25. போய்ட்டு வர்றேன்

உரையாடல்  25                           போய்ட்டு வர்றேன்

 

 

ராஜா  -  வாங்க, வாங்க.  நீங்க வர்றதுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கோம்.

         சாப்பாடெல்லாம் அப்பவே தயார் ஆயிடுச்சு. 

 

ஜிம்   -  நான் சரியான நேரத்துக்கு வந்துட்டனே!

 

ராஜா  -  நான் சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்.  சாப்பாடு போட

         சொல்லட்டுமா?

 

ஜிம்   -  ஒங்க இஷ்டம்.  இப்போ சாப்பிடுறதுன்னாலும் சாப்பிடுவோம்; இல்லை,

         கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுவோம்னாலும் சரி.  எனக்கு எல்லாம்

         ஒண்ணுதான்.

 

ராஜா  -  அப்படின்னா சாப்பிட ஆரம்பிக்க வேண்டியதுதான்.  ராணி, எலை

         போட்டு சாப்பாடு எடுத்து வை.  நாங்க கை கழுவிக்கிட்டு

         வர்றோம்.

 

ஜிம்   -  இண்ணைக்கு நெஜமாவே பெரிய விருந்துதான் போல.  ஏற்பாடெல்லாம்

         தடபுடலா இருக்கே.

 

ராஜா  -  சாப்பிட்டுட்டு பெறகு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

 

ஜிம்   -  ராணியோட சமையல்ன்னா கேக்க வேண்டியதில்லை.  எல்லாம் பிரமாதமா

         இருக்கு.  எனக்கு வயித்துலேதான் எடம் இல்லை சாப்பிடுறதுக்கு.

 

ராஜா  - (ராணிகிட்டே) தமிழ்நாடுன்னா  இவ்வளவு பிடிக்குதே, இன்னும் கொஞ்ச

         நாள் இருந்துட்டு போங்கன்னா கேக்க மாட்டேங்கிறார்.

 

ராணி  -  அவங்களோட ஊருக்கு போகணும், ஆளுகளை பாக்கணும்னு அவருக்கு

         ஆசை இருக்காதா?  நீங்க இதையெல்லாம் விட்டுட்டு எங்கேயாவது

         போய் வருஷக் கணக்குலே இருப்பீங்களாக்கும்.

 

ராஜா  -  நானாவது போறதாவது!  இட்லி, தோசை இல்லாம என்னாலே ஒரு

         வாரம் கூட இருக்க முடியாதே.

 

இளங்கோ  -  நான் இருப்பேன்’ப்பா.  நான் ஜிம் சித்தப்பாவோடே

         அமெரிக்காவுக்கு போகட்டுமா’ப்பா?

 

ராஜா  -  படிச்சு பெரியவனான பெறகு நீயா போ.

 

இளங்கோ  -  சரி’ப்பா.  இப்போருந்தே நல்லா படிக்கிறேன்.

 

ராஜா  -  ஜிம், சாப்பிட்டு முடிச்சதும் இவனுக்கு பள்ளிக்கூடத்துலே டீச்சர் சொல்லி

         குடுத்த கதைகளை கேக்கிறீங்களா?  அழகா சொல்லுவான்.

 

ஜிம்   -  ஓ! எனக்கு தெரியுமே இளங்கோ கெட்டிக்காரன்னு.  ஒனக்கு தெரிஞ்ச

         எல்லா கதையையும் எனக்கு சொல்லணும், என்ன?

 

இளங்கோ  -  ஓ, எனக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்றேன்.

Credit: wikitravel

Credit: Wikimedia

 

 

Glossary

காத்துரு                           காத்திரு                                               ‘wait’

சாப்பாடு                                                                                            ‘meals, food’

தயார் ஆகு (ஆக)                                                                          ‘become ready’

வெளையாட்டு             விளையாட்டு                                     ‘fun, game’

ஆரம்பி (ஆரம்பிக்க)  /துவங்கு                                                ‘begin’

ராணி                                                                                                 ‘a name, Raja’s wife’

எலை                                 இலை                                                 ‘leaf’, here ‘banana leaf’

எடுத்து வை (வைக்க)                                                               ‘serve (food)’

கழுவு (கழுவ)                                                                             ‘wash (hands, pots)

நெஜம்                                                                                            ‘true thing’

விருந்து                                                                                        ‘feast’

தடபுடல்                                                                                       ‘out of ordinary, pomp’

சமையல்                                                                                     ‘cooking’

பிரமாதம்                                                                                     ‘superb’

வயிறு                                                                                           ‘stomach’

வருஷக் கணக்குலே   -கணக்கில்                                    ‘for years together’

இளங்கோ                                                                                  ‘a name, son of Raja’

‘ப்பா                                      அப்பா                                           ‘dad (a term of address)’

சித்தப்பா                             சிற்றப்பா                                   ‘paternal uncle (younger)’

டீச்சர்                                                                                         ‘(female) teacher’

 

Related words

வெளையாடு (வெளையாட)விளையாடு             ‘play tricks on, play’

ஆரம்பம்                              / துவக்கம்                          ‘beginning’

பரிமாறு (பரிமாற)                                                           ‘serve (food)’

அலசு (அலச)                                                                    ‘rinse (clothes)

சமை (சமைக்க)                                                   ‘cook’

அற்புதம்                                                                  ‘marvel’

ஆசிரியர்                                                                 ‘teacher (usually a male)’

 

Alternative forms

 

கதைகளை      கதையெல்லாம்

 

Alternative spellings

 

வந்துட்டனே  வந்துட்டேனே

 

 

Exercises

 

1.  The ‘conditional’ form of ன்னு, which is ன்னா, is used to mention a word, phrase or sentence. Literally it means ‘if you say’. When it is within a question, it is usually to ask for the meaning of the word, phrase or sentence that is mentioned. The meaning in ‘what do you mean by’ includes both the referential meaning and personal intension relating to action as in ‘what do you mean?’

How will you say the following in English? Use the word itself that is mentioned, whether it is Tamil or English?

    Ex.'மாட்டேன்'னா என்ன அர்த்தம்?

    'What is the meaning of the word 'மாட்டேன்'?

    ‘What do you mean by saying 'மாட்டேன் ‘I will not’’?

 

  1. ‘படி’ன்னா என்ன?

 

  1. ‘படி’ன்னா ‘வாசி’.

 

  1. ‘படி’ன்னா ‘வாசி’ன்னு ஒரு அர்த்தம்.

 

      4.      ‘படி’ன்னா மூணு அர்த்தம் இருக்கு.

 

  1. ‘பொதுநலம்’ன்னா புரியுதா? [பொதுநலம் 'public good']

 

       6.      ‘வறுமை’ன்னா என்னன்னு ஒனக்கு தெரியுமா? [வறுமை 'poverty']

 

  1. ‘கோடி’ன்னா எவ்வளவுன்னு தெரியுமா?  [கோடி '100 million']

 

  1. ‘சுயமரியாதை’ன்னா என்னன்னு அவனுக்கு புரியலை. [சுயமரியாதை 'self-respect']

 

  1. ‘முடியாது’ன்னா என்ன அர்த்தம்?

 

  1. ‘எனக்கு அவளை பிடிக்குது’ன்னா என்ன அர்த்தம்?

 

2.   The conditional form -ன்னா can be added to a word or a phrase to foreground that word or phrase to make to the focus or topic of the sentence. The foregrounding translates in English as ‘as for x‘ or ‘talking of x‘. This word or phrase with -ன்னா is commonly, but not necessarily, moved to the beginning of the sentence. Make the underlined word in the sentences below focused using -ன்னா.  Translate the sentences you made.

(Note: When the predicate is about some emotion anger, passion, fear etc. (sentences 8-10), the case maker is dropped before –ன்னா. The foregrounded word or phrase with -ன்னா may not be a constituent of the sentence and be outside it (sentences 11,12). That is, sentences may not have a counterpart without -ன்னா (sentences 1-10).

               Ex. எனக்கு தோசை ரொம்ப பிடிக்கும்.

                  தோசைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

                  ‘As for dose, I like it very much’.

 

 

  1. நான் தமிழ்ப்படம் ரெண்டு தடவையாவது பாப்பேன்.

 

  1. எனக்கு என் தங்கச்சி ரொம்ப பிடிக்கும்.

 

  1. நான் என் தங்கச்சிக்கு எதுவும் செய்வேன்.

 

  1. நான் ஒன்னோட சினிமாவுக்கு வர்றேன்.

 

  1. அப்பா இப்படித்தான் இருப்பார்.

 

  1. நீ சொல்றதை எல்லாரும் கேப்பாங்க.

 

  1. அப்பா என்மேலே எதையும் எறிவார் [எறி ‘throw at’] .

 

  1. அப்பாவுக்கு என்மேலே ரொம்ப கோபம் வரும்.

 

  1. அவனுக்கு தங்கச்சிமேலே அவ்வளவு ஆசை.

 

  1. அப்பாவுக்கு பாம்புக்கு ரொம்ப பயம். [பாம்பு ‘snake’]

 

  1. சாப்பாடுன்னா இதுதான் சாப்பாடு. [சாப்பாடு ‘meals’]

 

  1. அழகுன்னா அவ அப்படி ஒரு அழகு. [அழகு ‘beauty’]

 

 

3.  You can specially mark a word, by adding -ன்னு to that word. This often translates as ‘specially or exclusively’; it is also used to mean ‘called’. In this meaning -ன்னு is obligatory. Translate the sentences below. Give also the meaning these sentences without -ன்னு. The last two sentences (where -ன்னு is translated as ‘called’) do not have parallel sentences without -ன்னு.

 

      Ex. ஒனக்குன்னு ஒரு கார் இல்லையா? ‘Don’t you have car specially /   just for you?’

                           ஒனக்கு ஒரு கார் இல்லையா?  ‘Don’t you have a car?’

 

 

1.  எனக்குன்னு ஒரு அறை வேணும்.

 

2.  அந்த கம்பெனிலே நம்ம தம்பிக்குன்னு ஒரு வேலை வைச்சிருக்காங்க.   

 

                  3.  நான் யாருக்குன்னு இதை குடுப்பேன்?

 

                  4.  நான் எங்கேன்னு போவேன்?

 

                 5.  எனக்குன்னு இந்த ஒலகத்துலே யாரும் இல்லை. [ஒலகம் 'world']

 

                 6.  நீ சொன்னது தப்புன்னு இல்லை.

 

                7.  இண்ணைக்குன்னு ஒரு வேலை வந்துருச்சு.

 

               8. எனக்கு தம்பின்னு ஒருத்தன் இருக்கான்.

 

               9. தமிழ்நாட்டுலே கங்கைகொண்டசோழபுரம்னு ஒரு ஊர் இருக்கு.

 

              10. நமக்குள்ளே அப்பான்னு ஒரு ஒறவு இருக்குலே? [ஒறவு ‘relationship’]

 

 

4.   வேணும்னா (commonly abbreviated to வேண்ணா in pronunciation) added in the beginning or middle of a sentence gives the meaning ‘if you wish’ or ‘if it is desired’. It gives an option to the listener to say ‘no’. Translate the sentences below.

    Ex. வேணும்னா நான் ஒன்னோடே கடைக்கு வர்றேன்

        'I will come to the store with you, if you wish’

 

1.      வேணும்னா, நீ தமிழ் படி

2.      ஒன் தம்பி வேணும்னா எங்க வீட்டுலே இருக்கட்டும்

3.      நீங்க வேணும்னா தூங்குங்க; நாங்க டிவி பாக்குறோம்

4.      நாம சினிமாவுக்கு வேணும்னா போவோம்

5.      நாளைக்கு வேணும்னா இந்த பாடத்தை திரும்ப படிப்போம்

 

 

            5. Interrogative pronoun + -உம் gives the meaning ‘any’. When the conditional    

               form -(ன்)னா(ல்) with -உம் is added to the interrogative pronoun (-(ன்)னாலும்),   

              the meaning is ‘wh – ever’. That is, a fully open ended meaning of ‘any’.  

              Ex. நீ எங்கேயும் போ

              நீ எங்கேனாலும் போ

              ‘Go wherever (you want)’

 

1.      நீ எங்க வீட்டுக்கு எப்பவும் வரலாம்

2.      நாம அவன்கிட்டே எதையும் சொல்லலாம்

3.      அவனுக்கு யார் மேலேயும் கோபம் வரும்

4.      இந்த கதை எப்படியும் முடியலாம் [முடி ‘end’]

5.      அவன் பணத்துக்காக என்ன பொய்யும் சொல்லுவான் [பொய் ‘lie’]

 

6.  வேணும்னாலும் could be used instead of -ன்னாலும் with the interrogative pronoun. In that case, the sense of ‘one wishes or wants’ is pronounced. Use வேணும்னாலும் in the sentences you made in (5) and translate.

       Ex. நீ எங்கேனாலும் போ

            நீ எங்கே வேணும்னாலும் போ

            'Go wherever you want to’

 

7.      -ன்னு marks a quoted sentence. The quoted sentence is reproduced as it was said with no modification. This is called direct speech. Translates the sentences below which quote the speech directly.

       Ex. நீ தமிழ் படின்னு மேரியை சொன்னேன்

             ‘I told Mary “you study Tamil”

 

1.      மேரி தமிழ் படிக்கட்டும்னு பேராசிரியர்கிட்டே சொன்னேன்

2.      நீ தமிழ் படிக்கிறியான்னு மேரியை நான் கேட்டேன்

3.      ஆப்பிள் வெலை என்னன்னு கடைக்காரர்கிட்டே கேக்கணும்

4.      தீ, தீன்னு எல்லாரும் கத்துனாங்க [தீ ‘fire’, கத்து ‘shout’]

5.      நான்தான் வகுப்புலே மொதல்னு குமார் எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டுருக்கான்

 

8.   You can quote a speech indirectly by changing the personal pronoun appropriately. The tense is not changed to agree with the tense of the verb of the main clause. Translate the sentences below.

       Ex. மேரியை தமிழ் படின்னு சொன்னேன்

             ‘I told Mary that she should study Tamil’                                                

 

  1. மேரியை தமிழ் படிக்கிறாளான்னு கேட்டேன

  2. நான் குமார்கிட்டே அவனுக்கு என்ன வேணும்னு கேட்டேன்  [அவனுக்கு refers to குமார்

  3. ஒனக்கு மாம்பழம் பிடிக்கும்னு குமார் என்கிட்டே சொன்னான் [ஒனக்கு refers to the listener]

                   4. நான்தான் வகுப்புலே மொதல்னு குமார் எல்லார்கிட்டேயும்   சொல்லிக்கிட்டுருக்கான் [நான் refers to the speaker]

                   5. தான்தான் வகுப்புலே மொதல்னு குமார் எல்லார்கிட்டேயும்   சொல்லிக்கிட்டுருக்கான் [தான் refers குமார்]

 

 

9.   -ன்னு is used with sentences that are not quoted directly or indirectly. It simply embeds a full sentence into another. The verbal participle -ன்னு could relate both sentences causally as well. Translate the sentences below.

                       Ex. நாளைக்கு பரிச்சை இருக்குன்னு எனக்கு பயமா இருக்கு

             ‘I am scared that the exam is tomorrow’

 

                1. ஒனக்கு வேலை கெடைக்கலையேன்னு கவலையா இருக்கா?

2. அம்மா நாளைக்கு வர்றாங்கன்னு நெறைய காய்கறி வாங்கிருக்கேன் [காய்கறி   ‘vegetables']

3. மழை வரப் போகுதுன்னு கொடையை வெளியே எடுத்துவைச்சேன் [கொடை ‘umbrella’]

                4. ஊருக்கு போக வேணும்னு பாங்க்லேருந்து பணம் எடுத்தேன் [பாங்க் ‘bank’]

               5. அவன்கிட்டே இதை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை

 

10.   -ன்னு, the verbal participle of the verb (எ)ன் ‘say’, can be used in the sense of ‘thinking’. It can be interpreted to indicate cause implicitly. Translate the sentences below.

               Ex. மழை வரும்னு நான் வெளியே போகலை

                    ‘I didn’t go out thinking it would rain’

                     Or ‘I didn’t go out as I thought it would rain’

 

1.      அப்பாவுக்கு பிடிக்காதுன்னு நான் சினிமாவுக்கு போகலை

2.      நீ வருவேன்னு நான் அந்த கூட்டத்துக்கு போனேன்

3.      நீ பொய் சொன்னேன்னு அப்பா கோபமா இருக்கார்

4.      ஒனக்கு வேலை கெடைச்சிருச்சுன்னு அம்மா சந்தோஷமா இருக்காங்க

5.      கடைசி பிள்ளைன்னு என் தங்கச்சிக்கு அம்மா ரொம்ப செல்லம் குடுக்கிறாங்க [பிள்ளை 'child’, செல்லம் குடு ‘pamper’]

 

 

11.  You can use (எ)ன் as a verb in the meaning of ‘say’ instead of சொல் ‘say’. It is a weak verb and it conjugates like the verb தின்(னு) ‘eat’.  Change –ன்னு சொல் to (எ)ன் in the sentences below and translate.

       Ex. இண்ணைக்கு மழை பெய்யும்னு சொன்னாங்க

             இண்ணைக்கு மழை பெய்யும்னாங்க.

 

1. பேராசிரியர் இண்ணைக்கு சீக்கிரம் வகுப்புக்கு வாங்கன்னு சொன்னார்

2. அவ எதுக்கும் அமெரிக்காவுலே இப்படி நடக்காதுன்னு சொல்லுவா

3. நான் இப்படி சொன்னது தப்புன்னு சொல்றியா?

4. நீ யாரையும் ஒண்ணும் தெரியாதவங்கன்னு சொல்லலாமா?

5. ஒன்னாலே இவன் எல்லாரையும் விட கெட்டிக்காரன்னு சொல்ல முடியுமா?

 

 12. There is an alternative sentence for reports, which uses -ஆ instead of -ன்னு, but the verb of the reported sentence is in the nominal form.

    It is always  indirectly reported speech.

 

    Embed the sentence நான் தமிழ் படிக்கிறேன் using –ஆ in the blank space of  the sentences below. Translate the sentences.

    Ex. நான் ------------------- சொன்னேன்

          நான் தமிழ் படிக்கிறதா சொன்னேன்

          ‘I said that I was studying Tamil’

 

1.      நீ ------------------------------------- சொன்னே.

2.      நீங்க -------------------------------- சொல்றீங்க.

3.      நாங்க ------------------------------ சொன்னோம்.

4.      யார் ---------------------------------- சொல்றாங்க?

5.       ராஜா ------------------------------- சொல்லுவான்.

 

  1. A sentence with -ன்னு may have the main verb பார் ‘see’. This means ‘consider doing or consider the fact’ Translate the sentences below. Note that the verbs நெனை 'think’ and யோசி ‘think about’ can be used in place of பார் with slightly different meanings.

 

  1.  Ex. நான் அடுத்த மாசம் இந்தியாவுக்கு போகலாம்னு பாக்குறேன்

     ‘I am considering going to India next month’

     என்னை பத்தி பொய் சொன்னவன் ஒன் தம்பி ஆச்சேன்னு பாக்குறேன்

     'I consider the fact that the one who told lies about me is your  younger brother’

 

1. நான் போன வருஷமே இந்தியாவுக்கு போகலாம்னு பாத்தேன்

2. அவன் யார் யோசனை சொல்றாங்கன்னு பாக்கமாட்டான்

3. எங்க மாமா ஒன் காரை வாங்கலாம்னு பாக்குறார்

4. என் தம்பி நீ அவனோடே நாலு வருஷம் படிச்சியேன்னு பாக்குறான்

5. அவன் ஒன்கூட பெறந்தவனேன்னு நீ பாக்க வேண்டாம் [பெற ' be born’]

 

14. A sentence with –ன்னு may have the main verb இரு ‘be’ in place of பார். But the tense of the verb of the embedded sentence cannot be past or present. This means ‘be at the verge of executing’. It translates as 'have the plan of or plan’. Translate the sentences below.

   Ex. நான் அடுத்த மாசம் இந்தியாவுக்கு போகலாம்னு இருக்கேன்

        ‘I have the plan of going to India next month’

 

1. நான் போன வருஷமே இந்தியாவுக்கு போகலாம்னு இருந்தேன்

                2. நான் அடுத்த மாசம் இந்தியாவுக்கு போகலாமான்னு இருக்கேன்

                3. எங்க மாமா ஒன் காரை வாங்கலாம்னு இருக்கார்

                4. சாப்பிட்டுட்டு சினிமா பாப்போம்னு இருக்கோம்

               5. ஒங்க வீட்டுக்கு ஒரு நாள் வரணும்னு இருக்கோம்

 

  1. The sentences like the ones in (14) may have இரு in neuter ending and a dative noun as its ‘subject’. This means ‘have the expectation /desire of something happening’. It translates as ‘feel like or hope’. It is semantically similar to போல இரு in the neuter, but both can occur in the same sentence. Translate the sentences below.

     Ex. எனக்கு குமார் நாளைக்கு எப்படியும் வருவான்னு இருக்கு

         'I have a feeling that that Kumar will come tomorrow anyhow’

 

1. ஒனக்கு குமார் நாளைக்கு எப்படியும் வருவான்னு இருக்கா?

2. ஒனக்கு இந்த வேலை கெடைக்காதுன்னு ஒவ்வொரு சமயம் எனக்கு இருக்கும்

3. அவளுக்கு குமார் நாளைக்கு வர மாட்டான்னு இருக்கு போல இருக்கு

4. எங்களுக்கு நாங்கதான் இதுலே ஜெயிப்போம்னு இருந்துது

5. யாருக்கு இப்பவே இந்தியாவுக்கு போகணும்னு இருக்கு?

 

  1.  தோணு ‘appear’ or படு ‘occur’ can be used in place of இரு in sentences like the ones in (15). They translate as ‘it appears to x’ or ‘it occurs to x’. Substitute தோணு for இரு in the sentences 1,2,3 in (15) and படு for இரு in the sentences 4,5 in (15). Note that the neuter past tense verbs of தோணு is தோணுச்சு and of படு is பட்டுது or பட்டுச்சு. Translate the sentences you made.

    Ex. எனக்கு குமார் நாளைக்கு எப்படியும் வருவான்னு தோணுது

        ‘It appears to me that Kumar will come tomorrow anyhow’

       எனக்கு குமார் நாளைக்கு எப்படியும் வருவான்னு படுது

        ‘It occurs to me that Kumar will come tomorrow somehow’

 

 

 

Handouts

 

1.Words that express feelings

 

Nouns

அன்பு 'love, kindness', கோபம் 'anger', வெறுப்பு 'hatred', எரிச்சல் 'irritation', பிரியம் 'liking', endearment', சோகம் 'sorrow', வருத்தம் 'regret', சந்தோஷம் 'happiness', ஆசை 'desire', பாசம் 'affection', துக்கம் 'grief', பயம் 'fear', இரக்கம் 'sympathy, pity', கவலை 'worry', பெருமை 'pride', ஆத்திரம் 'anger (out of frustration)', பொறுமை 'patience', பொறாமை 'jealousy', சங்கடம் 'embarrassment', இன்பம் 'pleasure', மகிழ்ச்சி 'happiness', சந்தேகம் 'suspicion', அருவருப்பு 'disgust', ஆச்சரியம் 'surprise', பீதி 'panic', அவமானம் 'shame', காதல் 'love (between a man and a woman)'

 

Verbs.

They are derived from the nouns above using light verbs. The verbalizer அடை is used only on Formal Tamil.

 

அன்பு வை, கோபப்படு, கோபம் அடை, வெறுப்படை, எரிச்சல் படு, பிரியப்படு, சோகப்படு, சோகம் அடை, சந்தோஷப்படு, சந்தோஷம் அடை, ஆசைப்படு, பாசம் வை, துக்கப்படு, துக்கம் அடை, பயப்படு, இரக்கப்படு, கவலைப்படு, கவலை அடை, பெருமைப்படு, பெருமை அடை, ஆத்திரப்படு, ஆத்திரம் அடை, பொறுமை காட்டு, பொறாமைப்படு, சங்கடப்படு, இன்பம் அடை, மகிழ்ச்சி அடை, சந்தேகப்படு, அருவருப்புப்படு, அருவருப்பு அடை, ஆச்சரியப்படு, ஆச்சரியம் அடை, பீதி அடை, அவமானப்படு, அவமானம் அடை, காதல் பண்ணு

 

Sentences

The nouns take the accusative case ஐ plus பாத்து 'looking at') or just the accusative case, the locative case கிட்டே (இடம் formal Tamil), மேலே மேல் or மீது in formal Tamil)), the dative case -க்கு or the post position பத்தி 'about' (பற்றி in formal Tamil)). You will know in practice which verb of feeling is used with which case form of the noun.

 

a. அம்மா என்னைப் பார்த்து சந்தோஷப்பட்டார்

b. எல்லாரும் என்னை சந்தேகப்படுகிறார்கள்

c. அம்மா என்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்

d. நாம் எல்லா உயிர்களிடமும் இரக்கப்பட வேண்டும்

e. அப்பா என்னைப் பற்றிக் கவலைப்படுகிறார்

f. என் தம்பி பணத்துக்கு ஆசைப்பட்டான்

 

When the verb is simple, the accusative case is common. This will be the case when the verb is causative, which is formed by adding படுத்து to the noun.

a. நான் உயிர்களிடம் அன்பு காட்டாதவர்களை வெறுக்கிறேன்

b. ராஜா தன்னோடு படிக்கும் மாலாவைக் காதலிக்கிறான்

c. அப்பா நன்றாகப் படிக்காததற்கு என்னைக் கோபித்தார்

d. நான் நன்றாகப் படித்து அப்பாவை சந்தோஷப்படுத்துவேன்

e. நீ நேற்று இரவில் செய்ததைச் சொல்லி அப்பாவை சங்கடப்படுத்தாதே

 

Another way of making a verbal expression with the nouns of feeling is to add -ஆக இரு to them. e.g. அன்பாக இரு. Some of these expressions ( given in A) have nominative in the subject position (நான் அன்பாக இருந்தேன் 'I was kind'); some ( given in B) have dative in the subject position (எனக்கு எரிச்சலாக இருந்தது 'I was irritated'); some (given in C) have both (நான் கோபமாக இருந்தேன், எனக்குக் கோபமாக இருந்தது 'I was angry').

A. அன்பு, பிரியம், பாசம், பொறுமை, காதல்

B. வெறுப்பு, எரிச்சல், ஆசை, துக்கம், பயம், இரக்கம், ஆத்திரம், சங்கடம், சந்தேகம்

C. கோபம், சோகம், வருத்தம், சந்தோஷம், கவலை, பெருமை, மகிழ்ச்சி, இன்பம்

 

When the subject is in the dative the sentence may be without the verb இரு to suggest that the feeling is not specific to any time.

 

a. வேலை செய்யவில்லை என்று அப்பாவுக்கு என் மீது கோபம்

b. நான் சண்டைபோட மாட்டேன் என்று அம்மாவுக்கு என்னிடம் பிரியம்

c. பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி எங்களுக்கு ஒரு சந்தேகம்

d. அமெரிக்காவில் படிக்க எனக்கு ஆசை

e. இரவில் வெளியே போக எங்களுக்கு பயம் இல்லை

 

When the sentence is not about being in a state of feeling but about getting into a state, the verb வா is used.

 

a. அப்பாவுக்கு எதற்கும் கோபம் வருகிறது

b. எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் வருகிறது

c. இந்தப் பாட்டைக் கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சி வருகிறது

d. அவளைப் பார்த்தாலே எல்லாருக்கும் எரிச்சல் வரும்

e. அவன் பேசினதைக் கேட்டு எங்களுக்கு அருவருப்பு வந்தது

 

Practice translating the above sentences.

Note: The above sentences are spelled as in formal style.

 

 

2.Expressing feelings

 

In expressing feelings, the Tamil sentence will match the English one some times, and will not some times. What is an awkward construction in English given in parentheses may be close to the Tamil way of saying.

 

  1. I love everyone (I place love on everyone; I have love for everyone)

 

 

  1. Mother got angry at me for coming home late (Seeing my coming home late, my mother showed anger / became angry)

 

 

  1. I hate those who cheat (If I see those who cheat, hatred would fill me)

 

 

  1. I like my little brother very much (If it is my younger brother, I like him very much)

 

 

  1. I don’t fear anything (I don’t fear for anything,  I don’t have fear for anything)

 

 

  1. I have sympathy for animals (I express sympathy on animals; I get sympathy if I see animals)

 

 

  1. I am proud that my younger sister joined Yale ( I am proud about my younger sister joining Yale, I have pride in my younger sister joining Yale)

 

 

  1. I don’t get jealous about anyone (I won’t be jealous by seeing anyone, I won’t get

jealousy by seeing anyone)

 

 

  1. I was surprised at his coming so early (I was surprised seeing his coming so early;  

I got a surprise seeing his coming so early.

 

 

  1. I was disgraced by her (I experienced disgrace from(with) / by her; I got disgrace due to her)

Pratice saying the sentences in Tamil that express the meanings given in the sentences in English given above.

 

3. Finite Verb Forms- time, contours of time and speaker attitude

The following is a set of forms of the finite verb to indicate the time of occurrence, nature of occurrence such as habitual and probability, contours of time such as durative and speaker attitude of an action such as affecting self. The sentences in colloquial Tamil are given first and the sentences in formal Tamil are given second.

1. நான் சாப்பிடுறேன்
    நான் சாப்பிடுகிறேன்
    ‘I am eating’

2. நான் நாளைக்கு தோசை சாப்பிடுறேன் / சாப்பிடுவேன்
    நான் நாளைக்கு தோசை சாப்பிடுகிறேன் / சாப்பிடுவேன்
    ‘I am eating / will eat dose tomorrow’

3. நான் தெனம் காலைலே தோசை சாப்பிடுறேன் / சாப்பிடுவேன்
    நான் தினம் காலையில் தோசை சாப்பிடுகிறேன் / சாப்பிடுவேன்
    ‘I eat dose in the morning everyday’
    (The present tense is used when the habitual action is stated as recurring and
    the future tense is used when the habitual action is stated as customary)

4. நான் தோசை சாப்பிடப் போறேன்
    நான் தோசை சாப்பிடப் போகிறேன்
    ‘I am going to eat dose’

5. நான் தோசை சாப்பிடப் போனேன்
    நான் தோசை சாப்பிடப் போனேன்
    ‘I was going to / about to eat dose’

6. நான் தோசையை சாப்பிடப் பாத்தேன் / பாப்பேன் / பாக்கிறேன்
    நான் தோசையை சாப்பிடப் பார்த்தேன் /பார்ப்பேன் / பார்க்கிறேன்
    ‘I tried / will try / am trying to eat the dose’
    (The past tense form also has the non-volitional sense of ‘was about to’)

7. நான் தோசை சாப்பிட்டேன்
    நான் தோசை சாப்பிட்டேன்
    ‘I ate dose’

8. நான் நாலு தோசை சாப்பிட்டுட்டேன் / சாப்பிட்டுடுவேன் / சாப்பிட்டுடுறேன்
    நான் நான்கு தோசை சாப்பிட்டுவிட்டேன் / சாப்பிட்டுவிடுவேன் /சாப்பிட்டுவிடுகிறேன்
    ‘I ate / will eat / demonstrate eating up four doses’

9. நான் தோசை சாப்பிட்டுருந்தேன் / சாப்பிட்டுருப்பேன் / சாப்பிட்டுருக்கேன்
    நான் தோசை சாப்பிட்டிருந்தேன் / சாப்பிட்டிருப்பேன் / சாப்பிட்டிருக்கிறேன்
    ‘I had / will or would have / have eaten dose’

10. நான் நாலு தோசை சாப்பிட்டுக்கிட்டேன் / சாப்பிட்டுக்கிடுவேன் / சாப்பிட்டுக்கிடுறேன்
      நான் நான்கு தோசை சாப்பிட்டுக்கொண்டேன் / சாப்பிட்டுக்கொள்வேன் / சாப்பிட்டுக்கொள்கிறேன்
      ‘I had / habitually have / recurrently have four doses (before going out for long)’

11. நான் தோசை சாப்பிட்டுக்கிட்டுருந்தேன் / சாப்பிட்டுக்கிட்டுருப்பேன் / சாப்பிட்டுக்கிட்டுருக்கேன் 
     நான் தோசை சாப்பபிட்டுக்கொண்டிருந்தேன் / சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் / சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்
     ‘I was / will be / am eating dose’

12. நான் நாலு தோசை சாப்பிட்டது / சாப்பிடுறது உண்டு
      நான் நான்கு தோசை சாப்பிட்டது / சாப்பிடுவது உண்டு
      ‘I have eaten in the past / eat occasionally four doses’

13. நான் இப்போ தோசை சாப்பிடலாம் / /சாப்பிட்டுடலாம் / சாப்பிட்டுக்கிடலாம்
      சாப்பிட்டுக்கிட்டுருக்கலாம்
      நான் இப்போது தோசை சாப்பிடலாம் / சாப்பிட்டுவிடலாம் / சாப்பிட்டுக்
      கொள்ளலாம் / சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம்
      ‘I can / may eat / without fail eat / for my good eat / be eating dose now’

14. நான் காலையில் தோசை சாப்பிட்டிருக்கலாம்
      நான் காலையில் தோசை சாப்பிட்டிருக்கலாம்
      ‘I could / might have eaten dose in the morning’

15. நான் இப்போ தோசை சாப்பிடணும் /சாப்பிட்டுடணும் / சாப்பிட்டுக்கிடணும் /
      சாப்பிட்டுக்கிட்டுருக்கணும்
      நான் இப்போது தோசை சாப்பிட வேண்டும் /சாப்பிட்டுவிட வேண்டும்
      /சாப்பிட்டுக்கொள்ள வேண்டும் / சாப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டும்
      'I want to / must eat / without fail eat / for my good eat / be eating dose now'

16. நான் காலைலே தோசை சாப்பிட்டுருக்கணும்
      நான் காலையில் தோசை சாப்பிட்டிருக்க வேண்டும்
      'I must / should have eaten dose in the morning'

17. எனக்கு காலைலே தோசை சாப்பிடணும் /சாப்பிட்டுடணும் / சாப்பிட்டுக்கிடணும் /
      சாப்பிட்டுக்கிட்டுருக்கணும்
      எனக்குக் காலையில் தோசை சாப்பிட வேண்டும் / சாப்பிட்டுவிட வேண்டும் /
      சாப்பிட்டுக்கொள்ள  வேண்டும் / சாப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டும்
      'I must eat / without fail eat / for my good eat / be eating dose in the mornings'

18. நான் ஓட்டல்லே தோசை சாப்பிட வேண்டியிருந்தது / வேண்டியிருக்கு / வேண்டியிருக்கும்
     நான் ஓட்டலில் தோசை சாப்பிட வேண்டியிருந்தது / வேண்டியிருக்கிறது / வேண்டியிருக்கும்
     'I had to / have to/ will have to eat dose in the restaurant'
     (The verbal noun வேண்டியது can be used in place of the verbal participle வேண்டி)

19. நான் நாலு தோசை சாப்பிட / சாப்பிட்டுட / சாப்பிட்டுக்கிட / சாப்பிட்டுக்கிட்டுருக்க முடியும்
      நான் நான்கு தோசை சாப்பிட சாப்பிட்டுவிட / சாப்பிட்டுக்கொள்ள / சாப்பிட்டுக்கொண்டிருக்க முடியும்
      'I can eat / without fail eat / for my good eat / be eating four doses’

20. நான் நாலு தோசை சாப்பிட்டுருக்க முடியும்
      நான் நான்கு தோசை சாப்பிட்டிருக்க முடியும்
      'I could have eaten four doses’

21. நான் தோசையை சாப்பிடட்டுமா / சாப்பிட்டுடட்டுமா / சாப்பிட்டுக்கிடட்டுமா / சாப்பிட்டுக்கிட்டுருக்கட்டுமா?
      நான் தோசை சாப்பிடட்டுமா / சாப்பிட்டுடட்டுமா / சாப்பிட்டுக்கிடட்டுமா / சாப்பிட்டுக்கிட்டுருக்கட்டுமா?
      'Shall I eat / without fail eat / for my good eat / be eating dose’

22. நீ நாலு தோசை சாப்பிடு / சாப்பிட்டுடு / சாப்பிட்டுக்கோ / சாப்பிட்டுக்கிட்டுரு
      நீ நான்கு தோசை சாப்பிடு / சாப்பிட்டுவிடு / சாப்பிட்டுக்கொள் / சாப்பிட்டுக்கொண்டிரு
      ‘You eat / eat without fail / eat for your good / be eating four doses’
      (*சாப்பிட்டுரு / சாப்பிட்டிரு is ill-formed)

23. நீ நாலு தோசை சாப்பிடேன் / சாப்பிட்டுடுடேன் / சாப்பிட்டுக்கோயேன் / சாப்பிட்டுக்கிட்டுரேன்
      நீ நான்கு தோசை சாப்பிடேன் / சாப்பிட்டுவிடேன் / சாப்பிட்டுக்கொள்ளேன் /சாப்பிட்டுக்கொண்டிரேன்
      ‘Why don’t you eat / eat without fail / eat for your good/ be eating four doses?’

24. நாலு தோசை சாப்பிடுவானேன், கஷ்டப்படுவானேன்
      நான்கு தோசை சாப்பிடுவானேன், கஷ்டப்படுவானேன்
      ‘Why should (one) eat four doses and then suffer!’

25. நான் இந்த தோசையை எப்படி சாப்பிடுறது?
      நான் இந்த தோசையை எப்படி சாப்பிடுவது?
      ‘How can I eat this dose?’

26. நான் எந்த தோசையை சாப்பிட?
      நான் எந்த தோசையை சாப்பிட?
      ‘Which dose shall I eat?’


4.Finite Verb Forms- time, contours of time and speaker attitude - Negative

The following is a set of forms of the finite verb that are in the negative. It may be noted that all forms in (4) do not have corresponding negative.

1.நான் சாப்பிடலை
   நான் சாப்பிடவில்லை
   ‘I am not eating’

2.  நான் நாளைக்கு தோசை சாப்பிடலை / சாப்பிட மாட்டேன்
     நான் நாளைக்கு தோசை சாப்பிடவில்லை / சாப்பிட மாட்டேன்
     ‘I am not eating / will not eat dose tomorrow’

3. நான் தெனம் காலைலே தோசை சாப்பிடறதில்லை / சாப்பிட மாட்டேன்
    நான் தினம் காலையில் தோசை சாப்பிடுவதில்லை / சாப்பிட மாட்டேன்
    ‘I do eat dose in the morning everyday’
    (The present tense is used when the habitual action is stated as recurring and the future tense is used when the habitual action is stated as customary)

4. நான் தோசை சாப்பிடப் போறதில்லை
    நான் தோசை சாப்பிடப் போவதில்லை
    ‘I am going to eat dose’

5. No negative
    நான் தோசை சாப்பிடப் போனேன்
    நான் தோசை சாப்பிடப் போனேன்
    ‘I was going to / about to eat dose’

6. நான் தோசையை சாப்பிடப் பாக்கலே / பாக்க மாட்டேன் / பாக்கலை
    நான் தோசையை சாப்பிடப் பார்க்கவில்லை /பார்க்க மாட்டேன் / பார்க்கவில்லை
    ‘I did not try / will not try / am not trying to eat the dose’
    (The past tense form also has the non-volitional sense of ‘was about to’)

7. நான் தோசை சாப்பிடலை
    நான் தோசை சாப்பிடவில்லை
    ‘I did not dose’

8. நான் நாலு தோசை சாப்பிட்டுடலை / சாப்பிட்டுட மாட்டேன்
    நான் நான்கு தோசை சாப்பிட்டுவிடவில்லை / சாப்பிட்டுவிட மாட்டேன்
    ‘I did not eat up / will not eat up / four doses’

9. நான் தோசை சாப்பிட்டுருக்கலை / சாப்பிட்டுருக்க மாட்டேன் / சாப்பிட்டதில்லை
    நான் தோசை சாப்பிட்டிருக்கவில்லை / சாப்பிட்டிருக்க மாட்டேன் / சாப்பிட்ட
    தில்லை
    ‘I had not/ will not or would have not / have not eaten dose’

10. நான் நாலு தோசை சாப்பிட்டுக்கிடலை / சாப்பிட்டுக்கிட மாட்டேன் / சாப்பிட்டுக்கிடுறதில்லை
     நான் நான்கு தோசை சாப்பிட்டுக்கொள்ளவில்லை / சாப்பிட்டுக்கொள்ள 
     மாட்டேன் /  சாப்பிட்டுக்கொள்வதில்லை
     ‘(Before going out for long) I had not / habitually have not / recurrently have not eaten four doses’

11. நான் தோசை சாப்பிட்டுக்கிட்டுருக்கலை or சாப்பிட்டுக்கிட்டுல்லை /
      சாப்பிட்டுக்கிட்டுருக்க மாட்டேன் / சாப்பிட்டுக்கிட்டுருக்கலை  or
      சாப்பிட்டுக்கிட்டுல்லை 
      நான் தோசை சாப்பபிட்டுக்கொண்டிருக்கவில்லை or சாப்பிட்டுக்கொண்டில்லை /
      சாப்பிட்டுக்கொண்டிருக்க மாட்டேன் / சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை or 
      சாப்பிட்டுக்கொண்டில்லை
      ‘I was not / will not be / am not eating dose’

12. நான் நாலு தோசை சாப்பிட்டது / சாப்பிடுறது இல்லை
      நான் நான்கு தோசை சாப்பிட்டது / சாப்பிடுவது இல்லை
      ‘I have not eaten in the past / do not eat now four doses’

13. நான் இப்போ தோசை சாப்பிட முடியாது or கூடாது / சாப்பிட்டுட முடியாது or 
      கூடாது / சாப்பிட்டுக்கிட முடியாது or கூடாது / சாப்பிட்டுக்கிட்டுருக்க முடியாது
      or கூடாது
      நான் இப்போது தோசை சாப்பிட முடியாது or கூடாது / சாப்பிட்டுவிட முடியாது
      or கூடாது / சாப்பிட்டுக்கொள்ள முடியாது or கூடாது /சாப்பிட்டுக்கொண்டிருக்க
      முடியாது or கூடாது
      ‘I cannot eat / may not eat / without fail not eat / for my good not eat / not be eating dose now’

14. நான் காலையில் தோசை சாப்பிட்டிருக்க முடியாது
      நான் காலையில் தோசை சாப்பிட்டிருக்க முடியாது
      ‘I could not / might not have eaten dose in the morning’

15. நான் இப்போ தோசை சாப்பிடக் கூடாது /சாப்பிட்டுடக் கூடாது / 
      சாப்பிட்டுக்கிடக் கூடாது / சாப்பிட்டுக்கிட்டுருக்கக் கூடாது
      நான் இப்போது தோசை சாப்பிடக் கூடாது /சாப்பிட்டுவிடக் கூடாது
      /சாப்பிட்டுக்கொள்ளக் கூடாது / சாப்பிட்டுக்கொண்டிருக்கக் கூடாது
      'I want to / must not eat / without fail not eat / for my good not eat / not be eating dose now'

16. நான் காலைலே தோசை சாப்பிட்டுருக்கக் கூடாது
      நான் காலையில் தோசை சாப்பிட்டிருக்கக் கூடாது
      'I must / should not have eaten dose in the morning'

17. The negative கூடாது is unusual
      எனக்கு காலைலே தோசை சாப்பிடணும் /சாப்பிட்டுடணும் / சாப்பிட்டுக்கிடணும் 
      சாப்பிட்டுக்கிட்டுருக்கணும்
      எனக்குக் காலையில் தோசை சாப்பிட வேண்டும் / சாப்பிட்டுவிட வேண்டும் /
      சாப்பிட்டுக்கொள்ள  வேண்டும் / சாப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டும்
      'I must eat / without fail eat / for my good eat / be eating dose in the mornings'

18. நான் ஓட்டல்லே தோசை சாப்பிட வேண்டியதில்லை / வேண்டியதிருக்காது
     நான் ஓட்டலில் தோசை சாப்பிட வேண்டியதில்லை /  வேண்டியதிருக்காது
     'I do not have to/ will not have to eat dose in the restaurant'

19. நான் நாலு தோசை சாப்பிட / சாப்பிட்டுட / சாப்பிட்டுக்கிட/ 
      சாப்பிட்டுக்கிட்டுருக்க முடியாது
      நான் நான்கு தோசை சாப்பிட சாப்பிட்டுவிட / சாப்பிட்டுக்கொள்ள/
      சாப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது
      'I cannot eat / without fail not eat / for my good not eat / not be eating four doses’

20. நான் நாலு தோசை சாப்பிட்டுருக்க முடியாது
      நான் நான்கு தோசை சாப்பிட்டிருக்க முடியாது
      'I could not have eaten four doses’

21. There is no negative
       நான் தோசையை சாப்பிடட்டுமா / சாப்பிட்டுடட்டுமா / சாப்பிட்டுக்கிடட்டுமா /
       சாப்பிட்டுக்கிட்டுருக்கட்டுமா?
       நான் தோசை சாப்பிடட்டுமா / சாப்பிட்டுடட்டுமா / சாப்பிட்டுக்கிடட்டுமா /
       சாப்பிட்டுக்கிட்டுருக்கட்டுமா?
       'Shall I eat / without fail eat / for my good eat / be eating dose’

22. நீ நாலு தோசை சாப்பிடாதே / சாப்பிட்டுடாதே / சாப்பிட்டுக்கிடாதே / 
      சாப்பிட்டுக்கிட்டுருக்காதே
      நீ நான்கு தோசை சாப்பிடாதே / சாப்பிட்டுவிடாதே / சாப்பிட்டுக்கொள்ளாதே / 
      சாப்பிட்டுக்கொண்டிருக்காதே
      ‘You don’t eat / don’t eat without fail / don’t eat for your good /don’t be eating four doses’

23. நீ நாலு தோசை சாப்பிடாதேயேன் / சாப்பிட்டுடாதேயேன் /
     சாப்பிட்டுக்கிடாதேயேன் /  சாப்பிட்டுக்கிட்டுருக்காதேயேன்
     நீ நான்கு தோசை சாப்பிடாதேயேன் /  சாப்பிட்டுக்கொண்டிருகாதேயேன்
     ‘Why don’t you eat / not be eating four doses?’

24. There is no negative
      நாலு தோசை சாப்பிடுவானேன், கஷ்டப்படுவானேன்
      நான்கு தோசை சாப்பிடுவானேன், கஷ்டப்படுவானேன்
      ‘Why should (one) eat four doses and then suffer!’

25. நான் இந்த தோசையை எப்படி சாப்பிடாம இருக்கிறது?
      நான் இந்த தோசையை எப்படி சாப்பிடாமல் இருப்பது?
      ‘How can I not eat this dose?’

26. There is no negative
      நான் எந்த தோசையை சாப்பிட?
      நான் எந்த தோசையை சாப்பிட?
      ‘Which dose shall I eat?’

 

5. Staking of suffixes on a verb – a sample

1. அவன் சிகாகோவுலே படிச்சான்
   அவன் சிகாகோவில் படித்தான்
   ‘He studied in Chicago’

2. அவன் சிகாகோவுலே படிச்சுக்கிட்டுருந்தான்
   அவன் சிகாகோவில் படித்துக்கொண்டிருந்தான்
   ‘He was studying in Chicago’

3. அவன் சிகாகோவுலே படிச்சுக்கிட்டேருந்தான்
   அவன் சிகாகோவில் படித்துக்கொண்டேயிருந்தான்
   ‘He kept on studying in Chicago’

4. அவன் சிகாகோவுலே படிச்சுக்கிட்டேருந்துருக்கான்
   அவன் சிகாகோவில் படித்துக்கொண்டேயிருந்திருக்கிறான்
   ‘I presume that he kept on studying in Chicago’

5. அவன் சிகாகோவுலே படிச்சுக்கிட்டேருந்துருக்கானாம்
    அவன் சிகாகோவில் படித்துக்கொண்டேயிருந்திருக்கிறானாம்
    ‘It seems that it is presumed that he kept on studying in Chicago’

6. அவன் சிகாகோவுலே படிச்சுக்கிட்டேருந்துருக்கானாமா?
    அவன் சிகாகோவில் படித்துக்கொண்டேயிருந்திருக்கிறானாமா?
    ‘Does it seem that it is presumed that he kept on studying in Chicago?’

 

 

Related Images: