உரையாடல் 18 கல்யாண ஊர்வலம்
ஜிம் - நான் நேத்து காலைலே என் அறைலேருந்து படிச்சுக்கிட்டிருந்தேன்.
அப்போ ஒரு கல்யாண ஊர்வலம் தெரு வழியா போச்சு. இந்த ஒரு
வாரத்துலே நான் இப்படி அஞ்சாறு ஊர்வலம் பாத்தேன். இதுக்கு
ஏதாவது காரணம் உண்டா?
ராஜா - ஆமா; உண்டு. எங்க நாட்டுலே எல்லா மாசத்துலேயும் கல்யாணம்
நடக்காது. சில மாசம்தான் நல்ல மாசம். சித்திரை அதுலே ஒண்ணு.
கல்யாணம் மாதிரி நல்ல காரியம் இந்த மாதிரி மாசத்துலேதான் நடக்கும்.
ஜிம் - வருஷம் முழுவதும் சித்திரை ஒண்ணுதான் நல்ல மாசமா?
ராஜா - இல்லை. வேறே நல்ல மாசமும் இருக்கு. ஆனி, ஆவணி, ஐப்பசி,
தை எல்லாம் நல்ல மாசம்தான்.
ஜிம் - இதே மாதிரி நல்ல நாள் இருக்கா?
ராஜா - ஆமா. ஒவ்வொரு மாசத்துலேயும் சில நாள்தான் நல்ல நாள். அந்த
நல்ல நாள்லே நல்ல நேரத்துலேதான் கல்யாணம் நடக்கும்.
ஜிம் - நான் இதை பத்தி முன்னாலே புஸ்தகத்துலே படிச்சிருக்கேன்.
இப்போதான் நேர்லே பாக்கிறேன்.
ராஜா - இந்த வெயில்லே ஊர்வலத்துலே நடந்து போக ரொம்ப கஷ்டமா
இருக்கும். ஒங்களாலே இந்த வெயிலை தாங்கிக்கிட முடியுதா?
ஜிம் - கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா வீட்டுக்குள்ளே அவ்வளவு மோசமா
இல்லை.
ராஜா - ஒரு வேட்டி வாங்கிக்கோங்க. வெயில் காலத்துலே அது வசதியா
இருக்கும்.
ஜிம் - நான் ரெண்டு வேட்டி வாங்கிருக்கேன். வீட்டுலே அதைத்தான்
கட்டிருப்பேன். அதை கட்டிக்கிட்டு வெளிலே நடக்க பயமா
இருக்கு.
ராஜா - என்ன பயம்?
ஜிம் - ஒரு நாள் வேட்டி கட்டிக்கிட்டு கொஞ்ச தூரம் நடந்து பாத்தேன். அது
நழுவி கீழே விழுந்துட்டுது.
ராஜா - மொதல்லே கஷ்டமாத்தான் இருக்கும். பெறகு எல்லாம் சரியா போயிடும்.
ஜிம் - நானும் அப்படித்தான் நெனைக்கிறேன். அதுக்குள்ளே வெயிலும் பழக்கம்
ஆயிடும். அடுத்த வருஷம் இவ்வளவு கஷ்டம் இருக்காது.
VeeTTi
Credit: indianmirror.com
VeeTTi
Glossary
அறை ‘room’
கல்யாணம் ‘wedding’
ஊர்வலம் ‘procession’
அஞ்சாறு ஐந்தாறு ‘five or six’
காரணம் ‘reason’
காரியம் ‘task, thing to be done’
முழுவதும் /முழுசும் ‘whole of’
நேர்லே நேரில் ‘in person’
தாங்கு (தாங்க) ‘bear, tolerate’
மோசம் ‘being bad’
வசதி ‘convenience’
நழுவு (நழுவ) ‘slip’
விழு (விழ) ‘fall’
மொதல்லே முதலில் ‘at first, in the beginning’
அதுக்குள்ளே அதற்குள் ‘by then’
Related words
சமையலறை 'kitchen’
படுக்கையறை ‘bedroom’
குளியலறை ‘bathroom’
கக்கூஸ் ‘toilet’
மாடி ‘upstairs’
படி ‘step’
காரண காரியம் ‘cause and effect, logic’
கடைசி ‘end’
கடைசிலே கடைசியில் ‘at the end’
மொதல் முதல் ‘first, beginning’
நடு ‘middle’
நடுலே நடுவில் ‘in the middle’
Alternate forms
விழுதுட்டுது விழுந்துடுச்சு, விழுந்துருச்சு
போயிடும் போயிரும்
Pronunciation point
Though வி of the auxiliary verb (வி)டு is lost, the vowel இ of வி is retained when the adverbial participle and this vowel is lengthened (சொல்லிட்டான் --> சொல்லீட்டான்)
Exercises
1. (இ)ரு with the verbal participle and in the present tense could mean that an act in the past exists. The auxiliary verb agrees with the subject of the sentence. The verb form is a single word and the usual sandhi rules apply. Fill in the gap in the sentences below with the verbal participle of the verb in parentheses. Translate the sentences.
