22. “வறுமையை ஒழிப்போம்!”

 

                                                             22. “வறுமையை ஒழிப்போம்!”

 

“வேலப்பா” என்ற குரலைக் கேட்டு வேலப்பன் குடிசைக்கு வெளியே வந்தான்.

 

குடிசைக்குச் சொந்தக்காரர் நின்றுகொண்டிருந்தார்.  “என்ன வேலப்பா!  உனக்கே நன்றாய் இருக்கிறதா?  மூன்று மாத வாடகையைப் பாக்கி வைத்திருக்கிறாயே!” என்றார்.

 

“என்ன செய்கிறது, முதலாளி!  இப்போது கொஞ்சம் கஷ்டமான காலம்.  அலைந்துதான் பார்க்கிறேன்.  வேலை கிடைக்க மாட்டேன் என்கிறதே!  எம்பிளாய்மெண்ட் ஆபீசிலேகூடப் பதிந்து வைத்திருக்கிறேன்”.

 

“உன் கஷ்டம் உனக்கு; என் கஷ்டம் எனக்கு.  வருகிற ஒன்றாம் தேதி நீ நான்கு மாத வாடகையையும் கொடுத்துவிட வேண்டும்.  இல்லாவிட்டால் குடிசையைக் காலிபண்ண வேண்டும்”.

 

அவர் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.  வேலப்பன் பெருமூச்சு விட்டான்.  பத்து வருஷமாக அவன் ஒரு ரைஸ்மில்லில் வேலைபார்த்தான்.  மூன்று மாதத்துக்கு முன்பு மில் முதலாளி ‘மில்’லை மூடிவிட்டார்.  மில் நஷ்டத்தில் ஓடியதாம்.  வேலப்பனுக்கு வேறு வேலை கிடைக்கவில்லை.  தெரிந்தவர்களிடம் எல்லாம் அவன் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று கடன் வாங்கிவிட்டான்.  அக்கம் பக்கத்துக் குடிசைகளில் எல்லாம் அவனுடைய மனைவி மருதாயி அரிசி, பருப்பு என்று சாமான்கள் கடன் வாங்கிவிட்டாள்.  இப்போது ஒரு வாரமாக யாரும் கடன் கொடுக்கவில்லை.  பழைய கடனைத் திருப்பிக் கொடுத்தால்தான் இனிமேல் கடன் தருவோம் என்று சிலர் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள்.  தினம் ஒரு வேளைச் சாப்பாடுகூட ஒழுங்காகக் கிடைக்கவில்லை.

 

அரசு அழுதுகொண்டே வந்தான்.  அவன் வேலப்பனுடைய ஒரே மகன்.  இந்த மாதம்தான் மூன்றாம் வகுப்பு படிக்கத் தொடங்கியிருந்தான்.

 

“என்னடா அரசு!  மணி பத்தரைதானே ஆகிறது?  அதற்குள்ளே பள்ளிக்கூடத்திலிருந்து வந்துவிட்டாயே! என்றான் வேலப்பன்.

 

“புஸ்தகத்துக்குப் பணம் கொண்டுவந்தால்தான் வகுப்புக்குள்ளே விடுவார்களாம்”.

 

“எவ்வளவு கொடுக்க வேண்டும்?”

 

“ஒரு வாரத்துக்கு முன்பே சொன்னேனே!  மறந்துவிட்டீர்களா?  பத்து ரூபாய்”

 

“அவ்வளவுதானே!  நீ பள்ளிக்கூடத்துக்குப் போ.  நான் பணம் கொண்டுவருகிறேன்”.

 

“ஊகூம்.  நான் போக மாட்டேன்.  பணம் இல்லாவிட்டால் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்”.

 

“சரி.  நீ இங்கேயே இரு.  நான் பணம் கொண்டுவருகிறேன்”.

 

வேலப்பன் குடிசைக்கு வெளியே வந்தான்.  பத்து ரூபாய்க்கு எங்கே போவது?  வேலையில்லாதவனை நம்பி யார் பத்து ரூபாய் கொடுப்பார்கள்?  அவன் எந்த வேலையானாலும் செய்வதற்குத் தயாராய் இருந்தான்.  வேலை கிடைக்கவில்லையே!  மனம் போன போக்கில் அவன் நடந்துகொண்டிருந்தான்.

 

அவனுக்கு முன்னே இரண்டு பேர் பேசிக்கொண்டு போனார்கள்.  “உனக்கு விஷயம் தெரியுமா?  இன்றைக்கு நம் ஊருக்கு யாரோ பெரிய மந்திரி வருகிறாராம்” என்றான் ஒருவன்.  “எந்த மந்திரி வந்தால் நமக்கு என்ன?  வாய் நிறையப் போகிறதா, வயிறு நிறையப் போகிறதா?” என்றான் மற்றவன்.  “விஷயம் தெரியாதா?  பெரிய ஊர்வலம் நடக்குமாம்.  பொதுக்கூட்டமும் உண்டாம்” என்றான் முதல் ஆசாமி.  “நடந்தால் நமக்கு என்ன?” என்றான் இரண்டாமவன்.  “பொதுக்கூட்டத்திற்குப் போனால் இரண்டு ரூபாயாம்.  இரண்டிற்கும் போனால் ஐந்து ரூபாயாம்” என்றான் முதலாமவன்.  “அப்படிச் சொல்!  எங்கே, கட்சி ஆபீசுக்குத்தானே போகவேண்டும்?” என்றான் இரண்டாமவன்.

 

வேலப்பன் அவர்களை நெருங்கி, “ஏன் அண்ணே?  யார் வேண்டுமானாலும் வரலாமா? என்றான்.

 

“வரலாம்.  கூட்டம் சேர்ந்தால் அவர்களுக்குச் சந்தோஷம்தானே!”

 

“பெண்கள்?”

 

‘அவர்களும்தான்”.

 

“ஊர்வலம் எத்தனை மணிக்கு?”

 

“நான்கு மணிக்கு என்று சொன்னார்கள்.  ஆனால் மூன்று மணிக்கே கட்சி ஆபீசுக்குப் போய்விட வேண்டும்”.

 

வேலப்பன் ஓட்டமும் நடையுமாகக் குடிசைக்குத் திரும்பினான்.  மருதாயியிடம் விஷயத்தைச் சொன்னான்.  “அரசு! கலயத்தில் கொஞ்சம் கூழ் இருக்கிறது.  குடித்துவிட்டு வீட்டிலேயே இரு.  வெளியே எங்கேயும் போகக்கூடாது” என்று மகனிடம் சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள்.  இரண்டு பேரும் இரண்டரை மணிக்கே கட்சி ஆபீசுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்.

 

ஐந்து மணிக்குத்தான் ஊர்வலம் கிளம்பியது.  முதலில் ஒரு யானை போயிற்று.  அதன் மேல் ஒருவர் கொடி பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.  அதன் பிறகு அலங்கார வண்டிகள், சைக்கிள் ரிக் ஷாக்கள், சைக்கிள்கள்.  அப்புறம் பெண்களின் அணிவகுப்பு.  அதைத் தொடர்ந்து ஆண்கள் போனார்கள்.

 

“மகாத்மா காந்திக்கு....” என்று ஒருவன் சத்தமாய்ச் சொன்னான்.

 

‘தொண்டர்கள்’ எல்லாம் “ஜே!” என்று முழங்கினார்கள்.

 

“பாரதப் பிரதமர் இந்திரா காந்திக்கு...”

 

“ஜே!”

 

“வறுமையை...”

 

“ஒழிப்போம்!”

 

பசியையும் களைப்பையும் மறந்து, வேலப்பனும் “ஒழிப்போம்!” என்று முழக்கம் செய்தான்.

 

Notes

 

1.மாட்டேன் என்கிறது: The construction of a negative finite verb in the future and the first person (singular and plural) finite verb of என் is used to express the mood of failure of will or trial. Other examples: தம்பி படிக்க மாட்டேன் என்கிறான் ‘The younger brother wouldn’t study’, குழந்தைகள் தூங்க மாட்டோம் என்கிறார்கள் ‘The children wouldn’t sleep’, கதவு திறக்க மாட்டேன் என்கிறது ‘The door wouldn’t open’. The same sense is conveyed by an alternative construction, which is a questioned positive verb in the future and the first person (singular and plural) finite verb of என். Examples: தம்பி படிப்பேனா என்கிறான் and others.

2. அக்கம்பக்கம்: Echo words like these are common in Tamil. They are usually composed of two words that are semantically close or they belong to the same semantic class, one which could be out of currency presently. The words have a fixed sequence. The function of the echo words is to express a collective noun or a hyponym. Other examples: சந்து பொந்து ‘nook and corner’, ஆடு மாடு ‘cattle’, வீடு வாசல் ‘properties’, மனைவி மக்கள் ‘family’

3. அரிசி, பருப்பு என்று: என்று after enumeration suggests that the list is not complete and there are similar things. என்று will translate as ‘such as’. என்று is common in colloquial style, whose common equivalent is formal style is ஆகிய. When enumeration is expressed by the conjunctive marker –உம், the list is complete.

4. ஒரு வாரமாக: -ஆக with time expressions gives the sense ‘over a period of time from a given time’. That is, it suggests that the event described started at the beginning of the time mentioned. ஒரு வாரம் மழை பெய்தது ‘It rained for a week (with no reference to the starting time); ஒரு வாரமாக மழை பெய்கிறது ‘It has been raining since a week (giving the starting time as a week ago)’

A related construction with –ஆக in the sense of ‘in continuous sequence’ is the duplicated noun. The construction with numerals such as இரண்டு இரண்டு பேராக வந்தார்கள் ‘(They) came (one after another) in twos’ was already mentioned. Examples of non-numeral duplicate noun construction with –ஆக are: நாங்கள் வீடு வீடாகப் போனோம் ‘We went house after / by house, அவன் கடன் கடனாக வாங்கினான் ‘He took loan after loan’

5. மூன்றாம் வகுப்பு படிக்கிறான்: A noun may be used in different case frame in more or less same meaning. In the given construction, மூன்றாம் வகுப்பு is an object of படி. Note that another object தமிழ் is not possible in addition to மூன்றாம் வகுப்பு: *அவன் மூன்றாம் வகுப்பு தமிழ் படிக்கிறான். The alternate case frame for the given construction is மூன்றாம் வகுப்பில் படிக்கிறான், where மூன்றாம் வகுப்பு is in the locative. It is possible to have an object in this sentence: அவன் மூன்றாம் வகுப்பில் தமிழ் படிக்கிறான். Another example of alternate cases with similar meaning is அவன் என் கண்ணை / கண்ணில் குத்தினான் ‘He poked my eye / into my eye’.

6. இரண்டாமவன்: Nouns can be made from noun modifiers by adding gender-number makers or the pronoun itself to them. அவன் is added to the ordinal இரண்டாம்

Second’ to give இரண்டாமவன் ‘the second person’. For the neuter numeral noun, adding அது to இரண்டாம் gives இரண்டாவது ‘the second thing’ rather than இரண்டாமது. இரண்டாவது happens to be identical with the ordinal இரண்டாவது (இரண்டு + ஆவது) ‘second’.

Similar construction is possible with the genitive modifier: என்னுடையவள் ‘my person (fem.), என்னுடையது ‘my thing, mine’.

 

Glossary

 

வறுமை                                                              poverty

ஒழி (ஒழிக்க, ஒழித்து)                                eradicate

குரல்                                                                    voice

குடிசை                                                               hut

சொந்தக்காரர்                                                owner

மாதம்                                                               month (மாசம்)

வாடகை                                                          rent

பாக்கி வை (வைக்க, வைத்து)              keep reminder, keep unpaid part

முதலாளி                                                     master, paymaster

அலை (அலைய, அலைந்து)                wander about

எம்பிளாய்மெண்ட்                                  employment

ஆபீஸ்                                                          office

பதிந்து வை  (வைக்க, வைத்து)         register

கஷ்டம்                                                       difficulty

காலி பண்ணு (பண்ண, பண்ணி)       vacate

பெருமுச்சு விடு (விட, விட்டு)          sigh

வருஷம்                                                    year

ரைஸ்மில்                                                rice mill

வேலை பார் (பார்க்க, பார்த்து)          work

நஷ்டம்                                                      loss

ஓடு (ஓட, ஓடி)                                       run ( as with a shop etc.)

தெரிந்தவர்கள்                                     acquaintance

அக்கம்பக்கம்                                       neighborhood

அரிசி                                                        rice

பருப்பு                                                      lentil

சாமான்                                                   things

கடன்                                                       loan, loan amount

வெளிப்படையாக                             openly

தா (தர, தந்து)                                       give   (கொடு)

தினம்                                                       daily

வேளை                                                   time(s) of a day

சாப்பாடு                                                  food, meal

ஒழுங்காக                                             regularly

அழு                                                         cry

மகன்                                                       son

வகுப்பு                                                    class (in school)

தொடங்கு (தொடங்க, தொடங்கி) start

பள்ளிக்கூடம்                                       school

விடு (விட, விட்டு)                                let in

வாரம்                                                         week

ஊகூம்                                                       no

வேலையில்லாதவன்                         the unemployed

நம்பு  (நம்ப, நம்பி)                                trust

மனம் போன போக்கில்                     as one’s mind wanders, without restraint

மந்திரி                                                      minister (in government)

வாய்                                                          mouth

வயிறு                                                      stomach

ஊர்வலம்                                               procession

ஆசாமி                                                    person  (ஆள்)

பொதுக்கூட்டம்                                  public meeting

நெருங்கு (நெருங்க, நெருங்கி)    approach, get closer

அண்ணே                                              term of address of அண்ணன்

கூட்டம்                                                 crowd

கட்சி                                                       political party

பெண்பிள்ளை                                   woman, girl

ஓட்டமும் நடையுமாக                 walking and running, in fast pace

கலயம்                                                  earthen pot

கூழ்                                                        gruel

கிளம்பு (கிளம்ப, கிளம்பி)            get started see text X

யானை                                                  elephant

கொடி                                                     flag

பிடி (பிடிக்க, பிடித்து)                      hold

அலங்கார வண்டிகள்                     decorated tableau (in a procession)

சைக்கிள் ரிகஷாக்கள்                   cycle rickshaw

பெண்                                                     woman

அணிவகுப்பு                                      parade

ஆண்                                                     man

ஜே                                                         term of hailing someone to have victory  (வாழ்க)

தொடர்ந்து                                          continuing, following

தொண்டர்கள்                                    volunteers

முழங்கு  முழங்க, முழங்கி      roar, rumble

பாரதம்                                                  India

பிரதமர்                                                prime minister

வறுமை                                              poverty

பசி                                                        hunger

களைப்பு                                            tiredness

முழக்கம்                                         roar, rumble

         

 

 

Exercise

அ. கீழே உள்ள கேள்விகளுக்குப் பதில் எழுது.                                 

      Answer the following questions.

 

1, வேலப்பன் ஏன் வாடகை கொடுக்க முடியவில்லை?

2. வேலப்பன் ஏன் கடன் வாங்க முடியவில்லை?

3. வேலப்பனுடைய மகன் ஏன் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியவில்லை?

4. கடைசியில் வேலப்பனுக்கு பணம் எப்படி கிடைத்தது?

5. இந்தியாவில் அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு எப்படி ஆள் சேர்க்கின்றன?

 

ஆ. வறுமையை ஒழிக்க என்ன செய்யலாம்?

 

இ. The variable verb வை ‘place, leave out’ added to the noun gives sense of leaving something to endure or repose emotion on someone. The specific meaning of வை is determined by the meaning of the noun to which it is added. The sentences below use the complex verbs formed of a noun + வை. Translate them.

 

Ex. பாக்கி ‘remainder’                              பாக்கி வை ‘keep a remainder’

வீட்டுக்குப் போகும்போது வேலை பாக்கி வைக்கக் கூடாது

When you go home you should not leave any work behind

 

  1. மிச்சம் ‘left over’ சாப்பிடும்போது மிச்சம் வைக்கக் கூடாது.

 

  1. கடன் ‘debt’ வீட்டின்மேல் எவ்வளவு கடன் வைத்திருக்கிறாய்?

 

  1. குறை ‘lack’ உனக்கு நான் என்ன குறை வைத்தேன்?

 

  1. ஆசை ‘desire’ அவன் அவள்மேல் ஆசை வைத்திருக்கிறான்.

 

  1. பாசம் ‘passion’ எந்த அம்மாவும் பிள்ளைமேல் பாசம்வைத்திருப்பாள்.

 

  1. நம்பிக்கை ‘faith, trust’ உன்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்?

 

  1. கெடு ‘deadline’ இந்த வேலையை முடிக்கக் கெடு வைத்திருக்கிறார்கள்.

 

  1. கடை ‘shop’ உன் தம்பி என்ன கடை வைக்கப் போகிறான்?

 

  1. சாம்பார் ‘sambar’ இன்றைக்கு என்ன சாம்பார் வைக்கப் போகிறாய்?

 

  1. வேலை ‘work’ நீ வேலைக்கு வராமல் எனக்கு வேலை வைத்துவிட்டாய்.

 

ஈ. The variable verb வை (similar to போடு), when added to nouns, can have the physical sense of placing something. The specific meaning of the complex verb is determined by the meaning of the noun to which it is added. Make such verbs from the nouns below and give their meaning.

 

Ex. பூ  ‘flower’                                பூ வை ‘wear flower’

 

  1. பொட்டு ‘kumkum
  2. தொப்பி ‘hat’
  3. பித்தான் ‘button’
  4. புள்ளி ‘dot’
  5. கால் ‘foot’
  6. உப்பு ‘salt’
  7. மருந்து ‘medicine (in powder form)’
  8. பாட்டு ‘song, music’
  9. தீ ‘fire’
  10. (கல்யாண) பத்திரிக்கை ‘(wedding) invitation’

               

 

  உ. When the light verb வை is added to the verbal participle, the sense the complex verb gets is that the action is done and left to stay generally in anticipation of something to happen. In the following pairs of sentences, the first sentence is without வை and the second sentence is with வை. Translate both sentences differently giving the above sense of வை to the second sentence.

 

Ex. பெயரைப் பதிந்தான்                                ‘(He) registered (his) name’

      பெயரைப் பதிந்துவைத்தான்               ‘(He registered (his) name (for employment later)

 

1.a. கதவைத் திற

  b. கதவைத் திறந்துவை

 

2.a. தாளைக் கிழி

  b. தாளைக் கிழித்துவை

    (தாள் ‘paper’, கிழி ‘tear’)

 

3.a. பத்திரிக்கையை மடித்தான்

  b. பத்திரிக்கையை மடித்துவைத்தான்

    (பத்திரிக்கை ‘news paper’, மடி ‘fold’)

 

4.a. மாட்டை மரத்தில் கட்டாதே

  b. மாட்டை மரத்தில் கட்டிவைக்காதே

    (கட்டு tie’)

 

5.a. நாட்டில் நடப்பதைத் தெரிந்துகொள்

  b. நாட்டில் நடப்பதைத் தெரிந்துவைத்துக்கொள்

 

 ஊ. The light verb வை is added to the infinitive form of the verb to give the sense that the verb is caused to happen, i.e. to make the verb causative. (செய் is also used for the same sense; this alternate is possible only in the formal style). Add வை to the infinitive form of the verbs given below and give their meaning.

 

Ex. ஓடு   ஓட வை ‘make run’

 

  1. அழு ‘cry’
  2. படு ‘lie down’
  3. படி ‘study’
  4. புரி ‘understand’
  5. சொல்லு ‘say, talk’