24. போறது கஷ்டமா இருக்கு

  உரையாடல்  24                           போறது கஷ்டமா இருக்கு

 

 

ராஜா  -  பிரயாண ஏற்பாடெல்லாம் பண்ணிக்கிட்டுருக்கீங்கபோல இருக்கு.  ஆளை

         பாத்தாலே தெரியுது.  ரொம்ப அலைச்சலோ?

 

ஜிம்   -  அலைச்சல் ஒண்ணும் இல்லை.  மனக்கஷ்டம்தான்.  தமிழ் நாட்டை விட்டு

         போறதை நெனைச்சாலே மனசுக்கு கஷ்டமா இருக்கு.

 

ராஜா  -  மொதல்லே அப்படித்தான் இருக்கும்.  அங்கே போயிட்ட பெறகு கொஞ்ச

         நாள்லே எல்லாம் சரியா போயிடும்.

 

ஜிம்   -  அவ்வளவு லேசா போயிடுமா, என்ன?  கொஞ்ச நாளைக்கு தமிழ் நாட்டு

         நெனைவாவே இருக்கும்.

 

ராஜா  -  போறதுக்கு டிக்கெட்டெல்லாம் வாங்கிட்டீங்களா?

 

ஜிம்   -  இன்னும் இல்லை.

 

ராஜா  -  எந்த விமானத்துலே போறதா திட்டம் போட்டுருக்கீங்க? 

 

ஜிம்   -  எந்த விமானத்துலே டிக்கெட் வெலை கொறைவா இருக்கோ அதுலே

         போகணும்.

 

ராஜா  -  அது சரிதான்.  வழிலே எங்கேயும் எறங்குறதா திட்டம் இருக்கா?

 

ஜிம்   -  இல்லை.  ஒவ்வொரு எடத்துலேயும் ஏறி எறங்கி போறதுன்னா ரொம்ப

         நாள் ஆகுமே.  அதோடே அலைச்சலும் எனக்கு ஒத்துக்கிடாது.

 

ராஜா  -  அதுக்கு என்ன செய்றது?  ஊர் பாக்கணும்னா கொஞ்சம் கஷ்டப்படத்-

         தான் வேணும்.

 

ஜிம்   -  அது உண்மைதான்.  ஆனாலும் இப்போ கஷ்டப்படுவானேன்னு பாக்கிறேன்.

         இப்போ பாக்கலைன்னா வேறே எப்போவாவது பாத்துக்கிடுறது.

 

ராஜா  -  நீங்க ஊருக்கு போறதுக்குள்ளே ஒரு நாள் எங்க வீட்டுலே

         சாப்பிடணும். சரியா?

 

ஜிம்   -  ஓ! ரொம்ப சரி!  ஒங்க சாப்பாடுன்னா எனக்கு உயிர் ஆச்சே!

 

ராஜா  -  இந்த ஞாயிறு போய் அடுத்த ஞாயிறு சௌகரியப்படுமா?

 

ஜிம்   -  எண்ணைக்குன்னாலும் சரி.  ஞாயித்துக்கிழமை நான் இங்கே டாண்னு

         வந்து நிப்பேன்.

 

Glossary

பிரயாணம்         பயணம்                                                ‘travel, journey’

ஏற்பாடு பண்ணு (பண்ன)                                             ‘arrange, make arrangement’

ஆள்                                                                                      ‘person (here referring to the listener in third person)’

அலைச்சல்                                                                        ‘fatigue by hectic running around’

மனக்கஷ்டம்                                                                    ‘agony’

நெனை (நெனைக்க)        நினை                                  ‘think’

லேசா                                                                                   ‘easily, lightly’

நெனைவு    /ஞாபகம்      நினைவு                             ‘memory, presence in mind’

டிக்கெட்                                                                               ‘ticket’

விமானம்                                                                            ‘plane, (here) airlines’

திட்டம் போடு (போட)                                                    ‘plan’

கொறைவு                       குறைவு                                  ‘less’

எறங்கு (எறங்க)            இறங்கு                                   ‘get down, deplane’

ஏறு (ஏற)                                                                              ‘get in, board’

உண்மை                                                                              ‘truth’

உயிர் ஆச்சு                    -ஆயிற்று                                ‘love something as your life’

ஞாயிறு                                                                               ‘Sunday’

டாண்னு                         -என்று                                       ‘punctually, on the hour, without

சௌகரியப்படு  (-பட)                                                    ’be convenient’

நில்லு (நிக்க)                                                                     ‘show up, stand’

 

Related words

பிரயாணம் பண்ணு                                                        ‘travel’                                                 

ஏற்பாடு                                                                               ‘arrangement’

திட்டம்                                                                                 ‘plan’               ‘

நெனைவு படுத்து (படுத்த)  நினைவு-                      ‘remind’

அதிகம்                                                                                 ‘more, excess’

சௌகரியம்                                                                       ‘convenience, comfort, being fine’

பணக்கஷ்டம்                                                                   ‘suffering by lack of money

தண்ணிக்கஷ்டம்              தண்ணீர்க்-                       ‘suffering lack of water’

சப்னு                                    -என்று                                   ‘not being tasty’

கச்னு                                                                                    ‘fitting exactly’

சிக்னு                                                                                   ‘fitting tightly’

 

Exercises

 

  1. மாதிரி ‘likeness, model’ is used like a noun with another noun commonly without a case marker (unlike போல) to mean ‘like’. Only with pronouns, it is added to their accusative form. The likeness that is compared may be of the form of the object or the manner of action.

When the comparison is with a proposition, the verb of the compared sentence is in its relative participle form, to which மாதிரி is added. The comparison in this construction translates into English as ‘like, as, as well as’.

The comparative meaning extends to ‘in conformity with or as if’ in this construction (i.e. மாதிரி with a relative participle).

The meaning is ‘in such a way that’ when the compared sentence (and the relative participle in the present tense) is an outcome of the main action.

The fact that மாதிரி is a noun allows the adverb marker -ஆ and the adjective -ஆன to be added to it.   

 

               Translate the following sentences using the appropriate equivalent in English.

 

 

like, as, as well as

 

  1. என் தங்கச்சி எங்க அப்பா மாதிரி இருப்பா.

 

  1. நியு ஹேவன் நியு யார்க் மாதிரி பெரிய ஊர் இல்லை.

 

  1. என் தங்கச்சி என்னை மாதிரி இருப்பா.

 

  1. அவ பொம்மை மாதிரி உக்காந்துருந்தா. [பொம்மை ‘doll’]

 

  1. இங்கேருந்து அது பாம்பு மாதிரி தெரிஞ்சுது. [பாம்பு ‘snake’]

 

  1. என்னை மாதிரி எங்க வீட்டுலே யாரும் தமிழ் பேசமாட்டாங்க.

 

  1. நான் பேசுற மாதிரி எங்க வீட்டுலே யாரும் தமிழ் பேசமாட்டாங்க.

 

  1. நான் நெனைச்ச மாதிரியே ஒன் தம்பி இருக்கான்.

 

  1. சொன்ன மாதிரி அவன் சரியா ஆறு மணிக்கு வந்துட்டான்.

 

  1. நீ என்ன மாதிரி வேலை தேடிக்கிட்டுருக்கே? [தேடு ‘look for’]

 

as if

 

  1. ஒங்க அப்பா தூங்கிக்கிட்டுருக்கிற மாதிரி இருக்கு.

 

  1. அங்கே ஒங்க அம்மா கொரல் மாதிரி கேக்குது. [கொரல் ‘voice’]

 

  1. யாரோ அழுற மாதிரி கேக்குது. [அழு ‘cry’]

 

  1. நீ என்னமோ சொன்ன மாதிரி இருந்துது.

 

  1. இண்ணைக்கு மழை பெய்யப் போற மாதிரி இருக்கு.

 

  1. நான் சொன்னதை கேட்டு நீ பயந்த மாதிரி இருந்துது. [பய ‘be scared’]

 

  1. நீ சொல்றதை அவன் கேக்குற மாதிரி இல்லை.

 

  1. இந்த படம் சின்ன பிள்ளைக பாக்கிற மாதிரி இருக்கா. [பிள்ளை ‘child’]

 

  1. நீ தப்பு செஞ்ச மாதிரி அவன்கிட்டே மன்னிப்பு கேக்க வேண்டாம். [மன்னிப்பு ‘forgiveness’]

 

  1. அவன் பெரிய பணக்காரன் மாதிரி நடந்துக்கிடுறான். [நடந்துக்கிடு [‘behave’]

 

 

in such a way

 

  1. எனக்கு புரியுற மாதிரி சொல்லு.

 

  1. எனக்கு பணம் வர்ற மாதிரி ஒரு யோசனை சொல்லு. [யோசனை ‘idea’]

 

  1. எங்க அப்பாவுக்கு பேர் வர்ற மாதிரி நான் ஒரு காரியம் செஞ்சுருக்கேன். [பேர் ‘name, fame’, காரியம் ‘a thing’]

 

  1. நான் பொய் சொன்னதுக்காக முதுகு வீங்குற மாதிரி அப்பா என்னை அடிச்சார். [வீங்கு ‘swell’]

 

  1. எனக்கு கேக்கிற மாதிரி ரேடியோவை சத்தமா வை. [சத்தம் ‘being loud, noise, வை ‘tune in’]

 

Others

 

  1. ஒரு நாள் மாதிரி ஒரு நாள் இருக்காது.

 

  1. ஒருத்தர் மாதிரி ஒருத்தர் இருக்கமாட்டாங்க.

 

  1. எல்லாரும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க.

 

  1. எந்த மாதிரி வேலை ஒனக்கு வேணும்?

 

  1. அவ இண்ணைக்கு ஒரு மாதிரி இருக்கா. [ஒரு மாதிரி ‘a kind that is out of normal or out of sync]

 

  1. அவ இண்ணைக்கு ஒரு மாதிரி பேசுறா.

 

  1. எனக்கு ஒரு மாதிரி வருது.

 

  1. இதை அம்மாகிட்டே சொல்ல எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.

 

  1. அவனை பாத்த ஒடனே எனக்கு ஒரு மாதிரியா போச்சு. [ஒடனே ‘soon after’]

 

  1. எங்க மாமா ஒரு மாதிரியான ஆள். [ஆள் ‘guy, person’]

 

 

 

2. When -உம் is added to the conditional form it means that meeting the condition is not sufficient for the act in the main sentence to take place. The verb of the main clause is commonly in the negative. The conditional translates as ‘even if’. Change the conditional in the sentences below into a conditional with -உம் and the verb of the main sentence into negative. Translate the sentences you made.

Ex. நீ சொன்னா நான் போறேன்.

    நீ சொன்னாலும் நான் போக மாட்டேன்

       ‘I will not go even if you tell me to’

 

 

  1. ராஜா சொன்னா நாங்க கேப்போம்.

 

  1. என்கிட்டே பணம் இருந்தா கார் வாங்குவேன்.

 

  1. சினிமாவுக்கு போனா நீ தூங்குவே.

 

  1. காலைலே தோசை சாப்பிட்டா எனக்கு பசிக்கும்.

 

  1. என் தங்கச்சி தமிழ் படிச்சா ஒன்னோடே பேசுவா.

 

 

 

  1. When -உம் is added to the verbal participle, it expresses the sense of ‘though, even though’’. This is used to describe actions of the past. Change the conditional + -உம் in the sentences you made in (2) into verbal participle + -உம் and the future negative of the main verb into past negative. Translate the sentences.

         Ex. நீ சொன்னாலும் நான் போக மாட்டேன்.

               நீ சொல்லியும் நான் போகலை

              Though you told me, I did not go’

 

 

 

4.      You can have a question word inside a conditional clause (as in any subordinate clause). This seeks information about something inside the clause. Translate the sentences below. Note that there is no direct translation in English that matches with the structure of the sentences in Tamil.

  Ex. யார் சொன்னா நீ வருவே?

       ‘Who should tell you for you to come?’

 

1.      யாரை சொன்னா இந்த வேலை நடக்கும்?

 

2.      அவனுக்கு என்ன குடுத்தா இந்த வேலை நடக்கும்?

 

3.      இதை எப்படி சொன்னா அப்பாவுக்கு கோபம் வராது?

 

4.      எந்த கடைக்கு போனா இதை வாங்கலாம்?

 

5.      கடைக்கு எப்ப போனா இதை வாங்கலாம்?

 

5.      The meaning of the sentences in (4) could be expressed in alternative sentences which do not have the question word in the conditional clause. In these sentences  the main clause becomes the infinitive clause. This structure is similar to the one of the English translation.  Make these alternative sentences.

                   Ex. யார் சொன்னா நீ வருவே?

                        நீ வர யார் சொல்லணும்?

 

6.      When –உம் is added to the conditional clause with a question word, the meaning is ‘any or ‘wh—ever’ or ‘no matter wh-‘. Make such a construction out of the sentence in (4). Translate the sentences.

 

  Ex.  யார் சொன்னா நீ வருவே?

          யார் சொன்னாலும் நீ வருவே.

         ‘Whoever tells you, you will come’

 

 

7.  Make verb in the main clause of the sentences you made in (6) into negative. Translate the sentences.

        Ex. யார் சொன்னாலும் நீ வருவே.

        யார் சொன்னாலும் நீ வர மாட்டே

       ‘Whoever tells you, you will not come’

 

 

     

8.      In the sentences below, the condition is positive, i.e., about something happening. Make the conditions negative, i.e., something not happening. This is made by adding –ஆட்டா(ல்) to the infinitive form of the verb of the conditional clause. Change the positive conditional in the sentences below into negative conditional. Translate the sentences you made.

        Ex. குமார் கூட்டத்துக்கு வந்தா நல்லது.

                        குமார் கூட்டத்துக்கு வராட்டா நல்லது.

                       ‘It would be good if Kumar doesn’t come to the meeting’

 

 

  1. நீ வந்தா ராஜா வகுப்புக்கு வருவான்.

 

  1. நீ கூட்டத்துலே பேசுனா எல்லாரும் சந்தோஷப்படுவாங்க.

 

  1. நீ வந்தா ராஜா வகுப்புக்கு வரமாட்டான்.

 

  1. மானேஜருக்கு கோபம் வந்தா ஆபீசுலே வேலை வேகமா நடக்கும். [மானேஜர் ‘manager’]

 

  1. அப்பா பணம் குடுத்தா தம்பி என்ன செய்வான்?

 

 

9.       The participial noun is marked for gender and number. When it is a subject in an equational sentence, it could optionally be marked by the neutral suffix –அது meaning ‘one’. Change the gender-number suffix to this neutral suffix and translate the sentences.

            

                 Ex. நாளைக்கு என்னை பாக்க வர்றவன் ஒன் தம்பியா?

                      நாளைக்கு என்னை பாக்க வர்றது ஒன் தம்பியா?

                      ‘Is the one coming to see me tomorrow is your younger brother?’

 

1.      ஒனக்கு வேலை குடுக்க போறவங்க யார்?

2.      இந்த புஸ்தகத்தை எழுதுனவர் எங்க பேராசிரியர்

3.      இந்த விஷயத்தை எனக்கு மொதல்லே சொன்னவங்க ஒங்க அம்மா

4.      எங்க வகுப்புலே எனக்கு பிடிச்சவ இவதான்

5.      எங்க வீட்டுலே இருக்கிறது கருப்பு பூனை

 

10.  Infinitive of the verb + போ in the present tense expresses intention or prediction having the sense of ‘going to do’. The negative of this is formed by the verbal noun of போ (போறது) + இல்லை. Change the positive sentences below into negative and translate them.

        Ex. நான் தமிழ் படிக்கப் போறேன்

              நான் தமிழ் படிக்கப் போறதில்லை

 

1.      நான் அவளோடே தமிழ்லே பேசப் போறேன்

2.      நீங்க அடுத்த மாசம் இந்தியாவுக்கு போகப் போறீங்களா?

3.      பூனை அந்த பாலை குடிக்கப் போகுது

4.      யார் தமிழ் படிக்கப் போறீங்க?

5.      இந்த வேலை ஒனக்கு கஷ்டமா இருக்கப் போகுது

 

11.  The modal verbs have relative participle form as in the sentences below. Translate them.

                   Ex. இது நீ செய்யக் கூடிய வேலையா?

                        ‘Is this a work that you can do?’

