25. தாகம்
அவனுக்கு வருத்தமும் குழப்பமும் ஏற்பட்டன. அவன் தன் காதலியைப் பார்த்து நான்கு நாட்கள் ஆயிற்று. அதுதான் அவனுடைய வருத்தத்துக்கும் குழப்பத்துக்கும் காரணம். நான்கு நாட்களுக்கு முன்புவரை அவர்கள் தினந்தோறும் சந்தித்து வந்தார்கள்.
அவனுக்கும் அவளுக்கும் நெடுநாள் உறவு. அவர்கள் இருவரும் சிறுபிள்ளைகளாய் இருந்த காலத்திலேயே பழக்கம் ஏற்பட்டது. அவள் தெரு மணலில் வீடு கட்டி விளையாடுவாள். அவன் அந்த வழியாக வருவான். “என்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்” என்று சொல்வான். அவள் “மாட்டேன்” என்பாள். அவள் ஆசையோடு கட்டின வீட்டை அவன் தன் காலால் சிதைப்பான். சில சமயம் அவள் பந்து விளையாடுவாள். அவன் பந்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவான். இப்படித் தொடங்கிய அவர்களுடைய நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. இருவரும் இளம் பருவத்தை அடைந்தார்கள். அவர்கள் தனிமையில் சந்தித்தார்கள். தங்கள் சந்திப்பு மற்றவர்களுக்குத் தெரியாது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் எப்படியோ அவளுடைய அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது. பெற்றவள் சும்மா இருப்பாளா? “வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது” என்று மகளைக் கட்டுப்படுத்தினாள். அதனால்தான் அவள் அவனைச் சந்திக்க முடியவில்லை.
அவன் அவளைச் சந்திக்கத் துடித்தான். அவளுடைய வீட்டுக்கு முன்னால் நின்றான். “அம்மா! தாயே! தாகமாய் இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்” என்று சொன்னான். அம்மா சமைத்துக்கொண்டிருந்தாள். வெளியே நிற்பவன் யார் என்று அவளுக்குத் தெரியாது. “பாவம்! செம்பில் தண்ணீர் கொண்டுபோ! அவனுடைய கையில் ஊற்றிவிட்டு வா” என்று மகளிடம் சொன்னாள்.
மகள் வாசலுக்கு வந்ததும் காதலனைப் பார்த்தாள். அவளுக்கு மகிழ்ச்சியும் பயமும் ஏற்பட்டன. அவள் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். “கையை நீட்டு. தண்ணீர் ஊற்றுகிறேன்” என்று சொன்னாள். அவன் அவளூடைய கைகளைப் பிடித்தான். அவனுடைய பிடியில் கண்ணாடி வளையல் உடைந்தது. உடைந்த துண்டு அவளுடைய கையைக் குத்திற்று. அவள் “அம்மா” என்று அலறினாள். தாய் பதறி வாசலுக்கு ஓடி வந்தாள். “என்ன நடந்தது?” என்று கேட்டாள். மகள் சமாளித்துக்கொண்டாள். “தண்ணீர் குடிக்கும்போது இவனுக்கு விக்கல் எடுக்கிறது” என்று சொன்னாள். “விக்கல் எடுத்தால் முதுகைத் தடவிவிட வேண்டும். அலறினால் என்ன பயன்?” என்று தாய் சொன்னாள். தாய் அவனுடைய முதுகைத் தடவிவிடத் தொடங்கினாள். அவன் சிரித்தான். தன் காதலியைக் கடைக்கண்ணால் பார்த்தான். அந்தப் பார்வை அவளைக் கொன்றுவிடும் போல் இருந்தது.
Glossary
வருத்தம் sorrow
குழப்பம் confusion
காதலி fiancée
தினந்தோறும் every day
சந்தி (சந்திக்க, சந்தித்து) meet
நெடுநாள் for a long time
உறவு relationship
பழக்கம் acquaintance
தெரு street
விளையாடு (விளையாட, விளையாடி) play
சேர் (சேர்க்க, சேர்த்து) join
சிதை (சிதைக்க, சிதைத்து) destroy
பந்து ball
தொடங்கு (தொடங்க, தொடங்க) start, begin
வளர் (வளர, வளர்ந்து) grow
இளம்பருவம் young age
அடை (அடைய, அடைந்து) reach
தனிமை privately
சந்திப்பு meeting
மற்றவர்கள் others
நினை (நினைக்க, நினைத்து) think
பெற்றவள் mother, one who gave birth to
சும்மா இரு (இருக்க, இருந்து) be quiet
கட்டுப்படுத்து (கட்டுப்படுத்த, கட்டுப்படுத்தி) control
துடி (துடிக்க, துடித்து) be anxious
தாகம் thirst
சமை (சமைக்க, சமைத்து) cook
செம்பு small pot
ஊற்று (ஊற்ற, ஊற்றி) pour
வாசல் door step
காதலன் lover
மகிழ்ச்சி happiness
மனம் mind
பிடி (பிடிக்க, பிடித்து) hold
கண்ணாடி glass
வளையல் bangles
உடை (உடைய, உடைந்து) break
துண்டு piece
சமாளி (சமாளிக்க, சமாளித்து) manage
குடி (குடிக்க, குடித்து) drink
விக்கல் hiccup
முதுகு back
தடவு (தடவ, தடவி) rub
பயன் use
சிரி (சிரிக்க, சிரித்து) laugh
கடைக்கண் corner of the eye
பார்வை look
This story is drawn from கலித்தொகை, one of the eight anthologies of poems written in the Sangam period, which covers a couple of centuries before and after the Common Era. The poems in this particular anthology belong to the later part of this period. They are written in the poetic meter called கலிப்பா. Unlike the other anthologies, the poems have a structure of a dialogue. Sangam poems are classified into two major divisions called அகம், the interior and புறம், the exterior. The poems in the former division are on emotions of relationship between man and woman and they are expressed namelessly; the poems in the latter division are on actions and thoughts of kings and poets and they are particularized. The அகம் poems are classified around five themes named after five landscapes which are metaphors for the different facets of the relationship and their emotional states. They are குறிஞ்சி ‘hills’, where the pre-marital meeting and union are placed, முல்லை ‘dry farm land’, where home scenes after marriage are placed, நெய்தல் ‘seaside’, where anxieties of uncertainties of the relationship are placed, மருதம் ‘river side’ where bickering and betrayals are placed and பாலை ‘barren land’, where hardships of separation are placed. The poem for this story belongs to குறிஞ்சி and is said to have been written by கபிலர், who is acclaimed to be the master of this class of poems.
51.
What she said to her friend
சுடர்த் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி
நோ தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள்
அன்னையும் நானும் இருந்தேமா இல்லிரே
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை
அடர் பொன் சிரகத்தால் வாக்கி சுடரிழாய்
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
வளை முன் கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா
அன்னை அலறிப் படர்தர தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான் போல் நோக்கி நகைக் கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன்.
Glossary
சுடர் ஒளிவிடு shining (the verb shine modifies the following noun)
தொடி வளையல் bangle, as a metonymy, refers to the girl wearing it
தொடீஇ Final vowel is lengthened when calling someone
கேளாய் கேள் –ஆய் is the imperative suffix
ஆடு விளையாடு play
மணல் sand
சிற்றில் = சிறு + இல் சின்ன வீடு doll house
காலின் காலால்
சிதையா = சிதைத்து அழித்து destroying
அடைச்சிய அடைத்துக் கட்டிய tightly (strung)
கோதை சரம் flower string
பரி அறு snap
வரிப் பந்து ball with lines (of thread)
கொள் எடுத்துக்கொள் take hold
நோ தக்க (mischief) that are hurtful
சிறு சிறிய, சின்ன
பட்டி mischievous boy
மேல் earlier
அன்னை அம்மா
இல்லீரே Hey, those in the house. –ஏ is used for addressing someone
உண்ணு நீர் குடி தண்ணீர் drinking water
வேட்டேன் want(ed). From the verb வேள் ‘want’ from which comes வேண்டும்
என என்று
வந்தாற்கு (வந்தான்+க்கு) வந்தவனுக்கு
அடர் solid
பொன் தங்கம் gold
சிரகம் சொம்பு pot
வாக்கி வார்த்து having scooped
சுடரிழாய் (you) with shiny hair. இழை hair, also chain; –ஆய் is used to address someone
ஊட்டு feed
என என்று சொல்ல as (she) said
யான் நான்
தன்னை அவனை தான் = அவன்
அறியாது அறியாமல், தெரியாமல்
செல் போ
மற்று then
வளை வளையல் bangle
முன் கை front arm, hand
பற்று hold
நலிய to squeeze
தெருமந்திட்டு பயந்து
அன்னாய் அன்னை + ஆய்
இவன் ஒருவன் this unusual one
காண் பார்
அலறு scream
படர்தர as (she) rushed
விக்கு hiccup (v)
புறம்பு முதுகு
அழித்து rubbing
நீவ as (she) massaged
கடைக்கணால் = கடைக்கண்ணால் ஓரக்கண்ணால் with the corner of (his) eye
கொல் kill
நோக்கு பார்
நகைக்கூட்டம் union through smile; நகை smile, கூடு unite
கள்வன் thief
மகன் son
Exercise
Rewrite the poem in modern Tamil as a dialog.