21. பொங்கலுக்கு போவோமா?

உரையாடல்  21                           பொங்கலுக்கு போவோமா?

 

 

ராஜா  -  இப்ப ஒங்க வயித்து வலி எப்படி இருக்கு?

 

ஜிம்   -  டாக்டர் குடுத்த மருந்தை சாப்பிட்டதும் சரியா போச்சு.

 

ராஜா  -  நாம டாக்டர்கிட்டே போனது நல்லதாப் போச்சு.  அவர் குடுக்கிற

              மருந்து எப்பவும் நல்லா கேக்கும்.

 

ஜிம்   -  சில பேர் பழக்கத்துனாலே வியாதியை பத்தி சொன்னதும் நல்லா

         புரிஞ்சிக்கிட்டு மருந்து குடுக்குறதுலே கெட்டிக்காரங்களாக இருக்காங்க.

 

ராஜா  -  இப்ப ஒங்களுக்கு ஒடம்புக்கு நல்லா இருக்கிறதுனாலே வெளியூருக்கு

               போறதுலே கஷ்டம் இருக்காதே?

 

ஜிம்   -  ஆமா.  என்ன விஷயம்?

 

ராஜா  -  நீங்க மாரியம்மன் பொங்கலுக்கு போனதுண்டா?

 

ஜிம்   -  போனதில்லை.  ஆனா போறதுக்கு ரொம்ப நாளா ஆசை.

 

ராஜா  -  எங்க ஊர்லே இப்போ பொங்கல் நடந்துக்கிட்டிருக்கு.  நான்

               இண்ணைக்கு சாயங்காலம் பொறப்பட்டு போறேன்.  நீங்களும்

              வர்றீங்களா?

 

ஜிம்   -  எனக்கு வர்றதுக்கு ரொம்ப ஆசைதான்.  ஆனா அங்கே தங்குறதுக்கு

              என்ன செய்றது?

 

ராஜா  -  அதுக்கு நீங்க கவலைப்படாதீங்க.  எங்க பழைய வீடு ஒண்ணு அங்கே

              இருக்கு.  அங்கேயே நாம தங்கிக்கிடலாம்.

 

ஜிம்   -  ரொம்ப நல்லதா போச்சு.  நான் ரொம்ப நாளா நெனைச்சிக்கிட்டிருந்தது

               இப்பதான் முடியப் போகுது.

 

ராஜா  -  அந்த வீட்டுலே ஒரே ஒரு கஷ்டம் இருக்கு.  அங்கே குளிக்கிறதுக்கு

                தனி எடம் கெடையாது.  தோட்டத்துலே கெணத்தடிலே நின்னு

                குளிக்க வேண்டிருக்கும்.

 

ஜிம்   -  அதுனாலே என்ன?  எனக்கு அதுலே ஒரு கஷ்டமும் இல்லை.

 

ராஜா  -  அப்படின்னா சரியா நாலு மணிக்கு இங்கே வந்துருங்க.  இங்கேருந்து

               ஒண்ணா பஸ் பொறப்படுற எடத்துக்கு போய், அங்கேருந்து ஊருக்கு

              போவோம்.  நான் பஸ்லே ஒங்களுக்கு பொங்கலை பத்தி சொல்லிக்கிட்டு

              வர்றேன்.

 

ஜிம்   -  இதை கேக்கும்போதே குஷியா இருக்கு.  நான் நிச்சயமா நாலு மணிக்கு

         வந்துடுறேன்.

Credit: veethi.com

Credit: thenindu.com

 

Glossary:

கேள் (கேக்க)                                                                                       ‘cure (as by medicine)’

மருந்து                                                                                                  ‘medicine’

கெட்டிக்காரங்க               கெட்டிக்காரர்கள்                                ‘smart people’

வியாதி  ‘illness, disease’

ஒடம்பு ‘health’ body’       உடம்பு

மாரியம்மன்                                                                                       ‘a village goddess worshipped against diseases’

பொங்கல்                                                                                              ‘festival for the goddess’

பொறப்பட்டு போ                                                                              ‘leave, setting out to go’

தங்கு (தங்க)                                                                                        ‘stay’

பழைய                                                                                                  ‘old’

தனி எடம்                     தனி இடம்                                                 ‘separate / special place’

கெணத்தடி                  கிணற்றடி                                                    ‘place around a well’

குளி (குளிக்க)                                                                                    ‘bathe’

அப்படின்னா              அப்படியென்றால்                                     ‘if so, in that case’

 

Related words

தலைவலி                                                                                             ‘headache’

கால்வலி                                                                                               ‘leg pain’

முதுகுவலி                                                                                          ‘back pain’

