2. எறும்பும் புறாவும்
ஆற்றங்கரையில் இருந்த மரத்தில் ஒரு புறா கூடுகட்டி இருந்துவந்தது. அந்தப் பக்கம் ஒரு வேட்டைக்காரன் வந்தான். புறாவைப் பார்த்தான். அதைக் கொல்லக் குறிவைத்தான். அப்போது தரையில் இருந்த எறும்பு அவன் காலைக் கடித்தது. அவனுக்குக் குறி தப்பியது. புறா பறந்துவிட்டது.
இன்னொரு நாள் எறும்பு ஆற்றில் தவறி விழுந்துவிட்டது. கரைக்கு வரமுடியாமல் தத்தளித்தது. அதைப் பார்த்த புறா ஒரு இலையைக் கிள்ளி ஆற்றில் போட்டது. எறும்பு அதில் ஏறிக் கரைக்கு வந்தது.
Glossary
எறும்பு ant
புறா pigeon
ஆறு (ஆற்று) river
கரை bank, shore
ஆற்றங்கரை (ஆறு+கரை) ஆத்தங்கரை river bank
கூடு nest
கட்டு (கட்ட, கட்டி) build
கூடுகட்டு (கூடு+கட்டு) build a nest
வேட்டை hunting
வேட்டைக்காரன் hunter
கொல்லு (கொல்ல, கொன்று) கொன்னு kill
குறி (வைக்க வைத்து) target
குறிவை (குறி+வை) aim
அப்போது அப்போ /அப்ப then
கடி (கடிக்க, கடித்து) bite
தப்பு (தப்ப, தப்பி) miss, escape
பற (பறக்க, பறந்து) fly
இன்னொரு another
தவறி by mistake,
accidentally
விழு (விழ, விழுந்து) fall
தத்தளி (தத்தளிக்க, தத்தளித்து) தத்தளிச்சு struggle for life
இலை எலை leaf
கிள்ளு (கிள்ள, கிள்ளி) pinch
ஏறு (ஏற, ஏறி) climb up
Rules of pronunciation
The rule of reading pronunciation is straight forward. Words are pronounced as they are spelt. There are a few exceptions such as voicing some stop consonants (தோசை, லட்டு) and dropping short high vowels in some consonant clusters (கிராமம்).
The rules of spoken pronunciation include the following.
-ம் and -ன் at the end of a polysyllabic word are not pronounced and the preceding vowel is nasalized (பக்கம், மரம்); if the vowel is -அ-, it is pronounced closer to -எ- (வேட்டைக்காரன், அவன்). Exceptions are the monosyllabic pronouns என் and உன், which nasalize and lengthen the vowel; in the case of உன், the vowel becomes ஓ- and so is spelled in spoken Tamil as ஒன்.
ல், ள் and ய் at the end of polysyllabic words (mostly words that end in a suffix that end in these consonants; the locative -இல் is an exception). So they are not spelled in spoken Tamil. But these absent consonants appear and pronounced when they are not word-final, as when other suffixes beginning with a vowel follow: முடியாம - முடியாமலே in spoken spelling.
Spelling Correspondence
The spelling of the spoken word is given in the second column along with the spelling of the written word, as above.
-ற்ற்- of written spelling corresponds with -த்த்- of spoken spelling.
- ர்த்த்- of written spelling is realized as -த்த்- of spoken spelling
இ- in the first syllable of a word before -ஐ, -அ in the second syllable corresponds with எ-
Locative case
The locative case marker –இல் corresponds with -லே or -உலே or –இலே: கரையில் ~ கரைலே, மரத்தில் ~ மரத்துலே, பாலில் ~ பால்லே / பாலுலே, ரோஜாவில் ~ ரோஜாலே / ரோஜாவுலே, பாயில் ~ பாய்லே / பாயிலே, கையில் ~ கைலே / கைய்லே
Verb ending
The neuter singular ending of the verb -அது corresponds with உது / உச்சு: வந்தது ~ வந்துது / வந்துச்சு, தப்பியது ~ தப்புச்சு. Note that the second verb has only one form. This verb belongs to the class of verbs that take the past tense marker –ன்- (-இன்- in writing) when the subject is human. The past tense is absent when the subject is neuter in speech, whereas it is present in writing: தப்பியது
Past tense
The past tense marker –த்த்- corresponds with –ச்ச்- when the verb ends in –இ, -ஐ or –ய். வைத்தான் ~ வைச்சான், கடித்தது ~ கடிச்சுது / கடிச்சுச்சு.
