20. எனக்கு வயித்து வலி

 

உரையாடல்  20                           எனக்கு வயித்து வலி

 

ஜிம்   -  ஒங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் யாராவது பக்கத்துலே இருக்காரா?

 

ராஜா  -  ஏன்?  என்ன விஷயம்?

 

ஜிம்   -   நேத்துலேருந்து லேசா வயிறு வலிச்சுக்கிட்டுருக்கு.

 

ராஜா  -  கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டதோட பலனா?

 

ஜிம்   -  சாப்பாடு காரமா இருந்துது, இல்லையா?  அதுனாலே இருக்கும்.  எனக்கு

              காரம் இன்னும் ஒத்துக்கிடலை.

 

ராஜா  -  எனக்கு ரொம்ப வேண்டிய டாக்டர் ஒருத்தர் இருக்காங்க.  அவங்க

                அமெரிக்காவுலே படிச்சவங்க.  வாங்க, அவங்ககிட்டே போவோம். 

 

ஜிம்   -  அவங்க பக்கத்துலேதான் இருக்காங்களா? 

 

ராஜா  -  ஆமா.  இந்த தெரு திரும்புனதும் அவங்களோட ஆஸ்பத்திரி இருக்கு.    

                 நடந்தே போயிடலாம்.

 

டாக்டர்  -  வாங்க, ராஜா.  பாத்து ரொம்ப நாளாச்சு.  சௌக்கியமா    இருக்கீங்களா?

 

ராஜா  -  ஏதோ இருக்கேன், டாக்டர்.  இவர் என் நண்பர் ஜிம்.  அமெரிக்காவுலேருந்து

                இங்கே வந்திருக்கார்.  இவருக்கு ஒடம்பு சரியில்லை.

 

டாக்டர்  -  என்ன செய்யுது?

 

ஜிம்   -  நேத்துலேருந்து வயிறு வலிக்குது.  கடைலே விக்கிற வயித்து வலி

               மருந்தை வாங்கி சாப்பிட்டு பாத்தேன்.  கேக்கலை.

 

டாக்டர்  -  டாக்டரை கேக்காம கண்ட மருந்தையும் வாங்கி சாப்பிடுறது

                     நல்லது இல்லை.    நீங்க இங்கே வந்து எவ்வளவு நாள் ஆச்சு?

 

ஜிம்   -  ஒரு வருஷம் ஆக போகுது.

 

டாக்டர்  -  நேத்து புதுசா ஏதாவது சாப்பிட்டீங்களா?

 

ஜிம்   -  ஒரு கல்யாண வீட்டுலே காரமா சாப்பிட்டேன்.

 

டாக்டர்  -  ஓ!  அதுதான் விஷயம்.  நான் ஒரு மருந்து எழுதி குடுக்கிறேன்.  அதை

                     வாங்கி சாப்பிடுங்க.  ஒரே நாள்லே சரியா போயிடும்.

 

ஜிம்   -  இதுக்கு பணம் எவ்வளவு, டாக்டர்?

 

டாக்டர்  -  ஓ  பரவாயில்லை.  நான்தான் மருந்து குடுக்கலையே.  அதோடே      

                     ராஜா கூட்டிக்கிட்டு வந்ததுனாலே ஒண்ணும் வாங்கிக்கிட மாட்டேன்.

 

ராஜா  -  சரி, டாக்டர்.  நாங்கள் போய்ட்டு வர்றோம்.