கழுத்து வலி                                                                                        ‘neck pain’

கண்வலி                                                                                                ‘eye pain’

மரத்தடி                                                                                                  ‘space around a tree’

சீக்கு  ‘sickness’

கொணமாகு (-ஆக)    குணமாகு                                                 ‘get well’

ஆறு (ஆற)                                                                                          ‘heal (as of wound)’

 

Alternates:

வந்துடுறேன்           வந்துர்றேன்

வந்துடுங்க             வந்துருங்க

கேக்கும்போதே   கேக்கிறப்பவே

 

 

Exercises

 

  1. The two sentences under each number below can be combined into one using a relative participle. The relative participle has the form: verb + past/present tense+ அ. Note that the relative participle makes a distinction only between past tense and non-past tense; hence the participle in the present tense can have future sense also. The underlined word in the first will be the head of the relative clause and it takes the case of the noun in the second sentence with same reference. Combine the two sentences into single sentences and translate them.

 

Ex.

நான் நேத்து தெருவுலே ஒரு பையனை பாத்தேன்;

அவன் ரொம்ப கெட்டவன்.

Yesterday I saw a boy on the street, he is a very bad boy.

 

நான் நேத்து தெருவுலே பாத்த பையன் ரொம்ப கெட்டவன்.

The boy whom I saw on the street is a very bad boy.

 

(Note:  Quantifiers such as ஒரு etc. in the first sentence are dropped when a relative clause is formed.)

 

  1. நேத்து நம்ம வீட்டுக்கு ஒரு பையன் வந்தான்;

அவன் இண்ணைக்கும் வர்றான்.

A boy came to our house yesterday; he is coming today also.

 

  1. நேத்து நம்ம வீட்டுக்கு ஒரு பையன் வந்தான்;

            அவனை இண்ணைக்கு தெருவுலே பாத்தேன்.

            A boy came to our house yesterday; I saw him today on the street.

 

  1. நேத்து நம்ம வீட்டுக்கு ஒரு பையன் வந்தான்;

அவனுக்கு பணம் குடுக்காதே.

A boy came to our house yesterday; don’t give him money.

 

  1. நம்ம பக்கத்து வீட்டுக்கு தெனம் ஒரு பையன் வர்றான்;

அவனுக்கு அடுத்த மாசம் கல்யாணம்.

A boy comes every day to our neighboring house; he has his marriage (getting married) next month.

 

  1. அங்கே ஒரு பஸ் வருது;

             அதோட நம்பர் கண்ணுக்கு தெரியலை.

             A bus comes there; its number is not visible to the eyes (I cannot see its number).

 

  1. நான் டி.வி.லே ஒரு தமிழ் படம் பாக்கப்போறேன்;

அதை நீயும் பாக்குறியா?

I am going to watch a Tamil movie on T.V.; will you also watch it?

 

  1. நாளைக்கு நம்ம வீட்டுக்கு ஒரு பையன் வருவான்

அவனுக்கு பணம் குடுக்காதே.

A boy will come to our house tomorrow; don’t give him money.

 

  1. அவனுக்கு பதில் தெரிஞ்சுது;

அதை வேகமா சொன்னான்.

He knew the answer; he said it quickly.

 

      9. ஒனக்கு விஷயம் தெரியுது;

  1. அதுலே பாதி கூட எனக்கு தெரியலை.

You know (many) things; I do not know even half of them.

 

  1. எனக்கு ஒரு தமிழ் படம் பிடிக்கும்;

அதுலேருந்து ஒரு பாட்டு பாடுறேன்.

I like a Tamil movie; let me sing a song from it.

 

  1. என்னாலே வேலை செய்ய முடியும்;

அதெல்லாம் ஒன்னாலே செய்ய முடியுமா?

I can do( a lot of) jobs; can you them all?

 

(Note: The relative participle of stative verbs like தெரி, புரி, பிடி, முடி etc. in past tense may convey the sense of the present; the past form of the relative participle can be used in (9, 10, 11). This is more common than the present form)

 

  1. நான் தமிழ் படம் பாக்கணும்;

                 இன்னும் ரெண்டு இருக்கு.

I must see Tamil movies; there are still two (to watch).

Note: The modal –ணும் (in 12) takes the participial from வேண்டிய  (from the verb வேண்டு  ‘desire’).

  

 

  1. Fill in the gaps with an appropriate participial form of the verb given in parentheses.  The appropriate form will be dictated by the sense whether such actions are sequential, disjoined, continuous, completed etc. The translation at the bottom will help you to some extent.