The past tense marker -இ with neuter subjects, corresponds with zero, as mentioned above and the verb ending is only –ச்சு: தப்பியது ~ தப்புச்சு. There is an alternative form in writing with as the verb ending: தப்பிற்று, ஓடியது / ஓடிற்று
Verbs of aspect
The completive aspect marker விடு corresponds with –டு / -ரு in the past in neuter singular. When it is the former it is conjugated in the past by doubling the consonant and it is the latter, it is conjugated like the verbs that take the past tense marker -ன்-. பறந்துவிட்டது ~ பறந்துட்டுது / பறந்துருச்சு In verbs with human ending, only- டு is used in speech: வந்துவிட்டான் ~ வந்துட்டான். The same is true of verbal participle:
வந்துவிட்டு ~ வந்துட்டு
Grammar
Chronological Continuity
A continuous activity over a period of time (differentiated from linear time expressed by கொண்டிரு ~ கிட்டுரு) is expressed by verbal participle plus the verb in different tenses. படித்துக்கொண்டிருந்தான் ~ படிச்சுக்கிட்டுருந்தான் ‘he was reading’ versus படித்துவந்தான் ‘he was reading one after another’. This is not used in speech
Sandhi
When a word and a suffix are combined, or when two words are combined to make a compound, or when two words occur adjacently in a sentence, some alterations in pronunciation (and in spelling) occur. The alteration, called sandhi, may be a change in pronunciation (and in a letter) or a deletion or an addition.
Additions in sandhi are the following.
When a word that ends in இ, ஈ, (எ), ஏ or ஐ and is followed by a suffix beginning with a vowel, the letter –ய்- (called glide) is added; when the ending vowel of the word is அ, ஆ, (ஒ), ஓ, (ஊ) or உ in monosyllabic words with a short vowel, the letter –வ்- is added. The final -உ in other types of words is deleted. மடியா, தலையா, அம்மாவா, தெருவா, வீடா. This sandhi is extended to cases where a word (rather than a suffix( follows: மா + இலை = மாவிலை ‘mango leaf, இல்லை + ஆனால் = இல்லையானால் ‘if not’.
Nouns that end in –ம், டு or று change to த்து, ட்டு, ற்று respectively before a case marker or a head noun. In some compounds, an additional -அம் is added. ஆறு+கரை = ஆற்று +அம்+கரை = ஆற்றங்கரை ‘river bank’, குளம்+கரை = குளத்து+அம்+கரை ‘bank of a tank’, புளி+பழம் = புளியம்பழம் ‘tamarind fruit’
The first stop voiceless consonant க, ச (if it is pronounced ச, not ஸ), த, ப is doubled when it occurs after the words of following kinds. The doubled consonant is added in spelling with the preceding word and is pronounced lightly in reading.
- Words that are objects with the accusative case marker -ஐ : காலை கடித்தது = காலைக் கடித்தது
- Words that are infinitives. கொல்ல பார் = கொல்லப் பார்
- Words that are verbal participle having the past tense marker -இ, -த்து, -ட்டு. ஏறி கரைக்கு = ஏறிக் கரைக்கு, எடுத்து பார் = எடுத்துப் பார், விட்டு கொடு = விட்டுக்கொடு
- Words that are deictic adjectives. அந்த பக்கம் =அந்தப் பக்கம் (Not with other adjectives நல்ல பக்கம்)