 

 

Glossary

வயிறு                                                                                  ‘stomach’

வலி(வலிக்க)                                                                    ‘pain, be painful’

லேசா                                லேசாக                                       ‘mildly, lightly’

பலன்                                                                                    ‘result, consequence’

ஒத்துக்கிடு (-கிட)        ஒத்துக்கொள்                         ‘agree with’

வேண்டிய                                                                           ‘known well to, friendly’

ஆஸ்பத்திரி                  மருத்துவமனை                   ‘hospital, clinic’

சௌக்கியம்                  நலம்                                         ‘being well / healthy’

மருந்து                                                                                 ‘medicine’

கண்ட                                                                                   ‘any (thing seen)

கூட்டிக்கிட்டுவா          கூட்டிக்கொண்டு வா          ‘bring in (animate beings)’

 

Related words

கூட்டிக்கிட்டுப்போ                                                        ‘take out (animate beings)’                

எடுத்துக்கிட்டுவா                                                           ‘bring in (inanimate things)’

எடுத்துக்கிட்டுப்போ                                                      ‘take away (inanimate things)’

தூக்கிக்கிட்டுவா                                                              ‘carry in (immobile beings, things)’

தூக்கிக்கிட்டுப்போ                                                         ‘carry away (immobile beings, things’)

அழைச்சுக்கிட்டுவா                                                      'bring (human beings accompanying them)'

அழைச்சுக்கிட்டுப்போ                                                 'take away (human beings accompanying them)'

இழுத்துக்கிட்டுவா                                                        'bring (animate and inanimte things by dragging)'

இழுத்துக்கிட்டுப்போ                                                  'bring (animate and inanimate things by dragging)'

 

 

 

 

Pronunciation points

 

When auxiliary (இ)டு occurs with verbal participles ending in இ, this இ is pronounced longer. சொல்லிட்டான் is pronounced சொல்லீட்டான்.

உ in ச்சு is centralized and gets closer to இ in pronunciation: ஓடுச்சு, கடிச்சுச்சு are pronounced ஓடுச்சி, கடிச்சிச்சி.

 

Alternative forms

 

வந்துது = வந்துச்சு (The neuter ending து alternates with ச்சு)

வந்துடும் = வந்துரும் The auxiliary டு alternates with ரு in future in all person and gender forms and in the modals)

வந்துட்டுது = வந்துடுச்சு = வந்துருச்சு (The conjugation of டு is that of விடு or ஓடு).

 

 

 

Exercises

 

  1. The sentences below are in simple tenses to indicate that certain action was done at a point in time or in simple moods (speaker’s command, desire, obligation, assessment of ability or probability etc.). Change these sentences to give the sense that the action affects in some way the subject of the sentence (including keeping or holding the object). The auxiliary verb for this is கிடு, which is added to the verbal participle; the imperative form of this auxiliary verb is கோ, which is also pronounced க. When the subject is plural the action may also be reciprocal between all. These sentences, in addition, mean that the action was successfully done or accomplished. Translate or paraphrase the sentences you have made.

 

Ex.

அவன் என் பேனாவை எடுத்தான். ‘He took my pen’

அவன் என் பேனாவை எடுத்துக்கிட்டான். ‘He took away my pen (for himself)’

 

  1. அவன் ஏன் அடிச்சான்?

 

  1. நான் தலைலே அடிச்சேன்.

 

  1. அவன் வாய்க்குள்ளே பேசுனான். [வாய்க்குள்ளே ‘inaudibly’]

 

  1. நான் அப்பாகிட்டேருந்து புஸ்தகத்தை வாங்குனேன்.

 

  1. அவங்க ரெண்டு பேரும் அடிச்சாங்க.

 

  1. வெளியே போறதுக்கு முன்னாலே நான் பத்து நிமிஷம் தூங்குனேன்.

 

  1. பூனை மரத்துமேலே ஏறுச்சு.

 

  1. நாய் என் மடிலே படுத்துச்சு.

 

  1. நீ கதவை மூடுறதுக்கு முன்னாலே நான் வெளியே போறேன்.

 

  1. எல்லா வேலையையும் நான் செய்வேன்.

 

  1. பிள்ளையை நான் பாப்பேன். [பிள்ளை ‘child’]

 

  1. இந்த பேனாவை நாம எடுக்கலாமா?