 

 

மோகன் சினிமாவுக்கு -------------------------------------- (போ). வழிலே ராஜாவை---------

 

---------- (பார்). அவன் பஸ்ஸுக்கு  --------------------------------- (கா). அவனோட அவன்

 

தம்பி குமாரும் -------------------------------- (நில்லு) . குமாரை மோகன் ஒரு தடவை

 

காலேஜ்லே ----------------------------------- (பார்). மோகன் சினிமாவுக்கு ரெண்டு

 

டிக்கெட்--------------------------------  (வாங்கு). ராஜாவையும் சினிமாவுக்கு -----------------

 

-------- (கூப்பிடு). ராஜா தம்பியை பஸ்லே வீட்டுக்கு -------------------------- (அனுப்பு)

 

சினிமாவுக்கு வர ---------------------------- (ஒத்துக்கிடு) . ரெண்டு பஸ் ------------------

 

(நில்லு) போச்சு. சினிமாவுக்கு நேரம் --------------------------------------- (ஆகு). ராஜா

 

தம்பி கைலே பத்து ரூபா ------------------------- (குடு) பஸ்லே போக ----------------------

 

(சொல்லு), மோகனோட ----------------------------- (கெளம்பு). தம்பி பணத்தை பைலே

 

------------------- (வை) பஸ்ஸுக்காக ---------------- (நில்லு) . மோகனும் ராஜாவும்

 

வேகமா ---------------------------- (நட) . சரியான நேரத்துக்கு சினிமாவுக்கு -------------

 

-------------- (போ).

 

(Help with conjugation in the past: கா - காத்து, நில்லு - நின்னு, அனுப்பு - அனுப்பி, ஒத்துகிடு - ஒத்துக்கிட்டு, ஆகு - ஆகி, கெளம்பு - கெளம்பி, வை - வைச்சு, நட - நடந்து )

 

 

Mohan was going to a movie. On the way, he saw Raja. He was waiting for the bus. With him, his brother Kumar was also standing.  Mohan has seen Kumar once in the college. Mohan had bought two tickets for the movie. He invited Raja also to the movie. Raja agreed to come to the movie after sending his brother home. Two buses went by without stopping. It was getting late to the movie. Raja, after giving (leaving) ten rupees to (in the hand of) Kumar and telling (asking) him to go by bus, started out with Mohan. His brother, keeping the money in his pocket, was standing (waiting) for the bus. Mohan and Raja walked fast. They (successfully) reached the movie (theater) on time.

 

 

  1. Action noun (verbal noun) in the present tense + உண்டு ‘is, exists’ means that the act is performed habitually. This meaning is same as the habitual act conveyed by the finite verb in the future tense except that the form with உண்டு paraphrases as ‘the habit of doing exists’. Convert the sentences below in future tense in habitual sense into sentences with உண்டு. Translate the sentences you made.

 

Ex. அவன் எப்போவாவது பொய் சொல்லுவான்

    நான் எப்போவாவது பொய் சொல்றதுண்டு

    ‘He has the habit of telling a lie occasionally’

 

  1. நான் சில சமயம் ஒயின் குடிப்பேன் [சில சமயம் ‘some times’, ஒயின் ‘wine’]
  2. அவன் என்னோட தமிழ்லே பேசுவான்
  3. நான் நண்பர்களோட தமிழ் படம் பாப்பேன் [நண்பர்கள் friends’]
  4. நீங்க கறி சாப்பிடுவீங்களா? [கறி ‘meat’]
  5. ஒங்க நாய் முட்டை சாப்பிடுமா? [முட்டை ‘egg’]

 

  1. The negative of உண்டு is இல்லை. It means the habit does not exist. State the sentences in (3)  in the negative. Translate the second sentences you made.

Ex. அவன் எப்போவும் பொய் சொல்லமாட்டான்

    அவன் எப்போவும் பொய் சொல்றதில்லை

    ‘He does not have the habit of telling lies always’

    (எப்போவாவது has been changed to எப்போவும் in the negative sentence)

   

 

  1. Action noun (verbal noun) in the past tense + உண்டு means that the action was performed sometime in the past. This meaning is same as the meaning of verbal participle + இரு + present tense. Change the sentences below that of the latter form into sentences of the former form. Translate the sentences you made.

Ex. அவன் எப்போவாவது பொய் சொல்லிருக்கானா?

     அவன் எப்போவாவது பொய் சொன்னதுண்டா?

     ‘Has he ever told a lie?’

 

  1. நான் இந்தியாவுலே ஒயின் குடிச்சுருக்கேன்
  2. அவன் என்னோடே தமிழ்லே பேசிருக்கான்
  3. நான் நண்பர்களோடே தமிழ் படம் பாத்துருக்கேன்
  4. நீங்க கறி சாப்பிட்டுருக்கீங்களா?
  5. ஒங்க நாய் முட்டை சாப்பிட்டுருக்கா?

