21. அறிவும் உணர்வும்

                                                               21. அறிவும் உணர்வும்

 

 

இரவு இரண்டு மணி  இருக்கும்.  ஏதோ ஒரு கெட்ட கனவு கண்டு விழித்தாள், உஷா.  ஒரு பக்கத்தில் மூன்று வயதுக் குழந்தை ரமணியும் மற்றொரு பக்கத்தில் கணவன் நாராயணனும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.  வீட்டின் பின்பக்கம் போக நினைத்து, உஷா எழுந்து விளக்கைப் போட்டாள்.  மின்சார வெளிச்சம் அறை முழுவதும் நிறைந்தது.  ரமணியைப் பார்த்ததும் அவள் திடுக்கிட்டாள்.  ரமணி நிம்மதியாகத்தான் தூங்கிக்கொண்டிருந்தாள்.  ஆனால் அவளுடைய உச்சந்தலையில் ஒரு பெரிய தேள், கொடுக்கை உயர்த்திக்கொண்டு நின்றது.  ‘தேவி, கோமதியம்மா!  நீதான் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும்’ என்று உஷா மனத்துக்குள் வேண்டிக்கொண்டாள்.  குழந்தை தலையை லேசாக அசைத்தால்கூடத் தேள் கொட்டிவிடுமே!  உச்சந்தலையில் உட்கார்ந்திருக்கிற தேளை அடிக்கவும் முடியாதே!  உஷா தவியாய்த் தவித்தாள்.  ‘தாயே, கோமதியம்மா!  நாங்கள் உன்னை மறந்தது தப்புத்தான்.  எங்களை மன்னித்துவிடு’ என்று வேண்டிக்கொண்டாள்.

 

தேள் குழந்தையின் தலையிலிருந்து தலையணைக்கு இறங்கியது.  உஷா நாராயணனை எழுப்பினாள்.  நாராயணன் “என்ன விஷயம்?” என்று பதறி எழுந்தான்.  அவள் அந்தப் பெரிய தேளைக் காட்டினாள்.  அவன் சமையலறைக்கு வேகமாகப் போனான். தேளை அடிக்க ஒரு விறகுக் கட்டையை எடுத்துக்கொண்டு வந்தான்.  அவன் வருவதற்குள் தேள் எங்கேயோ ஓடி மறைந்துவிட்டது.

 

“உஷா! நீ குழந்தையை எடுத்துக்கொள்.  சமுக்காளத்தை உதறிப் பார்ப்போம்” என்றான்.

 

சமுக்காளம், தலையணை எல்லாவற்றையும் உதறினான்.  மின்சார வெளிச்சம் படாத இடங்களில் எல்லாம் ‘டார்ச்’ அடித்துப் பார்த்தான்.  அந்தத் தேள் மாயமாய் மறைந்துவிட்டது.

 

மறுபடியும் படுத்தபோது, அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை.

 

“நான் சொன்னால் கேட்கிறீர்களா?  முன்னே ரமணிக்குக் காலில் படை வந்தபோது கோமதியம்மாளுக்கு வெள்ளிக்கால் செய்துவைப்பதாக நேர்ந்துகொண்டோமே!  அந்த நேர்த்திக்கடனை இன்றுவரை செய்யவில்லை.  அதை ஞாபகப்படுத்தத்தான் அம்பாள் தேளை அனுப்பியிருக்கிறாள்” என்றாள், உஷா.

 

“போடி, பைத்தியம்!  இது காற்றுக்காலம்.  காற்றுக்காலத்தில் தேள் அதிகமாய் வரும்.  இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை” என்றான் அவன்.

 

“அப்படியெல்லாம் பேசாதீர்கள். அது அம்பாள் அனுப்பிய தேள்தான்.  இல்லாவிட்டால் எப்படி மாயமாய் மறையும்?”

 

“கதவு இடுக்கு வழியாக வெளியே போயிருக்கும்.  இதில் என்ன மாயம்?”

 

“இப்படிப் பேசுவதே பாவம்.  வெள்ளிக்காலோடு வெள்ளித்தேளும் அம்பாளுக்கு செய்துவைக்க வேண்டும்” என்று சொன்னாள், உஷா.  எழுந்துபோய் ஒரு மஞ்சள் துணியில் வெள்ளி நாணயத்தை முடிந்துவைத்தாள்.

 

அவளோடு வாதிடுவதில் பயனில்லை என்று நாராயணனுக்குத் தெரியும்.  ஒரு நாள் நேர்த்திக்கடனைச் செய்யச் சங்கரன் கோயிலுக்கு அவன் தன்னோடு வருவான் என்று உஷாவுக்குத் தெரியும்.

 

இருவரும் கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டனர்.

 

Glossary

அறிவு                                                                              rational thinking, knowledge

உணர்வு                                                                          intuitive beliefs, feeling

கெட்ட கனவு                                                               bad dream

விழி (விழிக்க, விழித்து)                                        wake up

புறவாசல்                                                                     backyard

விளக்கு                                                                        light, lamp

அறை                                                                            room

மின்சார வெளிச்சம்                                               electric light

நிறை (நிறைய, நிறைந்து)                                   fill up

திடுக்கிடு (திடுக்கிட, திடுக்கிட்டு)                    be startled

நிம்மதி                                                                       state of relief

உச்சந்தலை                                                             crown of the head

தேள்                                                                            scorpion

கொடுக்கு                                                                 sting

உயர்த்து (உயர்த்த, உயர்த்தி)                          raise

குழந்தை                                                                  child  (பிள்ளை)

காப்பாற்று                                                               save

மனம்                                                                        mind   (மனது)

லேசாக                                                                     slightly, a bit

அசை (அசைக்க, அசைத்து)                            move

அடி                                                                            hit, (with light) flash

தவி (தவிக்க, தவித்து)                                      feel anxious and helpless

வேண்டிக்கொள் (-கொள்ள, கொண்டு)      pray to God

அசை (அசைக்க, அசைத்து)                         shake, move

கொட்டு (கொட்ட, கொட்டி)                           sting

மன்னி (மன்னிக்க, மன்னித்து)                   forgive

தலையணை                                                      pillow

எழுப்பு (எழுப்ப, எழுப்பி)                               wake up (somebody)

பதறு (பதற, பதறி)                                           panic

காட்டு (காட்ட, காட்டி)                                   show

சமையலறை                                                   kitchen

வேகமாக                                                           fast

விறகுக் கட்டை                                             a piece of fire wood

மறை (மறைய, மறைந்து)                       disappear

சமுக்காளம்                                                   a carpet like fabric to sleep on (or to sit on)

உதறு (உதற, உதறி)                                    shake off

டார்ச்                                                                 flash light

மாயமாய்                                                        mysteriously

மறுபடி                                                             again

படு (படுக்க, படுத்து)                                  lie down

தூக்கம்                                                          sleep

படை                                                              eczema

வெள்ளிக்கால்                                          leg shaped silver offering                               

நேர்ந்துகொள்                                           take a vow (to a deity)

நேர்த்திக்கடன்                                          vow made to a deity

ஞாபகப்படுத்து (-படுத்த, -படுத்தி)    remind

அனுப்பு (அனுப்ப, அனுப்பி)              send, despatch

பைத்தியம்                                               crazy

காற்றுக்காலம்                                       windy season

சமபந்தம்                                                 connection, relation

பேசு                                                             talk, speak

அம்பாள்                                                   goddess

கதவு                                                           door

இடுக்கு                                                     gap, opening between joints

எழு                                                              get up (from bed)

மஞ்சள்                                                       yellow

நாணயம்                                                    coin

முடி (முடிய, முடிந்து)                        tie with a knot

வாதிடு (வாதிட, வாதிட்டு)                 argue

இருவரும்                                              both (இரண்டுபேரும்)

 

Notes:

 

  1. தவியாய்த் தவி: Verbs relating to mental states may double to indicate the intensity of the state of mind. The verb itself is not doubled, but the noun from the verb + the adverbial marker –ஆய் is the first part of the doubling. அவள் தவித்தாள் ‘She was distressed helplessly’, அவள் தவியாய்த் தவித்தாள் ‘She was intensely distressed helplessly’. Another example: அவன் அரிக்கிறான் ‘He pesters’, அவன் அரியாய் அரிக்கிறான் ‘He pesters intensely’

An alternative way of expressing the same sense of intensity is to use the verb preceded by a repetition of the verb root connected to the verb by என்று. அவள் தவிதவியென்று தவித்தாள்; அவன் அரிஅரியென்று அரிக்கிறான்.

Getting into an emotional state could be made intensive with the noun repeated with the adverbial marker. எனக்கு அழுகை வந்தது ‘I got to crying’, எனக்கு அழுகை அழுகையாக வந்தது ‘I got to crying intensely’; எனக்குக் கோபம் வரும் ‘I will get angry’, எனக்குக் கோபம் கோபமாக வரும் ‘I will get intensely angry’.

When the noun in this construction is non-emotional, the repeat construction is used to mean excess quantity or multiplicity. அவனுக்குக் கஷ்டம் வந்தது ‘He had difficulties’, அவனுக்குக் கஷ்டம் கஷ்டமாக வந்தது ‘He had difficulties after difficulties’; அவளுக்குப் பணம் வந்தது ‘She got money’, அவளுக்குப் பணம் பணமாக வந்தது ‘She got more and more money’. When the excess is prototypical, the use of noun without duplication is unusual: அவன் ரத்தம் ரத்தமாகக் கக்கினான் ‘He vomited lot of blood’ is common compared to அவன் ரத்தத்தைக் கக்கினான் ‘He vomited blood’

The sense of intensity and excess quantity could be expressed with the noun and the adverbial marker alone without repeating the noun. This is more common in the colloquial style. அவளுக்கு அழுகையாய் வந்தது ‘She got to crying intensely’; அவளுக்கு பணமாய் வந்தது ‘She got more and more money’.

  1. வருவதற்குள்: This is same as வருவதற்குமுன் in meaning and structure. The base verbal noun always takes the future tense marker. It is the present tense markers in the colloquial style. But the meaning is same in both, which is non-past. Alternate forms are: வருவதற்கு முன்னால், வருவதற்கு முன்னாலே, வருவதற்குள்ளே
  2. செய்துவைப்பாதாக: -ஆக with the verbal nouns is similar to என்று with the finite verb. The given form could alternate with செய்துவைக்கிறோம் என்று. The difference between them is that the pronoun in the –ஆக construction that refers to the subject in the higher sentence must be தான் and it cannot be நான், which would refer to the speaker. குமார் தான் / தன் வீட்டுக்குப் போவதாகச் சொன்னான் ‘Kumar said that he (Kumar) was going / to his (Kumar’s house) whereas குமார் நான் / என் வீட்டுக்குப் போவதாகச் சொன்னான் ‘Kumar said that I (speaker) was going / to my (speaker’s) house. Compare this with குமார் தான் வீட்டுக்குப் போகிறேன் என்று சொன்னான் ‘Kumar said that he (Kumar) was going home)’ and  குமார் நான் வீட்டுக்குப் போகிறேன் என்று சொன்னான் ‘Kumar said that I (Kumar or speaker) was going home’
  3. போடி: போ is used to signify dismissal of some claim as unworthy or unrealistic, or to signify defiance. போ, போ, உன்னை நம்ப முடியாது ‘Go, I can’t trust you’; அவன் படித்தான், போ ‘(in response to a claim that he will study) I don’t believe he will’; நான் சாப்பிடமாட்டேன், போ ‘I won’t eat, no matter what’.

 

Exercise

 

       அ. Who said the following to whom?

 

  1. “நீதான் என் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும்”

 

  1. “நாங்கள் உன்னை மறந்தது தப்புத்தான்”

 

  1. “சமுக்காளத்தை உதறிப் பார்ப்போம்”

 

  1. “அந்த நேர்த்திக்கடனை இன்றுவரை செய்யவில்லை”

 

  1. “இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை”

 

  1. “அப்படியெல்லாம் பேசாதீர்கள்”

 

  1. “இதில் என்ன மாயம்”

 

  1. “இப்படிப் பேசுவதே பாவம்”

 

 

ஆ. In the above quotes, what do the following refer to?

 

  1. அந்த in (d)

 

  1. இதற்கு in (e)

 

  1. அப்படி in (f)

 

  1. இதில் in (g)

 

  1. இப்படி in (h)

 

 

 

     இ.  The generic verb அடி is added to some nouns to make verbs. Their meaning is a variable determined by the meaning of the noun and by convention. Make such verbs from the nouns below and give their meaning

 

Ex. டார்ச் ‘flash light’                டார்ச் அடி ‘turn on the flash light’

 

  1. டைப் ‘typing’
  2. மணி ‘bell, strike of a clock’
  3. வெயில் ‘sunshine’
  4. காய்ச்சல் ‘fever’
  5. காற்று ‘wind’
  6. வாசனை ‘smell’
  7. அதிர்ஷ்டம் ‘luck’
  8. இருதயம் ‘heart’
  9. வெள்ளை ‘white (paint)
  10. அச்சு ‘printing’

 

     ஈ. The generic verb இடு (semantically close to போடு and வை) is added to some nouns to make verbs. Their meaning is a variable determined by the meaning of the noun and by convention. Make such verbs from the nouns below and give their  meaning. Some of these verbs have frozen to be treated as simple verbs. Excepting such verbs, இடு is less common in speech compared with போடு and வை.

 

            Ex. வாது ‘argument’   வாதிடு ‘argue’

 

  1. போட்டி ‘competition’
  2. முட்டை ‘egg’
  3. நாமம் ‘religious mark on the forehead’
  4. கட்டளை ‘order’
  5. தலை ‘head, figuratively, interference when used with இடு’

 

    உ. படு in the sense of ‘experience’ is added to nouns to make verbs to mean ‘experience, go through as in கோபப்படு, கஷ்டப்படு. படு in the sense of ‘touch; is added to nouns to make verbs to mean ‘come into contact. Add படு in this sense to the nouns below and give their meaning. Some of the verbs have idiomatic sense.

             Ex. வெளிச்சம் ‘light’   வெளிச்சம் படு ‘(something) light up’

 

  1. கால் ‘foot’
  2. கை ‘hand’
  3. கறை ‘stain’
  4. தீட்டு ‘(ritual) pollution’
  5. கண் ‘(evil) eye’