 

  1. நீங்க எல்லாரும் சண்டை போடாம பேசணும். [சண்டை போடு ‘fight’]

 

  1. இந்த பேனாவை தம்பி எடுக்கட்டும்.

 

  1. அப்பா கைலேருந்து புஸ்தகத்தை வாங்கு.

 

 

  1. When the verb is inflected with கிடு to express self-affectation, the sentence could have additionally the reflexive pronoun (தன், தங்க(ள்)) that co-refers with the subject. Note that there is separate reflexive pronoun only for the third person and it does not make gender distinction. Change the underlined noun form (or x) with the one in parentheses and make change in the final verb with the appropriate form of கிடு. Translate or paraphrase the sentences you made.

Ex. அவங்க எங்களுக்கு துணி வாங்கப் போறாங்க (தங்களுக்கு)

    அவங்க தங்களுக்கு துணி வாங்கிக்கிடப் போறாங்க

    ‘They are going to buy clothes for themselves’

 

  1. குமார் மாலாவை கண்ணாடிலே பாத்தான். (தன்னை)

 

  1. குமார் யாரையோ அடிச்சான். (தன்னைத் தானே)

 

  1. குமார் மாலாவை பாத்து xxxxx சிரிச்சான். (தனக்குள்ளே)

 

  1. குமாரும் மாலாவும் எங்களோட சண்டை போட்டாங்க. (தங்களுக்குள்ளே)

 

  1. குமாரும் மாலாவும் எல்லாரையும் அடிச்சாங்க. (ஒருத்தரை ஒருத்தர்)

 

  1. குமார் எனக்கு ஒரு பேனா வாங்குனான். (தனக்கு)

 

  1. குமார் தன்னோட அப்பாவுக்கு ஒரு மேஜை செஞ்சான். (தனக்கு)

 

  1. குமார் என் தலைலே குட்டுனான். (தன்)

 

  1. குமார் என் வாழ்க்கையை கெடுத்துட்டான். (தன்)

 

  1. இந்த கதவு பத்து மணிக்கு xxxxx மூடும். (தானா)

 

[கண்ணாடி ‘mirror’, குட்டு ‘knock’, வாழ்க்கை ‘life’, கெடு ‘ruin’, கதவு ‘door’]

 

 

  1. The blanks in the following sentences take verbal participles with கிடு. Fill in the blank with the participle of the verb given in parentheses. It will mean either that the action of the verbal participle is done for self and is followed by another action of the main verb, or both actions are done simultaneously. Note that the addition of emphatic –ஏ to the verbal participle of கிடு makes is expressly to mean simultaneous action. Add this from sentence 7 on. Translate the sentences you made.

 

           Ex.

          நான் காய்கறி ----------------------------- வீட்டுக்கு போனேன். (வாங்கு)

         நான் காய்கறி வாங்கிக்கிட்டு வீட்டுக்கு போனேன்.

         'Buying vegetables, I went home'.

 

       நான் பழத்தை ----------------------------- வீட்டுக்கு போனேன். (சாப்பிடு)

      நான் பழத்தை சாப்பிட்டுக்கிட்டே வீட்டுக்கு போனேன்.

     'I went home eating the fruit'.

 

 

  1. வேகமா பணத்தை ------------------- போய் மருந்து வாங்கிக்கிட்டு வா. (எடு)

 

  1. சட்டையை ----------------------- உக்கார். (போடு)

 

  1. பாப்பாவை -------------------------- டி.வி. பாத்துக்கிட்டுரு. (பார்)

 

  1. ரெண்டு பேரும் ------------------------- போலீஸ் ஸ்டேஷனுக்கு போனாங்க. (அடி)

 

  1. நாங்க புஸ்தகம் --------------------------- வீட்டுலே இருந்தோம். (படி)

 

  1. என் தம்பி ---------------------- படிச்சுக்கிட்டுருந்தான் (படு)

 

  1. செல் போன்லே ----------------------- கார் ஓட்டக்கூடாது. (பேசு)

 

  1. நான் பாட்டு --------------------------- ஓடுவேன். (கேள்)

 

  1. என் தம்பி ------------------------ படிக்கிறான். (தூங்கு)

 

  1. என் தம்பி எதையாவது ------------------- சாப்பிடுவான். (படி)

 

 

  1. Change the underlined verbs to indicate that the action is over a period of time by adding கிட்டுரு (கிட்டு + இரு) to the verbal participle form of the underlined verb. The action of the following sentence takes place does not take place in that duration. Translate both sentences you made.