(Note the positive form of கூடாது ‘must not’ is கூடும், but its meaning is ‘may, can’. -லாம் and முடியும் are used in this sense more commonly than கூடும். Its relative participle form (from கூடு) is frozen as கூடிய and it is not the regular form *கூடுன)

 

1.      இது யாரும் செய்யக் கூடிய வேலை

2.      இது யாரும் செய்யக் கூடாத வேலை

3.      இது யாரும் செய்ய வேண்டாத வேலை

4.      இது எல்லாரும் செய்ய வேண்டிய வேலை

5.      இது எல்லாருக்கும் செய்ய முடிஞ்ச வேலை

6.      இது யாருக்கும் செய்ய முடியாத வேலை

 

12.  The infinitive form of the verb could be used as the modal of -ணும் and -ட்டும் in interrogative sentences. Change the modal sentences below with ணும் or -ட்டும் into sentences without them and with the infinitive alone. The sense of seeking agreement (rather than desire) and concurrence (rather than permission) is stronger when the infinitive is used. Translate the sentences you made. Note that it translates as ‘to do’ instead of ‘should do’

          Ex. நான் ஒன் தம்பிக்கு எவ்வளவு பணம் குடுக்கணும்?

               நான் ஒன் தம்பிக்கு எவ்வளவு பணம் குடுக்க?

             ‘How much money shall I give to your younger brother?’

            Or “How much money am I to give to your younger brother?’

 

1.      நான் ஒன் தம்பிக்கு பணம் குடுக்கணுமா?

2.      நான் ஒன்னோடே இந்தியாவுக்கு வரட்டுமா?

3.      நாம நாளைக்கு எங்கே போகணும்?

4.      இதுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியலை

5.      நாளைக்கு என்ன செய்யணும்னு சொல்லு

 

13.  Noun+ஆன makes an adjective (modifier of a noun). உள்ள can be used in place of ஆன and its meaning can be paraphrased as ‘having x’. It can be also used with nouns that do not take ஆன. It is analogous to the use of ‘ful’ in adjectives in English. The negative of உள்ள is இல்லாத ‘not having x’. It is similar in meaning to ‘less’ in adjectives in English. Translate the sentence below that use these noun modifiers or nouns derived from them.

                  Ex. அறிவுள்ள யாரும் இப்படி பேச மாட்டாங்க

                       ‘Anyone having brains will be not talk like this’

 

1.      அறிவில்லாத யாரும் இப்படிதான் பேசுவாங்க [அறிவு ‘intelligence, brains’]

2.      மிருகங்க மேலே அன்புள்ளவங்க நல்லவங்க [மிருகங்க ‘animals’, அன்பு ‘love’]

3.      அழகில்லாத பூ எதுவும் இல்லை [அழகு beauty’, பூ ‘flower’]

4.      இது ஒங்களுக்கு தேவையில்லாத வேலை [தேவை need, necessity’]

5.      பணமில்லாதவங்களுக்கு எல்லாமே கஷ்டம்

6.      பணமுள்ளவங்க எதுவும் செய்யலாம்

 

 

Handouts

 

1.    Words and Phrases using the words of Body Parts 

 

முகம்                       ‘face’          

மூஞ்சி                     ‘face (used derisively)’ substitutes முகம் in verbs and other forms.

 

Nouns

முகபாவம்             ‘facial expression (in life experience)’

முகபாவனை        ‘facial expression (commonly in performance)’                                

முகவெட்டு            ‘facial features (shape of face and organs in it)’

முகவாக்கு             ‘facial features (gestalt view)’

முகதாட்சண்யம்  ‘unwillingness to hurt one’s feelings’

முகராசி                  ‘looks of a person believed to bring good luck’

முகமூடி                  ‘mask’

முகத்திரை             ‘mask (i.e. put-on character), veil

முகப்பூச்சு              ‘paint, powder applied to face, make up

முகவாய்                ‘chin; entrance’

முகவரி                   ‘address’ Also விலாசம்

முகவுரை               ‘introduction to a book’. Also முன்னுரை

முகப்பரு                ‘pimples’

முகப்பு                      elevation of a building, front of something (such as a canopy, book)

முகஸ்துதி             ‘flattery’

(கிழக்கு) முகம்     ‘(eastern etc) direction’ Also பக்கம்

பொய்முகம்             ‘falsified /pretentious character’

 

Verbs

முகம் கோணு   ‘express unhappiness in the face’ Usually in the negative கோணாமல் ‘without grudging’

                                  Also மனம் கோணு

முகம் சுளி  ‘express dislike, disapproval’

முகம் சுண்டு ‘express sorrow, tension

முகம் செத்துப்போ  ‘face fall (in disappointment, in negative exposure)’

முகம் விழு ‘face fall (milder than the above)

முகம் தொங்கு ‘face fall (milder than the above)

முகம் கொடுத்துப் பேசு ‘have a friendly demeanor in speaking, show civility in speaking’

முகம் காட்டு  ‘make a nominal visit, show your face’ Also தலை காட்டு

முகம் காட்டு  ‘show your face, come in front of one, usually in the negative'

முகத்தைத் தொங்கப் போடு ‘make face fall’

முகத்தைத் திருப்பிக்கொள் ‘deliberately ignore, show incivility when someone speaking

முகத்தைத் தூக்கிவைத்துக்கொள் ‘draw a long face’

முகத்தை முறி  ‘snap a relationship’

முகத்தில் விழி  ‘dare show your face, see the face of someone first in the morning’

முகத்தில் விட்டெறி  ‘fling something at someone’s face’

முகத்தில் அசடு வழி  ‘look sheepish’

முகத்தில் கரியைப் பூசு ‘let down someone, humiliate’

 

Other Forms

முகத்தில் அடிக்கிற மாதிரி ‘bluntly, like hitting one’s face’

முகத்துக்கு நேரே ‘to one’s face, directly’

 

 

 

  1. Illustrative sentences with முகம்

 

Nouns

முகபாவம்             ‘facial expression’

அவனுடைய முகபாவத்தை வைத்தே அவன் எதையோ மறைக்கிறான் என்று கண்டுபிடித்துவிட்டேன்.

 

முகபாவனை                    ‘facial expression’       

பரதநாட்டியத்தில் முகபாவனை மிக முக்கியம்.

                       

முகவெட்டு                       ‘facial features’

உனக்கு உன் அம்மாவுடைய முகவெட்டு.

 

முகவாக்கு             ‘facial features’

அவள் கறுப்பாக இருந்தாலும் நல்ல முகவாக்கு

 

முகதாட்சண்யம்     ‘unwillingness to hurt one’s feelings’

என் முகதாட்சண்யத்திற்காக அவர் என் தம்பியை வேலையிலிருந்து நீக்கவில்லை.

 

முகராசி                  ‘looks of a person believed to bring good luck’

உங்கள் முகராசி இன்றைக்குக் கடையில் நல்ல வியாபாரம்

 

முகமூடி                  ‘mask’

அரசியல்வாதிகளின் முகமூடியைக் கிழிக்க வேண்டும்.

இந்தப் படத்தில் ஒரு முகமூடிக் கொள்ளைக்காரன் வருகிறான்.

 

முகத்திரை             ‘mask (i.e. put-on character), veil

நல்லவன் போல் நடித்துக்கொண்டிருந்தவனின் முகத்திரை கிழிந்துவிட்டது.

பெண்கள் முகத்திரை போடும் வழக்கம் போய்விட்டது என்று நினைத்தேன்.

 

முகப்பூச்சு              ‘paint, powder applied to face, make up

முகப்பூச்சு இல்லாமல் அவள் வீட்டு வாசலுக்குக் கூட போகமாட்டாள்.

 

முகவாய்                ‘chin; entrance’

அவன் என் முகவாயைப் பிடித்துக் கெஞ்சினான்.

பந்தலின் முகவாயை / முகப்பை நன்றாக அலங்கரித்திருந்தார்கள்.

 

முகவரி                               ‘address’ Also விலாசம்

எனக்கு உன்னுடைய முகவரி தெரியாது.

 

முகவுரை               ‘introduction to a book’. Also முன்னுரை

இந்தப் புத்தகத்தின் முகவுரையே நன்றாக இருக்கிறது.

 

முகப்பரு                ‘pimples’

மஞ்சள் தடவிக் குளித்தால் முகப்பரு போய்விடும்.

 

முகப்பு                                 elevation of a building, front of something (such as a canopy, book)

வீட்டின் முகப்பு எடுப்பாக இருக்கிறது.

 

முகஸ்துதி             ‘flattery’

முகஸ்துதிக்கு மயங்காதவர்கள் குறைவு.

 

(கிழக்கு) முகம்     ‘(eastern etc) direction’ Also பக்கம்

வீடு கிழக்கு முகம் பார்க்க வேண்டும்.

 

பொய்முகம்                       ‘falsified /pretentious character’

அவனிடம் எது பொய்முகம், எது நிஜமுகம் என்று கண்டுபிடிப்பது கஷ்டம்.

 

Verbs

முகம் கோணு   ‘express unhappiness in the face’ Usually in the negative கோணாமல் without grudging’

அவன் என்ன வேலை சொன்னாலும் முகம் கோணாமல் செய்வான்.

முகம் கோணாமல் பேசுவதில் இவன் கெட்டிக்காரன்

 

முகம் சுளி   ‘express dislike, disapproval’

ஊருக்குப் போ என்றதும் அவன் முகத்தைச் சுளித்தான்.

 

முகம் சுண்டு    ‘express sorrow, disappointment’

வேலை இல்லை என்றதும் அவனுக்கு முகம் சுண்டிப்போயிற்று.

 

முகம் செத்துப்போ  ‘face fall (in disappointment, in shock)’

அவனுடைய பொய்யைக் கண்டுபிடித்ததும் அவனுடைய முகம் செத்துப்போயிற்று.

 

முகம் விழு   ‘face fall (milder than the above)

வீட்டுக்காரன் வாடகை கேட்டுத் திட்டியதும் அவன் முகம் விழுந்துவிட்டது.

 

முகம் தொங்கு    ‘face fall (milder than the above)

புடவை வாங்கப் பணம் இல்லை என்றதும் அவள் முகம் தொங்கிப்போய்விட்டது.

 

முகம் கொடுத்துப் பேசு ‘have a friendly demeanor in speaking, show civility in speaking’

இப்போதெல்லாம் அவன் என்னோடு முகம் கொடுத்துப் பேசுவதில்லை.

 

முகம் காட்டு   ‘make a nominal visit, show your face’ Also தலை காட்டு

கல்யாணத்தில் முகத்தைக் காட்டிவிட்டு வந்துவிடுகிறேன்; போகவில்லை என்றால் கோபித்துக்கொள்வான்.

 

முகம் காட்டு   ‘show you face, come in front of one. Usually in the negative

என்னிடம் இனிமேல் உன் முகத்தைக் காட்டாதே; நான் உன்னோடு பேசவே மாட்டேன்.

 

முகத்தை வெட்டு    ‘show disapproval, disagreement in face (when leaving)’

அவளைக் குறை சொன்னதும் முகத்தை வெட்டிக்கொண்டு போய்விட்டாள்.

 

முகத்தைத் தொங்கப் போடு ‘make face fall’

நீ ஊருக்கு வர வேண்டாம் என்றதிலிருந்து அவள் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.

 

முகத்தைத் திருப்பிக்கொள் ‘deliberately ignore, show incivility when someone speaking’

அவன் தப்பைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

 

முகத்தைத் தூக்கிவைத்துக்கொள் ‘draw a long face’

இதைச் சொன்னதற்கா முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டிருக்கிறாய்?

 

முகத்தை முறி    ‘snap a relationship’

அவனைக் கண்டிக்க ஆரம்பித்ததும் முகத்தை முறித்துக்கொண்டு போய்விட்டான்.

 

முகத்தில் விழி    ‘dare show your face, see the face of someone first in the morning’

இவ்வளவு நடந்த பிறகு என் முகத்தில் விழிக்காதே (முழிக்காதே)

 

முகத்தில் விட்டெறி  ‘fling something at someone’s face’

ஆசிரியர் கோபத்தில் என் புத்தகத்தை என் முகத்தில் விட்டெறிந்தார்.

இவ்வளவு சொன்ன பிறகு அவன் கொடுத்த பரிசை அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டு வா.

 

முகத்தில் அசடு வழி  ‘look sheepish’

தன்னிடம் பணம் இல்லை என்று தெரிந்ததும் அவன் முகத்தில் அசடு வழிந்தது.

 

முகத்திக் கரியைப் பூசு ‘let down someone, humiliate’

பரீட்சையில் தோற்றுப்போய் என் முகத்தில் கரியைப் பூசிவிட்டாயேடா!

 

Other Forms

முகத்தில் அடிக்கிற மாதிரி ‘bluntly, like hitting one’s face’

அவன் யாருக்கும் பயப்படமாட்டான்; முகத்தில் அடிக்கிற மாதிரி கேட்டுவிடுவான்.

 

முகத்துக்கு நேரே  ‘to one’s face, directly’

அவன் எதற்கும் கூச்சப்படுவான்; எதையும் முகத்துக்கு நேரே சொல்ல மாட்டான்.

 

Practice understanding these sentences through their translations.

Note: The above sentences are spelled as in formal style.