 

  1. The negative of உண்டு is இல்லை. Change the sentences you made with உண்டு in (5) into sentences with இல்லை. Translate them.

             Ex. அவன் எப்போவும் பொய் சொன்னதில்லை

             ‘He never told a lie’

           

 

  1. Fill in the blanks with the infinitive form of the verb in parentheses. Then replace the infinitive form of the verb with the gerund form in dative case. The meaning remains constant. Translate the second sentences.

 

Ex. எனக்கு சிகாகோவுக்கு -------- பிடிக்கலை. (வா ‘come’)

  1. எனக்கு சிகாகோவுக்கு வர பிடிக்கலை
  2. எனக்கு சிகாகோவுக்கு வர்றதுக்கு பிடிக்கலை

 

 

  1. எனக்கு எட்டு மணிக்கு வீட்டுலே -------- ஆசை. (இரு ‘be’) [ஆசை ‘desire’]

 

  1. ஒனக்கு ராத்திரி வீட்டுக்கு தனியா -------- பயமா? (நட ‘walk’) [தனியா ‘alone’]

 

  1. பேனா ------------------ எனக்கு ஒரு டாலர் போதும். (வாங்கு ‘buy’)

 

  1. சினிமா ---------------- எங்கிட்டே பத்து டாலர் இருக்கு. (பார் ‘see, watch’)

 

  1. ஊருக்கு விமானத்துலே -------------------- எங்கிட்டே பணம் இல்லை. (போ ‘go’)  [விமானம் (or பிளேன்) ‘plane’]

 

  1. இண்ணைக்கு வகுப்புக்கு ------------------ எனக்கு நேரம் இல்லை. (வா ‘come’)

 

  1. இண்ணைக்கு நான் --------------- பனிரெண்டு மணி ஆகும். (தூங்கு ‘sleep’)

 

  1. அம்மாவுக்கு தோசை ------------ நான் வீட்டுக்கு போறேன். (குடு ‘give’)

 

  1. அம்மாகிட்டே தோசை ---------------- நான் வீட்டுக்கு போறேன். (சாப்பிடு ‘eat’)

 

  1. என்ன புஸ்தகம் -------------------- பேராசிரியர் அறைக்கு போறே?  (படி ‘read’)     [அறை ‘room’]

 

 

  1. In each of the sentences below, the first sentence is the cause of the second to happen. Combine the two sentences into and translate. The finite verb in the first sentences is changed into a verbal noun and –னாலே is added to it.

(Note: The auxiliary verbs விடு and கிடு  have the same conjugation as corresponding main verbs (.i.e. doubling the final consonant in the past) and not the conjugation of verbs that take –ன்- in the past. படுத்துடுச்சு / படுத்துருச்சு is வந்துவிட்டது and படுத்துக்கிடுச்சு is படுத்துக்கிட்டது in the verbal noun. When the first sentence has a noun or a modal as its predicate, the verbal noun ங்கிறது of the dummy verb (எ)ன் is added before –னாலே. தப்புங்கிறதுனாலே, not தப்புனாலே (in 14) and வரணும்ங்கிறதுனாலே, not வரணும்னாலே. Note that ம் is not pronounced)

 

           Ex. நான் தூங்கிட்டேன்; அதுனாலே இந்த பாடத்தை படிக்கலை.

               நான் தூங்கிட்டதுனாலே இந்த பாடத்தை படிக்கலை.

             'Since I slept over, I didn’t read this lesson'

 

  1. நான் காலைலே நாலு தோசை சாப்பிட்டேன்; அதுனாலே எனக்கு பசிக்கலை.

 

  1. ராஜா ராத்திரி ஒரு மணி வரைக்கும் படிச்சான்; அதுனாலே இன்னும தூங்குறான்.

 

  1. அப்பா ஊருக்கு போயிருக்கார்; அதுனாலே வீட்டுலே வேலை கொறையா இருக்கு.

 

  1. குமார் சிகரெட் குடிக்கிறதை விட்டுட்டான்; அதுனாலே அவன் ஒடம்பு நல்லா இருக்கு.

 

  1. மழை விட்டுருச்சு; அதுனாலே நாம வெளியே போகலாம்.

 

  1. பூனை என் மடிலே படுத்துக்கிடுச்சு; அதுனாலே என்னாலே எந்திரிக்க முடியலை.

 

  1. அம்மா நாளைக்கு என்னை பாக்க வர்றாங்க; அதுனாலே நான் ஊருக்கு போகலை.