Ex. நான் இந்தியாவுக்கு ------- இருக்கேன் (போ)
நான் இந்தியாவுக்கு போயிருக்கேன்
'I have gone / been to India’
1. அம்மா அமெரிக்காவுக்கு ----------- இருக்காங்க (வா)
2. நான் சின்ன வயசுலே தமிழ் ------------ இருக்கேன் (பேசு)
3. நீங்க மாட்டுக் கறி -------------இருக்கீங்களா? (சாப்பிடு) [மாட்டுக் கறி 'beef']
4. யார் யானை மேலே -------------- இருக்கீங்க? (உக்கார்)
5. என் தம்பி எண்ணைக்காவது பொய் --------- இருக்கானா? (சொல்லு)
2. (இ)ரு with the verbal participle and in the future tense or modal could mean that the statement is counterfactual. That is, the act would / could have happened, but did not. Translate the sentences below.
Ex. நான் இந்தியாவுக்கு போயிருப்பேன்; ஆனா லீவு கெடைக்கலை
'I would have gone to India, but didn’t get leave’
1. அம்மா போன வாரம் அமெரிக்காவுக்கு வந்துருப்பாங்க; ஆனா விசா கெடைக்கலை [விசா ‘visa’]
2. நான் நேத்து ஒன்னை வந்து பாத்துருப்பேன்; ஆனா நேரம் கெடைக்கலை
3. நான் நேத்து ஒன்னை வந்து பாத்துருக்கலாம்; ஆனா நேரம் கெடைக்கலை
4. அம்மா போன வாரம் அமெரிக்காவுக்கு வந்துருக்கணும்; ஆனா விசா கெடைக்கலை
5. ராத்திரி மழை பெஞ்சுருக்கணும்; ஆனா பெய்யலை
3. Use the right inflection of the auxiliary verb (இ)ரு in the first of the pairs of two sentences. Take into account the second sentence to decide the inflection. Translate the sentences.
1. அப்பா கொஞ்ச நேரம் வெளியே -------------- . (போ)
கொஞ்ச நேரம் இருங்க.
2. நான் மதுரை கோயிலை ரெண்டு தடவை--------------- . (பார்)
அது ரொம்ப பெரிய கோயில்.
3. அம்மா என்னை சாயங்காலம் வீட்டுலே இருக்க --------------- . (சொல்லு)
அதுனாலே ஒன்னோடே வர முடியாது.
4. ஹலோ, நான் அமெரிக்காவுக்கு ----------------- . (வா)
ஒன்னை பாக்க முடியுமா?
5. நான் இதுக்கு முன்னாலே கூட்டத்துலே தமிழ்லே ------------- . (பேசு)
இப்போ கொஞ்சம் பயமா இருக்கு.
4. -உம் is added to the verbal participle to break the sequential or causal relation between the participle and the finite verb. That is, the presupposed sequencing or causation did not take place. It translates as ‘though or in spite of’. Translate the following sentences.
Ex. நான் சொல்லியும் அவன் சிகாகோவுக்கு போகலை
‘Though I told him (to), he didn’t go to Chicago’
நான் சொல்லியும் அவன் சிகாகோவுக்கு போனான்
‘Though I told him (not to), he went to Chicago
1. மூணு தடவை படிச்சும் எனக்கு இந்த பாடம் புரியலை
2. நான் திரும்ப திரும்ப கேட்டும் அவன் என் பணத்தை திருப்பி குடுக்கலை [திரும்ப ‘again', திருப்பி 'back ’]
3. லாட்டரிலே பணம் கெடைச்சும் அவன் கஞ்சனாதான் இருக்கான் [லாட்டரி ‘lottery’, கஞ்சன் ‘miser’]
4. கல்யாணம்பண்ணியும் அவன் பிரமச்சாரி [பிரமச்சாரி ‘bachelor’]
5. எவ்வளவு சொல்லிக்குடுத்தும் அவனுக்கு இந்த பாடம் புரியலை [சொல்லிக்குடு ‘teach’]
5. Tamil verbs in general are not marked for their successful execution. The auxiliary verb (வி)டு is added to the verbal participle to mark the successful execution of the act. The sentences below are in simple past tense. If you want to convey this sense of successful execution, how will you change the verbs? Give the closest equivalents in English of the sentences you made.
Ex. நான் நேத்து நாலு மணிக்கு வீட்டுக்கு வந்தேன்
நான் நேத்து நாலு மணிக்கு வீட்டுக்கு வந்துட்டேன்
'I surely came home at four o’clock yesterday’
- அவன் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு போனான்.
- நான் இந்த படத்தை பாத்தேன்.
- அப்பா டி.வி.முன்னாலே தூங்குனார்.
- நான் அம்மாகிட்டே அந்த விஷயத்தை சொன்னேன்.
- எல்லாரும் கூட்டத்துக்கு வந்தாங்களா?
- நாய் வெளியே போச்சு.
- பேனா பைலேருந்து கீழே விழுந்துது.
- பூனை ஒரு லிட்டர் பாலை குடிச்சுது.
- வகுப்பு ஒம்பதரை மணிக்கு ஆரம்பிச்சுது.
- ஒங்க வேலை முடிஞ்சுதா?
6. Make the sentences in (5) into sentences in simple future tense. With these sentences you made, (வி)டு with the verbal participle means assured successful execution of acts. If you want to convey the sense of assurance of execution, how will you change the verbs? Give the closest equivalents in English of the sentences you made.
Ex. நான் நாலு மணிக்கு வீட்டுக்கு வருவேன்
நான் நாலு மணிக்கு வீட்டுக்கு வந்துடுவேன் / வந்துருவேன்
'I will definitely come home at four o’clock’
7. The sentences below are negative, imperative and modal sentences. These sentences with (வி)டு with the verbal participle mean assured successful execution of acts it comes under the scope of the negative, the imperative and the modal as well. Make these sentences out of the sentences below and give their closest equivalents in English.
Ex. நாலு தோசையையும் நான் சாப்பிடணுமாம்
நாலு தோசையையும் நான் சாப்பிட்டுடணுமாம் / சாப்பிட்டுரணுமாம்
'I am told that I should surely eat all four dosais’
1. ஒங்க பிள்ளை ஒங்களை விட்டு போக மாட்டான் [விட்டு ‘leaving’]
2. நாய் இந்த பாலை குடிக்க கூடாது
3. நீ ராத்திரி தனியா வெளியே போகாதே [தனியா ‘alone’]
4. இந்த வேலையை அஞ்சு மணிக்குள்ளே முடிக்கணும்
5. நாம இந்த விஷயத்தை அம்மாகிட்டே சொல்லலாம்
8. The sentences below are in simple present tense. These sentences with (வி)டு with the verbal participle mean that the acts are successfully executed as observed. This in translation is closer to saying after observing that one is able to or habituated to do. Make these sentences out of the sentences below and give their closest equivalents in English.
Ex. இப்போ நான் நல்லா தூங்குறேன்
இப்போ நான் நல்லா தூங்கிடுறேன் / தூங்கிர்றேன்
' I certaainly sleep well now a days'
1. அவன் தெனம் சரியா பத்து மணிக்கு வர்றான்
2. இதை நான் அவன்கிட்டே குடுக்குறேன்
3. நீ எல்லாத்தையும் சாப்பிடுறியா? [எல்லாத்தையும் ‘everything’]
4. நீங்க ஏழு மணிக்கு எங்கே போறீங்க?
5. இந்த வேலையை நானே முடிக்கிறேன்
9. When two or more actions are considered discrete in the sense that one is completed and then another takes place, the first verb is in completive aspect ((வி)ட்டு). Combine the two sentences below into one as if they are disjointed and take place one after another. Translate the combined sentence.
Ex. அவன் புஸ்தகத்தை எடுத்தான்; மேசையை பாத்தான்.
அவன் புஸ்தகத்தை எடுத்துட்டு மேசையை பாத்தான்.
He took the book and looked at the table
- அவன் அரை மணி நேரம் ஓடுனான்; வகுப்புக்கு வந்தான்.
- அவன் எட்டு மணி வரைக்கும் தூங்குனான்; வகுப்புக்கு வந்தான். (வரைக்கும் ‘until’)
- அவன் மத்தியான சாப்பாடு சாப்பிட்டான்; வகுப்புக்கு வந்தான்.
- அவன் இந்த பணத்தை என்கிட்டே குடுத்தான்; வீட்டுக்கு போனான்.
- அவன் இந்த விஷயத்தை என்கிட்டே சொன்னான்; வீட்டுக்கு போனான்.
- அவன் சிகாகோவுலே படிச்சான்; பெரிய வேலை பாக்குறான்.
- அவன் பேராசிரியர்கிட்டே பேசுவான்; வீட்டுக்கு போவான்.
- எங்க வீட்டுலே காபி குடி; (பெறகு) வெளையாட போ. (வெளையாடு ‘play’)
- நான் குளிக்கணும் சாப்பிடணும்; வீட்டுப் பாடம் எழுதணும்; (பெறகு) வெளியே போகணும். (குளி ‘bathe’, எழுது ‘write’)
- ஒரு மணி நேரம் மழை பெஞ்சுது; (இப்ப) வெயில் அடிக்குது.
10. The verbal participle can be negated to mean ‘having not performed’ with the suffix -ஆம(ல்) added to the verb stem either week or strong. It often translates as ‘without’ in English. Fill in the blanks in the sentences below with the negative verbal participle of the verb given in parentheses. Translate the completed sentences.
Ex. நீ பாடத்தை ------------- வகுப்புக்கு போகக் கூடாது (படி)
நீ பாடத்தை படிக்காம வகுப்புக்கு போகக் கூடாது
‘You should not go to class without reading the lesson’
- நான் இண்ணைக்கு வகுப்புக்கு -------------------- போனேன். (சாப்பிடு)
- நான் ராத்திரி ------------------- இந்த புஸ்தகத்தை படிச்சேன். (தூங்கு)
- நான் வீட்டுக்கு ------------ கடைக்கு நேரே போனேன். (போ) [நேரே ‘straight’]
- என் தம்பி எதுவும் ---------------- சாப்பிடுவான். (பேசு)
- ------------ மெதுவா நட. (ஓடு) (மெதுவா ‘slowly’)
- நீ யாருக்கும் ----------------- வெளியே போ. (சொல்லு)
- எதையும் ------------- இந்த காரை வாங்கு. (யோசி ‘think’, யோசிக்க)
- பணம் -------------- என்ன செய்ய முடியும்? (வா)
- புஸ்தகம் --------------- வகுப்புக்கு வரக் கூடாது. (வாங்கு)
- ஒன்னை -------------- நான் சினிமாவுக்கு போகமாட்டேன். (கேள்)
- எனக்கு எந்த பாடமும் ரெண்டு தடவை ---------- புரியாது. (படி)
- அப்பாவுக்கு ------------- நாம சினிமாவுக்கு போகவேண்டாம். (பிடி)
- நீ யாருக்கும் --------------- ஊருக்கு போ. (தெரி)
- வீட்டுலே ------------ இந்த நேரத்துலே எங்கே போனே? (இரு)
- நாளைக்கு வரைக்கும் ------------------ இரு. (நட)
- மழை ------- கொளத்துலே தண்ணி இல்லை (பெய்) [கொளம் tank’]
- மழை ------------ ஊர்லே தண்ணி கஷ்டம் (-இல் 'not’) [கஷ்டம் ‘problem’]
- வேலை ---------- என்ன செய்யப் போறே? (-இல்)
- பணம் ------------- ஒண்ணும் செய்ய முடியாது (-இல்)
- நீ -------------- நான் இல்லை (-இல்)
Handouts
Names of months used in Tamil Nadu
சித்திரை 'Mid-April to Mid-May'
வைகாசி 'Mid-May to Mid-June'
ஆனி 'Mid-June to Mid-July'
ஆடி 'Mid-July to Mid-August'
ஆவணி 'Mid-August to Mid-September'
புரட்டாசி 'Mid-September- Mid-October'
ஐப்பசி 'Mid-October to Mid-November'
கார்த்திகை 'Mid-November to Mid-December'
மார்கழி 'Mid-December to Mid-January'
தை 'Mid-January to Mid-February'
மாசி 'Mid-February to Mid-March
பங்குனி 'Mid-March to Mid-April'
Light verb அடி
அடி 'hit'
மணி அடி (மணி 'bell')
கடிகாரம் ஐந்து மணி அடிச்சும் நான் வீட்டுக்கு போகலை
'Though the clock struck five, I did no go home’'
Noun as subject
1. வெயில் அடி (வெயில் 'sun shine') ‘sun hits, is hot’
2. காற்று அடி (காற்று 'wind') ‘wind blows’
3. புயல் அடி (புயல் 'storm') ‘storm blows’
4. நாத்தம் அடி (நாத்தம் 'foul smell') ‘foul smell hits’
5. இருதயம் அடி (இருதயம் 'heart') ‘heart beats’
Noun as object
6. அதிர்ஷ்டம் அடி (அதிர்ஷ்டம் 'fortune, luck') ‘have luck, strike gold’
7. காய்ச்சல் அடி (காய்ச்சல் 'fever') ‘be struck with fever’
8. வெள்ளை அடி (வெள்ளை 'white (paint)') ‘brush white, white wash’
10. அச்சு அடி (அச்சு '(print) impression') ‘print’
11. வண்டி அடி (வண்டி ‘cart’) ‘run carts (to supply goods)’
12. தண்ணி அடி (தண்ணி ‘liquor’) ‘drink liquor (in excess)’
13 காயடி (காய் ‘testicle’) ‘castrate’
14. காப்பி அடி (காப்பி ‘copy’) ‘copy from another, imitate’
15. டைப் அடி (டைப் ‘type’) type, hit the typewriter’
Practice making sentences using these words and phrases.