23. ஒரே குஷி

உரையாடல்  23                   ஒரே குஷி

 

 

ராஜா  -  இண்ணைக்கு என்ன ஒரே குஷியா இருக்கீங்க?

 

ஜிம்   -  வீட்டுலேருந்து கடிதம் வந்துது,  அதுனாலேதான்.

 

ராஜா  -  அப்பா, அம்மா சொகமா இருக்காங்களா?  என்ன எழுதிருக்காங்க?

 

ஜிம்   -  நாம பொங்கலுக்கு போனதையும் அங்கே பாத்ததையும் பத்தி நான்

         அப்பாவுக்கு எழுதிருந்தேன்.  அதை பாத்து அவருக்கும் ஒரே ஆச்சரியம்.

 

ராஜா  -  நேர்லே பாத்தா இன்னும் ஆச்சரியப்படுவார். 

 

ஜிம்   -  நான் எடுத்த படங்களை அவருக்கு அனுப்பிருந்தேன்.  அதுனாலே

         ஓரளவுக்கு நேர்லே பாக்கிறதை போல இருந்திருக்கும்.

 

ராஜா  -  என்ன இருந்தாலும் நேர்லே பாக்கிற மாதிரி இருக்காது, இல்லையா?                               

         அவரை ஒரு தடவை இங்கே வர சொல்லி எழுதுங்களேன்.

 

ஜிம்   -  அவர் எங்கே வர போறார்?  அவர் இங்கே வந்துட்டா அங்கே அவர்

         வேலையை பாத்துக்கிட யாரும் இல்லை.

 

ராஜா  -  ஆமா.  பொறுப்பான வேலைலே இருந்தா இப்படித்தான்.  திடீர்னு

         விட்டுட்டு வர முடியாது.  முன்னாலேயே திட்டம் போட்டு லீவு

         எடுத்துக்கிட்டு வந்தா என்ன?

 

ஜிம்   -  நானும் ஒவ்வொரு கடிதத்துலேயும் எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன்.  அவர்

         அசையறதா இல்லை. 

 

ராஜா  -  நீங்க எப்ப திரும்பி போறதா இருக்கீங்க?

 

ஜிம்   -  சீக்கிரமே போக வேண்டியதா இருக்கும்.  வந்து ஒரு வருஷம் முடிய

         போகுது இல்லையா?

 

ராஜா  -  ஒரு வருஷத்துலே திரும்புறதுன்னா கஷ்டமாத்தான் இருக்கும்.  நீங்க

         விரும்புனாலும் ஒரு வருஷத்துக்கு மேலே இருக்க முடியாதா?

 

ஜிம்   -  ஒரு வருஷத்துக்கு மேலே இருக்கணும்னா ஸ்பெஷலா அனுமதி

         வாங்கணும். நான் இங்கே இருந்தேன்னா அங்கே என்னோட வேலை

         கெடும்.  அதுனாலே போறதுக்கு பிடிக்காட்டாலும் போறதுதான்

         நல்லதுன்னு இருக்கேன்.

 

Glossary

ஒரே                                                    ‘full of’

குஷி                                                   ‘joy’

கடிதம்                                              ‘letter’

சொகம்            சுகம்                     ‘being fine, healthy’

எழுது (எழுத)                                ‘write’

நேர்லே            நேரில்                  ‘in person’

அனுப்பு (அனுப்ப)                      ‘spend’

ஓரளவுக்கு                                    ‘to an extent’

என்ன இருந்தாலும்                  ‘whatever it is’

மாதிரி                                             ‘like’

பொறுப்பான                                ‘responsible’

திடீர்னு       திடீரென்று             ‘suddenly’

அசை (அசைய)                          ‘move’

சீக்கிரம்                                         ‘quickly’

திரும்பு (திரும்ப)                       ‘return’

 

Related words

உற்சாகம்                                               ‘enthusiasm’

சௌக்கியம்                                          ‘being fine, healthy’

நலம்                                                         ‘being fine, healthy’

பொறுப்பு                                                  ‘responsibility’

சட்னு                 சட்டென்று                ‘quickly without delay’

டக்னு                 டக்கென்று                ‘abruptly’

பொசுக்னு        பொசுக்கென்று         ‘unexpectedly quickly’

மடமடன்னு    -வென்று                      ‘with speed, in quick succession’

சரசரன்னு                                                 ‘quickly and briskly’

குடுகுடுன்னு                                            ‘fast (as in running)’

 

 

 

Alternative forms

 

The use of plural form -கள் is uncommon.