Ex,

நான் கடைக்கு போனேன்; அப்போ ஒன் தம்பியை பாத்தேன்

நான் கடைக்கு போய்க்கிட்டுருந்தேன்; அப்போ ஒன் தம்பியை பாத்தேன்

‘I was going to the store; at that time, saw / met your younger brother’

 

  1. நான் படிச்சேன்; அப்போ டெலிபோன் மணி அடிச்சுது.

 

  1. நான் தூங்குனேன்; ஒரு பெரிய சத்தம் கேட்டு எந்திரிச்சேன்.

[சத்தம் ‘noise’, எந்திரி ‘get up’]

 

   3. நான் பாட்டு கேட்டேன்; கதவை யாரோ தட்டுனாங்க.  [தட்டு ‘knock at’]

 

  1. நான் சாப்பிடுறேன்; பெறகு வா.

 

  1. நான் பேசுறேன்; நீ எங்கே போறே?

 

  1. நான் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு நடப்பேன்; அப்ப நீ என்னோட பேச முடியாது.

 

  1. அவன் எப்பவும் எதாவது செய்வான்; அது அவன் கொணம்.[கொணம் ‘character’]

 

  1. நீ போ; நான் பின்னாலே வர்றேன்.

 

  1. நீ எனக்கு திரும்ப திரும்ப சொல்லணும்; அப்போதான் நான் மறக்கமாட்டேன். (மற ‘forget’)

 

  1. அவ இங்கே வரலாம்; கொஞ்ச நேரம் காத்திருப்போம்.[காத்திரு ‘wait’]

 

 

 

        

  1. Fill in the blank in the sentences below with the appropriate form of the verbal participle using the verb given in parentheses. The meaning of the sentences will help you to identify the appropriate auxiliary verb.

            Ex.

           நான் --------------------- பத்து மணிக்கு தூங்குனேன் (சாப்பிடு)

          நான் சாப்பிட்டுட்டு பத்து மணிக்கு தூங்குனேன்

         ‘I ate and then slept at 10 o’clock’; or

         ‘I slept at 10 o’ clock after eating’

  

      1.நான் காபி ----------------------------- பத்திரிக்கை படிச்சேன். (குடி)

'I drank coffee and then read the newspaper'; or

'I read the news paper after reading the newspaper'

 

  1. அப்பாகிட்டே இதை ------------------- அஞ்சு நிமிஷத்துலே வர்றேன். (சொல்லு)

'I will tell this to father and come in five minutes'; or

'I will come in five minutes after telling this to father'

 

  1. நான் சொல்றதை -------------------------------- போ. (கேள்)

'Listen to what I am saying and then go

 

  1. வா;  ------------------------------ நடப்போம். (பேசு)

Come on, let us talk walking / as we walk'

 

  1. நான் காபி ---------------------- பத்திரிக்கை படிச்சேன். (குடி)

'I read the newspaper drinking coffee'

 

  1. -------------------- படிக்காதே. (தூங்கு)

'Don’t read drowsing'

 

  1. நீ என் புஸ்தகத்தை ---------------------- போயிட்டே. (எடு)

'You took my book with you'

 

  1. நாலு மணிலேருந்து ---------------------------- தொண்டை வலிக்குது. (பாடு)

'My throat aches having been singing since 4 o’clock'

 

  1. ஒரு மணி நேரம் வெறும் தரைலே ------------------------ ஒடம்பு வலிக்குது. (படு)

'My body aches lying on the bare (hard) floor for an hour'

 

  1. பார்க்குலே ஒரு மணி நேரம் -------------------------- வா. (உக்காந்திரு)

'Sit for an hour in the park and then come'

 

 

 

 

 

  1. Change the participial form (non-final form) of the verb in the sentences below into negative. Translate the sentences given below and the sentences you made.

