4. கழுதையும் கிழவனும்
தாத்தாவும் அவருடைய பேரனும் ஒரு கழுதையை ஓட்டிக்கொண்டு நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அந்தப் பாதையில் போன ஒருவன் “வயதான காலத்தில் தாத்தா ஏன் நடந்து போகிறார்? கழுதை மேல் உட்கார்ந்து போகலாமே” என்றான். தாத்தா கழுதை மேல் ஏறி உட்கார்ந்துகொண்டார்.
கொஞ்ச தூரம் போனபிறகு, இன்னொருத்தன் “சின்னப் பையன் நடக்கக் கஷ்டப்படுகிறான்; அவன் கழுதை மேல் உட்கார்ந்து போகலாமே” என்றான். பேரனும் கழுதை மேலே ஏறி உட்கர்ந்துகொண்டான்.
இன்னும் கொஞ்ச தூரம் போனபிறகு, இன்னொருவன், “கழுதை பாவம்! இரண்டு பேரைச் சுமந்துகொண்டுபோகிறது” என்றான். தாத்தாவும் பேரனும் கழுதை மேலிருந்து இறங்கிக்கொண்டார்கள். கழுதையைத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.
Vocabulary
கழுதை donkey
கிழவன் கெழவன் old man
தாத்தா grand father
பேரன் grand son
ஒட்டு (ஓட்ட, ஓட்டி) drive
நட (நடக்க, நடந்து) walk
பாதை path, way
வயதான காலம் வயசான காலம் old age
என்று -ன்னு say that, that
உட்கார் (உட்கார, உக்கார் (உக்கார sit down
உட்கார்ந்து) உக்காந்து)
ஏறு (ஏற, ஏறி) climb up
சின்ன small
பிறகு பெறகு after
கஷ்டப்படு (-பட, -பட்டு) suffer, find (it) difficult
இன்னொருவன் இன்னொருத்தன் another man
பாவம் pitiable
சும (சுமக்க, சுமந்து) சொம carry
மேலிருந்து மேலேருந்து from above
இறங்கு (இறங்க, இறங்கி) எறங்கு get down
தூக்கு (தூக்க, தூக்கி) lift
ஆரம்பி (ஆரம்பிக்க, ஆரம்பித்து) ஆரம்பிச்சு) begin
சிரி (சிரிக்க, சிரித்து) (சிரிச்சு) laugh
Spelling Correspondence
-உ- in the first syllable of a word before -ஐ, அ in the second syllable corresponds with ஒ- சுமை -- சொமை
-ட்- before and other stop consonants corresponds with two stop consonants. உட்கார் -- உக்கார்
Spatial words that in a consonant end in -ஏ. மேல் -- மேலே
Past tense
என்று -- -ன்னு, என்றான் -- -ன்னான் This occurs frequently because this form used to quote or report is common. (The future and present finite verb forms are என்பான், என்கிறான் -- -ம்பான், –ங்கிறான்).
Verbs of Aspect
கொள் -- கிடு ‘aspect of action affecting self’
கொண்டிரு -- கிட்டுரு ‘aspect of action continuing’
In conjugation
எடுத்துக்கிடுவான் எடுத்துக்கொள்வான் ‘he will take it to himself’
எடுத்துக்கிடுறான் எடுத்துக்கொள்கிறான் ‘he takes it to himself’
எடுத்துக்கிட்டான் எடுத்துக்கொண்டான் ‘he took it to himself’
Verb ending
The third human plural endings are -ஆர்கள் -- ஆங்க
Lexical Alternates
மேல், மீது -- மேலே
ஒருவன் -- ஒருத்தன்
இன்னொருவன் – இன்னொருத்தன்