படங்களை = படம் எல்லாத்தையும்

 

 த of the emphatic form தான் may not double, as pointed out earlier.

எழுதிக்கிட்டுத்தான் = எழுதிக்கிட்டுதான்

கஷ்டமாத்தான் = கஷ்டமாதான்

 

Exercises

 

 

1   How will you say the following in Tamil when two events take place at the same time? The relative participle can be in the present or future with no meaning difference. The sentences in the present relative participle are more colloquial in style and in the future relative participle are more formal in style . Write your sentences in both styles.

 

         Ex. When I went home, Raja was there.

         நான் வீட்டுக்கு போறப்ப ராஜா அங்கே இருந்தான்

                              or

        நான் வீட்டுக்கு போகும்போது ராஜா அங்கே இருந்தான்

 

1.      When I go the shop, I will see Raja.

 

2.      When I went to the shop, I saw Raja.

 

3.      When it is raining, it is cold.

 

4.      When it rained, we were eating.

 

5.      You should not talk when you eat.

 

6.      Don’t talk when I am talking

 

7.      When it is five o’clock, you can go home.

 

8.      Tell me when it is five o’clock.

 

9.      What will you do when they tell (ask) you to go?

 

10.  Where will you be when I study in Chicago?

 

 

2. The relative clause may be in the past when the event is simultaneous in time with the event of the main clause in the past. The meaning is the same as when the present tense is used in the relative clause as in (1). Translate the sentences below using past tense in the relative clause.

Ex. When I went home, Raja was there.

        நான் வீட்டுக்கு போனப்ப ராஜா அங்கே இருந்தான்

 

1.      When I went to the shop, I saw Raja.

 

2.      When I went to the shop, I could not see Raja.

 

3.      When it was raining, it was cold.

 

4.      When it rained, we were eating.

 

5.      You should not have talked when we were eating.

 

6.      Raja could have gone out when I was talking

 

7.      When it was five o’clock, you didn’t tell me.

 

8.      They told me to leave me when it was five o’clock. [கெளம்பு ‘leave’]

 

9.      What did you do when they told (asked) you to leave?

 

10.  Where were you when I studied in Chicago?

 

3.  Suppose you want to say that the events were not simultaneous and the main event (in the main clause) followed the other event (in the subordinate clause). The relative participle is always in the past. Change the Tamil sentences you made in (1) to mean ‘after the event’ by changing (அ)ப்ப to பெறகு and the tense of the relative clause into past.

Ex. நான் வீட்டுக்கு போன பெறகு ராஜா அங்கே வந்தான்

   Raja came there after I went home

 

 

  1. Suppose the main event takes place immediately after the first.  ஒடனே is used in place of பெறகு. Change the sentences you made in (2) with and translate them.

Ex. நான் வீட்டுக்கு போன ஒடனே ராஜா வந்தான்

      ‘Raja came soon after I went home’

 

  1. The verbal noun is always in the past. There is another way of saying ‘soon after’ and it is said by using the verbal noun in the past with –உம்.  Convert the sentences you made in (4) into this alternative sentence with the same meaning.

Ex. நான் வீட்டுக்கு போனதும் ராஜா வந்தான்

 

 

  1. Suppose you want to say the opposite of (5) above and say that the main event preceded the other. The relative participle is in the future, but the phonological change (ம்- is dropped; middle syllable -உ changes to -அ) makes it look like an infinitive in colloquial speech.  Convert the sentences you made in (5) to mean ‘before’. Translate the sentences you made.

 

Ex. நான் வீட்டுக்கு போகமுன்னாலே ராஜா வந்தான்

   நான் வீட்டுக்குப் போகும்முன்னால் ராஜா வந்தான் (in formal style)

   ‘Raja came before I went home’

 

 

  1. The temporal clause is formed by adding the temporal form (பெறகு, முன்னாலே etc.) to the relative participle, as above. There is another way of forming a temporal clause in which the temporal form is added to the verbal noun plus the dative case. Give this alternative form of the temporal clause in the sentences below. Translate them.

 

   Ex. நீ போனபெறகு முக்கியமா ஒண்ணும் நடக்கலை.

