19. கல்யாண சாப்பாடு

 

உரையாடல்  19                           கல்யாண சாப்பாடு

 

 

ஜிம்   -  எங்கேயோ வெளிலே பொறப்பட்டுக்கிட்டுருக்கீங்க போல இருக்கு. 

         வெளியூருக்கா?

 

ராஜா  -  இல்லை.  உள்ளூர்லேதான் ஒரு கல்யாணத்துக்கு பொறப்பட்டுக்-

         கிட்டுருக்கேன்.  நீங்களும் வர்றீங்களா?

 

ஜிம்   -  அழைப்பு இல்லாம வரலாமா?

 

ராஜா  -  ஓ! தாராளமா வரலாம்.  யாரும் ஒண்ணும் சொல்லமாட்டாங்க.

 

ஜிம்   -  இது யார் கல்யாணம்?

 

ராஜா  -  என் மனைவியோட பெரியம்மா மகன் கல்யாணம்.  அதுனாலே 

         போயாகணும்.

 

ஜிம்   -  பொண்ணு இந்த ஊர்தானா?

 

ராஜா  -  ஆமா, பொண்ணு வீட்டுலேதான் கல்யாணம் நடக்கும்.

 

ஜிம்   -  ஒங்க மனைவி வரலையா?

 

ராஜா  -  அவ நேத்தே போய்ட்டா.  நாம மொதல்லே மாப்பிளை வீட்டுக்கு

                போய், பெறகு அங்கேருந்து ஊர்வலத்தோடே பொண்ணு வீட்டுக்கு 

               போவோம்.

 

ஜிம்   -  மாப்பிளை வீடு எங்கே இருக்கு?

 

ராஜா  -  இந்தா வந்துட்டோம்.  காலை சாப்பாடு நடந்துக்கிட்டுருக்கு.  வாங்க,

         நாமளும் சாப்பிட்டுடுவோம்.

 

ஜிம்   -  நான் வீட்டுலேயே சாப்பிட்டுட்டேன்.  நீங்க சாப்பிட்டுட்டு வாங்க.

         நான் இங்கே உக்காந்துருக்கேன்

 

ராஜா  -  கல்யாண வீட்டுலே சாப்பிடாம போகக்கூடாது.  ரெண்டு இட்லி

         மட்டும் சாப்பிட்டுட்டு எந்திரிச்சுடுவோம்.

.

 

ஜிம்   -  சரி.  ஒங்க ஆசையை கெடுப்பானேன்.

 

 

ராஜா  -  வயிறு நெறைய சாப்பிட்டாச்சு.  நீங்க வெத்தலை போடுறீங்களா?

 

ஜிம்   -  எனக்கு பழக்கம் இல்லை.  நீங்க போடுங்க.  நான் பாத்துக்கிட்டுருக்கேன்.

 

ராஜா  -  ஓ  ஊர்வலம் பொறப்பட்டுட்டுது.  வாங்க.  நாமளும் அதோடே சேந்துக்கிடுவோம்.

 

ஜிம்   -  இப்ப நேரா பொண்ணு வீட்டுக்குத்தான் போறமா?

 

ராஜா  -  ஆமா.

 

ஜிம்   -  அங்க என்னெல்லாம் நடக்கும்?

 

ராஜா  -  எல்லாம் வெவரமா சொல்றேன்.  வாங்க, பேசிக்கிட்டே நடப்போம்.

Wedding feast

 

Glossary

பொறப்படு (பொறப்பட)  புறப்படு                             ‘set out, start out’

வெளிலே                           /வெளியே                          ‘out, outside’

வெளியூர்                                                                            ‘out of town’

உள்ளூர்                                                                               ‘local’

அழைப்பு                                                                             ‘invitation’

இல்லாம                                                                             ‘without’

தாராளமா                        தாராளமாக                            ‘by all means’

கல்யாணம்                     திருமணம்                              ‘wedding. Marriage’

மனைவி                          /வீட்டுக்காரி, பெண்டாட்டி   ‘wife’ (rustic use)

பெரியம்மா                                                                            ‘aunt (mother’s elder sister, father’s elder brother’s wife)

பொண்ணு                       பெண்                                             ‘bride, girl’

ஊர்வலம்                                                                                 'bride, girl, daughter’

மொதல்லே                     முதலில்                                     ‘first, at first’

மாப்பிளை                        மாப்பிள்ளை                           ‘bride groom, brother in law (sister’s husband (younger))’ 

காலை சாப்பாடு                                                                    'breakfast, morning meal’

நட (நடக்க)                                                                              ‘be on, take place’

நாமளும்                             நாமும்                                        ‘we too’

எந்திரி (எந்திரிக்க)          எழுந்திரு                                   ‘get up (from seat or bed)’

கெடு (கெடுக்க)                                                                       ‘spoil (something)’

வயிறு நெறைய                                                                      ‘stomach full’

வெத்தலை                         வெற்றிலை                                 ‘betel leaf’                                                                                

வெத்தலை போடு (போட)                                                    ‘chew betel leaf / pan’

பழக்கம்                                                                                       ‘habit’

சேர் (சேந்து)                                                                                ‘join, get collected, get admitted’

நேரா                                     /நேரே    நேராக                            ‘straight, directly’            

வெவரமா                          விவரமாக                                    ‘in detail, in an informed way’

Related words

கெளம்பு (கெளம்ப)        கிளம்பு                                           ‘set out, start out, rise’

கெளப்பு (கெளப்ப)           கிளப்பு                                             ‘make start out, make rise’

வெளிநாடு                                                                                      ‘foreign country’

உள்நாடு                                                                                            ‘inland, domestic’

அழை (அழைக்க)                                                                        ‘invite’

கூப்பிடு (கூப்பிட)                                                                        ‘call, invite’

மொதல்                            முதல்                                                  ‘first’

தாராளம்                                                                                         ‘being liberal, being kind hearted and giving’

தாராளமான                                                                                  ‘liberal, kind hearted’

கல்யாணப் பொண்ணு   -பெண்                                               ‘bride’

கணவர்                                                                                            ‘husband’

வீட்டுக்காரர்                                                                                  ‘husband, house owner’

புருஷன்                                                                                           ‘husband (rustic use)’

பெரியப்பா                                                                                      ‘uncle (father’s elder brother, mother’s elder sister’s husband’

சித்தப்பா                                                                                         ‘uncle (father’s younger brother, mother’s younger sister’s husband)

சித்தி                           / சின்னம்மா                                              ‘aunt (mother’s younger sister, father’s younger brother’s wife)’

மச்சான்                    / அத்தான்                                                     ‘brother in law (sister’s husband / husband’s brother (older)), husband (address term)

கொழுந்தன்                                                                                     ‘brother in law (sister’s husband / husband’s brother (younger)

மத்தியான சாப்பாடு                                                                      ‘lunch’

ராத்திரி சாப்பாடு                                                                             ‘dinner’

வழக்கம்                                                                                           ‘custom, practice’

பழக்க வழக்கம்                                                                             ‘customs and habits’

பழகு (பழக)                                                                                     ‘get used to, get accustomed /  trained to do things’

பழக்கு (பழக்க)                                                                             ‘train / make accustomed to do things’

சேர் (சேக்க)                                                                                     ‘join something, admit someone’

                                                                                               

வெவரம்                           விவரம்                                                ‘details, being informed’

வெவரமான                     விவரமான                                        ‘well informed in a street smart way’

 

Pronunciation points

பொற- (FT புற-) may be pronounced alternatively as பெற-. The alternation takes place when the consonant before is ப், ம் and the consonant after is ற், ழ். Comparable alternative pronunication may be found in the reverse in பெற (பிற 'be born), which may be pronounced as பொற. The alternate pronunciations are non-standard.

 

Alternative forms

 

சாப்பிட்டுடுவோம்                 சாப்பிட்டுருவோம்

எந்திருச்சுடுவோம்               எந்திரிச்சுருவோம்

பொறப்பட்டுட்டுது.               பொறப்பட்டுருச்சு

 

 

 

Exercises

 

  1. The following text is in simple past to say that I, the speaker, did those things. Suppose I want to say (past in a context of their relevance to the present) that I have done those things in the. How will you change the text?  For example, நான் போனேன் ‘I went’ vs. நான் போயிருக்கேன் ‘I have gone’. Translate the new text.

 

நான் தமிழ்நாட்டுக்கு போனேன். அங்கே கோயில் பாத்தேன். கோயிலுக்குள்ளே போனேன். யானைக்கு கரும்பு குடுத்தேன். யானை மேலே உக்காந்தேன். கோயில்லே பிரசாதம் வாங்கி சாப்பிட்டேன். பல தமிழ் ஆள்களோட பேசுனேன். அதுலே ஒருத்தர் என்னை தமிழ்நாட்டுக்கு திரும்ப வர சொன்னார்.

 

[கோயில் ‘temple’, யானை ‘elephant’, கரும்பு ‘sugarcane’, பிரசாதம் ‘food graced by god’, ஆள் ‘person’]

 

  1. The following text is in simple past tense to say as if I, the speaker, have direct knowledge of thing that happened. Suppose I, the speaker, have constructed that knowledge from other sources or from inference. How will you change the text? For example, மோகன் வெளையாட போனான் ‘Mohan went to play’ vs. மோகன் வெளையாட போயிருக்கான் ‘Mohan has gone to play’. Translate the new text.           

