20. அன்பைக் கெடுத்தவன்

                                                                                                                                   20 - அன்பைக் கெடுத்தவன்

 

 

ஒரு வீட்டில் ஒரு பிராமணனும் அவனுடைய மனைவியும் குடியிருந்தார்கள்.  அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தார்கள்.  ஒருநாள் இரவு பிராமணன் சாப்பிட உட்கார்ந்தான்.  மனைவி அவனுக்குச் சாதம் படைத்தாள்.  சாதம் சூடாக இருந்ததால் அவன் சாப்பிடும்போது விசிறியை வைத்து வீசினாள்.

 

அந்த நேரத்தில் திண்ணையில் வந்து உட்கார்ந்தான் ஒருவன்.  பிராமணனும் அவனுடைய மனைவியும் அன்பாக இருப்பதைப் பார்த்தான். இந்த அன்பு எவ்வளவு ஆழமானது என்று பார்க்க நினைத்தான். பிராமணனும் அவனுடைய மனைவியும் ஒருவர் மேல் ஒருவர் சந்தேகப்படுவதற்கு ஒரு சூழ்ச்சி செய்தான்.

 

திண்ணையிலிருந்து “சம்போ! மகாதேவா!” என்ற ஒரு குரல் கேட்டது.  “யாரோ ஒரு சாமியார் வந்திருக்கிறார்.  நான் அவரை நமஸ்கரித்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பிராமணனுடைய மனைவி வெளியே வந்தாள்.  சாமியாரைக் கும்பிட்டாள். 

 

“பெண்ணே! உன்னிடம் ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன்.  ரகசியத்தைக் காப்பாற்றுவாயா?” என்று கேட்டார் சாமியார்.

 

“காப்பாற்றுகிறேன்”

 

“உன் புருஷன் போன ஜன்மத்தில் உப்பு வியாபாரியாக இருந்தவன்.  உனக்குச் சந்தேகமாக இருக்கிறதா?  அவன் தூங்கும்போது அவனுடைய காலை நக்கிப் பார்”. 

 

சாப்பிட்டுவிட்டுப் பிராமணன் வெளியே வந்தான்.  “சுவாமி! நமஸ்காரம்” என்றான். 

 

அவனுடைய மனைவி வீட்டுக்குள்ளே போய்விட்டாள்.

 

“உன்னிடம் ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன்.  உன் மனைவி...”

 

“அவளுக்கு என்ன?”

 

“அவள் போன ஜன்மத்தில் ஒரு நாயாக இருந்தாள்.  இப்போதும் அந்தக் குணம் அவளிடம் இருக்கிறது.  உனக்குச் சந்தேகமாக இருக்கிறதா?  இன்றைக்கு இரவு நீ தூங்குவது போலப் படுத்திரு.  அவள் உன் காலை நக்குவாள்.  நீ தெரிந்துகொள்ளலாம்”.

 

பிராமணன் அன்றிரவு படுக்கையில் படுத்ததும் கண்ணை மூடிக்கொண்டான்.  பத்து நிமிடம் கழிந்தது.  பிறகு அவனுடைய மனைவி சத்தம் போடாமல் எழுந்தாள்.  மெல்லத் தவழ்ந்து போய்க் கணவனுடைய காலை நக்கினாள்.  “தூ! உப்புக் கரிக்கிறது. போயும் போயும் ஒரு வைசியனைக் கல்யாணம் செய்தேனே” என்று வெறுப்போடு சொன்னாள்.

 

“நீ ஒரு நாயாகப் பிறந்தவள்!” என்று கத்திக்கொண்டு எழுந்திருந்தான் பிராமணன்.

 

இரண்டு பேருக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டது.  பிறகு பிராமணன் மனைவியை அடிக்க, வாய்ச்சண்டை கைச்சண்டை ஆயிற்று.  வலி தாங்க முடியாததால் அவள் அலறி அழுதாள்.  மனைவி அதிகமாக அலற அலற, பிராமணன் ஓங்கி ஓங்கி அடித்தான்.

 

திண்ணையிலிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சாமியார், ‘பிறப்பால் வரும் வேற்றுமை ஏழு பிறவிக்கும் போகிறது’ என்று சிரித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தார்.

 

Glossary

அன்பு                                                              love, affection

கெடு (கெடுக்க, கெடுத்து)                               spoil, destroy

பிராமணன்                                                     Brahmin, member of a priestly caste

குடியிரு (குடியிருக்க, குடியிருந்து)                  reside

உயிரை வை (வைக்க, வைத்து)                        be passionate, bet one’s life

சாதம்                                                            cooked rice

படை (படைக்க, படைத்து)                              serve

சூடாய்                                                           hot

விசிறி                                                            hand fan

வீசு (வீச, வீசி)                                                 fan

திண்ணை                                                       an elevated portion in the house front, pial

ஆழம்                                                             depth

சந்தேகப்படு (-பட, -பட்டு)                                 suspect, doubt

சம்போ                                                           a term of address to Shiva by his name சம்பு

மகாதேவா                                                      a term of address to Shiva by his name மகாதேவன்                                                                                                

குரல்                                                               voice

சூழ்ச்சி                                                           conspiracy

சாமியார்                                                         mendicant

நமஸ்கரி (நமஸ்கரிக்க, நமஸ்கரித்து)                salute with folded hands

கும்பிடு (கும்பிட, கும்பிட்டு)                               salute with folded hands

ரகசியம்                                                         secret

காப்பாற்று (காப்பாற்ற, காப்பாற்றி)                protect

புருஷன்                                                                        husband    (கணவன்)

ஜன்மம்                                                                         birth

உப்பு                                                                              salt

வியாபாரி                                                                  merchant

சந்தேகம்                                                                   suspicion, doubt

தூங்கு (தூங்க, தூங்கி)                                        sleep

நக்கு (நக்க, நக்கி)                                                   lick

மனைவி                                                                   wife    (பெண்டாட்டி)

குணம்                                                                       character

அன்று                                                                        that day (அன்றைக்கு)

படுக்கை                                                                    bed

நிமிடம்                                                                      minute  (நிமிஷம்)

கழி (கழிய, கழிந்து)                                                  pass

சத்தம்                                                                     noise

எழு (எழ, எழுந்து)                                                   get up  ( எழுந்திரு)

தவழ் (தவழ, தவழ்ந்து)                                             crawl

கரி (கரிக்க, கரித்து)                                                taste salty

தூ                                                                          expression of disgust, of spitting

போயும் போயும்                                                      after all

வைசியன்                                                               Vaishya, member of a business caste

வெறுப்பு                                                                 hatred

பிற (பிறக்க, பிறந்து)                                              be born

கத்து (கத்த, கத்தி)                                                shout

எழுந்திரு (எழுந்திருக்க, எழுந்திருந்து)                    get up    (எழு)

வாய்ச்சண்டை                                                      verbal duel

கைச்சண்டை                                                       fight with hands

வலி                                                                     pain

தாங்கு (தாங்க, தாங்கி)                                          bear with

அலறு (அலற, அலறி)                                              scream

ஓங்கி அடி (அடிக்க, அடித்து)                                  hit hard with a raised hand

பிறப்பு, பிறவி                                                       birth

வேற்றுமை                                                           difference

 

Notes

 

  1. விசிறியை வைத்து: Some verbal participles are used as post-positions. Though they lose their lexical meaning, the function of the post-position vaguely relates to that meaning. வைத்து ‘holding’ as a post-position has an object and functions like instrumental case. Another example: கத்தியை வைத்து ‘with a knife’ Other verbal participles that function as a post-position include பார்த்து, நோக்கி ‘seeing’ in the sense of ‘toward’
  2. அவளுக்கு என்ன: Dative noun + என்ன is a truncated sentence whose predicate is dropped conventionally. The predicates include ஆயிற்று / ஆச்சு ‘happened’, குறை ‘lack’ etc. The given construction translates as ‘What about her?’
  3. போய்: This is added inside a sentence to suggest regret that the action is not worth doing. It goes with the word that is fore grounded as the locus of the regret. நேற்றுப் போய் அவளைப் பார்த்தாயா / பார்ப்பாயா? ‘Did you see her yesterday among all days’, நேற்று அவளைப் போய்ப் பார்த்தாயா / பார்ப்பாயா? ‘Did  you see her among all people yesterday?’

When போய் is doubled in conjunction as போயும் போயும், it has the same meaning, but greater regret. It occurs in the beginning of the sentence like a sentential adverb.

4.அலற அலற: The infinitive has the sense of simultaneity or immediacy of time, which is expressed in English by ‘as’. In modern Tamil, -உம் is added to the infinitive for it to give the sense of immediacy and the infinitive is doubled to give the sense of simultaneity. The doubled infinitive also suggests that the action is repeated. நான் சொல்லவும் அவன் போய்விட்டான் ‘On my saying / as soon as I said (that), he left’,  நான் சொல்லச் சொல்ல அவன் போய்விட்டான் ‘As I was telling him (not to) repeatedly, he left. In given contexts, the implication is ‘in spite of’: In spite of my telling him (not to) he left. அவளை அலற அலற அடித்தான் ‘(He) hit her as she screamed more and more’.

5. ஓங்கி ஓங்கி: The verbal participle is doubled to give the meaning that the action is repeated and / or intense. That is, doubling indicates plurality and intensity of action. புஸ்தகத்தை எடுத்து எடுத்துக் கொடுத்தான் ‘(He) repeatedly picked up and gave the books’, புஸ்தகத்தை ரசித்து ரசித்துப் படித்தான் ‘(He) read the book intensely enjoying it’. When the Verb Phrase itself is about an intensive action, the verbal participle is always doubled: புஸ்தகத்தை விழுந்து விழுந்து படித்தான் (*புஸ்தகத்தை விழுந்து படித்தான்) ‘(He) read the book devouringly’

Any word in the Verb Phrase may be doubled to give the sense of plurality of action: அவன் கையைக் கையைத் தூக்கினான் ‘He lifted his hand again and again’, பூனை வெளியே வெளியே ஓடிப்போயிற்று ‘The cat ran out repeatedly’

 

 

Exercise

 

அ. Answer the questions below in Tamil.

 

a .வீட்டுக்கு வந்தவன் மனைவியிடமும் கணவனிடமும் என்ன சொன்னான்?

 

       b. எதற்காக அப்படிச் சொன்னான்?

 

 

ஆ. To describe an intimate, inseparable relationship, Tamil uses fixed combinations like உயிரையே வை ‘be passionate about’ and conventional comparisons like the following. Describe their meaning in English.

 

  1. ஈருடலும் ஓருயிரும் போல (ஈர் ‘two’, உடல் ‘body’, ஓர் ‘one’)
  2. நகமும் சதையும் போல (நகம் (finger) nail’, சதை ‘flesh’)
  3. கண்ணும் இமையும் போல (இமை ‘eye lid’)
  4. மலரும் மணமும் போல (மலர் ‘flower’, மணம் ‘fragrance’)
  5. கடலும் அலையும் போல (கடல் sea’, அலை ‘waves'

இ. The generic verb போடு is added to some nouns to make verbs. Their meaning is a variable determined by the meaning of the noun and by convention. Make such verbs from the nouns below and give their meaning.

 

Ex. சத்தம் ‘noise’                      சத்தம் போடு ‘make noise’

 

  1. போட்டி ‘competition’
  2. சண்டை ‘fight’
  3. சட்டை ‘shirt’
  4. கட்டு ‘bandage’
  5. சாதம் ‘rice’
  6. உப்பு ‘salt’
  7. கோடு ‘line’
  8. கோலம் ‘rangoli
  9. பாட்டு ‘music’
  10. நாடகம் ‘drama’

 

ஈ. The generic verb செய் (and பண்ணு) ‘do, make’ is added to some nouns to make verbs. Their meaning is a variable determined by the meaning of the noun and by convention. Make such verbs from the nouns below and give their meaning.

 

Ex. சூழ்ச்சி ‘trick, conspiracy’             சூழ்ச்சி செய் ‘play a trick, conspire’

 

  1. கல்யாணம் ‘marriage’
  2. நமஸ்காரம் ‘salutation’
  3. வேலை ‘work’
  4. முயற்சி ‘effort’
  5. மோசம் ‘bad thing, betrayal’