3. பூனையும் குரங்கும்
ஒரு வீட்டுக்குள் ஒரே நேரத்தில் இரண்டு பூனைகள் நுழைந்தன. இரண்டும் ஒரு ரொட்டித் துண்டைப் பார்த்தன. இரண்டுக்கும் பசி. அதைச் சாப்பிடுவதில் இரண்டுக்கும் போட்டி. இரண்டும் சண்டை போட்டன. கொஞ்ச நேரம் கழித்து ரொட்டித் துண்டை ஒரு குரங்கிடம் எடுத்துக்கொண்டுபோய் பங்கு வைத்துத்தரும்படி கேட்டன.
குரங்கு ரொட்டியை இரண்டாகப் பிய்த்து ஒரு தராசில் வைத்தது. ஒரு தட்டு கீழே போனது. குரங்கு அதில் இருந்த ரொட்டித் துண்டில் கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டது. இப்போது அடுத்த தட்டு கீழே போனது. குரங்கு அதில் இருந்த ரொட்டித் துண்டைக் கொஞ்சம் சாப்பிட்டது. முதல் தட்டு மறுபடி கீழே போனது. குரங்கு அதில் இருந்த ரொட்டித்துண்டை இன்னும் கொஞ்சம் சாப்பிட்டது. இப்படியே குரங்கு ரொட்டி முழுவதையும் சாப்பிட்டுவிட்டது. பூனைகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
Vocabulary
நுழை (நுழைய, நுழைந்து) நொழை (நொழைஞ்சு) enter
ரொட்டி bread
துண்டு piece
போட்டி competition
சண்டைபோடு (போட, போட்டு) fight
கழித்து கழிச்சு after
குரங்கு கொரங்கு monkey
குரங்கிடம் கொரங்குகிட்டே to a monkey
பங்குவை (வைக்க, வைத்து) (வைச்சு) share, divide
பிய் (பிய்க்க, பிய்த்து) (பிக்க, பிச்சு) break into bits
வைத்தது வைச்சுது placed
தராசு balance
தட்டு pan
மறுபடி again
முழுவதையும் முழுசையும் all of
Spelling and other correspondence
Spelling
வீட்டுக்குள் வீட்டுக்குள்ளே
இரண்டு ரெண்டு
எடுத்துக்கொண்டு எடுத்துக்கிட்டு
போனது போச்சு
சாப்பிட்டது சாப்பிட்டுது / சாப்பிட்டுச்சு
சாப்பிட்டுவிட்டது சாப்பிட்டுட்டுது / சாப்பிட்டுருச்சு
ஒன்றும் ஒண்ணும்
கிடைக்கவில்லை கெடைக்கலை
Neuter Plural
Use of plural marker in the noun or the verb is uncommon in spoken Tamil. In written Tamil, -கள் is added to a noun to mark plural. The neuter plural ending of a verb is -அன (in contrast to the singular -அது). பூனைகள் வந்தன. The ending is composed of the link element -அன்- + the plural suffix -அ. The link element is absent in verbs that belong to the class of verbs that take –இன்- to mark past tense. பூனைகள் ஓடின.
Goal
Of the two suffixes to express goal (recipient and destination), -க்கு is same in speech and writing; -இடம் in writing -கிட்டே in speech. என்னிடம் ~ என்கிட்டே.
Verbal Noun (Gerund)
The tense distinction is two fold in verbal noun: past and non-past. For non-past, present tense suffix is used in speech whereas the future tense suffix is used in writing.
சாப்பிடுவது ~ சாப்பிடுறது. The present tense form in its written Tamil spelling (சாப்பிடுகிறது) is used in writing when the style is intended to be colloquial. There is no difference in the past. சாப்பிட்டது
Infinitive
With verbs of communication (சொல், கேள் etc), there is an alternative to the infinitive in written Tamil, which is the relative participle in future + படி. வரச் சொல் / வரும்படி சொல்
Adjective-Nouns
Neuter singular nouns derived from adjectives that have the vowels இ or ஐ retain their ending with -அது . This ending is -சு in speech.
பெரியது ~ பெருசு ‘big one’
புதியது ~ புதுசு ‘new one’
பழையது ~ பழசு ‘old one’
சிறியது ~ சிறுசு ‘small one’
( but சின்னது ~ சின்னது) ‘small one’
The following is an exception which has correspondence, even though there is no front vowel in the base.
முழுவதும் ~ முழுசும்
Numerals
The following is the spelling correspondence in numerals one to ten. Some correspondences like ன்று~ ண்ணு /ணு, ந்த் ~ஞ்ச் are common in other words. Some are specific to numerals.
ஒன்று ஒண்ணு
இரண்டு ரெண்டு
மூன்று மூணு
நான்கு நாலு
ஐந்து அஞ்சு
ஆறு ஆறு
ஏழு ஏழு
எட்டு எட்டு
ஒன்பது ஒம்பது
பத்து பத்து
Sandhi
The initial stop consonant of the following words double when the verbal participle ends in double stop with -உ like –த்து, ட்டு and ends in –இ or ய் .
எடுத்துக் கொடு
கேட்டுப் பார்
விற்றுத் தொலை
பேசிக்கொண்டு
போய்த் தொலை
சாப்பிட்டுவிட்டுப் போ
வந்து சேர்
தின்று பார்
கண்டுபிடி
நடந்துகொண்டு