         நீ போனதுக்கு பெறகு முக்கியமா ஒண்ணும் நடக்கலை.

       ‘After you left, nothing important happened’

 

          நீ வரமுன்னாலே முக்கியமா ஒண்ணும் நடக்கலை.

          நீ வர்றதுக்கு முன்னாலே முக்கியமா ஒண்ணும் நடக்கலை.

          ‘Before you came, nothing important happened’

 

            1. ராஜா என் தப்பை சொன்னபெறகு எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு.    [சங்கடம் ‘embarrassment’]

 

                  2. நான் மதுரைக்கு போனபெறகு ஒனக்கு கடிதம் போடுறேன். [கடிதம் ‘letter’]

 

                 3. ஆறு மணி ஆனபெறகுதான் நான் வீட்டுக்கு போவேன்

 

4. ராஜா என் தப்பை சொல்லமுன்னாலேயே நான் மன்னிப்பு கேட்டேன். [மன்னிப்பு ‘forgiveness’]

 

            5. நான் மதுரைக்கு போகமுன்னாலே இந்த வேலையை முடிக்கணும்.

 

            6, ஆறு மணி ஆகமுன்னாலே நான் பஸ்ஸை பிடிக்கணும். [பிடி ‘catch’]

 

 

  1. When உள்ளே is used instead of முன்னாலே after the verbal noun in the present plus –க்கு, the meaning is the same, but it additionally suggests that the given time will not be exceeded. Change the sentences you made in (6) by substituting உள்ளே for முன்னாலே. Note that the form to which உள்ளே is added is not the relative participle but the verbal noun in the dative case. (உ) is lost in sandhi.

Ex. நான் வீட்டுக்கு போகமுன்னாலே ராஜா வந்தான்

    நான் வீட்டுக்கு போறதுக்குள்ளே ராஜா வந்தான்

 

.

  1. Translate the following sentences into Tamil.

 

1.      When I go to India, I will study Tamil

 

2.      When I went to India, I studied Tamil

 

3.      After I went to India, I studied Tamil

 

4.      After I go to India, I will study Tamil

 

5.      As soon as I went to India, I studied Tamil

 

6.      As soon as I go to India, I will study Tamil

 

7.      Before I go to India, I will study Tamil

 

8.      Before I went to India, I studied Tamil.

 

 

10.  Translate the following sentence in Tamil into English

 

1.      நான் இந்தியாவுக்கு போனதுக்கு பெறகு தமிழ் படிச்சேன்

 

2.      நான் இந்தியாவுக்கு போனதுக்கு பெறகு தமிழ் படிப்பேன்

 

3.      நான் இந்தியாவுக்கு போறதுக்கு முன்னாலே தமிழ் படிப்பேன்

 

4.      நான் இந்தியாவுக்கு போறதுக்கு முன்னாலே தமிழ் படிச்சேன்

 

 

 

  1. The conditional sentences below describe an event in the future that will happen if the condition in the subordinate clause is met. Translate these sentences.

 

   Ex. நீ சொன்னா நான் போறேன்.

       ‘I will go if you tell me to’

 

  1. ராஜா சொன்னா நாங்க கேப்போம்.

 

  1. என்கிட்டே பணம் இருந்தா கார் வாங்குவேன்.

 

  1. சினிமாவுக்கு போனா நீ தூங்குவே.

 

  1. காலைலே தோசை சாப்பிட்டா எனக்கு பசிக்கும்.

 

  1. என் தங்கச்சி தமிழ் படிச்சா ஒன்னோடே பேசுவா.

 

  1. You could describe a hypothetical happening of an event, which did not happen because the conditioning even did not take place. That is, an event could have happened but did not happen. In these sentences, verbs in both clauses take (இ)ரு.  Make the sentences you made in (11) into hypothetical ones and translate them.

Ex. நீ சொன்னா நான் வர்றேன்.

       நீ சொல்லிருந்தா நான் வந்துருப்பேன்.

               ‘I would have come if you had told me to’

 

 

 

  1. The progressive finite verb can be emphasized by adding -ஏ after கிட்டு. This means that a continuous action is prolonged. Change the sentences without emphasis below into ones with emphasis and translate.

      Ex. அவன் கதை புஸ்தகத்தை படிச்சுக்கிட்டுருக்கான்

            அவன் கதை புஸ்தகத்தை படிச்சுக்கிட்டே இருக்கான்

             ‘He keeps on reading the story book’

 

  1. நான் ராத்திரி பூராவும் எனக்கு தெரிஞ்சவங்களோடே பேசிக்கிட்டுருந்தேன் [பூராவும் ‘all]
  2. நீ எப்பவும் சாப்பிட்டுக்கிட்டுருக்கிறது நல்லது இல்லை
  3. மேயிலே மழை பெஞ்சுக்கிட்டுருக்கும் [மே ‘May’]
  4. நீ காலைலே ஒரு மணி வரைக்கும் டிவி பாத்துக்கிட்டா இருந்தே?
  5. நீ வேலை செய்யாம ஆடிக்கிட்டும் பாடிக்கிட்டும் இருக்கக் கூடாது [ஆடு ‘play’]

 

  1. The duration of time in the progressive finite verb may be viewed as being in a horizontal axis. It can also be viewed as being in a vertical axis. That is, as the action being carried out successively. The difference is similar to the one between ‘is doing’ and ‘goes on doing’. Tamil uses வா or போ in place of இரு. Change the sentences below with இரு into ones with வா or போ as indicated. Translate the sentences.

   Ex. நான் கதை புஸ்தகத்தை படிச்சுக்கிட்டே இருந்தேன் (வா)

      நான் கதை புஸ்தகத்தை படிச்சுக்கிட்டே வந்தேன்

      ‘I went on reading the story book’

 

  1. நான் என் கதையை அவன்கிட்டே சொல்லிக்கிட்டுருந்தேன் (வா)
  2. அவ என் புஸ்தகத்தை ஒவ்வொரு பக்கமா பாத்துக்கிட்டுருந்தா (போ) [பக்கம் ‘page’]
  3. அவன் வீட்டுலே ஒவ்வொரு கதவா பூட்டிக்கிட்டுருந்தான் (வா) [கதவு ‘door’, பூட்டு ‘lock’]
  4. நான் புதுசா வேலைக்கு வந்தவன்கிட்டே என்ன என்ன வேலைன்னு சொல்லிக்கிட்டுருந்தேன் (போ)
  5. நான் அவன் சொன்னதை எல்லாம் கேட்டுக்கிட்டே இருந்தேன் (வா)

 

 

  1. The negative of the progressive finite verb is இருக்கலை. It could be also இல்லை. Change இருக்கலை in the sentences into இல்லை.

   Ex. அவ வந்தப்ப நான் தூங்கிக்கிட்டுருக்கலை

         அவ வந்தப்ப நான் தூங்கிக்கிட்டுல்லை

          ‘I was not sleeping when she came’

 

  1. நான் வகுப்புலே பேசிக்கிட்டுருக்கலை
  2. நான் கூப்பிட்டப்ப நீங்க சாப்பிட்டுக்கிட்டுருக்கலையா? [கூப்பிடு ‘call’]
  3. கல்யாணம் ஆனப்ப நான் படிச்சுக்கிட்டுருக்கலை
  4. நான் படிக்காம ஊரை சுத்திக்கிட்டுருக்கலை
  5. நான் ராத்திரி பூராவும் டிவி பாத்துகிட்டே இருக்கலை.

 

Handouts

 

  1. Words and Phrases using words of body parts

 

கால்  ‘leg (of animals, furniture)

 

Nouns

 

கால்பந்து                  ‘football’

கால்சட்டை               ‘trouser, shorts’

கால்நடை                   ‘cattle, by foot’

காலணி                        ‘footwear (high style)’

கால்தூசி                       ‘dirt (as in condemning one’s worth)’  

காலடி                             ‘steps’, ‘(in locative) under one’s feet’

கால் சுவடு                    ‘foot print’

பந்தல்கால்                    ‘pole of canopy’

தேர்க்கால்                      ‘wheel of temple chariot’

கால்கோள்                      ‘laying foundation (high style)’

காலுறை                          ‘socks (high style)’

 

Verbs

 

கால்வை                               ‘set foot’

கால்மிதி                               ‘set foot (usually in the negative, rejecting return)’

கால்பதி                                 ‘enter in a field, begin to establish’

காலூன்று                            ‘establish oneself’

கால் முளை                        ‘take wings, become independent’

காலைவாரிவிடு               ‘pull the rug from under’

காலைப் பிடி                        ‘bow before someone for favor’

காலைப் பிடித்துவிடு       ‘massage the leg’

காலை நீட்டு                         ‘stretch the leg’

காலில் விழு                           ‘prostrate’

கால்கட்டுப் போடு               ‘bond someone, usually a boy, in marriage (colloquial style)’

கால்கழுவு                             ‘wash after defecation (euphemistically)’

ஒற்றைக் காலில் நில்        ‘be insistent, be adamant, persevere’

 

 

Other forms

 

கால்மாட்டில்                                ‘on the side of the legs of one lying down’

காலார         (நட)                           ‘take a stroll’

காலும் ஓடவில்லை, கையும் ஓடவில்லை ‘was stunned, stupefied’

 

 

  1. Words related to eating 

 

Generic names

 

சாப்பாடு ‘food, meal’

டிபன் ‘food not part of main meal (like dose, puri etc.)’

பலகாரம் ‘snack’

சாதம் ‘rice (cooked)’

சோறு ‘rice (cooked)’

கஞ்சி ‘porridge, gruel’

பொரியல் ‘side vegetable dish, curry’

தீனி ‘animal feed, food (to satisfy hunger)’

இனிப்பு ‘sweet, dessert’

காரம் ‘savory’

பானம் ‘drink’

சைவம் ‘vegetarian’

அசைவம் ‘non-vegetarian’

 

Acts of eating

 

சாப்பிடு (சாப்பிட, சாப்பிட்டு) ‘eat’

குடி (குடிக்க, குடித்து) ‘drink’

விழுங்கு (விழுங்க, விழுங்கி) ‘swallow’

கடி (கடிக்க, கடித்து) ‘bite’

மெல்லு (மெல்ல, மென்று) ‘chew’

சப்பு (சப்ப, சப்பி) ‘chew (without biting)’

சப்புக்கொட்டு (-கொட்ட, -கொட்டி) ‘relish a dish (by clicking)’

துப்பு (துப்ப, துப்பி) ‘spit’

உறிஞ்சு ‘suck’

கொப்பளி (கொப்பளிக்க, கொப்பளித்து) ‘goggle’

குதறு (குதற குதறி) ‘tear up (by biting)’

 

Process

 

பிசை (பிசைய, பிசைந்து)

செரி (செரிக்க, செரித்து)

ஜீரணி (ஜீரணிக்க, ஜீரணித்து)

ஜீரணம்

அஜீரணம்

வாந்தி எடு (-எடுக்க, -எடுத்து)

ஏப்பம் போடு விடு (-விட, -விட்டு)

அசைபோடு (-போடு, -போட்டு)

 

Tastes

 

ருசி

கச (கசக்க, கசந்து)

இனி (இனிக்க, இனித்து)

புளி  (புளிக்க, புளித்து)

கரி (கரிக்க, கரித்து)

துவர் (துவர்க்க, துவர்த்து)

 

Others

 

பசி

வயிறு நிறை

புரை ஏறு

மூக்குமுட்ட

 

Extended figurative meaning

 

சாப்பிடு

ராஜாவை நம்பாதே; உன்னைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுவான்

குடி

என் கார் ரொம்ப பெட்ரோல் குடிக்கிறது

விழுங்கு

வார்த்தையை விழுங்காமல் தைரியமாகச் சொல்

கடி

புதுச் செருப்பு கடிக்கிறது

படிப்புச் செலவு கையைக் கடித்துவிட்டது

மெல்லு

இந்த வேலையை இன்று முடிக்காவிட்டால் மானேஜர் என்னை மென்று துப்பிவிடுவான்.

கொப்பளி

அதைக் கேட்டதும் எனக்குக் கோபம் கொப்பளித்தது.

குதறு

நான் வேலையை முடிக்கவில்லை என்று மானேஜர் என்னைக் குதறிவிட்டான்.

பிசை

பணம், பணம் என்று அவன் என்னைப் பிசைந்துகொண்டிருக்கிறான்

ஏப்பம் போடு விடு

என்னிடம் வாங்கிய பணத்தை அவன் ஏப்பம் போட்டுவிட்டான்

அசை போடு

காலேஜில் படித்த நாட்களை என் மனம் அசை போட்டுக்கொண்டிருந்தது

 

Practice translating the above sentences and making additional sentences using the given Tamil words.

Note: The above sentences are spelled as in formal style.