஞ்சுக்கு மேலே ஆச்சு
‘He would have gone out; it is beyond five o’clock’
1. நான் சீக்கிரம் போகணும். [சீக்கிரம் ‘quickly’]
2. ஆனா காய்ச்சல் வந்துது. [காய்ச்சல் ‘fever’]
3. அதுனாலேதான் இன்னும் பசிக்கலை. [பசி ‘be hungry’]
4. ஆனா நான் அண்ணைக்கு ஊர்லே இல்லை.
5. அதுனாலேதான் ரோஜா பூத்துருக்கு. [ரோஜா ‘rose’, பூ ‘bloom’]
12. –ஏ at the end of a sentence makes it a question for confirmation similar to a tag question. This could function as a relative clause when the noun to head
relative clause appears in the beginning of this clause in remote deictic.
Translate the sentences below.
Ex. நேத்து வந்தானே அந்த பையன் இண்ணைக்கும் வந்தான்
‘(A boy) came yesterday, didn’t he / you know; that boy (he) came today also’
- நீ நேத்து வாங்குனியே அந்த புஸ்தகத்தை எனக்கு குடுக்கிறியா?
- எல்லாருக்கும் பிடிச்சுதே அந்த படத்தை இன்னொரு தடவை பாப்போம்.
- அப்பா எப்பவும் வருவாரே அந்த பஸ்லேதான் வர்றார்
- தம்பி படிக்கிறானே அது ரொம்ப கஷ்டமான புஸ்தகம்
- அம்மா சொல்றாங்களே அது யார் வீடு?
13. Instead of -ஏ, the tag question marker -லே could be used in the sentences in (12) in the same meaning. Substitute –ஏ with –லே in the sentences in (12).
Ex. நேத்து வந்தான்'லே அந்த பையன் இண்ணைக்கும் வந்தான்
'(A boy) came yesterday, didn't he / you know, that boy (he) came today also'
14. ஒவ்வொரு—உம் means ‘every’. ஒவ்வொரு நாளும் means ‘every day’. One meaning of it that the action is repeated in the given time frame is expressed alternatively with regard to temporal nouns ending in -அம் or –ஐ by doubling the noun and changing the ending of the first noun to -ஆ.
Change the sentences below into this alternate construction and translate.
(Note: This alternate construction with the meaning that the act is recurrent may not have the locative case marker that the other construction may
optionally have. ஒவ்வொரு வாரமும் could also be ஒவ்வொரு வாரத்துலேயும், but வாராவாரம் could not be *வாராவாரத்துலே)
Ex. ஒவ்வொரு வருஷமும் நான் இந்தியாவுக்கு போவேன்
வருஷா வருஷம் நான் இந்தியாவுக்கு போவேன்
'I go to India every year
- ஒவ்வொரு வாரமும் ரெண்டு தமிழ் வகுப்பு இருக்கு
- ஒவ்வொரு மாசமும் அப்பா எனக்கு பணம் அனுப்புவார் (அனுப்பு ‘send’)
- ஒவ்வொரு வருஷமும் வெயில் அதிகம் ஆகுது
- ஒவ்வொரு வாரமும் எனக்கு எதாவது ஒரு கஷ்டம் வருது
- ஒவ்வொரு வேளையும் நல்லா சாப்பிடணும் (வேளை ‘time of a day’)
Handout
- Names of trees and their parts
Base tree fruit unripe fruit
வாழை ‘banana’ வாழை மரம் வாழைப்பழம் வாழைக்கா(ய்)
பலா ‘jack’ பலா மரம் பலாப் பழம் பலாக் கா(ய்)
மா ‘mango’ மாமரம் மாம்பழம் மாங்கா(ய்)
புளி ‘tamarind’ புளிய மரம் புளியம்பழம் புளியங்கா(ய்)
பனை ‘palmyra’ பனை மரம் பனம்பழம் பனங்கா(ய்)
வேம்பு ‘neem’ வேப்ப மரம் வேப்பம் பழம் வேப்பங்காய்
- Names of years used in Tamil Nadu
The following list presents the current 60-year cycle of the Tamil calendar. New year begins from சித்திரை. This is used mostly in traditional contexts such as casting one’s horoscope and fixing the date of wedding. This can be found in Tamil daily calendar as well.
No. | Name | Name (English) | Gregorian Year | No. | Name | Name (English) | Gregorian Year | |
01. | பிரபவ | Prabhava | 1987–1988 | 31. | ஹேவிளம்பி | Hevilambi | 2017–2018 | |
02. | விபவ | Vibhava | 1988–1989 | 32. | விளம்பி | Vilambi | 2018–2019 | |
03. | சுக்ல | Sukla | 1989–1990 | 33. | விகாரி | Vikari | 2019–2020 | |
04. | பிரமோதூத | Pramodoota | 1990–1991 | 34. | சார்வரி | Sarvari | 2020–2021 | |
05. | பிரசோற்பத்தி | Prachorpaththi | 1991–1992 | 35. | பிலவ | Plava | 2021–2022 | |
06. | ஆங்கீரச | Aangirasa | 1992–1993 | 36. | சுபகிருது | Subakrith | 2022–2023 | |
07. | ஸ்ரீமுக | Srimukha | 1993–1994 | 37. | சோபகிருது | Sobakrith | 2023–2024 | |
08. | பவ | Bhava | 1994–1995 | 38. | குரோதி | Krodhi | 2024–2025 | |
09. | யுவ | Yuva | 1995–1996 | 39. | விசுவாசுவ | Visuvaasuva | 2025–2026 | |
10. | தாது | Dhaatu | 1996–1997 | 40. | பரபாவ | Parabhaava | 2026–2027 | |
11. | ஈஸ்வர | Eesvara | 1997–1998 | 41. | பிலவங்க | Plavanga | 2027–2028 | |
12. | வெகுதானிய | Bahudhanya | 1998–1999 | 42. | கீலக | Keelaka | 2028–2029 | |
13. | பிரமாதி | Pramathi | 1999–2000 | 43. | சௌமிய | Saumya | 2029–2030 | |
14. | விக்கிரம | Vikrama | 2000–2001 | 44. | சாதாரண | Sadharana | 2030–2031 | |
15. | விஷு | Vishu | 2001–2002 | 45. | விரோதகிருது | Virodhikrithu | 2031–2032 | |
16. | சித்திரபானு | Chitrabaanu | 2002–2003 | 46. | பரிதாபி | Paridhaabi | 2032–2033 | |
17. | சுபானு | Subhaanu | 2003–2004 | 47. | பிரமாதீச | Pramaadhisa | 2033–2034 | |
18. | தாரண | Dhaarana | 2004–2005 | 48. | ஆனந்த | Aanandha | 2034–2035 | |
19. | பார்த்திப | Paarthiba | 2005–2006 | 49. | ராட்சச | Rakshasa | 2035–2036 | |
20. | விய | Viya | 2006–2007 | 50. | நள | Nala | 2036–2037 | |
21. | சர்வசித்து | Sarvajith | 2007–2008 | 51. | பிங்கள | Pingala | 2037–2038 | |
22. | சர்வதாரி | Sarvadhari | 2008–2009 | 52. | காளயுக்தி | Kalayukthi | 2038–2039 | |
23. | விரோதி | Virodhi | 2009–2010 | 53. | சித்தார்த்தி | Siddharthi | 2039–2040 | |
24. | விக்ருதி | Vikruthi | 2010–2011 | 54. | ரௌத்திரி | Raudhri | 2040–2041 | |
25. | கர | Kara | 2011–2012 | 55. | துன்மதி | Dunmathi | 2041–2042 | |
26. | நந்தன | Nandhana | 2012–2013 | 56. | துந்துபி | Dhundubhi | 2042–2043 | |
27. | விஜய | Vijaya | 2013–2014 | 57. | ருத்ரோத்காரி | Rudhrodhgaari | 2043–2044 | |
28. | ஜய | Jaya | 2014–2015 | 58. | ரக்தாட்சி | Raktakshi | 2044–2045 | |
29. | மன்மத | Manmatha | 2015–2016 | 59. | குரோதன | Krodhana | 2045–2046 | |
30. | துன்முகி | Dhunmuki | 2016–2017 | 60. | அட்சய | Akshaya | 2046–2047 |
- Light verbs படு and படுத்து ssen in the previous Conversation are full verbs as well. They have nouns with case markers. When the light verbs occur with nouns without case markers, the combination may have idiomatic sense.
படு ‘suffer, go through, be in possession’
படுத்து ‘make one suffer /go through/to be in possession’
These verbs are full verbs in the following sentences
ஒன் கை என்மேலே பட்டுது
Your hand touched me (came into contact with my body)
ஒன் பிள்ளை என்னை பாடா படுத்துது
Your child is giving me lot of troubles (making me go through a lot)
Noun + படு meaning to experience a mental state
சந்தோஷப்படு ‘be happy’ (with some other nouns: வருத்தப்படு ‘regret. Grieve’, கவலைப்படு ‘worry’, கோபப்படு ‘get angry’, ஆசைப்படு ‘have desire, want’, கஷ்டப்படு ‘suffer’, பெருமைப்படு ‘be proud’, அவசரப்படு ‘hurry up’)
Verb - Noun + படு meaning to get or receive a physical condition
அடிபடு ‘get beaten’
(with some other nouns: மிதிபடு ‘get trampled’, கடிபடு ‘get bitten’, ஓடைபடு ‘get broken’, வெட்டுப்படு ‘get cut’)
Noun + படுத்து meaning to make someone experience a mental state
சந்தோஷப்படுத்து ‘make someone happy’
(with some other nouns: கோபப்படுத்து ‘instigate’, பெருமைப்படுத்து ‘honor’, அவசரப்படுத்து ‘hurry up (someone)
Noun + படுத்து meaning to bring a change in a physical condition
அகலப்படுத்து ‘widen’
(with some other nouns: ஆழப்படுத்து ‘deepen’, நேர்படுத்து ‘straighten’, அழகுபடுத்து ‘beautify’, அசிங்கப்படுத்து ‘defile’)
Other examples
கேள்விப்படு ‘hear (as in hearsay), கண்படு ‘be cast an evil eye’, தட்டுப்படு ‘be in reach’, கட்டுப்படு ‘be bound’
With case
கண்ணில் படு ‘fall in sight’
some other nouns: காதில் படு ‘fall in the ear’, கையில் படு ‘come into hand’,
காலில் படு ‘feel by foot’)
Practice making sentences using these words and phrases.