 

  1. மழை பெய்யுது; அதுனாலே நான் வீட்டுக்குள்ளேயே இருக்கேன்.

 

  1. ராஜா ஒரு மணி நேரத்துலே வந்துடுவான்; அதுனாலே நான் வேலையை

சீக்கிரம் முடிக்கணும்.

 

  1. அப்பா இண்ணைக்கு என்னை கூட்டிக்கிட்டு போக வர்றார்; அதுனாலே நான்

எல்லா வேலையையும் நேத்தே முடிச்சுட்டேன்.

 

  1. நான் நாளைக்கு ஊருக்கு போகணும்; அதுனாலே என் வேலையை

   இண்ணைக்கே முடிக்கணும்.

 

  1. என் தம்பி எந்த நேரமும் வரலாம்; அதுனாலே நான் வெளியே எங்கேயும் போகாம இருக்கேன்.

 

  1. இந்த வேலையை நீ செய்ய முடியாது; அதுனாலே ஒன்னை செய்ய சொல்லலை.

 

  1. குடிக்கிறது தப்பு; அதுனாலே நான் குடிக்கிறதில்லை.

 

  1. நீ எனக்கு வேண்டியவன்; அதுனாலே நான் ஒனக்கு இந்த விஷயத்தை

சொல்றேன். [வேண்டியவன் ‘a person one is interested in, is friendly with]

 

 

 

  1. An event may not be performed due to a compelling reason, but performed out of consideration for something or somebody. This kind of causal sentence is made by adding -ஆக to the dative -க்கு, which expresses the consideration. The following sentences have simple dative as a goal or purpose. Change them to mean ‘for the sake of’. Note that the example sentence means that the mother will do everything not necessarily to me, but will do many things because of me. Translate the sentences you made.

 

Ex. எங்க அம்மா எனக்கு எல்லாம் செய்வாங்க.

      எங்க அம்மா எனக்காக எல்லாம் செய்வாங்க.

     ‘My mother will do everything for my sake.

 

     எங்க அம்மா நான் படிக்கிறதுக்கு எல்லாம் செய்வாங்க

    எங்க அம்மா நான் படிக்கிறதுக்காக எல்லாம் செய்வாங்க

    ‘My mother will do everything for the sake of my study’

 

       1.   நீ எனக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம்.

 

  1. அப்பா எனக்கு தமிழ் புஸ்தகம் வாங்குனார்.

 

  1. எனக்கு நீ தமிழ் புஸ்தகம் வாங்க வேண்டாம்.

 

  1. எனக்கு ஒரே ஒரு தமிழ் பாட்டு பாடு.

 

  1. நான் தமிழ் படிக்கிறதுக்கு அப்பா தமிழ்நாட்டுக்கு வந்தார்.

 

  1. நான் புஸ்தகம் வாங்குறதுக்கு அப்பாகிட்டே பணம் கேட்டேன்.

 

  1. நான் கார் வாங்குறதுக்கு ரெண்டு வேலை பாக்கிறேன்

 

  1. நான் படிக்காம ஊர் சுத்துனதுக்கு அப்பா திட்டுனார். [திட்டு ‘scold’, ஊர் சுத்து ‘wander around town’]

 

  1. நான் ஒன்னோடே பேசாம இருந்ததுக்கு அம்மாவுக்கு கோபம் வந்துது.

 

  1. நீ என்ன வாங்குனதுக்கு பணம் கேக்கிறே?

 

 

  1. The completive auxiliary verb விடு has an alternate போ. போ is used with verbs that describe change of state. Change விடு in the sentences below with போ and translate.

            Ex. எங்க மாமா குடிச்சு குடிச்சு கெட்டுட்டார்

                 எங்க மாமா குடிச்சு குடிச்சு கெட்டுப்போனார்

                ‘My uncle got spoiled by drinking a lot’

 

  1. வெளியே வைச்சு பால் கெட்டுருச்சு
  2. கதவுலே மாட்டி சட்டை கிழிஞ்சிருச்சு[மாட்டு ‘get entangled’]
  3. எனக்கு அவ மொகம் சீக்கிரம் மறந்துரும் [மொகம் ‘face’]
  4. அவ சொன்னதை கேட்டு என் மனசு கொழம்பிருச்சு [மனசு ‘mind’, கொழம்பு ‘get confused’]
  5. எங்க தெருவுலே கார் மோதி ஒரு ஆள் செத்துட்டான் (மோது ‘bump against’, ஆள் ‘person’]

 

  1. The completive auxiliary verb விடு has an alternate ஆகு. ஆகு occurs only in neuter form irrespective of the subject. Completion is about the proposition taking place; the subject is often absent. There is a suggestion of anticipation of the occurrence. Change விடு in the sentences below with ஆகு and translate.

             Ex. ஊர்லேருந்து அப்பா வந்துட்டார்

                  ஊர்லேருந்து அப்பா வந்தாச்சு

                 ‘Father has come from out of town’

 

  1. நான் எல்லாரையும் பாத்துட்டேன்
  2. அவன் கடனை திருப்பி குடுத்துட்டியா? [கடன் ‘loan’]
  3. நீ வர்றதை அம்மாகிட்டே சொல்லிட்டேன்
  4. எல்லா பாடத்தையும் நல்லா படிச்சுட்டோம்
  5. ஊர் வந்துட்டுது; எறங்குங்க

 

  1. The modifier of a noun can occur after the noun in its nominal form. It agrees with the number and gender of the modified noun. The case marker, if any, is added to the post-posed noun. This post-posing of the modifier is common with numerals and quantifiers. Post-pose the modifier in the following sentences and translate.

(Note: எல்லாம், ஒண்ணு, ரெண்டு are neuter nouns; எல்லாரும், ஒருத்தன் / ஒருத்தி, ரெண்டு பேர்  are human nouns)

                Ex. நாங்க எல்லா பாடத்தையும் படிச்சுட்டோம்

                 நாங்க பாடம் எல்லாத்தையும் படிச்சுட்டோம்

                ‘We have studied all the lessons’

 

  1. எல்லா பையன்களும் தமிழ்லே பேசுனாங்க
  2. எனக்கு ஒரு பேனா வாங்கிக்குடு
  3. எனக்கு ஒரு தம்பி இருக்கான்
  4. எனக்கு ரெண்டு தங்கச்சி இருக்காங்க
  5. கெட்டுப்போன பாலை குடிக்காதே

 

 

 

Handouts

 

  1. Parts of the body and verbs associated with them

 

Nouns

 

Colloquial                    Formal

தலை                                                            head

மூளை                                                          brain

மொகம்                    முகம்                       face

முடி                                                               hair

நெத்தி                       நெற்றி                      forehead

கண்ணு                    கண்                           eye

காது                                                              ear

மூக்கு                                                           nose, nostril

வாய்                                                             mouth

ஒதடு                          உதடு                       lip

பல்லு                          பல்                           tooth

நாக்கு                                                             tongue

தொண்டை                                                  throat

கழுத்து                                                         neck

தோள்                                                            shoulder

கை                                                                 hand, arm

வெரல்                       விரல்                        finger, toe

நகம்                                                              nail

முதுகு                                                          back

மார்பு                                                              chest

நெஞ்சு                                                          chest, heart, mind

மனசு                          மனம்                        mind

வயிறு                                                            stomach

கொடல்                   குடல்                          intestine

ரத்தம்                                                              blood

கால்                                                                 leg

பாதம்                                                               foot

 

Verbs

 

யோசி                                                                       think about

நெனை (நெனைக்க) நினை                            think of

பார் (பாக்க)                  (பார்க்க)                         see, watch, look at

அழு (அழ)                                                             cry

கேள் (கேக்க)             (கேட்க)                                listen, hear, ask

சுவாசி (சுவாசிக்க)                                              breathe

பேசு (பேச)                                                              speak, talk

சாப்பிடு (சாப்பிட)                                                eat

கடி (கடிக்க)                                                            bite

மெல்லு (மெல்ல)            மெல்                         munch

தூக்கு (தூக்க)                                                        lift, carry

எழுது (எழுத)                                                         write

செய் (செய்ய)                                                       do, make

அடி (அடிக்க)                                                          hit, beat

சந்தோஷப்படு (–பட)                                         be happy

கவலைப்படு (–பட)                                             be sad, worry

நட (நடக்க)                                                             walk

ஓடு (ஓட)                                                                 run

நில்லு (நிக்க)         நில் (நிற்க)                          stand, stop

ஒதை (ஒதைக்க)             உதை (உதைக்க)      kick

 

 

  1. Body Parts and words made with them

(in formal spelling)

 

தலை                                                            head (of a body, a nail)

 

Nouns

 

தலைப்பு                                          heading, caption

தலைவன்                                      leader, hero

தலைவி                                          leader (fem), heroine

தலைமை                                       leadership, chairmanship

தலையணை                                 pillow

தலையங்கம்                                editorial

தலைப்பாகை                               head gear

தலைமுறை                                 generation

 

தலைவலி                                      headache

தலையெழுத்து                            fate

தலைவிதி                                      fate

தலைக்கனம்                                arrogance, a swelled head

தலைச்சுமை                                head load

தலைநகர்                                       capital, headquarter of an administrative unit

தலைவாசல்                                  front door

தலைக்குனிவு                              humiliation

தலைச்சுற்றல்                              giddiness

தலை மறைவு                              being underground, incognito

தலையீடு                                       interference

தலைப்பிள்ளை                           the first born (in a family)

தலைப்பிரசவம்                           first delivery (of child)

தலைத்தீபாவளி                          first deepavali (after marriage)

 

தபால் தலை                                             stamp

 

தலைப்புச் செய்தி                                   head line (in a newspaper)

தலையணை மந்திரம்                           wife’s sweet talk (to persuade her husband)

தலைமை ஆசிரியர்                               Head master

தலைமை அலுவலகம்                         Head office

 

 

 

 

 

 

 

 

Verbs

 

தலையிடு (இட )                                      interfere

தலையெடு (எடுக்க)                                                                   come up (in the world)

தலை காட்டு (காட்ட)                            show up (for a while)

தலை குனி (குனிய)                                           feel humiliated, disgraced

தலை சாய் (சாய்க்க)                                          lie down

தலை சுற்று (சுற்ற)                                             feel giddy, head reel

தலை தூக்கு (தூக்க )                                          rear one’s head, lift oneself up

தலை தப்பு (தப்ப)                                     scrape through  danger

தலை நிமிர் (நிமிர)                                              hold head high, feel proud

தலை போ (போக)                                              lose life (exaggerated expression)

தலை உருள் (உருள)                                         be criticized unfairly, have heads role

 

தலைமேல் ஏறு (ஏற)                                         take undue advantage of

தலைக்கு ஏறு (ஏற)                                             (of anger etc) go to the head

தலையை உருட்டு (உருட்ட)                         criticize unfairly

தலையைத் தட்டி வை (வைக்க)                  down size someone from being

                                                                                    haughty

தலையைத் தடவு (தடவ)                                trick someone to spend for another

தலையைப் பிய்த்துக்கொள் (கொள்ள)      pull one’s hair, rack one’s brain

தலையில் விழு (விழ)                                      fall to one’s lot

தலையில் கட்டு (கட்ட)                                    palm (a work) off, saddle one with

தலையில் கை வை (வைக்க)                        harm the interest of someone

தலையில் போடு (போட)                                shift blame

தலையில் மிளகாய் அரை (அரைக்க)        exploit one’s weakness to benefit

தலை வைத்துப் படு (படுக்க)                         (never) have dealings with

 

Other Forms

 

தலைகீழாக                                                           upside down

தலை குப்புற                                                         head / face down

தலை தெறிக்க                                                     post haste

தலை சிறந்த                                                         out standing

 

 

 

  1. Words of illness and being ill

(in formal spelling)

 

The experiencer of  illness is in the dative,  which is the case for the recipient.

 

வியாதி ‘disease’.  தொத்து வியாதி ‘infectious disease’,  இருதய வியாதி ‘heart disease’,

நோய் ‘disease, ailment, affliction’.  தொத்து நோய் ‘infectious disease, இருதய நோய் ‘heart disease, ailment’,  கண் நோய் ‘eye ailments’

கோளாறு ‘problem of malfunction’. இருதயக் கோளாறு  ‘heart problem’, வயிற்றுக் கோளாறு ‘stomach problem’

 

வலி (with any body part, தலை வலி, நெஞ்சு வலி etc.). Also நோவு.

வலி (வலிக்க, வலித்து) ‘(have / be in) pain’

எனக்குத் தலைவலி (இருக்கிறது) ‘I have headache’, எனக்குத் தலைவலி வருகிறது   ‘I get / am getting headache’, எனக்குத் தலை வலிக்கிறது ‘The head aches / is aching for me / I am suffering from headache’, என் தலை வலிக்கிறது ‘My head aches /is aching’

 

சுற்றல் (commonly with தலை) ‘dizziness, giddiness’

சுற்று (சுற்ற, சுற்றி)

 

எரிச்சல் ‘irritation, burning sensation’

எரி (எரிய எரிந்து)

உறுத்தல் ‘irritation by a spec’

உறுத்து (உறுத்த)

 

வீக்கம் ‘swelling’

வீங்கு (வீங்க, வீங்கி)

வீங்கியிரு

 

அரிப்பு ‘itching’

அரி (அரிக்க, அரித்து)

 

முறிவு (commonly with எலும்பு) ‘fracture’

முறி (முறிய, முறிந்து; முறிக்க, முறித்து)

 

சுளுக்கு ‘sprain’

சுளுக்கு (சுளுக்க, சுளுக்கி)

சுளுக்கிக்கொள்

 

உளைச்சல் ‘muscle fatigue’

உளை (உளைய, உளைந்து)

மன உளைச்சல் ‘mental fatigue

 

காயம் ‘injury, wound’

காயம்படு (-பட, -பட்டு)

 

புண் ‘wound, ulcer’

புண்ணாகு (-ஆக, -ஆகி)

புண்ணாகியிரு

 

காய்ச்சல், ஜுரம் ‘fever’

காய்ச்சல் அடி (அடிக்க, அடித்து)

 

சளி, ஜலதோஷம் ‘cold’

சளி, ஜலதோஷம் பிடி (பிடிக்க, பிடித்து)

 

பொக்களம் ‘boil’

பொக்களம் வெடி (வெடிக்க, வெடித்து)

 

வெடிப்பு ‘crack’ (commonly in lips, foot)

வெடி (வெடிக்க, வெடித்து)

 

கூச்சம் (commonly with கண், பல்)

கூசு (கூச, கூசி)

 

பொருமல் rumble (commonly with வயிறு)

பொருமு (பொரும, பொருமி)

பொருமிக்கொள்

 

இருமல் cough

இருமு (இரும, இருமி)

 

இளைப்பு  wheezing

இளை (இளைக்க, இளைத்து)

 

மயக்கம் ‘fainting, passing out, feeling fuzzy/disoriented’

மயங்கு (மயங்க, மயங்கி)

மயங்கி விழு ‘faint, pass out’

 

 

 

Some specific illnesses / symptoms

 

Nouns

 

குறுக்கு வலி ‘back pain (relating to backbone)’

அஜீரணம் ‘indigestion’

மந்தம் ‘bloating (in the stomach)

வயிற்றுப்போக்கு ‘diarrhea’

மலச்சிக்கல் ‘constipation’

வாந்தி ‘vomiting’

வாந்திபேதி ‘cholera’

வாய்வு ‘gas, gastric problem’

வாய்வுப் பிடிப்பு ‘muscle spasm’

பித்தம் ‘bile’

வாதம் ‘rheumatism’

ரத்தச்சோகை ‘anemia’

மஞ்சள்காமாலை ‘jaundice’

புற்றுநோய் ‘cancer’

குஷ்டம் / தொழுநோய் ‘leprosy’

அம்மை ‘small pox’

சக்கரை வியாதி / நீரழிவு ‘diabetes’

ஆஸ்த்மா ‘asthma’

 காசநோய் / க்ஷயரோகம்   ‘tuberculosis’

காக்கா வலிப்பு ‘epilepsy’

முடக்குவாதம் ‘paralysis’

விஷக்காய்ச்சல் ‘major fevers like malaria, typhoid etc)

 

தூரப்பார்வை ‘long sight’

கிட்டப்பார்வை ‘short sight’

வெள்ளெழுத்து ‘reading problem’

 

மனவியாதி ‘mental illness’

மூளைக் கோளாறு ‘neurological problem’

பைத்தியம் ‘madness’

மனஉளைச்சல் ‘mental agony’

மனச்சோர்வு ‘mental exhaustion’

 

Verbs

 

மூக்கு ஓடு ‘nose run’

வாந்தி எடு ‘vomit’

மரத்துப் போ become numb’

மூச்சு வாங்கு ‘have heavy breathing’

மூச்சுத் திணறு ‘suffocate’

அம்மை போடு / வார் ‘have small pox’

பைத்தியம் பிடி ‘become mad’

 

குடலைப் புரட்டிக்கொண்டு வா ‘have nausea’

வயிற்றைப் புரட்டிக்கொண்டு வா ‘have a sense of stomach turning up’

கண்ணைக் கட்டிக்கொண்டு வா ‘feel dizzy’

கண் இருட்டிக்கொண்டு வா ‘have the sense of going to faint’

 

Treatment

 

மருந்து ‘medicine’

மாத்திரை ‘tablet, capsule’

தைலம் ‘ointment, balm’

ஊசி ‘needle, injection’

தடுப்பு ஊசி ‘vaccination’

கட்டு ‘bandage’

நாடி ‘pulse’

பத்தியம் ‘restricted diet’

 

குணப்படுத்து ‘cure, heal (someone)

குணமாகு ‘cure, heal’

காய்ச்சல் விடு / இறங்கு ‘body temperature to go down’

ஊசி போடு ‘give shot, give an injection’

கட்டுப் போடு ‘put a bandage’

நாடி பார் ‘check the pulse’

பத்தியம் இரு ‘follow a restricted diet’

புண் பழு ‘boil to get ripe’

 

சீழ்  ‘puss’

சளி ‘phlegm. mucus’

 

 

Related Images: