19. வாய் உள்ள பிள்ளை

                                                                                                          19 - வாய் உள்ள பிள்ளை

 

பொன்னன் மதுரைக்குப் போய்க்கொண்டிருந்தான்.  அவன் ஏழை.  மேலும் அந்தக் காலத்தில் ரயிலோ பஸ்ஸோ கிடையாது.  அவன் நடந்துதான் போய்க்கொண்டிருந்தான்.  ஊருக்கு வெளியே ஒரு தோட்டம் இருந்தது.  அந்தத் தோட்டத்தில் ரோஜாப்பூக்கள் ஏராளமாய் இருந்தன.  அவனுக்கு ஆசை வந்தது.  தோட்டத்துக்குள் போய்ப் பூக்களைப் பறிக்க ஆரம்பித்தான்.  அப்போது அங்கே இரண்டு சேவகர்கள் வந்தார்கள்.  பொன்னனைப் பிடித்துக்கொண்டார்கள்.

 

“நான் என்ன தப்பு செய்தேன்?” என்றான் பொன்னன்.

 

ஒரு சேவகன் “இது பாண்டிய ராஜாவுக்குச் சொந்தமான தோட்டம்” என்றான்.

 

“எனக்குத் தெரியாது.  நான் வெளியூர்க்காரன்.  இப்போதுதான் முதல் தடவையாக மதுரைக்கு வருகிறேன்”.

 

“இந்தத் தோட்டம் உனக்குச் சொந்தமா?  நீ ஏன் தோட்டத்துக்குள் வந்தாய்?”

 

“தோட்டம் எனக்குச் சொந்தம் இல்லை என்பது உண்மைதான்.  ஆனால் இங்கே கதவும் இல்லை; காவலும் இல்லையே!”

 

“நாங்கள் இருக்கிறோமே!  நீ தோட்டத்துக்குள் நுழைந்தது ஒரு குற்றம்.  பூக்களைப் பறித்தது பெரிய குற்றம்.  இந்தப் பூக்கள் எல்லாம் பாண்டிய ராணிக்காகவே பூத்திருக்கின்றன”.

 

சேவகர்கள் பொன்னனை இழுத்துக்கொண்டு நடந்தார்கள்.  பொன்னன் பறித்த பூக்களை அவனே தூக்கிக்கொண்டு நடந்தான்.  வழியில் ஒரு சாமியார் வந்தார்.  சேவகர்களும் பொன்னனும் அவரைக் கும்பிட்டார்கள்.  சாமியார் நிலைமையைப் புரிந்துகொண்டார்.  “வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.  புத்திசாலியான பொன்னன் கொஞ்சநேரம் யோசித்தான்.  பிறகு  ஒவ்வொரு ரோஜாவாக எடுத்துத் தின்ன ஆரம்பித்தான்.  கொஞ்ச நேரத்தில் ரோஜாக்கள் எல்லாம் அவனுடைய வயிற்றுக்குள் போய்விட்டன.

 

திருட்டை நிரூபிக்க வழி இல்லை என்று உணர்ந்த சேவகர்கள் பொன்னனை விட்டுவிட்டார்கள்.

 

Glossary

 

ஏழை                                                                                      poor

மேலும்                                                                                 furthermore

ரயில்                                                                                    train

பஸ்                                                                                      bus

வெளியே                                                                          outside

தோட்டம்                                                                        garden

ரோஜா                                                                               rose

பூ                                                                                           flower

ஏராளமாய்                                                                        plenty

ஆசை                                                                                   desire

பறி (பறிக்க, பறித்து)                                                      pick, pluck

சேவகன்                                                                             guard

பிடி (பிடிக்க, பிடித்து)                                                    get hold of, catch

சொந்தமான                                                                     personal, private

வெளியூர்க்காரன்                                                          outsider, one from outside the town

தடவை                                                                              time (occurring)

சொந்தம்                                                                            ownership

உண்மை                                                                            true, truth

காவல்                                                                              guard

நுழை (நுழைய, நுழைந்து)                                     enter

குற்றம்                                                                          offence, crime

ராணி                                                                              queen

பூ (பூக்க, பூத்து)                                                           bloom

இழு (இழுக்க, இழுத்து)                                        drag

தூக்கு (தூக்க, தூக்கி)                                             carry, lift

வழி                                                                               way, means

சாமியார்                                                                    mendicant

கும்பிடு (கும்பிட, கும்பிட்டு)                              make obeisance with folded hands

நிலைமை                                                                 situation

பிள்ளை                                                                      child, person

பிழை (பிழைக்க, பிழைத்து)                              survive

புரிந்து கொள்                                                          understand

பிழை (பிழைக்க, பிழைத்து)                            survive (a crisis)

புத்திசாலி                                                                intelligent person

யோசி (யோசிக்க, யோசித்து)                          think

எடு (எடுக்க, எடுத்து)                                           take out

தின் (தின்ன, தின்று)                                           eat, munch

ஆரம்பி (ஆரம்பிக்க, ஆரம்பித்து)                  begin

வயிறு                                                                      stomach

திருட்டு                                                                  theft

நிரூபி (நிரூபிக்க, நிரூபித்து)                         prove

உணர் (உணர, உணர்ந்து)                               realize, feel

விட்டுவிடு (-விட, -விட்டு)                              let go, leave off

 

Notes

 

  1. ரயிலோ பஸ்ஸோ: -ஓ added to every enumerated form (like –உம்) gives the sense of disjunction like the inclusive ‘or’ in English when the verb is negative. The given form means ‘neither train nor bus’ (not ‘one of the two / one or the other). Another example: படிக்கவோ எழுதவோ (தெரியாது) ‘(he) does not know either to read or to write’. These constructions differ in meaning from constructions with

–உம் (ரயிலும் பஸ்ஸும் கிடையாது, படிக்கவும் எழுதவும் தெரியாது) in that the sense of –உம் construction is cumulative and the enumerated items could be split for emphasis (ரயிலும் கிடையாது, பஸ்ஸும் கிடையாது)

-ஓ gives the sense of exclusive ‘or’ when the verb is positive: ரயிலோ பஸ்ஸோ உண்டு; படிக்கவோ எழுதவோ தெரியும். In this context, -ஓ carries its basic sense of uncertainty (as in questions with –ஓ). This construction would paraphrase like ‘either this or that, I am not sure’ (ஒன்றோ இரண்டோ தெரியும்), or either this or that, it does not matter (ஒன்றோ இரண்டோ கொடு) depending on the verb. Another example: தெரிந்தோ தெரியாமலோ நடந்துவிட்டது ‘(it) happened knowingly or unknowingly’.

-ஓ has an alternate –ஆவது: நீயோ நானோ போவோம் or நீயாவது நானாவது போவோம் ‘let me or you go’. This alternate does not have the uncertainty of –ஓ and is similar in meaning to ‘one or the other’ in English. Since –ஆவது lacks uncertainty and has only the sense of alternative, it is incompatible with a verb in the past tense, which requires that the speaker must know one way or the other if he asserts what happened. நீயோ நானோ போனாம் ‘Either you or me went, I am not sure who’; *நீயாவது நானாவது போனோம்.

2. புத்திசாலியான: -ஆன is added to abstract nouns to make adjectives of quality to describe the noun: அழகான ‘beautiful’, அறிவான ‘intelligent, knowledgeable’, புத்திசாலித்தனமான ‘intelligent’. It can be added to concrete nouns also, where it gives additional information of description or identification to the noun: புத்திசாலியான பூனை ‘the cat, which was intelligent’, ஆசிரியரான நான் ‘I, who is a teacher’. In the nominal compound without –ஆன, the noun gives additional information and it is descriptive: புத்திசாலிப் பூனை ‘intelligent cat’; when the additional information is identification, the construction is appositional without –ஆன: ஆசிரியர் நான் சொல்கிறேன் ‘I, the teacher, am telling (you)’. An alternate of –ஆன is –ஆகிய when the noun gives additional information: புத்திசாலியாகிய பூனை, ஆசிரியராகிய நான்.

 

Exercise

 

அ. Answer these questions in Tamil.

 

பொன்னன் என்ன செய்தான்? அது எப்படி குற்றம் ஆகும்? அவன் தண்டனையிலிருந்து எப்படி தப்பித்தான்?

(தண்டனை ‘punishment’, தப்பு ‘escape’)

 

ஆ. The following are sayings or proverbs using body parts with idiomatic meanings. Can you guess and describe their idiomatic meaning in English or given an equivalent saying in English? Their literal meanings are given below.

 

  1. வாயுள்ள பிள்ளை பிழைக்கும். The child with a mouth will survive
  2. அழுத பிள்ளை பால் குடிக்கும். The crying child will drink milk
  3. வழி இருக்கிறது வாயிலே. The path to go is in your mouth
  4. தன் முதுகு தனக்குத் தெரியாது. One does not know his back
  5. கைப் புண்ணுக்குக் கண்ணாடியா? Do you need a mirror to see a wound in your hand?
  6. முன் கை நீண்டால் முழங்கை நீளும். If your fore arm stretches out, the elbow will stretch
  7. எச்சில் கையால் காக்கா ஓட்டமாட்டான். He does not chase crows with his hand after eating (which has grains of rice sticking)
  8. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? Can you choose to worship the sun after going blind?
  9. அவன் முகத்தில் ஈ ஆடவில்லை No fly moved on his face
  10. என் முகத்தில் கரி பூசினான் He smeared coal dust on my face

 

 இ. ரோஜா is rose. Identify the five names of flowers from the nouns below and give their meaning. You may consult a dictionary.

 

மல்லிகை, தாமரை, வேப்பம்பூ, மத்தாப்பு, சாமந்தி, சிவப்பு, தாழம்பூ

 

ஈ. Give the male counterpart of the feminine nouns below and their meaning. You may consult a dictionary.

 

Ex. ராணி                        ராஜா ‘king’

 

  1. அரசி
  2. மாணவி
  3. மனைவி
  4. மடைச்சி
  5. தமிழச்சி
  6. கதாநாயகி
  7. காதலி
  8. அக்கா
  9. பசுமாடு
  10. கோழி