Ex.

ராஜா என்கிட்டே சாவியை குடுத்து வீட்டுக்கு போக சொன்னான்

ராஜா என்கிட்டே சாவியை குடுக்காம வீட்டுக்கு போக சொன்னான்

               ‘Raja asked me to go home without giving the key to me’

 

 

  1. ராஜா என்னை கேட்டு இந்த கடிதத்தை எழுதுனான்.  [கடிதம் ‘letter’]

 

 

 

  1. மாலா என் மொகத்தை பாத்து பேசுனா. [மொகம் ‘face’]

 

 

 

  1. குமார் பணம் குடுத்து இந்த புஸ்தகத்தை வாங்குனான்.

 

 

 

  1. நீ வீட்டுக்கு போய் இந்த பாடத்தை படி.

 

 

 

  1. நான் சொல்லி அவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சுது. [விஷயம் ‘matter, news’]

 

 

 

  1.  When the main (final) verb in the above sentences is negated the meaning may still be the negation of the verbal participle. There will be a contrastive stress on the verbal participle. That is, the action of the main verb was done any way though the action of the verbal participle was not done. Change the sentences in (6) by negating the finite verb. Translate those sentences you made.

Ex.

ராஜா என்கிட்டே சாவியை குடுத்து வீட்டுக்கு போக சொல்லலை

                 ‘Raja asked me to go home without giving the key to me’

 

  1. The verbal noun in the past and உம் gives the meaning of ‘as soon as, soon after’. That is, the sequence of two actions is in immediate succession. Change the verbal participle in the following sentences into this form and translate the sentences you made.

Ex. நான் வீட்டுக்கு வந்து ஒனக்கு பணம் குடுக்குறேன்.

    நான் வீட்டுக்கு வந்ததும் ஒனக்கு பணம் குடுக்குறேன்

    ‘As soon as I come home, I will give you money’

 

  1. நான் வீட்டுக்கு போய் அவனுக்கு பணம் குடுத்தேன்
  2. நான் வீட்டுக்கு போய் அவனுக்கு பணம் குடுக்கணும்
  3. வேலை முடிஞ்சு வீட்டுக்கு போக பஸ் இருக்காது
  4. நீ கேட்டு அவன் பணம் குடுக்க மாட்டான்
  5. என்னை பாத்து அவ அழ ஆரம்பிச்சா [அழு ‘cry’, ஆரம்பி ‘begin’]

 

  1. The verbal noun in any tense and னாலே gives the meaning cause. That is, the action in the noun form is the cause for the action in the main clause to take place. Note that there are only two tenses in the verbal noun: past and non-past; non-past is represented by the present tense suffix. Tense is obligatory. Combine the pairs of sentences below into one sentence using this form and translate the sentences you made.

Ex. நான் காலைலே நல்லா சாப்பிட்டேன்; அதுனாலே மத்தியான சாப்பாடு வேண்டாம்

   நான் காலைலே  நல்லா சாப்பிட்டதுனாலே மத்தியான சாப்பாடு வேண்டாம்

   ‘Since I ate well in the morning, I do not want lunch’

 

  1. நான் காலைலே கடைக்கு போனேன்; அதுனாலே கூட்டமே இல்லை
  2. நான் நல்லா படிச்சேன்;அதுனாலே பரிச்சைலே நல்ல மார்க் வாங்குனேன்
  3. காலைலேருந்து மழை பெய்யுது; அதுனாலே வகுப்புக்கு போக முடியாது
  4. அம்மா நாளைக்கு என்னை பாக்க வர்றாங்க; அதுனாலே நான் வகுப்புக்கு வர மாட்டேன்
  5. நாளைக்கு பெரிய மழை பெய்யும்;  அதுனாலே காலேஜுக்கு லீவு விட்டுருக்காங்க

 

10.The verbal participle in the sentences below express sequence, but it could be interpreted to be causal by entailment. It could be made explicitly causal by using verbal noun + னாலே instead of the verbal participle. Make this substitution in the sentences below and translate both sentences.

Ex. நான் நல்லா படிச்சு பரிச்சைலே நல்ல மார்க் வாங்குனேன்.

    ‘I studied well and got good marks in the exam’

   நான் நல்லா படிச்சதுனாலே பரிச்சைலே நல்ல மார்க் வாங்குனேன்

    ‘Because I studied well, I got good marks in the exam’

 

  1. அவன் வேகமா ஓடி கீழே விழுந்தான்
  2. ரொம்ப சாப்பிட்டு அவனுக்கு தூக்கமா வருது
  3. நான் சொல்லி என் தம்பி கார் வாங்குனான்
  4. கார் மோதி ரெண்டு பேருக்கு காயம்பட்டுது
  5. காச்சாம வைச்சு பால் கெட்டுருக்கு [காச்சு 'boil']

 

 

 

  1. Nouns to refer to a person or a thing could be made from an adjective. The nouns indicate gender and number as below. In first and second persons, the gender of the speaker and the listener will be the gender of the noun. Make nouns for the adjectives given in parentheses that fer to persons and things in the sentence. Meaning of the sentences will help you to get the right gender, number and case.

 

           [நல்ல ‘good’: அவன் நல்லவன், அவ நல்லவ, அவர் நல்லவர், அவங்க நல்லவங்க,

           நான் நல்லவன் / நல்லவ, நாங்க நல்லவங்க, நீ நல்லவன் / நல்லவ, நீங்க  நல்லவங்க, அது நல்லது]

 

          Ex.  பால் ஒடம்புக்கு ----------- (நல்ல) (ஒடம்பு ‘body, health’)

                   'Milk is (a) good (thing) for health'

                பால் ஒடம்புக்கு நல்லது          

 

  1. நீ எப்பவும் ---------------- செய்யணும் (நல்ல)

'You must always do good (things').

 

  1. இந்த காலத்துலே -------------------- பாக்க முடியலை. (நல்ல)

'One is not able to meet good people in these days'.

 

  1. என் பக்கத்து வீட்டுக்காரன் --------------- இல்லை (கெட்ட)

'My neighbor is not a bad person'

 

  1. ஒன் தம்பிகள்லே ----------------------- வர சொல்லு. (பெரிய)

'Ask the elder one of your younger brothers to come'.

 

  1. இந்த பத்து பேனாலே ---------------- ஒனக்கு. (சின்ன)

'Among these ten pens, the small is for you'.

 

  1. அந்த கூட்டத்துலேயே ------------------தான் எங்க அப்பா. (ஒயரமான ‘tall’)

'The tallest one in the whole crowd is my father'.

 

  1. வெலை ---------------------- வாங்காதே. (அதிகமான)

'Don’t buy expensive / high priced one'.

 

  1. நான் ----------------- ஆனபெறகு  சிகாகோவுக்கு படிக்க போவேன். (  )

'I will go to Chicago to study after I become big.

 

  1. ஒங்க வகுப்புலே நீதான் எல்லாருக்கும் ---------------- (மூத்த ‘old by age’)

'Are you the oldest of all in your class?'

 

  1. எங்க பூனை ரொம்ப --------------- (பெரிய)

'Our cat is very big'

 

 

12. The sentences in pairs below differ in meaning between referring to a person or a thing with certain quality and describing the quality of a person or a thing. Translate them to bring out this meaning difference.

 

       Ex. டாக்டரை ஒடனே பாக்கிறது நல்லது.

            ஒன்னை பாக்கிறது நல்லா இருக்கு.

            ‘To see a doctor immediately is (a) good (thing)’

            ‘It is good to see you’

 

          1. என் தங்கச்சி பாக்க அழகானவ.

              என் தங்கச்சி பாக்க அழகா இருப்பா.

 

  1. இந்த கட்டடம் நியுயார்க்லேயே ஒயரமானது. [கட்டடம் ‘building’]

              நியுயார்க்லே கட்டடங்க ஒயரமா இருக்கும்.

 

 

  1. என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப மோசமானவன். [மோசம் ‘being bad’]

             என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப மோசம்.

 

  1. இந்த வகுப்புலே நான்தான் வயசுலே மூத்தவன். [வயசு ‘age’, மூத்த ‘elder’]

              இந்த வகுப்புலே நான்தான் வயசுலே மூப்பு. [மூப்பு ‘being aged, being senior’]

 

  1. இந்த பழம் ரொம்ப ருசியானது. [ருசி ‘taste’]

             இந்த பழம் ரொம்ப ருசி.

 

 

  1. The verbs in the sentences below are transitive / effective in that they have an object. The object can be used as subject with the same verb in their intransitive / affective sense. The subject of the transitive / effective verb can be in instrumental case when it is present and the act is volitional. When it is not volitional (as in (5)), the subject may be in the appropriate locative case (உள்ளே or பின்னாலே in (5)).  The verb’s conjugation is different in the intransitive / affective sense. Give the sentences below in the intransitive / affective sense of the verb. Translate both sentences.

Ex. அண்ணன்தான் தம்பியை கெடுத்தான்

    ‘The elder brother indeed spoiled the younger brother’

   அண்ணனாலேதான் தம்பி கெட்டான்

    ‘The younger brother indeed was boiled by the elder brother’

 

  1. எங்க அம்மாதான் என்னை நல்லா வளத்தாங்க [வள(ர்) ‘raise’]
  2. நீ என் சட்டையை கிழிச்சுட்டே [கிழி ‘tear’]
  3. ஜன்னலை எங்கே ஒடைச்சிருக்கே? [ஒடை ‘break’]
  4. அமெரிக்காவுலே ஒரு மாசம் நல்லா கழிச்சேன் [கழி ‘pass, spend’]
  5. மேகம் சூரியனை மறைச்சுது [மறை ‘hide’]

      

 

 

 

Handouts

 

1.Aspect markers

 

Aspect markers are formally verbs and are conjugated as verbs. Their meanings are not lexical (i.e. grammatical) and so are called auxiliary verbs. The base to which they are added is the verbal participle (i.e. verb plus past tense).

 

Sample verb பேசு ‘speak’. All verbs behave in the same way.

 

Aux. verb past         Finite verb                        Verbal Participle             Imperative

                 tense       Human &

                                 Non-human

 

கிட்டுரு (–ந்த்-) பேசிக்கிட்டுருந்தான்          பேசிக்கிட்டுருந்து             பேசிக்கிட்டுரு

(Duration)         பேசிக்கிட்டுருக்கான்            (less common)

                           பேசிக்கிட்டுருப்பான்

                           பேசிக்கிட்டுருந்துது /-ச்சு

                           பேசிக்கிட்டுருக்கு

                           பேசிக்கிட்டுருக்கும்

 

கிடு  (-ட்ட்-)     பேசிக்கிட்டான்         பேசிக்கிட்டு /               பேசிக்கோ /

(Affectation)     பேசிக்கிடுறான்          பேசிக்கிட்டே             பேசிக்க

                          பேசிக்கிடுவான்

                          பேசிக்கிட்டுது /-கிடுச்சு*

                          பேசிக்கிடுது

                          பேசிக்கிடும்

 

(வி)டு (-ட்ட்-)    பேசிட்டான்                  பேசிட்டு            பேசிடு/ பேசிரு

