1. காக்கையும் தண்ணீரும்
ஒரு காகம் வெகு நேரம் பறந்துகொண்டிருந்தது. அதனால் அதற்கு மிகவும் தாகம். எங்கும் தண்ணீர் இல்லை. பல நாட்களாக மழை பெய்யவில்லை. காக்கா சோர்ந்து போயிற்று. அப்போது ஒரு வீட்டின் தோட்டத்தில் ஒரு தண்ணீர்க் குடத்தைப் பார்த்தது. கீழே பறந்துவந்து குடத்தின் மேல் உட்கார்ந்தது. தண்ணீர் குடத்தின் அடியில் இருந்தது. காக்கைக்கு எட்டவில்லை. அதற்கு ஒரே ஏமாற்றம். அதற்குத் திடீரென்று ஒரு யோசனை வந்தது. தோட்டத்தில் கிடந்த கூழாங்கற்களை ஒவ்வொன்றாக எடுத்துவந்து குடத்துக்குள் போட்டது. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறியது. மேலே வந்ததும் காக்கா குடித்துவிட்டுப் பறந்தது
Vocabulary
காக்கை காக்கா crow
காகம் காக்கா crow
வெகு ரொம்ப lot of
மிகவும் ரொம்ப very
தாகம்
பல ரொம்ப many
தண்ணீர் தண்ணி water
சோர்ந்துபோ (போக, போய்) get tired
தோட்டம் garden
குடம் கொடம் pot
அடி bottom
எட்டு (எட்ட, எட்டி) reach
ஒரே lot of
ஏமாற்றம் disappointment
திடீரென்று திடீர்னு suddenly
யோசனை idea
கிட (கிடக்க, கிடந்து) lie around
கூழாங்கல் pebble
ஏறு (ஏற, ஏறி) climb up, rise
Spelling Correspondence
-ன்ற்- of written spelling corresponds with -ன்ன் – or –ண்ண்- of spoken spelling. It is -ன்ன்- in inflected words (தின்றான் ~ தின்னான்) and -ண்ண்- in simple words (ஒன்று ~ ஒண்ணு). In என்று , the vowel is not present in speech giving -ன்னு .When the word to which it is added ends in a consonant, it is –னு.
The sequence of ட் + க் or ச் becomes க்க் or ச்ச் : உட்கார் ~ உக்கார், பரிட்சை ~ பரிச்சை
உ- in the first syllable of a word before -ஐ, -அ in the second syllable corresponds with ஒ-. (குடம் ~ கொடம்). Note that உ- in the same context corresponds with எ-. (இலை ~ எலை )
Verbs of aspect
The self-affective aspect கொள் corresponds with கிடு . (எடுத்துக்கொள்ளலாம் ~ எடுத்துக்கிடலாம் / எடுத்துக்கலாம்). In the imperative, it is –க்க or –க்கோ. (எடுத்துக்கொள் ~ எடுத்துக்க / எடுத்துக்கோ) . The past tense form கொண்டு corresponds with கிட்டு. (எடுத்துக்கொண்டான் ~ எடுத்துக்கிட்டான்). The neuter singular எடுத்துக்கொண்டது corresponds with எடுத்துக்கிட்டுது / எடுத்துக்கிடுச்சு.
The same correspondence exists for the durative aspect: கொண்டிரு ~ கிட்டுரு. (எடுத்துக்கொண்டிருந்தான் ~ எடுத்துக்கிட்டுருந்தான்; எடுத்துக்கொண்டது ~ எடுத்துக்கிடுச்சு)
The plural
The plural suffix is -கள். But the singular form itself used in the plural sense and so this suffix is not common in spoken Tamil. If it is used, it is form is -க (மாடுகள் ~ மாடுக).
The genitive
The oblique form of nouns (i.e. the forms before case markers) themselves could be genitive meaning ‘of’. (வீட்டு, மரத்து, ஆற்று). The genitive case marker -உடைய corresponds with -ஓட (அம்மாவுடைய ~ அம்மாவோட ). The written Tamil, in addition to this, uses -இன் (அம்மாவின்). இன் could also make an oblique form to make a noun carry a case marker, (அம்மாவினுடைய, அம்மாவிற்கு = அம்மா + இன் + க்கு ). This additional genitive and oblique suffix is -அன் with அது, இது, எது: அதன் ‘its’, அதற்கு ‘to it’, அதனால் ‘because of it, therefore’
The negative
இல்லை corresponds with -லை (பெய்யவில்லை ~ பெய்யலை)
The adverb
ஆக corresponds with ஆ. (கொஞ்சமாக ~ கொஞ்சமா)
Words of location.
ஏ- at the end of words of location in spoken Tamil is generally absent in writing, when thy occur with a noun. However, ஏ- could be present in a less formal written style.
மேல் மேலே
கீழ் ~ கீழே
உள் ~ உள்ளே
முன்னால் ~ முன்னாலே
பின்னால் ~ பின்னாலே
எங்கு ~ எங்கே
எங்கும் ~ எங்கேயும்
Note that இல் ~ லே correspondence in the locative is similar to this.
அடியில் ~ அடிலே
Sandhi
-ல் at the end of monosyllabic words with a short vowel when followed by a suffix beginning with a stop like க- becomes -ற்- in written Tamil: கல் +கள் ---} கற்கள் (கல்லுக in speech), but கால்கள் (காலுக in speech). -ள் becomes ட். This sandhi takes place exceptionally in some monosyllabic words with a long vowel: நாள் +கள் ---} நாட்கள் (நாளுக in speech), but தேள்கள் (தேளுக in speech).