18. கொள்ளைக்காரன்

                                                                                                         18 - கொள்ளைக்காரன்

 

 

கந்தனுக்கும் வள்ளிக்கும் அன்றைக்குக் காலையில்தான் திருமணம் நடந்தது.  அவன் அவளோடு மாட்டு வண்டியில் தன்னுடைய கிராமத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தான்.  உச்சி வெயிலில் அந்த வண்டி மட்டும் தனியே காட்டுப் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது.

 

திடீரென்று வண்டி நின்றது.  அதுவரை வள்ளியோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான் கந்தன்.  இப்போது முன்புறம் பார்த்தான்.  வண்டிக்கு முன்னே ஜம்புலிங்கம் நின்றுகொண்டிருந்தான்.  ஜம்புலிங்கம் திருநெல்வேலி மாவட்டத்திலேயே மிகப் பெரிய கொள்ளைக்காரன்.  அவனுடைய பெயரைக் கேட்டால் அழுகிற குழந்தை கூட வாயை மூடிக்கொள்ளும்.  அவன் அவ்வளவு பயங்கரமானவன்.  கந்தனின் உடம்பு நடுங்கியது.  நல்ல வேளையாக வள்ளி ஜம்புலிங்கத்தைப் பார்க்கவில்லை.  வண்டிக்காரனுடைய முதுகு அவனை மறைத்தது.

 

ஜம்புலிங்கம் வண்டிக்காரனிடம் “கீழே இறங்கு” என்றான்.  வண்டிக்காரன் “ஏன்?” என்றான்.  ஜம்புலிங்கம் அரிவாளை உருவினான்.  ஒரே வெட்டில் வண்டிக்காரனின் தலை தெருவில் விழுந்து உருண்டது.  ரத்தம் ஊற்றுப்போலப் பாய்ந்தது.

 

கந்தன் வள்ளியிடம், “இதோ வந்துவிட்டேன்” என்று சொல்லிவிட்டு வண்டியின் பின்புறம் குதித்தான்.  திரும்பிப் பார்க்காமல் ஓடினான்.

 

ஜம்புலிங்கம் அவனை விரட்டிப் பிடிக்க முயலவில்லை. சிரித்துக்கொண்டே வண்டியின் பின்புறம் வந்தான்.  “தங்கச்சி, உன் நகைகளையெல்லாம் கழற்று” என்று வள்ளியிடம் சொன்னான்.  வள்ளி மறுபேச்சில்லாமல் நகைகளைக் கழற்றிக் கொடுத்தாள்.

 

“தாலியை மறந்துவிட்டாயே!” என்றான் ஜம்புலிங்கம்.

 

“அய்யா! ஒரு பெண்ணுக்குத் தாலி புனிதமானது அல்லவா?  கணவன் உயிரோடு இருக்கும்போது ஒரு பெண் தாலியைக் கழற்றலாமா?  பாவம் அல்லவா?” என்றாள் வள்ளி.

 

“தாலி கட்டினவன் மனைவியைக் காப்பாற்ற வேண்டும்.  உன் கணவனோ தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிப்போய்விட்டான்.  அவன் கட்டின தாலி உனக்கு எதற்கு?.....நேரமாகிறது, கழற்று”.

 

வள்ளி அழுதுகொண்டே தாலியைக் கழற்றிக் கொடுத்தாள்.  ஜம்புலிங்கம் தாலியை வாங்கிக்கொண்டு, மற்ற நகைகளை எல்லாம் அவளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டான்.  திடீரென்று வந்தது போலத் திடீரென்று போய்விட்டான்.

 

Glossary

 

கொள்ளைக்காரன்                                                             ‘plunderer’

அன்றைக்கு                                                                           ‘on that day’ Alternate: அன்று

திருமணம்                                                                             ‘wedding’   Alternate: கல்யாணம்

மாட்டு வண்டி                                                                      ‘bullock cart’

கிராமம்                                                                                  ‘village’

திரும்பு (திரும்ப, திரும்பி)                                             ‘return’

உச்சி வெயில்                                                                   ‘midday sun’

தனியே                                                                                'alone’     (தனியாக)

பாதை                                                                                   ‘path’    ( வழி)

திடீரென்று                                                                         ‘suddenly’

நில் (நிற்க, நின்று)                                                           ‘stop’

சிரி (சிரிக்க, சிரித்து)                                                       ‘laugh’

முன்புறம்                                                                         ‘front side’  (முன்பக்கம்)

மாவட்டம்                                                                         ‘district’

அழு (அழ, அழுது)                                                           ‘cry’

பயங்கரமான                                                                     ‘terrifying’

நடுங்கு (நடுங்க, நடுங்கி)                                              ‘shiver’

நல்ல வேளையாக                                                         ‘fortunately

முதுகு                                                                                 ‘back (of body)’

மறை (மறைக்க, மறைத்து)                                        ‘hide’

அரிவாள்                                                                            ‘sickle’

உருவு (உருவ, உருவி)                                               ‘pull out’

வெட்டு                                                                             ‘stroke’

உருள் (உருள, உருண்டு)                                         ‘roll’

ஊற்று                                                                             ‘(water) spring’

பாய் (பாய, பாய்ந்து)                                                 ‘flow’

குதி (குதிக்க, குதித்து)                                              ‘jump’

விரட்டு (விரட்ட, விரட்டி)                                    ‘chase’

முயல் (முயல, முயன்று)                                   ‘try’

கழற்று (கழற்ற, கழற்றி)                                      ‘take off, remove’

மறுபேச்சு                                                                 ‘a word, argument’

தாலி                                                                          ‘wedding chain’

மற (மறக்க, மறந்து)                                           ‘forget’

புனிதமான                                                              ‘sacred’

கணவன்                                                                   ‘husband’  (புருஷன்)

உயிர்                                                                          ‘life’

பாவம்                                                                        ‘sin, sinful’

கட்டு (கட்ட, கட்டி)                                                ‘tie’

காப்பாற்று (காப்பாற்ற, காப்பாற்றி)              ‘protect’

திருப்பி                                                                     ‘back’

 

Notes

  1. மட்டும்: This is one of the quantifiers in Tamil, which excludes others from a set. It translates as ‘only, alone’: ஒன்று மட்டும் ‘only one’, நான் மட்டும் I alone’, எனக்கு மட்டும் ‘only to me’, காலையில் மட்டும் ‘only in the morning’, பணிந்து மட்டும் (போகாதே) ‘(behave) anything but obediently’

Another such form is தான். This is also exclusive, but it negates the assumption of inclusion. ஒன்றுதான் ‘just one (not more)’, நான்தான் ‘ it is me (not anyone else)’, எனக்குதான் ‘to me alone (not to anyone else), காலையில்தான் ‘only in the morning (not at any other time), பணிந்துதான் (போக வேண்டும்) ‘(one must behave) just obediently (there is no other way)’

  1. மாவட்டத்திலேயே: Locative noun + ஏ ‘emphatic’ + adjective is the construction to express what is superlative in English. மாவட்டத்திலேயே பெரிய ‘big in the whole of the district’ = ‘biggest in the district’ The locative case marker in formal Tamil is -இலே (not -இல்), as in colloquial Tamil; it is not *மாவட்டத்திலே பெரிய in modern Tamil.

 

Exercise

 

 

அ. கீழே உள்ள கேள்விகளுக்குப் பதில் எழுது.

   Answer the questions below in Tamil.

 

அ. கந்தன் யார்?

 

ஆ. ஜம்புலிங்கம் யார்?

 

இ. ஜம்புலிங்கம் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன்?

 

ஈ.  ஜம்புலிங்கம் வணிக்காரனிடம் என்ன சொன்னான்?

 

உ. ஜம்புலிங்கத்தை வள்ளி ஏன் பார்க்க முடியவில்லை?

 

ஊ. கந்தன் ஏன் வண்டியிலிருந்து இறங்கி ஓடினான்?

 

எ.  ஜம்புலிங்கம் வள்ளியிடம் என்ன கேட்டான்?

 

ஏ.  தாலி என்றால் என்ன?

 

ஐ.  வள்ளி ஏன் தாலியைக் கொடுக்கவில்லை?

 

ஒ.  ஜம்புலிங்கம் ஏன் தாலியை மட்டும் வைத்துக்கொண்டான்?

 

 

ஆ. Give from the story words that have the same or similar meaning of the words given below.

 

அ. கல்யாணம்

ஆ. ஊர்

இ. மத்தியான வெயில்

ஈ.  தனியாக

உ. முன்பக்கம்

ஊ. முன்னால்

எ.  கத்தி

ஏ.  பின்பக்கம்

ஐ.  மறு வார்த்தை

ஒ.  புருஷன்

 

இ. Nouns can be derived from the verb below using one pattern of derivation as in the example. Give the nouns and their meaning selecting from one of the meanings given at the end. Two of the meanings are not right.

 

Ex. தூங்கு ‘sleep’                                தூக்கம் ‘sleep’

    ஏறு         ‘climb down’                    ஏற்றம் ‘up grade, rise’

 

  1. நடுங்கு ‘shiver’
  2. இறங்கு ‘climb down’
  3. கலங்கு ‘be perturbed’
  4. அடங்கு ‘be subdued’
  5. ஏங்கு ‘long for’
  6. பொருந்து ‘fit, match’
  7. குழம்பு ‘be confused’
  8. அஞ்சு ‘fear’
  9. மாறு ‘change’
  10. வாடு ‘wither, lose luster’

 

Meanings: longing, modesty, down grade, dejection, weariness, anxiety, fear, tremor, match, change, support, confusion

 

ஈ. வெள்ளி is silver. Select the names of five metals from the nouns below and give their meaning.

 

  தங்கம், எவர்சில்வர், மரம், இரும்பு, கல், அலுமினியம், செம்பு, களிமண், வெங்கலம்