(Completion)    பேசிடுறான்/ பேசிர்றான்                                      

                            பேசிடுவான்/ பேசிருவான்

                            பேசிட்டுது/-டுச்சு/-ருச்சு*

                            பேசிடுது/ பேசிருது

                            பேசிடும்/ பேசிரும்

 

(இ)ரு (-ந்த்-)     பேசிருந்தான்           ---------            ---------

(Resulting State)  பேசிருக்கான்

                              பேசிருப்பான்

                              பேசிருந்துது/-ச்சு

                              பேசிருக்கு

                             பேசிருக்கும்

(The presence of the vowel -இ in the auxiliary verbs விடு and இரு is reflected in the slightly longer duration of the vowel இ- of the participle)

 

                           படுத்துருந்தான்         படுத்துருந்து         படுத்துரு

                          படுத்துருக்கான்

                         படுத்துருப்பான்

                        படுத்துருந்துது/-ச்சு

                       படுத்துருக்கு

                       படுத்துருக்கும்

(The verb in the last set is படுத்துரு ‘be lying’, which describes a state differentiated from the process படு ‘lie down’. Therefore, verbal participle and imperative forms are possible)

 

* The alternative form with -ச்சு in non-human is a result of the auxiliary verbs கிடு and விடு shifting optionally to the conjugation class 1. (cf. ஓடுச்சு)

 

 

 

 

2.Noun-Verb combination with எடு 'take'

 

பணம் எடு (பணம் 'money')

 

நீ இன்றைக்கு பாங்க்கில் எவ்வளவு பணம் எடுக்கப் போகிறாய்?

How much money are you going to take out (draw) from the bank today?

 

The noun functions as object in (1-12), the combination behaves like one word in (13, 14), the noun functions object or subject in (15) and as subject in (16).

 

1. தண்ணீர் எடு 'draw water'

  

2. சாறு எடு 'extract juice'

 

3. நகம் எடு 'clip the nail'

 

4. மீசையை எடு 'remove the moustache'

 

5. கையை எடு 'take off the hand (from another object)'

 

6. வீடு எடு 'take a house (on rent)'

  

7. காரை எடு 'take out the car'

 

8. துணி எடு 'buy clothes'

 

9. மார்க் எடு 'get marks'

 

10. சுவர் எடு 'build a wall'

 

11. முடிச்சை எடு 'untie the knot'

  

12. கடையை எடு 'close out the shop'

  

13. முடிவெடு 'take a decision, decide'

  

14. வாந்தி எடு 'vomit'

  

15. நேரம் எடு 'take time'

  

16. பசி எடு 'get hungry'

  

 

எடு in (8,9) can be substituted with வாங்கு 'get', in (10) with கட்டு 'build', in (11) with அவிழ் 'untie' and in (12) with மூடு 'close'.

 

Practice making sentences using these collocations.

 

 

3.Noun-Verb combination அடி 'hit'

 

 

 

மணி அடி (மணி 'bell')

கடிகாரம் ஐந்து மணி அடித்ததும் நான் வீட்டுக்குக் கிளம்பினேன்

     'As soon as the clock struck five, I left for the house'

 

In the following combinations, the noun functions as subject in (1-7) and as object in (8-10).

 

1. வெயில் அடி (வெயில் 'sun shine')

2. காற்று அடி (காற்று 'wind')

3. புயல் அடி (புயல் 'storm')

4. நாற்றம் அடி (நாற்றம் 'foul smell')

5. இருதயம் அடி (இருதயம் 'heart')

6. அதிர்ஷ்டம் அடி (அதிர்ஷ்டம் 'fortune, luck')

7. காய்ச்சல் அடி (காய்ச்சல் 'fever')

8. வெள்ளை அடி (வெள்ளை 'white (paint)')

9. தண்ணீர் அடி (தண்ணீர் 'water')

        10. அச்சு அடி (அச்சு '(print) impression')

 

Practice making sentences using these collocations.