17. வட்டி இல்லாத கடன்

17   வட்டி இல்லாத கடன்

 

சமையலை முடித்துவிட்டு முத்தம்மாள் திண்ணைக்கு வந்தாள்.  திண்ணையில் ஒரு கடிதம் கிடந்தது.  தபால்காரன் எறிந்துவிட்டுப் போயிருக்க வேண்டும்.  கடிதத்தை எடுத்தாள்.  உறையின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவியிருந்தது.  திருமண அழைப்பிதழ்!

 

மத்தியானச் சாப்பாட்டிற்கு முத்தம்மாளின் கணவர் கிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார்.  “நடராஜன் மகனுக்குக் கல்யாணமாம்.  கடிதம் வந்திருக்கிறது” என்றாள் முத்தம்மாள்.  “கடிதத்தைக் கொடு,  பார்ப்போம்” என்றார்.  கடிதத்தைப் படித்துவிட்டுப் பெருமூச்சுவிட்டார். “மதுரையில் பெண்வீட்டில் கல்யாணமாம்.  வாழ்த்து அனுப்ப வேண்டியதுதான்” என்றார்.

 

“நன்றாயிருக்கிறது, நீங்கள் சொல்கிறது!  நம் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும் நடராஜன் வராமல் இருந்ததில்லை.  அவன் வீட்டில் இது முதல் விசேஷம்.  போகாமல் இருக்கலாமா?”

 

“மதுரைக்கு நான்மட்டும் போய்விட்டு வருவதாக இருந்தாலும் ரயில் செலவுக்கே ஐம்பது ரூபாய் வேண்டும்.  அதற்கு மேல் ஏதாவது செய்யவேண்டுமே!”

 

“நம் வீட்டு விசேஷத்துக்கெல்லாம் நடராஜன் அவன் பெண்டாட்டியைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான்....”

 

“உன்னையும் மதுரைக்குக் கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்கிறாய்.  அப்படித்தானே?  நான் போகமுடியுமா என்பதே யோசனையாக இருக்கிறது”

 

“இந்தப் பேச்சு உங்களுக்கே நன்றாய் இருக்கிறதா?  நம்முடைய பெரிய மகன் கல்யாணத்தின்போது நடராஜன் ஒரு வெள்ளிச் செம்பு கொடுத்தான்.  அடுத்தவன் கல்யாணத்துக்கு வெள்ளித் தம்ளர்.  மகள் சடங்கிற்கு வெள்ளிக் குங்குமச் செப்பு.  எல்லவற்றையும் வாங்கிக்கொண்டோம்.  இப்போது அவன் வீட்டு விசேஷத்துக்குப் போகாமல் இருந்தால் எப்படி?”

 

“ஐநூறு ரூபாயாவது வேண்டுமே!  பணம் எங்கே இருக்கிறது?”

 

 

“பணத்துக்காக உறவை விடமுடியுமா?   ஒரு வகையில் பார்த்தால் இதெல்லாம்

வட்டியில்லாத கடன்தானே!  வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும், இல்லையா?”

 

‘சரி, பார்ப்போம்”.

 

பிற்பகலில் கிருஷ்ணன் தான் வேலை பார்த்த கடை முதலாளியிடம் கேட்டுப் பார்த்தார்.  ஆயிரம் ரூபாய்ச் சம்பளக்காரனுக்கு ஐநூறு ரூபாய் முன்பணம் கொடுக்க எந்த முதலாளிக்கு மனம் வரும்?  கிருஷ்ணனுக்குத் தோல்வி.

 

திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாள்தான் இருந்தது.  நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாரிடமும் அவர் கேட்டுப் பார்த்துவிட்டார்.  பணம் கிடைக்கவில்லை.

 

ஒரு காலையில் கிருஷ்ணன் வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தார்.  “இண்ணைக்காவது ஏதாவது பணம் கிடைக்குமா?  நாம் கல்யாணத்துக்கு நாளைக்குப் புறப்பட வேண்டுமே” என்றாள் முத்தம்மாள்.

 

‘பட்டாணியன்தான் ஈடு இல்லாமல் பணம் கொடுப்பான்.  அவனிடம் போனால் அநியாய வட்டி.  என்ன செய்வது என்று தெரியவில்லை”.

 

“கொஞ்சம் இருங்கள்” என்று சொல்லிவிட்டு முத்தம்மாள் உள்ளே போனாள்.  கொஞ்ச நேரத்தில் அவள் திரும்பி வந்தபோது அவள் கையில் ஒரு வெள்ளிக் கும்பா இருந்தது.  அது அவர்கள் கல்யாணத்துக்கு அன்பளிப்பாகக் கிடைத்தது என்று கிருஷ்ணனுக்கு அடையாளம் தெரிந்தது.

 

“இந்தக் கும்பா இப்போது நமக்கு எதற்குப் பயன்படுகிறது?  விற்றுவிடுங்கள்” என்றாள் அவள்.

 

கிருஷ்ணன் பெருமூச்சுவிட்டார்.

 

 

Glossary

 

வட்டி                                                                        interest

கடன்                                                                        debt, loan

சமையல்                                                    cooking

திண்ணை

முடி (முடிக்க, முடித்து)                                   finish

கடிதம்                                                                      letter

கிட (கிடக்க, கிடந்து)                             be lying down

தபால்காரன்                                                          mailman

எறி (எறிய, எறிந்து)                                           toss away

உறை

மூலை                                                                     corner

தடவு (தடவ, தடவி)                                          smear

திருமணம்                                                  marriage  கல்யாணம்

அழைப்பிதழ்                                                         invitation

மத்தியானம்                                                          afternoon

பெருமூச்சு                                                 sigh

பெண்

வாழ்த்து                                                      greetings

அனுப்பு (அனுப்ப, அனுப்பி)                           send

விசேஷம்                                                   special occasion

ரயில்

செலவு                                                                     expense

பெண்டாட்டி                                                          wife   மனைவி

கூட்டிக்கொண்டு வா (வர, வந்து)              bring along

யோசனை                                                  thought, consideration

பேச்சு                                                                        talk

பெரியவ                                                      elder, older

வெள்ளி

செம்பு                                                                       a small vessel

அடுத்தவன்                                                          the one next to the elder son, next one

தம்ளர்                                                                      glass (to drink), tumbler

சடங்கு                                                                     puberty ceremony

குங்குமச் செப்பு                                      tiny container for kumkum

வாங்கு (வாங்க, வாங்கி)                                 receive, accept

ஐநூறு                                                                                              five hundred

உறவு                                                                                               kinship, relationship

விடு (விட, விட்டு)                                                          let go, give up

வகையில்                                                                   in a way

பிற்பகல்                                                                       afternoon   Alternate மத்தியானம்

ஆயிரம்                                                                          thousand

முன்பணம்                                                                 advance payment

முதலாளி                                                   boss, shop owner

மனம் வா (வர, வந்து)                                               have mind (to do something)

சம்பளம்                                                      salary

தோல்வி                                                     failure

தெரிந்தவர்கள்                                         acquaintances

புறப்படு (புறப்பட, புறப்பட்டு)                                    set out

பட்டாணியன்                                                       money lender (of north Indian origin)

ஈடு                                                                 pledge

அநியாய                                                     unfair

கும்பா                                                                       a container (to keep sandal paste etc.)

அன்பளிப்பு                                                                 present, gift

அடையாளம்                                                                           identification

பயன்படு (பயன்பட, பயன்பட்டு)                       be useful

வில் (விற்க, விற்று)                                                    sell

 

Notes

 

  1. ஆம்: This is added at the end of a sentence to express the fact that the source of the information is not the speaker of the sentence; that is, the information is attributed to another source, which remains unspecified. Example: நாளைக்கு மழை பெய்யுமாம் ‘It is said / I heard/ it seems that it will rain tomorrow’; நான் மடையனாம் ‘They say I am a fool’. The source need not be a report of another person or hearsay, but could be an inference of the speaker: பூனைக்குப் பசிக்குதாம் ‘The cat seems to be hungry’

 

  1. வராமல் இரு: The negative participle + இரு is used to say that the negative state of the act has longer duration. அவன் சாப்பிடாமல் இருந்தான் would translate as ‘He was without eating, i.e. he stayed from eating. This is different from அவன் சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை ‘he was not eating’, which is negation of the act as a process. It is also different from அவன் சாப்பிடவில்லை ‘he did not eat’, which is negation of the act as an instance.

This is the only construction available to make negative infinitive: வராமல் இருக்க ‘not to come’.

  1. இருந்ததில்லை: The verbal noun in the past and இல்லை means that the occurrence of the act was never true of the past. Another example: இவளை நான் பார்த்ததில்லை ‘I have never seen her’. When the verbal noun is in non-past, the meaning is that the occurrence of an act is never true: இவளை நான் பார்க்கிறதில்லை / பார்ப்பதில்லை ‘I don’t / won’t see her’. This is different from the habitual expressed in the future tense: இவளை நான் பார்க்கமாட்டேன் ‘I don’t / won’t see her’. The difference is that the former foregrounds the occurrence of an event or instance of doing while the latter foregrounds the act of doing itself.
  2. ஏதாவது செய்: The object of செய், though unspecified, is conventionalized to refer to some specific objects. In கல்யாணத்திற்கு என்ன செய்யப் போகிறாய் ‘What are you going to do for the wedding?’ the unspecified object is the act of giving a present (unlike in நாளைக்கு என்ன செய்யப் போகிறாய்?, which is open ended). It could have a similar, but not the same, sense in another context: உங்களுக்கு நிறைய செய்திருக்கிறான்; பார்த்துச் செய்யுங்கள் ‘(he) has done a lot for you; please do him back liberally’. Here the unspecified object could be ‘work’ in the first sentence and return favor in the form of money or goods in the second sentence.

 

Exercise

 

அ. Answer the following questions

 

  1. கிருஷ்ணனுக்கும் அவருடைய மனைவிக்கும் என்ன பிரச்சனை? (பிரச்சனை ‘problem, issue’)
  2. கல்யாணத்துக்குப் போயாக வேண்டும் என்பதற்கு முத்தம்மாள் என்ன காரணம் சொல்கிறார்?
  3. கிருஷ்ணன் பணத்துக்கு என்னென்ன செய்துபார்த்தார்?
  4. முத்தம்மாள் பணப்பிரச்சனையை எப்படி சமாளித்தார்? (சமாளி ‘manage’)
  5. ‘வீட்டு விசேஷத்தில் பரிசு வாங்குவது வட்டி இல்லாமல் கடன் வாங்குவதற்குச் சமம்’ என்று நினப்பதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? உன் கருத்துக்குக் காரணம் சொல். (கருத்து ‘idea, thought’)

 

ஆ. The light verb விடு ‘let go’ as its core meaning is added to nouns to make a verb.

    Make such verbs from the given nouns and give their meaning.

 

Ex. பெருமூச்சு ‘sigh (n)’                     பெருமூச்சுவிடு ‘sigh (v)’

 

  1. மூச்சு ‘breath’
  2. கொட்டாவி ‘yawn’
  3. இலை ‘leaf’
  4. வேர் ‘root’
  5. கண்ணீர் tear’

 

இ. The light verb விடு may have object relation with the noun with which it occurs more

    clearly than in the examples in (ஆ) above. Add விடு to the nouns below and give

    their meaning.

 

     Ex. தண்ணீர் ‘water’                           தண்ணீர் விடு ‘let water flow’

 

  1. பட்டம் ‘kite’
  2. பஸ் ‘bus’
  3. சைக்கிள் bicycle’
  4. அறிக்கை ‘statement’
  5. தூது ‘message’

 

ஈ.  The light verb விடு may have subject relation with the noun with which it occurs. Add

    விடு in its inflected form விட்டது to the nouns below and give their meaning.

   

    Ex. காய்ச்சல் ‘fever’                           காய்ச்சல் விட்டது ‘Fever subsided (literally, ‘left’)’

 

  1. தலைவலி ‘headache’
  2. மழை ‘rain’
  3. கவலை ‘worry’
  4. பழக்கம் ‘habit’
  5. ஆசை ‘desire’

 

உ. விடு may be a full verb and have the transitive sense of ‘let go, give up’ and the

    Object may have the accusative case marker. Add விட்டான் to the object nouns

    below and give their meaning.

 

    Ex. உறவை                             உறவை விட்டான் ‘(he) cut off the relationship’

  1. ஆசையை
  2. பழக்கத்தை
  3. கவலையை
  4. கோபத்தை
  5. பஸ்ஸை

 

ஊ.  Some noun + விடு combinations have acquired idiomatic sense. Guess the meaning

    of the idioms below from the nouns and match with the sense given in the right

    column.

 

  1. கதை ‘story’   கதைவிடு                    ‘give up on someone’
  2. ஆள் ‘person’  ஆள்விடு                 ‘bluff’
  3. கை ‘hand’    கைவிடு                           ‘spin (a story)’
  4. சரடு ‘thread’   சரடுவிடு                  ‘engage people (to work)’

 

உ. Infinitive + விடு constructions are used to express letting the action to take place. Make this construction with imagined objects from the verbs given below and give their meaning.

 

   Ex. வா                                            வெளிச்சத்தை வர விடு ‘’let the light come in’

  1. போ
  2. தூங்கு
  3. படி
  4. பேசு
  5. பழு ‘ripen’