14. ஐயோ
சேகரன் ஒரு நாள் தன் அத்தை வீட்டுக்குப் போனான். மருமகனுக்காக அவள் ஒரு தின்பண்டம் செய்தாள். அத்தை செய்த பண்டத்தை அவன் தின்று பார்த்தான். அது ருசியாய் இருந்தது.
“அத்தை! இந்தப் பண்டத்துக்கு என்ன பெயர்?” என்று கேட்டான், சேகரன்.
“கொழுக்கட்டை” என்றாள் அவள்.
சேகரன் புறப்பட்டான். வழியெல்லாம் கொழுக்கட்டையை நினைத்துக்கொண்டே நடந்தான். ‘மனைவியிடம் சொல்ல வேண்டும். அவள் கொழுக்கட்டை செய்யட்டும்’ என்று அவன் நினைத்தான். அவன் நடந்துகொண்டிருந்த வழியில் ஒரு பெரிய மரம். அதிலிருந்து ஒரு கிளை முறிந்து விழுந்தது. “ஐயோ” என்று கத்திக்கொண்டே சேகரன் விழுந்தான். அவனுக்கு மயக்கம் வந்துவிட்டது. கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்தது. அவனுடைய உடம்பில் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவனுக்குத் தின்பண்டத்தினுடைய பெயர் மறந்து போயிற்று. “ஐயோ” என்பதுதான் நினைவில் இருந்தது. “ஐயோ, ஐயோ” என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்கு வந்தான்.
சேகரன் மனைவியிடம் “எனக்கு ஐயோ வேண்டும். செய்து கொடு’ என்றான்.
அவள் “ஐயோ என்றால் என்ன? அதை எப்படிச் செய்வது?” என்று கேட்டாள்.
“இந்தப் பண்டம் உனக்குத் தெரியாதா? என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? என்று சொல்லி சேகரன் மனைவியை அடித்தான்.
அவள் “ஐயோ! ஐயோ!” என்று அலறினாள்.
அவன் “அதுதான்! அதுதான்!” என்றான்.
கூச்சலைக் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரி வந்தாள். அவள் சேகரனிடம், “மனைவியை இப்படியா அடிப்பது? இவள் உடம்பு எல்லாம் கொழுக்கட்டை போல வீங்கிவிட்டதே!” என்றாள்.
“ஆகா! அதுதான் பண்டத்தின் பெயர்” என்றான் சேகரன்.
“இதை முதலிலேயே சொல்லியிருக்கக் கூடாதா?” என்றாள் மனைவி.
Glossary
அத்தை aunt
மருமகன் nephew, son-in-law
தின்பண்டம் snack
தின் (தின்ன, தின்று) eat (as of snacks)
பண்டம் thing
ருசி taste
கொழுக்கட்டை boiled snack made of rice
புறப்படு (புறப்பட, புறப்பட்டு) set out, leave
வழி way, path
முறி (முறிய, முறிந்து) break into two (intransitive)
விழு (விழ, விழுந்து) fall
கத்து (கத்த, கத்தி) shout
மயக்கம் faint
தெளி (தெளிய, தெளிந்து) become clear
காயம் injury
ஏற்படு (ஏற்பட, ஏற்பட்டு) happen, come into being
மற (மறக்க, மறந்து) forget
நினைவு memory
மனைவி wife
ஏமாற்று (ஏமாற்றம் ஏமாற்றி) fool, cheat
அடி (அடிக்க, அடித்து) hit
அலறு (அலற, அலறி) scream
கூச்சல் screaming, shouting
வீங்கு (வீங்க, வீங்கி) swell
முதலில் in the beginning
Notes
- தன்: This is the genitive form of the reflexive pronoun தான், which is gender neutral (masculine, feminine, neuter). It is plural forms are தாங்கள் (தங்கள்) and தாம் (தம்). It refers to a third person subject (in the nominative or dative case) in the same sentence or higher sentence. Example: என் தம்பி தனக்கு ஒரு பேனா வாங்கிக்கொண்டான்; மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். Contrast this with நான் எனக்கு ஒரு பேனா வாங்கிக்கொண்டேன்; நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். Modern Tamil allows use of the regular (anaphoric) pronoun to be used in place of the reflexive pronoun: என் தம்பி அவனுக்கு ஒரு பேனா வாங்கிக்கொண்டான்; மாணவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். Modern Tamil does not insist on using the plural form for polite reference: அப்பா தனக்கு (instead of தமக்கு) ஒரு பேனா வாங்கிக்கொண்டார்.
- மருமகனுக்காக: Dative case + ஆக gives the sense that action is done specially for the goal or purpose. மருமகனுக்குத் தின்பண்டம் செய்தாள் ‘(she) made snacks for her son in law’ vs. மருமனுக்காகத் தின்பண்டம் செய்தாள் ‘(she) made snacks specially for her son-in-law’. It often translates as ‘for the sake of, on account of’. Other examples: பொங்கலுக்கு / பொங்கலுக்காகத் தின்பண்டம் செய்தோம் ‘(we) made snacks for Pongal / especially for Pongal’; மழைக்கு / மழைக்காக மரத்தடியில் ஒதுங்கினேன் ‘(I) took shelter under a tree for the rain / on account of the rain’. The noun with and with may refer to different persons or things: நீ எனக்காக என் தம்பிக்குக் கடன் கொடு ‘’You lend money to my younger brother for my sake’.
- எல்லாம்: This word meaning ‘all’ is used in extended senses. Added to a noun with or without Sandhi, it expresses the sense of ‘all over, whole of (the object of the noun)’ as in வழியெல்லாம் ‘all the way’, உடம்பு எல்லாம் ‘all over the body’. Another example: நேற்றெல்லாம் ‘whole of yesterday’
- தின்பண்டத்தினுடைய: This has double genitive இன் and உடைய redundantly. Alternate forms could be தின்பண்டத்தின், தின்பண்டத்துடைய. The second form is closer to the colloquial form.
- ஐயோ என்றால்: என்றால் added to a word makes the word mentioned rather than used in a sentence. It is comparable to the use of single quotes around a word. It is the way the word that is defined is indicated: கை என்றால் என்ன? ‘What is (the meaning of) ‘கை’? It is also used to refer to the intended meaning by the speaker: முடியாது என்றால் என்ன அர்த்தம்? ‘What do you mean by saying ‘no’’. It is also used to specify specialty: தோசை என்றால் எனக்குப் பிடிக்கும் ‘I like dosai especially’ ; உனக்கு என்றால் தருகிறேன் ‘I will give if it is meant for you’
- ஏமாற்றப் பார்: This means ‘try to cheat’. Infinitive + the light verb பார் is different from verbal participle + பார் described in Text X. It means the subject tries to do something, but not has started doing it actually. See the difference between குடிக்கப் பார்த்தான் ‘(he) tried to drink (something)’, குடித்துப் பார்த்தான் ‘he tried drinking (something)’. The former is used in the contexts of effort in doing, accidental doing; the latter is used in the contexts of ability to do, knowing the object. In the sense of accidental doing or non-volitional doing as well as taking intentional effort பார் can alternate with போ: குடிக்கப் போனான் ‘(he) was about to / going to drink’, விழப் போனான் ‘(he) was about to / going to fall down’.
- என்று சொல்லி: என் can be used as a full verb meaning ‘say’ or as a connector of the subordinate clause with the main clause when the verb ‘say’ is used in the main clause. இது தப்பு என்றான் / என்று சொன்னான். This is true of verbal participle also: ஏமாற்றுகிறாள் என்று அடித்தான்; ஏமாற்றுகிறாய் என்று சொல்லி அடித்தான். It is not necessary that the subordinate clause is a quote: தலை வலிக்கிறது என்று / என்று சொல்லி மருந்து சாப்பிட்டான்
- இப்படியா அடிப்பது: This means ‘should one hit like this?; no, shouldn’t’. The nominal form of the verb as the predicate rather than the finite verb form conveys the sense of helplessness in not knowing what to do or in the inability to do when the sentence has an informative question word என்ன, எப்படி etc, as described in Text X. When the sentence has the confirmative question (ஆ- ), it conveys the sense of ‘shouldn’t be done’. Another example: இங்கேயா குடிப்பது? ‘should one drink here?’
- செய்துகொடு: கொடு is a light verb added to the verbal participle. It conveys the sense that the action is done for the sake of another person usually represented by the dative case. Doing for the sake of another is in the context of the other person needing or presumed to be needing help to perform the action. Other examples: விற்றுக்கொடு, எழுதிக்கொடு. கொடு can be contrasted with கொள் in this respect. The sense of கொடு may range from its literal sense to lexicalize a verb to bear a new, but related, sense: அவனுக்கு மருந்து வாங்கிக்கொடு ‘buy him medicine, buy medicine and give him’; அவனைத் தட்டிக்கொடு ‘pat him’, அவனுக்கு சொல்லிக்கொடு ‘teach him’.
Exercise
அ. கோடிட்ட இடத்தை நிரப்பு. மீதிக் கதையை எழுதி முடி
Fill in the blanks. Complete the rest of the story in your own words.
சேகரனுடைய அத்தை தன் ------------------------- ஒரு தின்பண்டம் செய்தாள். சேகரன் அதை ---------------------- சாப்பிட்டான். அத்தை அந்தத் தின்பண்டத்தின் பெயர் -------------------- என்றாள். சேகரன் தன் -------------- அந்தத் தின்பண்டத்தைச் செய்யச் ---------- வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். வீட்டுக்குப் ------------ வழியில் ஒரு மரத்தின் ---முறிந்து அவன்மேல் விழுந்தது. ‘ஐயோ’ என்று ------------------ அவன் கீழே விழுந்து-------------------- அடைந்தான்.
மயக்கம் ------------- எழுந்தபோது அவனுக்குத் தின்பண்டத்தின் -------------மறந்து போயிருந்தது. அதன் பெயர் ‘ஐயோ’ -------------- நினைத்துக்கொண்டான். அதைச் சொல்லிக்கொண்டே வீட்டுக்குப் ------
தன் மனைவியிடம் ‘ஐயோ’ செய்து----- என்றான். அவளுக்கு --------- புரியவில்லை. சேகரனுக்கு ----------- வந்து அவளை அடித்தான். அவள் அழுததைக் கேட்டு ------------ வீட்டுக்காரி வந்தாள். “பெண்டாட்டியை இப்படியா ---------? உடம்பு எல்லாம் கொழுக்கட்டை போல ---------------------“ என்றாள்.
-----------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
ஆ. கீழே தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விளக்கத்தை ஆங்கிலத்தில் எழுது.
(Tamil words are defined below in Tamil. Write these definitions in English)
- கரும்பு: மூங்கில் போல் நீண்டு வளர்ந்த, இனிப்பான சாறு நிறைந்த ஒரு செடி (மூங்கில் ‘bamboo’, சாறு ‘juice’)
- ஆவி: சூடான நீர் முதலியவற்றிலிருந்து எழும் வாயு ( '. (வாயு vapor')
- முறுக்கு: மாவைப் பிசைந்து நெளிவு வரும்படி சுற்றி எண்ணெயில்
பொரித்துச் செய்யும் தின்பண்டம் ( பிசை knead’, நெளிவு ‘curl’, பொரி ’fry’)
- தின்பண்டம்: முக்கிய உணவாக இல்லாமல் அவ்வப்போது சாப்பிடும்
முறுக்கு போன்ற உணவு (உணவு ‘food’)
- வெல்லம்: கரும்புச் சாற்றைக் காய்ச்சித் தயாரிக்கப்படும் கட்டியான
இனிப்புப் பொருள் (காய்ச்சு ‘boil’, தயாரி ‘prepare’)
- கொழுக்கட்டை: வெல்லம் கலந்த அரிசி மாவைக் கையால்
உருண்டையாகப் பிடித்து ஆவியில் வேக வைத்துச்
செய்யும் தின்பண்டம் (பிடி ‘give shape by palm’, வேக வை ‘boil’)
இ. The following are single word expressions of feelings in reaction to some encounter.
Try to give equivalents in English with similar emotive content.
Ex. ஐயோ (to express pain, sorrow, pity) ‘my god!’
அய்யயோ /ஐயய்யோ (to express shock, fear, grief)
ஆகா / ஆஹா (to express appreciation)
அடடே (to express surprise tinged with regret)
அட /அடே (to express surprise tinged with appreciation)
அடேயப்பா /அடேங்கப்பா (to express wonder)
அப்பாடி / அப்பாடா / அம்மாடி / அம்மாடா (to express relief, being daunted (with a different intonation))
அம்மா (to express pain)