 

மோகன் வெளையாட போனான். அங்கே குமாரை பாத்தான். மோகனுக்கு மாலா ஞாபகம் வந்துது. ஒடனே கோபம் வந்து குமாரை திட்டுனான். குமார் திருப்பி மோகனை அடிச்சான். சண்டை ரொம்ப பெருசா போச்சு. மாலா வந்து சண்டையை நிறுத்துனா.  பெறகு ரெண்டு பேரும் மாலாகிட்டே மன்னிப்பு கேட்டாங்க.

 

[வெளையாடு ‘play’, ஞாபகம் ‘memory, thought’, ஒடனே ‘immediately’, திட்டு ‘scold, abuse’, திருப்பி ‘in return’, நிறுத்து ‘stop’, மன்னிப்பு ‘forgiveness’]

 

  1. Suppose I, the speaker, do not have enough evidence to reconstruct the past event and make guesses about what probably would have happened.  How will you change the text in (2) above? For example, மோகன் வெளையாட போனான் ‘Mohan went to play’ vs. மோகன் வெளையாட போயிருப்பான் ‘Mohan would have gone to play’. Translate the new text.

 

 

  1. The following sets of sentences have more or less the same meaning. They use the subject in the dative or in the nominative. Give their translations with different sentences in English wherever possible, or with the same sentence.

Ex. எனக்கு தமிழ் படிக்க ஆசை

    நான் தமிழ் படிக்க ஆசையா இருக்கேன்

    நான் தமிழ் படிக்க ஆசைப்படுறேன்

    ‘I have a desire to study Tamil /

     I am desirous of studying Tamil

     I desire to study Tamil’

  

  1. அப்பாவுக்கு என்மேலே கோபம்.

             அப்பா என்மேலே கோபமா இருக்கார்.

             அப்பா என்மேலே கோபப்பட்டார்.

 

  1. ஒனக்கு யார்மேலே வருத்தம்?

             நீ யார்மேலே வருத்தமா இருக்கே? [வருத்தம் ‘unhappiness, grouse’]

             நீ யார்மேலே வருத்தப்பட்டே?

 

  1.  எனக்கு அதை பத்தி கவலை இல்லை. [கவலை ‘worry, concern’]

              நான் அதை பத்தி கவலையா இல்லை.

              நான அதை பத்தி கவலைப்படலை.

 

  1. நான் அமெரிக்கா போறதை பத்தி வீட்டுலே எல்லாருக்கும் சந்தோஷம்.

             நான் அமெரிக்கா போறதை பத்தி வீட்டுலே எல்லாரும் சந்தோஷமா   இருக்காங்க.

              நான் அமெரிக்கா போறதை பத்தி வீட்டுலே எல்லாரும் சந்தோஷப்படுறாங்க.

 

  1. எனக்கு பசி.

             நான் பசியா இருக்கேன்.

             எனக்கு பசிக்குது.

 

  1. இரு with negative participle gives the sense of the negative state being in a longer duration; that is, it is not that the act was not just performed, but remained unperformed. It may translate as ‘be without’. When the light verb is போ the sense is about the state happening. It may translate as ‘go without’. When போ is in the past tense and expresses volition, the sense is to regret that something did not happen. It may translate as ‘I (speaker) wish that it happened’

How would you say the following in English?

Ex. நான் நேத்து ராத்திரி தூங்கலை

   ‘I did not sleep last night’

   நான் நேத்து ராத்திரி தூங்காம இருந்தேன்

   ‘I was up not sleeping last night,

    i.e. I was awake last night’

 

  என்னாலே இந்தியாவுக்கு போக முடியாம இருந்துது

  ‘The situation was such that I could not go to India’

  என்னாலே இந்தியாவுக்கு போக முடியாம போச்சு

  ‘It so happened that I could not go to India’

  

  நான் அவளோடே இந்தியாவுக்கு போகாம இருந்தேன்

  ‘I was avoiding going to India with her’

  நான் அவளோடே இந்தியாவுக்கு போகாம போனேன்

  ‘I wish I had gone to India with her’

   

 

 

  1. நீ பேசாம இரு.

 

  1. நாங்க ராத்திரி பூராவும் டி.வி. பாக்காம இருக்க போறோம். (பூராவும் ‘whole, all’)

 

  1. என்னாலே இதை அம்மாகிட்டே சொல்லாம இருக்க முடியாது.

 

  1. அவன் ராத்திரி வரைக்கும் எப்படி சாப்பிடாம இருப்பான்? (வரைக்கும் ‘until’)

 

  1. அவனுக்கு நேத்து வரைக்கும் இந்த விஷயம் எப்படி தெரியாம இருந்துது?

 

  1. அவனுக்கு இந்த விஷயம் தெரியாம இருக்காது.

 

  1. அவனுக்கு இந்த விஷயம் எப்படி தெரியாம போச்சு?

 

  1. இந்த விஷயம் வெளியே தெரியாமலே போகலாம்.

 

  1. அவளுக்கு என்னை பிடிக்காம போகுமா?

 

  1. இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியாம போகாது.

 

  1. எனக்கு இந்த விஷயம் நேத்தே தெரியாம போச்சே.

 

  1. நான் நேத்தே ஊருக்கு போகாம போனேன்.

 

  1. நீ நேத்தே இதை எங்கிட்டே சொல்லாம போனே.

 

 

 

  1. கிட ‘be lying’ is similar to இரு in that it also describes a state, but a state of lying. It suggests a sense of lacking orderliness. Change இரு in the sentences below with கிட. Try to express the difference between them in English.

              Ex. வீட்டுக் கதவு தெறந்துருந்துது

               ‘The door of the house was open'

               வீட்டுக் கதவு தெறந்து கெடந்துது

               ‘The door of the house was left open'

 

1.      கடை கொஞ்ச நாள் மூடிருந்துது

2.      பால் பானைலேருந்து கொட்டிருக்கு [பானை ‘pot', கொட்டு ‘spill’]

3.      பேனா எங்கேயாவது விழுந்துருக்கும்

4.      பானைக்குள்ளே ஒரு பல்லி செத்துருந்துது [சா (சாக, செத்து) ‘die’]

5.      நேத்து அப்பாகிட்டேருந்து கடிதம் வந்துருந்துது [கடிதம் ‘letter’]

 

 

 

8.காட்டு ‘show’ (causative of பார் ‘see’) is added to the verbal participle and it carries the sense of ‘try to show ability etc.’ Change the sentences below with பார் into ones with காட்டு and translate the sentences.

Ex. நான் கதவை தெறந்துபாத்தேன்

    நான் கதவை தெறந்துகாட்டுனேன்

    ‘I opened and showed (that I could, how it is done etc.)

 

1.      என் சம்பளத்துலே நான் கார் வாங்கிப்பாத்தேன் [சம்பளம் ‘salary’]

2.      அவன் எவ்வளவு காரமான சாப்பாட்டையும் சாப்பிட்டுப்பாப்பான் [காரமான ‘spicy hot’]

3.      அவ நிக்காம பத்து மைல் ஓடிப்பாத்தா

4.      யார் காரை ஓட்டிப்பாக்கீறீங்க?

5.      அவன் நீ சொன்னதை சொல்லிப்பாக்குறான்

 

9.Doubling the verbal participle means action is performed more than once repeatedly. Double the verbal participle in the sentences below and give the meaning of those sentences.

Ex. அவன் என்னை வந்து பாத்தான்

    அவன் என்னை வந்து வந்து பாத்தான்

    ‘He came and saw me again and again / repeatedly’

 

1.      அவன் பிள்ளையை காட்டி பிச்சை கேட்டான் [பிள்ளை ‘child’, பிச்சை ‘alms’]

2.      அவன் யார்யார்க்கோ பணத்தை குடுத்து ஏழையா போனான் [ஏழை ‘poor’]

3.      அவன் எல்லாருக்கும் பணத்தை எடுத்து கொடுத்தான்

4.      அவன் டாலர் நோட்டை ஆட்டி பேசுனான் [நோட்டு ‘bill, ஆட்டு ‘sway’]

5.      அவன் பணத்துக்காக என்கிட்டே ஒடி வந்தான்

 

 

10.ஏன் ‘why’ is used with the imperative to suggest doing rather than instructing. Add ஏன் to the imperative in the sentences below. Translate the sentences you made. Note that the glide ய் (not வ்) occurs with verbs ending in a back vowel; in plural, ள் is realized before ஏன்.

Ex. நீ எங்க வீட்டுக்கு வா

    நீ எங்க வீட்டுக்கு வாயேன்

    'Why don’t you come to my house’

 

1. எங்க வீட்டுலே எதாவது சாப்பிடு

2. இந்த கேள்வியை பேராசிரியர்கிட்டே கேள்

3. நீ தமிழ்நாட்டுக்கு போய் தமிழ் படி

4. இந்த சட்டையை ஒங்க தம்பிக்கு குடுங்க

5. நீங்களே இந்த வேலையை செஞ்சு முடிங்க

 

11.ஏன் ‘why’ is added to a verbal form verb + future tense + ஆன் (this is not the finite verb (masculine third person in future tense, but a modal verb) to mean the rhetorical question ‘why should one do’ implying that ‘it should not be done’. This meaning is the same as the meaning of ஏன் infinitive + ணும். This construction commonly is doubled up where the second one is about the negative consequence of doing it. Change the sentences below with the first construction into ones with the second construction. Translate the sentences you made. When a subject is not present it is the generic ‘one’.

Ex. நான் கஷ்டப்பட்டு காலேஜுலே படிப்பானேன்னு நெனைக்கிறேன்

   ஏன் நான் கஷ்டப்பட்டு காலேஜுலே படிக்கணும்னு நெனைக்கிறேன்

    ‘I am thinking why should I study in college with hardship’

 

1.      இந்த வேலையை போய் செய்வானேன் [போய் ‘after all’]

2.      இதுக்காக காலைலேருந்து சாப்பிடாம இருப்பானேன்

3.      அவன்கிட்டே நீ இதை சொல்லுவானேன்; அடி வாங்குவானேன்

4.      அவன் குடிப்பானேன்; வாந்தி எடுப்பானேன் [வாந்தி எடு ‘vomit’]

5.      எங்கேயும் போவானேன்; வழி தெரியாம கஷ்டப்படுவானேன்

 

 

 

12.The following verb forms of verbal participle + light verb have idiomatic meaning. Match their meaning given below with the verb and  light verb combination.

Ex. சொல்லிக்குடு     சொல்லு ‘say’

       teach

 

1.      தட்டிக்குடு              தட்டு ‘tap, knock’

2.      தடவிக்குடு            தடவு ‘rub’

3.      விட்டுக்குடு           விடு ‘let go’

4.      சொல்லிவை        சொல்லு ‘say’

5.      குடுத்துவை           குடு ‘give’

 

   (yield, say in advance, massage, pat in appreciation, merit good things by past virtuous  acts)

 

 

Handout

 

போடு ‘put down’ with nouns in different relations with them. Following are some illustrative sentences using this combination

 

அங்கே மேஜையைப் போடு; இங்கே நாற்காலியைப் போடு

‘Put the table there; put the chair here’

 

அவன் புதுச் சட்டை போட்டிருக்கிறான்

‘He is wearing a new shirt’

 

அப்பாவுக்குச் சோறு போடு

‘Serve rice to father’

 

அறைலே வெளக்கைப் போட்டுவைச்சா

‘She turned on the light in the room (for some anticipated use’)

 

More examples of this combination where the meaning of போடு differs in relation to the noun.

 

            1. வளையல் போடு ‘put on bangles’

                (some other nouns: மோதிரம் ‘ring’, துண்டு ‘towel, கண்ணாடி ‘glasses’, 

    கட்டு ‘bandage’, நாமம்  ‘religious mark on the forehead)

 

2.  சாப்பாடு போடு ‘serve food’

(some other nouns: சாம்பார் sambar’, தயிர் ‘yoghurt’ கறி ‘curry’ அப்பளம் ‘fried crepe’)

 

          3.  தோசை போடு ‘make dose

              (some other nouns: வடை ‘lentil cake, இட்லி idli’, பிரியாணி ‘pulav’)

 

       4. உப்பு போடு ‘put / add salt’

          (some other nouns: மிளகா ‘chilly’ இஞ்சி ‘ginger’ கடுகு ‘mustard’)

 

      5. கோடு போடு ‘make /draw a line’

         (some other nouns: கோடு line’, வட்டம் ‘circle’, கோலம் ‘rangoli’, பூ ‘flower’  ஓட்டை ‘hole’)

 

     6. பாட்டு போடு ‘turn on music’

      (other nouns: ரேடியோ ‘radio’,  டி.வி. ‘T.V.’, ஃபேன் ‘fan’ ஹீட்டர் ‘heater’

 

    7. ஆட்டம் போடு ‘stage a play, make drama / fuss’

        (some other nouns: கூத்து ‘dance drama’, வேஷம் ’make up’)

 

   8. வெதை போடு ‘plant see’

      (some other nouns: நெல்லு ‘paddy’, கத்தரிக்கா ‘egg plant’, மல்லிகை ‘jasmine’)

 

  9. கை போடு ‘put the hand on’

 (other nouns: (கால்மேலே) கால் போடு, (பல்லு மேலே) நாக்கை போடு, கண் போடு)

 

Practice these noun + combinations making sentences. Some combinations have idiomatic meaning.

 

 

Related Images: